Friday, 20 July 2007

ஈழச்செய்திகள்:200707


கிழக்கைத் தொகுதிகளாகப் பிரித்து அமைச்சர்களிடம் கையளிக்க ஏற்பாடு வீரகேசரி நாளேடு

புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. கிழக்கு மாகாணம் பல தொகுதிகளாக பிரிக்கப்பட்டு அமைச்சர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் அபிவிருத்தி செயற்றிட்டங்களும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: .
30 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தால் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பல தடவைகள் கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் முழுமையாக இம்முறையே மீட்கப்பட்டுள்ளது. கிழக்கு மீட்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக அம்மாகாணம் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. கிழக்கு மாகாணம் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு அமைச்சர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அமைச்சர்கள் ஒவ்வொரு பொறுப்புக்களையும் ஏற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். .
இதுவரை காலமும் அச்சம் காரணமாக தமிழ் மக்களும் புலிகள் பக்கமே இருந்தனர். ஆனால் தற்போது புலிகள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க ஆரம்பித்துள்ளனர். எனவே கிழக்கு வெற்றியையும் அபிவிருத்தி பணிகளையும் எவரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. சுதந்திரத்தை பெற்றுக்கொண்ட உணர்வில் கிழக்கு மீட்பு வெற்றிவிழா கொண்டாடப்படவேண்டும். .

தொப்பிகலை வெற்றிவிழா குறித்து இணைத்தலைமை நாடுகள் அதிருப்தி
வீரகேசரி நாளேடு

அரசாங்கத்தால் நேற்று சுதந்திர சதுக்கத்தில் நடத்தப்பட்ட தொப்பிக்கலை வெற்றிவிழா குறித்து இணைத்தலைமைகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. தொப்பிக்கலையை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை போர்நிறுத்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறும் செயலென கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
தொப்பிக்கலை வெற்றிவிழாவில் கலந்துகொள்ளுமாறு இணைத்தலைமை நாடுகள் உள்ளிட்ட கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு அரசாங்கம் அழைப்பிதழ் அனுப்பியிருந்தது.
எனினும் அமெரிக்கா, ஜப்பான், நோர்வே, பிரித்தானியா ஆகிய இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
தொப்பிக்கலை வெற்றிவிழாவானது இராணுவ ரீதியான நிகழ்வு என கொழும்பிலுள்ள முக்கிய வெளிநாட்டு தூதரகங்கள் தெரிவித்துள்ளன.
எனவே அந்நிகழ்வுக்கு தமது தூதுவர்களுக்கு பதிலாக தூதராங்களின் பாதுகாப்பு ஆலோசகர்களையும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளையும் அனுப்பியதாக அவை கூறியுள்ளன.
இலங்கையில் முரண்பட்டுள்ள இருதரப்பும் மோதல்களை கைவிட்டு பேச்சு வார்த்தை மேசைக்கு திரும்பி இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வுகாணவேண்டும் என்பதே இணைத்தலைமை நாடுகளின் விருப்பமாகும். மாறாக இனப்பிரச்சினைக்கு இராணுவ வெற்றிகளின் மூலம் தீர்வுகாண முடியாது என இணைத்தலைமை நாடொன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், படை நடவடிக்கைகளும் இராணுவ ரீதியான வெற்றிகளும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உதவப்போவதில்லை. இவ்வாறான செயற்பாடுகள் மேலும் பகைமையுணர்வை வளர்த்து மோதல்களை அதிகரிக்கவே செய்யும் என்றார்.
ஒப்பந்த விவாதத்தைச் சமர்ப்பிக்காததால் நாடாளுமன்றத்தில் நேற்றுப் பெரும் சர்ச்சை ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம்; சபை அமர்வு இடைநிறுத்தம் இலங்கை அமெரிக்க பாதுகாப்பு ஒப் பந்தத்தை முழுமையான வடிவில் நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்க அரசுத் தரப்பு மறுத் ததால் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட் டது. இதனால் ஏற்பட்ட களேபரத்தால் சபை அமர்வுகள் ஒருமணி நேரம் இடை நிறுத்தி வைக்கப்பட்டன.சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றுமுன்தினம் சபை யில் அளித்த வாக்குறுதியை செயல்படுத் தத் தவறிவிட்டார் என்று ஜே.வி.பி. குற் றஞ்சாட்டியதையடுத்தே சபையில் களே பரம் ஏற்பட்டது.""நமது நாட்டின் இறைமைக்கும் அணி சேராக் கொள்கைக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் அமெரிக்க பிரஜை ஒருவர் எப் படி நமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்ய முடியும்?'' என்றும் சபையில் குற் றம் சாட்டப்பட்டது.நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வழமைபோல் சபை நடவடிக்கைகளும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு வாய்மூல விடைகளும் அளிக்கப்பட்டன.இந்தச் சந்தர்ப்பத்தில் சபை முதல்வரான நிமல் சிறிபால டி சில்வா அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர் பான கூற்று ஒன்றை சபையில் சமர்ப்பித் தார்.""அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒப் பந்தம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள் ளது. இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத் தில் சமர்ப்பித்தால் அது உயர்நீதிமன்றத்தின் முன் இருக்கும் வழக்கிற்கு குந்தகம் ஏற்படுத் தும். எனவே, அந்த ஒப்பந்தத்தை சபையில் பகிரங்கப்படுத்தக்கூடாது எனப் பாதுகாப்பு அமைச்சின் அரச சட்டத்தரணி அறிவித்துள்ளார்.'' என்று குறிப்பிட்டு ஒரு கடி தத்தை சபையில் சமர்ப்பித்தார் அமைச்சர் நிமல்.ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம்அமைச்சரின் இக்கூற்று சபையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா இந்தச் சபையை தவறான வழியில் இட்டுச் செல்கின்றார். சபை உறுப்பினர்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றார் என ஜே.வி. பியினர் சீறினர்.அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒப் பந்தத்தின் பிரதி இன்று சபையில் சமர்ப் பிக்கப்படும் என்று முதல்நாள் கூறிய அமைச் சர், இன்று அவ்வாறு சமர்ப்பிக்க முடியாது என்று அடம் பிடிக்கிறார். இது ஏற்றுக்கொள் ளத்தக்கதல்ல எனத் தெரிவித்து ஜே.வி.பி. உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜனாதிபதியின் ஆலோசகரான வாசு தேவ நாணயக்கார இந்த அரசின் ஆதர வாளர். அவர்தான் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இதுவரை காலமும் அமைதி யாக இருந்துவிட்டு அவசர அவசரமாக உயர் நீதிமன்றத்தில் இப்படி ஒரு வழக்கு தாக்கல் செய்தமை ஒரு திட்டமிட்ட சதிச் செயல்.அரசமைப்புக்கும் நாட்டின் இறைமைக் கும் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஒப்பந்தம் அம்பலப்படுத்தப்பட் டால் அது நாட்டில் விபரீதமான விளைவு களை ஏற்படுத்தும் என்று பீதியடைந்துள் ளது அரசு. அதனால் அது செய்த சூழ்ச்சி தான் இந்த வழக்கு. ஒப்பந்தத்தை வெளிப் படுத்தக் கூடாது என்பதுதான் அரசின் திட் டம். அதற்கு நாம் இடமளிக்க முடியாது. என்றே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங் கினர்.சபை அமர்வு இடைநிறுத்தம்சபையில் அமைதியை ஏற்படுத்த முடி யாத நிலையில் சபாநாயகர் சபை அமர் வைகாலை 10.25 மணிக்கு இடைநிறுத்தி வைத்தார்.பத்து நிமிடங்களுக்கு சபை இடைநிறுத்தப்பட்டு கட்சித் தலைவர்கள் கூட் டம் நடைபெறும் என்று சபாநாயகர் அறி வித்தபோதும் 11.25 மணிக்கே சபை மீண் டும் கூடியது.சபை மீண்டும் கூடியபோது சபாநாயகர் அறிவித்தல் ஒன்றை விடுத்தார்.""சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தின் நகலை இந்த சபையில் நாளை சமர்ப்பிப்பார்'' என்று கூறினார்.""சபாநாயகரின் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் தொடர்பான நகலை இந்த சபையில் சமர்ப்பிக்கும் படிதொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வரு கிறோம். கடந்த மூன்று அமர்வுகளின் போதும் இத்தகைய கோரிக்கையை நாம் விடுத்து வருகின்றோம். சபை முதல் வரும் தொடர்ச்சியாக சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக்கழித்து வருகின்றார். நேற்றுக் கூறியதை இன்று மறுக்கின்றார். சபை முதல்வரின் வார்த்தைகளை எங்களால் நம்ப முடியாது. சபாநாயகர் அதற் கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்'' என ஜே.வி.பி. உறுப்பினர் விமல் வீரவன்ஸ வலியுறுத்தினார்.ஐ.தே.க.உறுப்பினர் லக்ஷ்மன்கிரியெல்ல மற்றுமொரு விடயத்தை முன்வைத்தார்.""இந்தச் சபையில் சபாநாயகரின் தீர்ப்பே ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது. அதனை எவரும் மீற முடியாது.குறிப் பிட்ட ஒப்பந்தம் தொடர்பான தொகுப்பு ஆவணம் மற்றும் அட்டவணை என்பன வற்றையும் சபையில் சமர்ப்பிக்க வேண் டும் என உத்தரவிடுங்கள் '' என்று குறிப் பிட்டார் லக்ஷ்மன் கிரியெல்ல.""இதனை ஆரம்பத்தில் நீங்கள் கேட்கவில்லையே?'' என்றார் சபாநாயகர் ""ஐயா, ஒப்பந்தம் என்று ஒன்று செய்து கொள்ளப்பட்டால் அதில் தொகுப்பு ஆவ ணம், அட்டவணை என்பன கட்டாயம் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். அவை இல்லாமல் எப்படி ஒப்பந்தம் செய்வது?'' என்று சுட்டிக்காட்டினார் லக்ஷ்மன் கிரி யெல்ல.""சபாநாயகர் அவர்களே! நாங்கள் ஆரம் பத்தில் தவறவிட்டிருக்கலாம். அதனைத் திருத்திக் கொள்ளக் கூடிய உரிமை எங் களுக்கு உண்டு. நாம் கேட்டபோதே இந்த ஒப்பந்தத்தை முழுமையாக சபையில் சமர்ப்பித்திருந்தால் சபை முதல்வர் இப் படி வெட்கப்பட்டு நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது!'' என்று கூறினார் விமல் வீரவன்ஸ.

கிழக்குக் கடலில் பூமியதிர்ச்சி

இலங்கையின் கிழக்குக் கரையிலிருந்து சுமார் நானூறு கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நேற்றுக்காலை 9.57 மணியளவில் பூமியதிர்வு ஒன்று ஏற் பட்டது. தலைநகர் கொழும்பிலிருந்து 510 கிலோ மீற்றர் கிழக்கே, கடலில் நிலமட்டத்திற்கு கீழே 35 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்த இந்தப் பூமியதிர்ச்சியின் அளவு ரிச்டர் அள வில் 5.2 எனக் கணக்கிடப்பட்டதாக அமெ ரிக்க புவியியல் மதிப்பீட்டுத் திணைக் களம் தெரிவித்தது.இந்தப் பூமியதிர்ச்சி இலங்கையின் பல பாகங்களிலும் உணரப்பட்டது. குறிப்பாக மலைநாடான கண்டி மற்றும் மாத்தறைப் பகுதிகளில் பூமி அதிர்ந்ததை மக்கள் நேரில் உணர்ந்து கொண்டனர் எனக் கூறப்பட்டது. எனினும் கடலின் மத்தியில் நிகழ்ந்த இந்தப் பூமி அதிர்வால் ஆழிப்பேரலை ஏற்படும் சாத்தியம் நேரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆழ்கடலில் வழமையாக இடம்பெறும் மிதமான அளவுடைய பூமியதிர்வு இதுவென்றும், இந்தப் பூமியதிர்வு குறித்து பீதியடையத் தேவையில்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்

No comments: