Saturday, 28 July 2007


ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார
பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான முறைப்பாடு காரணமெதுவுமின்றி நிராகரிப்பு
[28-07-2007 12.35pm]

அமெரிக்க தூதுவரும், இலங்கை பாதுகாப்பு செயலாளரும் கைத்தாச்சித்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு செய்யப்பட்ட மனு, முறைப்பாட்டு தரப்பினரிடம் எதுவித விளக்கமும் கோராமலேயே நிராகரிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கின்றார். கெபினட் அனுமதியின்றி இவ்வாறான ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட முடியாமை, இதன் மூலம் இராணுவ உரிமையும், ஒருதலைபட்சமான நன்மையும் அமெரிக்காவிற்கு கிடைக்கும், விமான நிலையம், துறைமுகம் என்பவற்றை இருதரப்பினரும் பயன்படுத்த முடியும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இலங்கைக்கு, அமெரிக்க துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை பயன்படுத்தும் தேவையில்லை போன்ற ஒப்பந்தத்தின் பாதகங்களை தமது முறைப்பாட்டு மனுவில் குறிப்பிட்டிருந்ததாக நணயக்கார குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான சிக்கல் மிகுந்த முறைப்பாட்டு மனுவை கவனத்திற் கொள்ளாமல் தீர்ப்பு அளிப்பது மிகவும் மோசமான நீதிமன்ற நடைமுறை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கோதுமை மாவின் விலையை அதிகரித்த பீரிமா நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்
[25-07-2007 6.00pm]

நுகர்வோர் பாவணையாளர் அமைச்சரினால் கோதுமை மா அத்தியாவசிய பொருட்களாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 45 ரூபா வரை அதிகரித்தமைக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை பீரிமா நிறுவனத்திற்க எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றைத் தாக்கல் செய்தது.நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தாக்கல் செய்த இந்த மனுவில், பீரிமா சிலோன் லிமிற்றட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் 8 உறுப்பினர்களை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. நுகர்வோர், பாவணையாளர் அமைச்சின் அத்தியாவசிய பொருளாக பெயரிட்டப்பட்டுள்ள கோதுமை மாவின் விலையை தன்னிச்சையாக அதிகரிக்க முடியாது என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சரத் விஜேசிங்கவினால் இந்த மனு (ஜூலை 25ம் திகதி) தாக்கல் செய்யப்பட்டது.

206 மில்லியன் ரூபா வைட்ஹவுஸ் கொடுக்கல் வாங்கலை, அரசாங்கம் நிராகரிக்கின்றது.
[25-07-2007 4.55pm]

ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்காக 260 மில்லியன் ரூபா செலவில் பத்தரமுல்ல பிரதேசத்தில் வைட்ஹவுஸ் எனப்படும் வீடொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்களில் உண்மைக்குப் புறம்பானது என நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே (கொழும்பில் 25ம் திகதி) தெரிவிக்கின்றார்.கொழும்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் (25ம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். குறிப்பிட்ட இந்த வீட்டில் வெளிநாட்டவர் ஒருவர் வசிப்பதாகவும், இதற்கான மாதாந்த வாடகை 225,000 ரூபா என தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்ஜனாதிபதி தேர்தலின் போ ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற நிதியில் இருந்து 260 மில்லியன் ரூபா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு பத்தரமுல்ல பிரதேசத்தில் வைட் ஹவுஸ் என்ற வீடொன்றைக் கொள்வனவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் இணைப்பாளர் ஸ்ரீபதி சூரியாராச்சி 24ம் திகதி கொழும்பில் குற்றஞ்சுமத்தியிருந்தார்.~~இவ்வாறான அபகீர்த்தியை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

No comments: