
சமஷ்டித் தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை; மாகாண சபை குறித்து சர்வஜன வாக்கெடுப்பு கட்சித் தலைவர்களிடம் மஹிந்த தெரிவிப்பு
* இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைத் தீர்வு காண்பது என்ற பேச்சுக்கே இடமில்லை
* இப்போது நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைக்கு மக்களின் அங்கீகாரம் பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது பற்றியும் அரசு ஆராய்கிறது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் தமது கண்டி வாசஸ் தலத்தில் நடத்திய கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தகவல்களைத் தெரிவித்த தாக அறியவந்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலான நிர்வாக முறை ஒன்றுக்கே மக்கள் எனக்கு ஆணை தந்தனர். சமஷ்டி முறையை ஏற் படுத்துவதற்கு மக்கள் எனக்கு ஆதரவு வழங்கவு மில்லை; ஆணை தரவுமில்லை. எனவே, சமஷ்டி என்ற பேச்சுக்கே துளியும் இடமில்லை வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி முறையையோ அல்லது அதற்குச் சமனான வேறு முறையொன்றையோ ஒருபோதும் அரசு ஏற்றுக் கொள்ளப் போவ தில்லை. அத்தகையதொரு தீர்வைக் காணு மாறு மக்கள் எனக்கோ எனது அரசுக்கோ ஆணை தரவில்லை. அனுமதி வழங்கவில்லை. எனவே, மக்களின் விருப்பத் துக்கு மாறாக சமஷ்டித் தீர்வை முன்வைப்பதற்கோ, அதுபற்றிப் பரிசீலிப்பதற்கோ அரசுக்கு அருகதையில்லை அதேவேளை, தற்போது நடைமுறையிலுள்ள மாகாணசபை முறையை தொடர்ந் தும் கடைப்பிடிப்பதா, இல்லையா என்பது குறித்து மக்களின் அங்கீகாரத்தைப் பெறு வதற்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது பற்றியும் அரசு ஆராய்ந்து வரு கின்றது. என்றும் ஜனாதிபதி அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
posted on Mon Jul 23 8:30:03 EEST 2007 Uthayan
கிழக்கு உதயம் அரசு எதிர்பார்த்தது போன்று மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் இருக்கவில்லை!
கொழும்பில் படையினர் முற்றுகையே தொனித்தது கிழக்கு மாகாணத்தை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்து பெரும் எடுப்பில் பிரசாரங்கள் செய்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசாங் கம் விழாவெடுத்துக் கொண்டாடிய போதிலும் எதிர்பார்த்தது போன்று நாட ளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் உற் சாகம் கரைபுரண்டு ஓடவில்லை. அரசு ஏற்பாடு செய்திருந்த விழாக்களில் எதிர் பார்க்கப்பட்ட அளவு உற்சாகத்தைக் காணமுடியவில்லை. தொப்பிகலவில் இராணுவம் பெற்ற வெற்றியைக் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் அரசாங்கம் கொண்டாடி யது தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை யில் பிரபல அரசியல் மற்றும் பாது காப்பு நிலைவரங்கள் தொடர்பான விமர் சகர் இக்பால் அத்தாஸ் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்.மக்கள் மத்தியில் உணர்ச்சி வெள் ளத்தைத் தூண்டிவிடும் வகையில் தொப் பிகல வெற்றி பெரும் எடுப்பில் பிர சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் ஒரு சிறுபகுதி இலங்கையர் கள் மாத்திரமே இந்த நிகழ்வுகளில் அக் கறை காட்டினார்கள். தமது வீடுகளில் அலுவலங்களில் வர்த்தக நிலையங் கள் மற்றும் வாகனங்களில் கொடிகளை ஏற்றியதோடு அவர்கள் காரியத்தை நிறுத் திக்கொண்டார்கள் குதூகலமான தொனி யில் ஏதும் நடைபெற்றதாக இல்லை. ஆறுதல் பெருமூச்சு கடந்த வியாழக் கிழமை நிகழ்வுகள் முடிந்த கையோடு, மேல்மாகாணத்தி லுள்ள பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலீஸ் படைகளின் உயர்மட்ட அதி காரிகள் பெரும் இக்கட்டிலிருந்து விடு பட்டதுபோல் ஆறுதல் பெருமூச்சு விட் டார்கள் அந்த ஆறுதல் பெருமூச்சு விளங் கிக்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஏனென் றால் மேல் மாகாணத்தில் ஏற்கனவே ஊடுருவிவிட்டதாகக் கருதப்பட்ட புலி களின் ஆறு கரந்தடிப் பிரிவுகள் ஆங் காங்கே தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டங்கள் தீட்டியிருந்தார்கள் என்று கருதப்பட்டது. இவை கொழும்பில் நடைபெறவிருந்த வெற்றிவிழாவைக் குழப்பும் நோக்கத்தைக் கொண்டவை என்றும் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு இக்பால் அத்தாஸ் மேலும் தெரிவித்துள்ளார். அவர் தமது பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான கட்டுரையில் மேலும் தெரி வித்திருப்பதாவது:கிழக்கு விடுவிக்கப்பட்டுவிட்ட போதிலும் கொழும்பு நகரில் புலிகள் நடத்தக்கூடிய தாக்குதல்களை முறிய டிக்க முழுநேர பாதுகாப்பு நடவடிக்கை கள் எடுக்கவேண்டியிருந்தது. அதனால் இராணுவ, பொலீஸ் படைகளின் எண்ணிக் கையை அதிகரிக்கவேண்டியிருந்தது. கொழும்பு மாநகரம் அன்றைய தினம் பாதுகாப்புப் படைகளின் முற்றுகையில் இருந்தது என்றே கூறலாம். பாதுகாப்பு நடவடிக்கை எனும் பொழுது வாகனங்கள் மற்றும் ஆள் களைத் தடுத்துநிறுத்தி சோதனையிடு வதையும் உள்ளடக்கும்.ஆனால் வர்த்தக மற்றும் வியாபா ரப் பிரிவினருக்கு இது நல்ல செய்தி யாக அமைய முடியாது. கொழும்பு மாநகரில் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் சில காலத்துக்கு நீடிக்கவே செய்யும். எனவே இலங்கையில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் இந்த விடயங்களில் எவ்விதமான பிரதிபலிப்புகளை மேற் கொள்வார்கள் என்று கூறமுடியாது. கிழக்கில் புலிகளின் செயற்பாடுகள்கொழும்பின் பாதுகாப்பு விடயங்கள் இப்படி இருக்க கிழக்கின் நிலைமை எப் படி இருந்தது? விடுதலைப் புலித் தீவிர வாதிகள் கிழக்கிலிருந்து முழுமையாக விரட்டியடிக்கப்பட்டுவிட்டதாக அர சாங்கம் கூறிக்கொண்ட அதேவேளை, சுமார் 50 பேரைக் கொண்ட புலிப் போராளிகள் குழுவொன்று கிழக்கில் ஊடுருவி இருப்பதாக கூட்டுப்படைத் தலைமையகத்துக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதற்கு முன்னரே சுமார் 200 போராளிகள் ஊடுருவி தாக்குதல் களுக்கு ஆயத்தங்கள் செய்து வருவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந் தன. விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் கிழக்கில் இருந்துவருகிறார்கள் என்ப தையே இந்தத் தகவல்கள் தெரிவித்தன. கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் ஹேரத் அபயவீர சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த நாள் கந்த ளாய்க்கு அருகில் சிற்றாறு என்ற இடத் தில் இராணுவக் கப்டன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு இரு படையினர் காய மடையச் செய்யப்பட்டனர். இவை அனைத்தும் எதைக் காட்டுகிறது என் றால், கிழக்கில் பிரதேசம் எதனையும் விடுதலைப் புலிகள் தம் வசம் கொண் டிருக்காவிட்டாலும் அப்பகுதிகளில் அவர்கள் இன்னமும் செயற்பட்டு வரு கிறார்கள் என்பதே இது. அரசாங்க அதிகாரிகளுக்கு மட்டுமல்ல இராணுவ பொலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இது அச்சுறுத்தலாகவே இருக்கப்போகிறது. அச்சுறுத்தல்களைக் குறைப்பதானால் அதிக பலம் மட்டுமல்ல அதிக வளங் களும் தேவைப்படும் என்று உள்ளது.
Posted on : Mon Jul 23 8:31:17 EEST 2007 uthayan
திருமலை திரியாயவிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றம்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய கிராம மக்கள் அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ள னர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த மூன்று மாதங்களில் திரியாய கிரா மத்தில் பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதைத் தொடர்ந்து, மக்கள் அங்கு வசிக்க அச்சமடைந்துள்ளனர்.1987 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வன்முறைகளால் இக்கிராமத் தில் வசித்த 1,200 வரையான குடும்பங் கள் இடம்பெயர்ந்திருந்தன.பின்னர் 2002ஆம் ஆண்டில் மீளக் குடி யமர்ந்ததில் 850 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றன. தற்போது பதினொரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டும், காணாமல் போயும் உள்ள நிலையில், தொடர்ந்தும் இக்கிராமத்தில் மக்கள் வசிக்க அச்சமடைந்து வெளியேறி வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment