Saturday, 21 July 2007

''அதி நவீன ஆயுதங்கள் நிதிவளம் கொண்ட முன்னணிப் போராட்ட இயக்கமாகப் புலிகள்''

பிரபல பாதுகாப்பு சஞ்சிகை தகவல்

அதிநவீன ஆயுதங்களுடன் அனைத்துலக நிதி மற்றும் ஆயுக் கொள்வனவு வலைப் பின்னலுடன் செயற்படும் போராட்ட அமைப் பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கம் உலகில் இனங்காணப்பட்டுள்ளது.பிரிட்டனில் இருந்து வெளிவரும் பிர பல பாதுகாப்புச் சஞ்சிகை ""ஜேம்ஸ் வீக்லி'' மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.அச் சஞ்சிகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக் குறித்துத் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:விடுதலைப் புலிகளின் நிதி மற்றும் ஆயுதக் கொள்வனவு கட்டமைப்பு உலகம் முழுமைக்கும் நேர்த்தியாக கட்டமைக்கப் பட்டதாக உள்ளது. ஆண்டுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 300 மில்லியன் டொலர் வரை ஆயுதக் கொள்வனவுக்கு புலிகள் செலவிடுகின்றனர்.முப்படைகளும் கொண்ட அமைப்புசொந்த இராணுவம், கடற்படை மற்றும் வான்படை வைத்திருக்கக் கூடிய ஒரே போராட்ட அமைப்பாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளது. விடுதலைப் புலிகளின் ஐயண்ணா குழு மற்றும் கேபி குழுவினர் தான் ஆயுதக் கொள்வனவிற்கான குழுக்களாக இயங்குகின்றன. ஐயண்ணா குழுவினர் உளவு அமைப்பாகவும் அமைப்பின் நிதி வருவாய் திரட்டல்களை கண்காணிக்கின்றஅமைப்பாகவும் இயங்குகிறது. கேபி குழுவினர் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.மேலதிகமாக அறக்கட்டளைகள் மற்றும் பணியாளர்களை நியமித்து தமிழர்களிடமிருந்து நிதி சேகரிக்கின்றனர். ஆயுதக் கொள்வனவு அல்லது முதலீட்டுக்கான நிதியை அறக்கட்டளையூடாக செலவிடும் போது வரி தவிர்ப்பு மற்றும் சட்டபூர்வ அங்கீகாரத்தையும் பெறுகின்றனர். தமிழ் நாட்டுக்கும் பிரதான இடம்தென் இந்தியாவின் மாநிலமாகிய தமிழ்நாடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவில் பிரதான இடம் வகிக்கின்றது.கம்போடியாவும் புலிகளின் ஆயுதக் கொள்வனவில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தெற்காசியா, வடகொரியா, ஆப் கான், லெபனான், சைப்ரஸ், கிரீஸ், துருக்கி மற்றும் உக்ரெயினிலிருந்தும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்திருக்கின்றனர்.சிறிலங்கா வான்படையை அழிப்பதற்கான வானூர்தி எதிர்ப்புத் தளபாடக் கொள்வனவு செய்வதுதான் விடுதலைப் புலிகளின் தற்போதைய அனைத்துலக நிதி சேகரிப்புப் பரப்புரையில் முதன்மை இடம் வகிக்கிறது என்ற விவரங்களை ""ஜேம்ஸ் வீக்லி'' வெளியிட்டுள்ளது

பதுளையில் 11 பேர் கைது

பதுளைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 11 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டனர்.தங்களது ஆள்அடையாளங்களை சரி யான முறையில் நிரூபிக்கத் தவறியவர் களே கைதுசெய்யப்பட்டார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைதானோர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Posted on : Sat Jul 21 8:39:10 EEST 2007

எங்களைப் புறந்தள்ளி நடந்தால் புலிகளை அழித்து ஒடுக்க முடியாது தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்போம்

என்கிறார் கருணா கிழக்கு மாகாணத்தில் எமக்கு மக்கள் ஆதரவு பரந்தளவில் இருக்கிறது. எங்களி டம் ஆலோசனை பெறாமல் கிழக்கு மாகா ணத்தில் ஏதாவது திட்டங்களை அரசு மேற் கொள்ளுமாக இருந்தால். விடுதலைப்புலி களை முற்றாக அழிப்பதில் அரசு பின்ன டைவையே சந்திக்கும். இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா தெரிவிக்கின் றார்.நேற்று பி.பி.ஸி தமிழோசைக்கு வழங் கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரி வித்தார். அவர் மேலும் கூறியதாவது:கிழக்கு மாகாணத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் எங்களுடைய அரசியல் அலுவலகங்களைத் திறந்துள்ளோம். இத னூடாக மக்களுக்கு ஓர் அரசியல் தெளிவை ஏற்படுத்தி வருகின்றோம். எதிர்காலத்தில் இங்கு தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தேர்தலில் மக்களின் பங்களிப்பு எவ்வாறிருக்க வேண்டும், இது போன்ற நேரத் தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என் பது குறித்து மக்களுக்கு விளக்கமளித்து வரு கின்றோம். கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலி களின் நடவடிக்கைகள் முழுமையாக நிறுத் தப்பட்டுவிட்டன என்று கூறமுடியாது. அங்கு புலிகளின் புலனாய்வுத் துறையினர் தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின் றனர். கிழக்கு மாகாணத்தில் பிரதம செயலர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்ற அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. இந் தக் காலகட்டத்தில் எங்கள் ஆயுதங்களைக் களைவது ஆபத்தான விடயமாகும்.நாங்கள் ஒரு தீர்மானத்தை வைத்துள் ளோம். விடுதலைப் புலிகள் இயக்கத்திட மிருந்து எப்போது ஆயுதங்கள் முழுமையா கக் களையப்படுகின்றனவோ, அப்போது எங்களுடைய ஆயுதங்களுக்கும் ஓய்வு கொடுப்போம். இது குறித்து எந்தத்தயக்க மும் காட்டமாட்டோம். நாட்டில் அண்மை யில் நடைபெற்றுவரும் கடத்தல்களுக் கும் எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கடத்தலில் ஈடுபட்ட பலர் இப்போது கொழும்பில் பொலிஸாரால் கைதுசெய் யப்பட்டு வருகின்றனர். மர்மமாக இருந்த விடயம் இன்று உலகுக்குத் தெரியவந்துள் ளது. இலங்கை இராணுவத்தின் "தொப்பிகல' மீதான வெற்றி ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். விடுதலைப் புலிகளை இப்போது அந் தப் பகுதி வாழ் மக்கள் புறந்தள்ளி வைத் துள்ளனர்.முன்னர் பல தடவைகள் இந்தியா மற் றும் இலங்கை இராணுவங்களால் தொப்பி கலப் பகுதி கைப்பற்றப்பட்டது. அப்போ தைய சூழ்நிலையில் நான் அங்கம் வகித்த விடுதலைப் புலிகள் அமைப்பு மக்களின் ஆதரவை இழந்திருக்கவில்லை என் றார்.

No comments: