
யுத்தநிறுத்த உடன்படிக்கை அநியாயமான நடவடிக்கை
பயங்கரவாதத்திற்கு சட்டரீதியான அதிகாரப் பிரதேசமொன்று இருக்கின்றதென்பதை உடன்படிக்கையொன்றின் மூலம் ஏற்றுக் கொண்டது போன்ற அநியாயமான செயலொன்று இலங்கையிலன்றி உலகில் வேறெங்குமே நடக்கவில்லை.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
================================================================
வேடர்களின் வேசம் கலைந்தது!
Posted on : Fri Jul 20 5:45:03 EEST 2007
வருட இறுதியில் கிழக்கில் மாகாணசபை, உள்ளூராட்சித் தேர்தல்கள்; சர்வகட்சி மாநாட்டில் தாமதம் வேண்டாம்; ஒற்றுமையுடன் வாழ்வோம் ஜனாதிபதி மஹிந்தா
( "கிழக்கு உதயம்'' வெற்றி நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரை)
இந்த மகத்துவமிக்க தினத்தில் உங்கள் மத்தி யில் உரையாற்றக்கிடைத்த அரச தலைவனாக இருப்பதையிட்டு அளவிலா பெருமிதமடைகிறேன். முழுநாட்டுக்கும் பெருமையைப் பெற்றுக்கொடுத்த இலங்கைத் தேசத்தின் மதிப்புமிக்க படைவீரர் களுக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள் வதோடு, நான் இந்தக் கௌரவத்தை பணிவுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.எதிர்காலத்தில் இலங்கை வரலாறு எழுதப் படும் சந்தர்ப்பத்தில், முப்படைத் தளபதிகளினால் அரசின் பொறுப்புதாரரான என்னிடம் ஒப்படைக் கப்படுகின்ற இந்தச் செய்தியினால் குறிப்பிடப்படும் அத்தியாயம் பொன் எழுத்துக்களால் பொறிக் கப்படும் என்பதில் சந்தேகமில்லை. பல தசாப்தங்களாக எமது தாய் நாட்டின் வளம்மிகுந்த கிழக் குப் பகுதியையும் அங்கு வாழ்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் சுதந்திரத்தையும் பறித்துக் கொண்டிருந்த கொடூரபயங்கரவா தத்தை முற்றாக விரட்டி விட்டோம் என்று கூறுவதைப் போன்ற ஆறுதலானதும் கௌரவமானதுமான செய்தியை நாம் கடந்த காலத்தில் காணவில்லை.கொடிய பயங்கரவாதத்தின் பணயக்கைதி களாக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த மக்களின் விடுதலைக்காக இலங்கை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துணிச்சலான, தைரியமான நடவடிக்கைகளின் பெறுமதி இந்த புனித பூமியில் என்றுமே பாதுகாக்கப் படும். எமது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் அதனை பல நூற்றாண்டுகள் நினைவு கூர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் உல கெங்கிலுமுள்ள இராணுவத்தினருக்கு முன் மாதிரியாகவிருந்து பொது மக்களுக்கு ஆகக்குறைந்த சிரமத்தையும், பாதுகாப்புப் படையினருக்கு குறைவான சேதத்தையும் ஏற் படுத்தி இந்த நடவடிக்கை முடிவுக்கு வந்தது.இந்த வெற்றி, பெரும்பான்மை இனம் சிறு பான்மை இனத்தை மிதித்து விட்டது எனக்கூறும் சில விமர்சனங்களைக் கண்டேன். "பெரும்பான்மை இனம்', "சிறுபான்மை இனம்' இந்தச் சொற்பிர யோகங்களைக்கூட நான் விரும்பவில்லை. நாம் அனைவரும் இலங்கையர்கள். கிழக்கின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தே தொப்பிகலவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு வழிவகுத்தார்கள்.அவ்வாறு எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினருக்கு ஏற் படுத்திய தோல்வியை வெறுமனே இராணுவ வெற்றியொன்றாக மாத்திரம் குறிப்பிடுவதற்கு நான் விரும்பவில்லை. அதற்கும் அப்பால் தேசிய, சர்வதேச பெறுமானமொன்று இந்த வெற்றியினுள் பொதிந்திருக்கிறது
யுத்தநிறுத்த உடன்படிக்கை அநியாயமான நடவடிக்கை நண்பர்களே!
பயங்கரவாதத்திற்கு சட்டரீதியான அதிகாரப் பிரதேசமொன்று இருக்கின்றதென்பதை உடன்படிக்கையொன்றின் மூலம் ஏற்றுக் கொண்டது போன்ற அநியாயமான செயலொன்று இலங்கையிலன்றி உலகில் வேறெங்குமே நடக்கவில்லை.
இந்தப் பிரதேச அதிகார மாயையை அம்பலப் படுத்தியதன் மூலம் பயங்கரவாதத்தின் ஈழக்கனவு சுக்குநூறாகச் செல்லும் செய்தியையே தொப்பிகல மலை உச்சியில் இருந்துகொண்டு எமது வீரம் மிக்க படைவீரர்கள் உலகுக்கு எடுத்துக் கூறினார்கள்.அது மட்டுமா? நாட்டின் ஏனைய பிரதேசங் களுடன் ஒப்பிடுகையில், கிழக்குப் பகுதி முன் னேற்றமடையாத பிரதேசமொன்றாகவே கருதப் பட்டது. வன்முறையில் சிக்குண்டதனால் வளமிக்க கிழக்கின் தைரியமிக்க மக்கள் பொருளா தார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஊனமுற்றார் கள். அரசியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அவர்கள் அங்கவீனமடைந்தனர். முக்காடு அணிந்த பிள்ளைகளினதும், நெற்றியில் பொட்டு வைத்த தமிழ்ப் பிள்ளைகளினதும், ஏனைய சிங்களப் பிள்ளைகளினதும் கல்வி கற்கும் உரிமையை அவர் கள் பறித்துக்கொண்டனர்.சர்வதேச சமூகத்திற்கு விடுக்கும் கோரிக்கைநண்பர்களே!உங்கள் 12 வயது, 14 வயது பிள்ளைகள் ஆயு தங்களை உபயோகிப்பதை உங்களால் நினைத் துக்கூடப் பார்க்க முடியுமா? உண்மையிலேயே முடியாது. என்றாலும் கிழக்கிலும் வடக்கிலும் இது தான் யதார்த்தம். புத்தகங்களுக்கும் கலர் பென் சில் பெட்டிகளுக்கும் பதிலாக அவர்களுக்குக் கிடைத் தது எல்.ரி.ரி.ஈயின் துப்பாக்கிகளும், குண்டுகளும், சய னைட் வில்லைகளுமேயாகும். இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பிள்ளைகளின் எதிர்கால உலகைக் கட்டியெழுப்புவோம்.இதற்கு குறிப்பாக எமது சர்வதேச நண்பர்கள் எமக்கு உதவுவார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன்.அதேபோல், பொய்யான சுலோகங்களை ஏந் திக்கொண்டு கிழக்கின் இந்த உதயத்தைத் தடுக்க வேண்டாமென சர்வதேச சமூகத்திடமும் எமது சில அரசியல்வாதிகளிடமும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். உலகம் முழுவதும் சுற்றித்திரிந்து தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாமென வும் கேட்டுக்கொள்கிறேன்.எம்மிடம் குறைபாடுகள் இருந்தால் நாம் அனை வரும் ஒன்றுசேர்ந்து அவற்றை விமர்சனம் செய்து கொள்வோம். மஹிந்த ராஜபக்ஷவை பரிகாசம் செய்தால் பரவாயில்லை. ஆனால் இந்த உன்ன தமான நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாம்.பயங்கரவாத செயற்பாடு வேறுமனித உரிமைகள் வேறுமனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது எமது அடிப்படையான பொறுப்பாகும். நான் எனது காலம்முழுவதும் அதற்காக உறுதியாகச் செயலாற் றினேன் என்பது உங்களுக்கு இரகசியமான விடய மல்ல. எனினும் பயங்கரவாதிகளின் செயற்பாடு களுக்கும், மனித உரிமைகளுக்குமிடையிலான வேறுபாட்டை தெளிவாகவே புரிந்து கொள்ளவேண் டும். இதைக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.அதேபோல், பாதுகாப்புப் படையினரைத் தூற்று வதன் மூலமோ அல்லது அவர்கள் மீது பாரதூர மான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலமோ இந்த வெற்றியை மூடிமறைக்கும் முயற்சியொன்றை நாம் காண்கிறோம். மகாசங்கத் தினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதன் மூலம் தமது சுயரூபத்தை மறைப் பதற்கான முயற்சிகளையும் நாம் காண் கிறோம்.தொப்பிகல ஒரு வனாந்தரமா? சரணாலயமா? அங்கு எத்தனை வாவிகள் இருந்தன? அங்கு எத் தனை வீடுகள் இருந்தன? ஒரு ஏக்கரில் எத் தனை மரங்கள் இருந்தன? போன்ற கேள்விகள் வரைபடக் கலைஞர்களுக்கு மாத்திரமே முக்கியமாகின்றன. தயவு செய்து பொறாமையோடு இதைப் பார்க்க வேண்டாம். இது அரசின் அல்லது எனது தனிப் பட்ட வெற்றியல்ல.இது பாதுகாப்புச் செயலாளரினதோ, முப் படைத் தளபதிகளினதோ தனிப்பட்ட வெற்றியு மல்ல. சிலர் அவ்வாறு நினைத்தே பித்துப்பிடித்ததுபோல் உளறுகின்றார்கள்.என்னைத் தூற்றுங்கள்! இராணுவத்தைத் தூற்றாதீர்கள்!!நண்பர்களே!இது மக்களின் வெற்றியாகும். அந்நியராக இல்லாமல் வெற்றியின் ஒரு பங்களாராகும்படி எதிர்க்கட்சித் தலைவரையும் நான் கௌரவத்துடன் அழைக் கின்றேன். என்னைத் தூற்றினாலும் எனது குடும்ப அங்கத்தவர்களைத் தூற்றி னாலும் பரவாயில்லை. அதை நாம் பொறுத்துக்கொள்கின்றோம். ஆனாலும், எமது இராணுவத்தினரைத் தூற்றிப் பரிகசிக்க வேண்டாம். இராணுவத்தி னரைக் குறைத்து மதிப்பிடவும் வேண்டாம். அவர்கள் தமது உடல், உயிர், இரத்தம் என்பவற்றைத் தியாகம் செய்தே தாய் நாட்டுக்கு இந்த வெற்றி யைப் பெற்றுக் கொடுத்தார்கள்.நாம் அரசியலில் இருந்து விடைபெறும் நாளில் உனது பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்தாய் என்று மனச்சாட்சி எம்மிடம் கேட்கும். காலனித்துவ நாட்டையா? பிளவுபட்ட நாட்டையா?இல்லை. நண்பர்களே! நாம் எமது பிள்ளைகளுக்கு கௌரவத்துடன் வாழக் கூடிய நாடொன்றைப் பரிசளிப்போம்.சிங்கள, தமிழ், முஸ்லிம் பிள்ளைகள் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல் மகிழ்ந்து வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் அவர்களுக்கு அன்பளிப்புச் செய்வோம்.சர்வகட்சி மாநாட்டில் மேலும் தாமதம் வேண்டாம்சர்வகட்சி மாநாட்டினூடாக இந்நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துகளை ஒருங்கிணைத்து வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றை வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இதனை மேலும் தாமதமடையச் செய்ய வேண்டாம். எல்லா அரசியல் கட்சி களும் தமது ஆலோசனைகளைத் துரிதமாக முன்வைக் கும்படி பகிரங்கமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஒன்றுபட்டு இறுதித் தீர்வுக்கு வாருங்கள்.தமிழ் பேசும் மக்களை கூடுதலாக அரசியல் அதிகாரத்தில் இணைத் துக் கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பொன்றை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு மக்களுக்கு நியாயமான பிரச்சினைகள் இருக்கு மாயின் நாம் அதற்காக கூருணர்ச்சியுடன் செயற்படுவோம். தமிழராக அல்லது முஸ்லிமாக இருக்கின்ற காரணத்தினால் எவரும் கஷ்டத்திற்கு ஆளாகக் கூடாது.தமிழ் மக்களின் விடுதலை குண்டுகளால் சரிவராதுஅதேபோல், துப்பாக்கிகளின் மூலமோ, குண்டுகளின் மூலமோ, சயனைட் வில்லைகளின் மூலமோ தமிழ் மக்களின் விடுதலையை ஏற்படுத்திக் கொள்ள இயலாது என்ற யதார்த்தத்தை எல்.ரி.ரி.ஈ. இயக்கம் இப்போதாவது புரிந்து கொள்ளவேண்டும். தமிழ்ப் பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தான் அவர்கள் பாழ்படுத்துகின்றார்கள்; எமது நாட்டுப் பிள்ளைகள் அனைவரினதும் எதிர்காலத்தையும்தான். அவர்கள் தமது கலாசாரத்தைத்தான் அழிக்கின்றார்கள். எவ்வளவுதான் பயங்கரமானாலும் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் வன்முறைக் குரலுக்கு நான் அடிபணிய அல்லது பயப்படப்போவதில்லை. அவர் களுடைய கொலை அச்சுறுத்தல்களுக்கு நான் அசையப்போவதில்லை. நாட்டுக்கான எனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற நான் உளப்பூர்வமாக கட்டுப்பட்டுள்ளேன்.கிழக்கு மாகாண மக்களுக்கு தமது அடிப்படை உரிமையான வாக்கைப் பயன்படுத்தும் உரிமை கிடைக்கப்பெற்றிருந்ததா? 15 வருடங்களாக இந்த அப்பாவி மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டிருந்தது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை நாம் மீண்டும் பெற்றுக்கொடுப்போம். இந்த வருட இறுதியில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும். இவ்வருட இறுதியில் தமது பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மாகாண சபைக்கும் தேர்ந்தெடுக்கும் உன்னத உரிமை கிழக்கு மாகாண மக்களுக்குக் கிடைக்கும். கடந்த காலம் முழுவதும் தேர்தல் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இதற்கும் கனவில் பயந்தமை போல் சத்தமிடுவார்கள்.வாக்குரிமை மட்டுமல்லாமல் மின்சாரம், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, பாடசாலைகள், வைத்தியசாலைகள், புதிய கைத்தொழில்கள் போன்ற அனைத் தும் கிழக்கு மாகாணத்தைச் சுபீட்சமாக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.நில சுதந்திரம் போன்று பொருளாதார சுதந்திரமும் முக்கியமானதுநிலத்தின் சுதந்திரத்தைப் போல பொருளாதாரச் சுதந்திரமும் முக்கியமானதாகும். இதற்காக விவசாயக் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட துரித அபிவிருத்தி வேலைத் திட்டமொன்றை நாடு முழுவதும் முன்னெடுப் பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இந்தத் துரித அபிவிருத்தி வேலைத் திட் டத்தின் மூலமாக இந்த நாடு இழந்த பொருளாதார சுபீட்சத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.நண்பர்களே!ஜனரஞ்சகமான அரசியல்வாதியாக வரலாற்றில் இணைந்துகொள்ள நாம் விரும்பவில்லை. இந்த நாட்டையும், நாட்டின் எல்லா உயிர்களையும், நாட்டின் எல்லாப் பசுமைகளையும் நேசித்த பாதுகாவலனாக வரலாற்றில் இடம்பெற்றால் அதுவே எனக்கு போதுமானதாகும். தேர்தலுக்காக அல்லாமல் நாட்டுக்காக அரசியலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவராக வரலாற்றில் நான் அறிமுகப்படுத்தப்பட்டால் அதுவே நான் பெறுகின்ற உயர்ந்த கௌரவமும் திருப்தியுமாகும்.தாய் நாட்டை நேசிக்கின்ற மக்களின் உறுதிப்பாட்டின் அடையாளம்இறுதியாக நண்பர்களே!தாய்நாட்டை உண்மையாகவே நேசிக்கின்ற மக்களுடைய உறுதிப்பாட்டின் ஓர் அடையாளமாக தொப்பிகல வெற்றியை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.இந்நாட்டின் உழைக்கும் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் நிதானமாக இதற்கு வழங்கிய தைரியத்தை நான் உணர்வுமிக்க நேசத்துடன் மதிக்கின்றேன். வேலைநிறுத்தம் மற்றும் ஏனைய குழப்பங்கள் இன்றி இதை நாம் நிறைவேற்றினோம்.பொறுமையின் வெற்றி இதுசகோதரர்களே! இது உங்கள் பொறுமையின் வெற்றியாகும்.இந்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் இந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்று தமது பொறுப்பை நிறைவேற்றின. நண்பர்களே, இதற்கு அரசின் இதயபூர்வமான நன்றி உங்களுக்கு உரித்தாகட்டும்.எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் நம்நாட்டின் அப்பாவி மக்கள் பிளவு படாத தேசத்தை, கௌரவமான சமாதானத்தைத்தான் வேண்டினார்கள். பிரஜைகளே! இது உங்கள் வெற்றியாகும்.அதேபோல், அரசின் பாதுகாப்புக்காக நிபந்தனைகளின்றிச் செயற்படு கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இச்சந்தர்ப்பத்தில் இந்த வெற்றி யின் பங்காளிகள் ஆகின்றார்கள்.தமிழ் பேசும் எனது அன்பார்ந்த நண்பர்களே! நியாயமான காரணங்களுக்காக இடம்பெறுகின்ற யுத்தத்தைவிட உங்களுக்கு சமாதானம் பெறுமதி மிக்கதென்பதை நான் அறிவேன். அது எம்மனைவருக்கும் பெறுமதியானது. நிறைந்த உணவுப் பாத்திரத்தைவிட சுதந்திரம் உங்களுக்குப் பெறு மதியானது என நான் உணர்கின்றேன். உங்களிடம் விட்டுச் செல்லப்பட்ட அந்தக் கண் ணீர் நிறைந்த வரலாற் றைப் பற்றி எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதனாலேயே உங்களதும், உங்கள் பிள்ளைகளினதும் எதிர்கா லப் பொறுப்பை நான் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்."கிழக்கின் உதயம்' கிழக்கிலங்கை மக்களின் அப்பாவி வாழ்க்கையை ஒளிமயமாக்கி அந்த ஒளியினூடாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் வரலாற்று ரீதியான சகோதரத்துவம் தளிர்விட்டு வளருமென நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, இந்த வெற்றியை அண்மைக்கால இலங்கைச் சரித்திரத்தை மாற்றியமைக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துங்கள். எல்லா இனங்களையும் மதங்களையும் சார்ந்த மக்கள் அனைவரும் ஒற்று மையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வோம் என உறுதிபூணுமாறு உணர்வுபூர்வமாகவும் மிகப் பொறுப்புடனும் நான் வேண்டிக்கொள் கின்றோன் என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment