
Posted on : Sun Jul 22 7:48:34 EEST 2007
எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசைக் கலைக்கமாட்டோம்
மக்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டத்தில் ஜனாதிபதி
எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை கலைக்கமாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் "மக்களுக்கு தெளிவுபடுத்தும்'' பொதுக் கூட்டம் நேற்று நாவலப்பிட்டி ஜயதிலக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் அங்கு பேசுகையில் மேலும் தெரி வித்ததாவது:"மஹிந்த சிந்தனை' மூலம் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் தொண்னூறு வீதம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நான் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு நிதி வழங்கியதாகவும் பொய்ப்பிரசாரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.நாட்டுக்காக நிறைவேற்ற வேண்டிய பல பொறுப்புகளை அனைவரும் கொண்டுள்ளனர். அதை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளுங்கள். கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவித்தமையைத் தொடர்ந்து நாடு முழுவதும் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புகள் தோன்றியுள்ளன என்றார் ஜானாதிபதி.ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ""மக்களுக்குத் தெளிவுபடுத்தும்'' பொதுக்கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் முதல் சந்திப்பு இது என்று தெரிவிக்கப்பட்டது.
Posted on : Sat Jul 21 8:51:02 EEST 2007
கிழக்கில் குழுக்களின் ஆயுதங்களைக் களைந்து ஜனநாயக நிர்வாக முறையை ஏற்படுத்துங்கள்
நாடாளுமன்றில் விமல் வீரவன்ஸவும் வற்புறுத்தல்
பிரிவினை வாதபயங்கர வாதிகளான புலி களின் பிடியில் இருந்து விடுதலை செய்த கிழக்கு மாகாண மக்களை மீண்டும் ஒரு பயங் கரவாத ஆயுதக் குழுவின் பிடிக்குள் தள்ளிவிடக்கூடாது. அங்கே உண்மையான ஜனநாயக நிர்வா கம் ஏற்படுத்தப்படவேண்டும்.'' இவ்வாறு ஜே.வி.பி. உறுப்பினரான விமல் வீரவன்ஸ வலியுறுத்தினார்.நேற்று நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளையின்போது கிழக்கில் சாதனை படைத்த இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.விமல் வீரவன்ஸ தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது:ஐ. தே. கட்சி புலிகளுடன் செய்துகொண்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின்பின் திருமலைத் துறைமுகப் பகுதி முதல் சம்பூர் வரை புலிகள் தமது முகாம்களை அமைத்து தமது அதிகாரத்தை விஸ்தீரப்படுத்தி இருந்தனர்.ஆனால் நமது படையினர் இன்று பல்வேறு விதமான தடைகள் அழுத்தங்களுக்கு மத்தியில் உயிர்த் தியாகங்களின் மூலம் கிழக்கு மாகாணத்தை முற்றாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விட்டனர். இது தனிப்பட்ட ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல. இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி.நமது படையினர் இராணுவரீதியாக கிழக்கு மாகாணத்தை பிரிவினைவாதிகளின் பிடியில் இருந்து பிரித்து எடுத்து விட்டனர். அதேபோன்று நாம் அரசியல் ரீதியாக உயர் நீதிமன்றத்தின் உதவியுடன் சட்ட ரீதியாக கிழக்கு மாகாணத்தைப் பிரித்து எடுப்போம். இந்நிலையில், புலிகளின் பிடியில் சிக்கித் தவித்த மக்களுக்கு விமோசனம் ஏற்படுத்த வேண்டும். அரசு தாமே வெற்றி கண்டதாக கூச்சல் போட்டு ஆரவாரம் செய்கிறது. வெறுமனே சத்தம் போடுவதால் பயன் ஏற்படாது.இரண்டு தசாப்தங்களுக்கு மேல் பிரிவினைவாதப் புலிகளின் சர்வாதிகாரப் பிடியிலிருந்து விடுவித்த கிழக்குவாழ் மக்களை மற்றும் ஒரு ஆயுதக்குழுவின் பிடிக்குள் தள்ளிவிடக்கூடாது.அங்கே இயங்கிவரும் தனித்தனி ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அங்கே ஜனநாயக முறையிலான நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் நாம் பெற்ற வெற்றியைப் பாதுகாக்க முடியும்.அரசிடம் உறுதியான கொள்கை தற்போது இல்லை. ஜெனிவாவில் ஒரு காலையும், கிளிநொச்சியில் ஒரு காலையும் வைத்துக்கொண்டுள்ளது. இரண்டு தோணியில் கால்வைத்துப் பிரயாணம் செய்து வெற்றிபெற முடியாது.ஜெனிவாப் பக்கம் உள்ள காலைப் பிடுங்கி, கிளிநொச்சியில் இரண்டு கால்களையும் ஊன்ற வைக்கவேண்டும். இதனை செய்விக்கக்கூடிய வல்லமை உள்ள எதிர்க்கட்சியும் இங்கு இல்லை. அதுவும் இரட்டைத்தன்மை உடையதாகவே இருக்கின்றது. எனவே, உறுதியான ஒரு எதிர்க்கட்சி அவசியம். நாட்டு மக்களின் உதவியுடன் கிழக்கில் பெற்ற வெற்றியைப் போன்று வடக்கில் இருந்து புலிகளை விரட்டி அடிப்போம். என்றார்.
Posted on : Sat Jul 21 8:52:07 EEST 2007
இலங்கை-அமெரிக்க ஒப்பந்தம் சபையில் நேற்றுச் சமர்ப்பிப்பு
இலங்கை அமெரிக்க பாதுகாப்பு ஒப் பந்தம் நீண்ட இழுபறியின் பின் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் நாடாளுமன்றில் கூறப்பட்டமை போல பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று நாடாளுமன்றுக்கு வந்து அந்த ஒப்பந்தத்தை சபாபீடத்தில் ஒப்படைத்தார்.ஆனால், அந்த ஒப்பந்தத்தில் இருந்த சில நபர்களின் பெயர்களும், தொலைபேசி இலக்கங்களும் நீக்கப்பட்டே அது சமர்ப் பிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.ஒப்பந்தத்துடன் தொடர்புபட்ட நபர் களின் பெயர்களும் தொலைபேசி இலக் கங்களும் ஏன் நீக்கப்பட்டிருக்கின்றன என்று ஜே.வி.பி. நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ஸ பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.அதற்குப் பதிலளித்த பிரதமர், சில கார ணங்களுக்காக இந்த ஒப்பந்தப் பத்திரத் தில் இருந்த அமெரிக்கத் தொலைபேசி இலக் கங்களும், மின் அஞ்சல் முகவரிகளும், சில அமெரிக்க நபர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுவிட்டன என்றும் ஒப்பந்தம் தொடர்பான ஏனைய விவரங்கள் அதில் அடங்கியுள்ளன என்றும் கூறினார்.
Posted on : Sun Jul 22 7:48:14 EEST 2007
கிழக்கு மாகாண சபையின் செயலாளராக விமானப் படையைச் சேர்ந்த குமரேசன்?
கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக, விமானப்படையின் திட்டமிடல் பணிப்பாளர் ஏயர் கொமாடோர் எஸ்.குமரேசன் நியமிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகின்றது.பிரதம செயலாளராகப் பணியாற்றிய மேஜர் அபயவீர கடந்த 16ஆம் திகதி அவரது அலுவலகத்தில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.அவரது இடத்திற்குப் படை அதிகாரி ஒருவரை நியமிக்கவே அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.விமானப்படையில் பணியாற்றும் கும ரேசனை நியமிக்க அரசு பூர்வாங்கமாக முடிவு செய்துள்ள போதிலும், அவர் அந்தப் பதவியை ஏற்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கொழும்பில் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Posted on : Sat Jul 21 8:53:24 EEST 2007
உயிலங்குளம் பாதை நேற்று மூடப்பட்டது
மன்னார், உயிலங்குளத்திலுள்ள சோதனைச் சாவடி ஊடான விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கான போக்குவரத்து நேற்றுமுதல் தற்காலிக மாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் கட்டையடம்பன் பகுதியிலுள்ள படையினரின் முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டதை யடுத்தே இந்தப் போக்குவரத்து தடைப்பட்டிருக்கிறது.குறிப்பிட்ட போக்குவரத்து பாதையை மூடியதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை செஞ்சிலுவைச் சர்வதே சக் குழுவினர், மன்னார் மாவட்ட அரச அதிபர் நிக்கலஸ் பிள்ளைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.இந்த வீதி மூடப்பட்டதால், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் பிரதேசத்திற்கான பொருள் விநியோகம் நேற்று தடைப்பட்டிருந்தது.இதேவேளை, இப்பாதை மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை.
கிழக்கில் அபிவிருத்தியை முன்னெடுப்பதாயின் அரச சார்பற்ற நிறுவனங்களை அனுமதியுங்கள்
[22 - July - 2007]
மட்டு. - திருமலை ஆயர் அரசிடம் வலியுறுத்தல்
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதாயின் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவேண்டுமென மட்டு. -திருமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் `தினக்குரலு க்கு' கருத்துத் தெரிவிக்கையில்;
குடும்பிமலையை (தொப்பிகல) புலிகளிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறும் அரசாங்கம் கிழக்கினை தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகக் கூறி அங்கு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிக்கேட்க அது செவிக்கு இனிமையாக உள்ளது.
ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து, அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டும் உயர் பாதுகாப்பு வலயமென்ற போர்வையில் அவர்கள் தமது பாரம்பரிய தாயகங்களிலிருந்தும் அகற்றப்பட்டுள்ள நிலையில் கிழக்கில் எதற்காக அபிவிருத்தித் திட்டங்கள் என்ற கேள்வியெழுகிறது.
2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கிழக்கில் வீடுகளை இழந்துள்ளனர். அகதிமுகாம் வாழ்க்கை தொடர்கிறது. மீள்குடியேற்றத்திற்குப் பின்னரும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் உரிய முறையில் நிறைவு செய்யப்படவில்லை.
மக்கள் இயல்பு வாழ்க்கையினையே விரும்புகின்றனர். முதலில் இந்த யதார்த்தத்தை நாம் அபிவிருத்திக்கு முன்னதாக விளங்கிக்கொள்ள வேண்டும். அபிவிருத்திக்கு நாம் குறுக்கீடானவர்கள் அல்ல.
ஆனால், அபிவிருத்திக்கு முன்செய்யவேண்டிய நிறையப் பணிகள் உள்ளன. வீடு, தொழில் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இவ்வாறு வரிசைப்படுத்தலாம்.
கிழக்கு அபிவிருத்தியை அரசாங்கத்தினால் மாத்திரம் மேற்கொள்ள முடியாது. இதனை அரசாங்கம் மாத்திரம் மேற்கொள்ளுமாயின் அபிவிருத்திப் பணிகள் நிறைவடைய 10 வருடங்களுக்கும் மேல் செல்லும்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிழக்கில் சுதந்திரமாக செயற்பட அனுமதியளிக்கப்பட வேண்டும்.
கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் பங்காளராக வேண்டும். இதற்கான அனுமதியை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும்.
அபிவிருத்திக்கான நிதி யுத்தத்திற்கு பயன்படுத்தப்படாதிருப்பதையும் வேறு தரப்புகளின் கரங்களுக்கு அவை செல்லாதிருப்பதையும் உறுதி செய்வதும் இவ்வரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதான பணியாகும்.
கிழக்கு மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு அதன்பின்னரே கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட வேண்டும். இதற்கு முன்னதாக அபிவிருத்தி என்றால் அதனை அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். இதுவே அரசாங்கம் மற்றும் சர்வதேச சமுகத்திற்கான எமது செய்தியாகும் என்றார்.
கோதுமை மாவின் விலை 4 ரூபாவினால் அதிகரிப்பு
வீரகேசரி நாளேடு
கோதுமை மாவின் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 47 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பிறிமா கோதுமை மாவின் விலை 51 ரூபாவாக அதிகரித்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் இவ்வாரத்தில் அதிகரிக்கப்படவுள்ளது.
விலை அதிகரிப்பு தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக பிரிமா சிலோன் நிறுவனத்தை நேற்று தொடர்பு கொண்ட போதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரம் பெற்ற அலுவலர்கள் எவரும் கடமையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை, பிறிமா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆயினும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் இவ்வாரத்திற்குள் அதிகரிக்கப்படவுள்ளன. இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பராக்கிரம தசநாயக்க கேசரிக்கு தகவல் தருகையில்,
கோதுமை மாவின் விலை 4 ரூபா என்ற அதிகளவான தொகையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களினதும் விலையை உடனடியாக அதிகரித்தேயாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இருந்த போதும் எத்தனை ரூபாவினால் பாணின் விலையை அதிகரிப்பது என்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பேக்கரி உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் எத்தனை ரூபாவினால் பாண் விலையை அதிகரிப்பது என்பது குறித்து எமது சங்கம் முடிவெடுக்கும்.
எவ்வாறெனினும் பாணின் விலை இவ்வாரத்திற்குள் அதிகரிக்கப்படும் என்றார்.
இதேவேளை, ஒரு இறாத்தல் பாணின் விலை 01 ரூபா முதல் 02 ரூபா வரையான தொகையால் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களிலும் கோதுமை மாவின் விலை பல தடவைகள் அதிகரிக்கப்பட்டது. அந்நிலையில் பிறிமா நிறுவனம் தமது அனுமதி இன்றி கோதுமை மாவின் விலையை அதிகரித்ததாக நுகர்வோர் அதிகார சபை, பிறிமா நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
விலை அதிகரிப்பு தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக பிரிமா சிலோன் நிறுவனத்தை நேற்று தொடர்பு கொண்ட போதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரம் பெற்ற அலுவலர்கள் எவரும் கடமையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை, பிறிமா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆயினும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் இவ்வாரத்திற்குள் அதிகரிக்கப்படவுள்ளன. இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பராக்கிரம தசநாயக்க கேசரிக்கு தகவல் தருகையில்,
கோதுமை மாவின் விலை 4 ரூபா என்ற அதிகளவான தொகையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களினதும் விலையை உடனடியாக அதிகரித்தேயாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இருந்த போதும் எத்தனை ரூபாவினால் பாணின் விலையை அதிகரிப்பது என்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பேக்கரி உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் எத்தனை ரூபாவினால் பாண் விலையை அதிகரிப்பது என்பது குறித்து எமது சங்கம் முடிவெடுக்கும்.
எவ்வாறெனினும் பாணின் விலை இவ்வாரத்திற்குள் அதிகரிக்கப்படும் என்றார்.
இதேவேளை, ஒரு இறாத்தல் பாணின் விலை 01 ரூபா முதல் 02 ரூபா வரையான தொகையால் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களிலும் கோதுமை மாவின் விலை பல தடவைகள் அதிகரிக்கப்பட்டது. அந்நிலையில் பிறிமா நிறுவனம் தமது அனுமதி இன்றி கோதுமை மாவின் விலையை அதிகரித்ததாக நுகர்வோர் அதிகார சபை, பிறிமா நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment