குடும்பிமலையில் சிறீலங்காவின் வெற்றிக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது!
விடுதலைப் புலியோ-இந்த- பணியை முடித்த நோர்வே தூதுவருக்கு பரிசளித்துப் பல்லிளிக்கிறது!!

இந்த மாதத்துடன் இலங்கையில் தனது பணிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் நோர்வே தூதுவர் ஹான்ஸ்
பிரட்ஸ்கார் புதன்கிழமை கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை
சந்தித்து பிரியாவிடை பெற்ற போது பிரட்ஸ்காருக்கு தமிழ்ச்செல்வன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிப்பதைக் காணலாம்.

Thu Jul 12 7:05:00 EEST 2007
தொப்பிகல முற்றாக மீட்பு படையினர் நேற்று அறிவிப்பு
கிழக்கில் புலிகளின் கடைசித் தளமும் வீழ்ந்துவிட்டதாகத் தெரிவிப்பு தொப்பிகல (குடுமிமலை) பிரதேசத்தை முற்றாக மீட்டு விட்ட தாக படையினர் நேற்று அறிவித்தனர். நாங்கள் தொப்பிகலவை அடைந்துவிட்டோம். அதனைக் கைப் பற்றிவிட்டோம். இப்போது அங்கு புலிகளின் நிலைகள் எதுவும் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க நேற்று மாலை ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.தொப்பிகலவைச் சூழவும் தொப்பிகலயிலும் புலிகளின் சிறு சிறு இருப்பிடங்கள் உள்ளன. அவற்றை நாம் அழித்து வருகிறோம். தொப்பிகலவின் மேற்குப் பக்கத்தை சுத்திகரிக்க வேண்டியுள்ளது. எனினும் தொப்பிகல கைப்பற்றப்பட்டுவிட்டது என்றும் இராணு வப் பேச்சாளர் சொன்னார்.கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து தாம் 450 விடுதலைப் புலிகளை கொன்றுவிட்ட தாகவும் 20 படையினர் பலியானதாகவும் படைத்தரப்புத் தெரிவித்தது. ஆனால், விடுதலைப் புலிகள், தமது தரப்பில் 60 போராளிகளே மரணமான தாகவும் அதனைவிட 3 அல்லது நான்கு மடங்கு படையினரை அழித்துவிட்டதாக வும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இப்போது கிழக்கின் பெரும்பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டார்கள் தான். எனி னும் நாம் அங்கு இன்னமும் செயற்படுகின் றோம். நாம் இயன்ற எல்லா வகை வழிமுறைகளையும், உத்திகளையும் தந்திரோபாயங் களையும் ஆயுதங்களையும் கையாள்வோம் அவர்கள் விரும்பினால் வடக்கே வரட்டும். எங்கே வரட்டும் பார்ப்போம். வந்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்கட்டும் என்று விடுதலைப் புலிகளின் இராணு வப் பேச்சாளர் இராசையா இளந்திரை யன் நேற்று கிளிநொச்சியில் வைத்து ரொய்ட் டருக்குத் தெரிவித்தார். ஊடகத் தகவல் நிலைய அறிவிப்புநேற்றுக்காலை பொழுது புலரும் வேளை அரசுப்படைகள் தொப்பிகல பகுதிக்குள் நுழைந்து அதன் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டன என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடகத் தகவல் நிலையம் அறிவித்தது. புலிகளின் தளங்களில் அவர்கள் கைவிட்டுச் சென்றவை என்று கூறப்படும் கனரக ஆயுதங்கள் சிலவற்றின் படங்களையும் ஊடக நிலையம் வெளியிட்டது.எனினும் அந்தப் பகுதிகளில் ஒளிந்திருக்கும் புலிகளைத் தேடி அழிக்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டிருப்பதால் சிறுசிறு மோதல்கள் இன்னமும் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.சிலமாதகால மோதல்களுக்குப் பின்னர் விடுதலைப்புலிகளைச் சந்திப்பதன் மூலம் முடங்கிவிட்ட சமாதான முயற்சிகளுக்குப் புத்துயிரளிக்க நோர்வே முயன்று கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் தொப்பிகல மீட்பு கைகூடியுள்ளது. என்று வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டன.தொப்பிகல வனாந்தரத்தில் உள்ள இந்தத் தளம் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் பொழுது புலர்வதற்கு முன்னர் இது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது நேற்று நண்பகல் விடுக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பிந்திய நடவடிக்கைகள் தொடர்பாக இதர தகவல்கள் அதில் வெளியாகவில்லை.""கொமாண்டோக்களும் இராணுவ வீரர்களும் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தொப்பிகல வனாந்தரத் தளத்தை அடைந்தார்கள்.'' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ""இந்த வெற்றியோடு கிழக்கு மாகாணத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமிக்க இறுதிப் பகுதியில் அவர்களின் கேந்திர மத்திய நிலையமான தளத்தையும் துருப்புகள் கைப்பற்றியுள்ளன'' என்றும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது.""வெற்றியடைந்துள்ள இராணுவத்தினர் அடர்ந்த காட்டுக்குள் சிதறிக் கிடக்கும் எதிரிகளின் சிறுசிறு பகுதிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். அதேவேளை தேடுதல் வேட்டையையும் மேற்கொண்டுள்ளார்கள்.'' எனினும் இரு தரப்பு சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை. நாளுக்கு ஓர் அறிவிப்புதொப்பிகல வனாந்தரப்பகுதிகளில் இராணுவப் பிரவேசம் விடுதலைப்புலிகளின் பலத்த எதிர்ப்பால் பின்னடைவைத் தழுவியுள்ளது என, முதல்நாள் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தார்கள். மறுதினமான நேற்று, இப் புதிய மீட்புத் தகவல் வெளியாகியுள்ளது. அரச பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த இராணுவ நடவடிக்கை குறித்துக் குறிப்பிடுகையில்,""எல்லையில் 98 சத வீதத்தைக் கைப்பற்றி விட்டோம். எஞ்சியது இரண்டு வீதந்தான். சில நாட்களுக்குள் இதனை மீட்டுவிடலாம் என்பதற்கில்லை'' எனக் குறிப்பிட்டிருந்தார்.""தொப்பிகல வெகு விரைவில் வீழ்ச்சி கண்டுவிடும்'' என்ற தகவல்களையும் அவர் நிராகரித்திருந்தார்.இராணுவப்பேச்சாளர் பிரசாத் சமரசிங்க, செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர் மத்தியில் பேசுகையில், ""தொப்பிகலவிலிருந்து ஐந்து முதல் ஆறு கிலோமீற்றர் தொலைவிலேயே துருப்புகள் நிலை கொண்டுள்ளன. தொப்பிகலவின் துண்டாடப்பட்ட பகுதிகளிலிருந்து தீவிரவாதிகள் இன்னும் எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகிறார்கள்'' எனத் தெரிவித்திருந்தார். பிரிகேடியர் பகலில் சொன்னதுஇதேவேளை தொப்பிகல பிரதேசத்தை கைப்பற்றியிருப்பது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நேற்றுப் பகல் தகவல் வெளியிட்டபோது கூறியவை வருமாறு:கடந்த பெப்ரவரிமாதம் 24 ஆம் திகதி தொப்பிகலவை கைப்பற்றும் நடவடிக்கையை எமது அரச படைகள் ஆரம்பித்தன. அன்றிலிருந்து படிப்படியாக அப்பகுதி இராணுவக்காட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது அப்பகுதி முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் போது இதுவரை 103 புலி உறுப்பினர்கள் எம்மிடம் சரணடைந்துள்ளனர். 211 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது சடலங்களைக் கண்டெடுத்துள்ளோம். எமது படைத்தரப்பில் 18 பேர் இந்த இராணுவ நடவடிக்கையின்போது உயிரிழந்துள்ளனர். 68 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.தற்போது தொப்பிகல முழுமையாகக் கைப்பற்றப்பட்டு இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் கிழக்கு காட்டுபகுதிக்குள் தப்பியோடி ஒளிந்திருக்கும் புலிகளைத் தேடும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
Posted on : Thu Jul 12 7:04:18 EEST 2007
கிழக்கில் போர் உத்திகள் மாற்றப்பட்டுள்ளன இனி என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள்
புலிகளின் இராணுவப்பேச்சாளர் கூறுகிறார் ""கிழக்கில் பல வாரங்களுக்கு முன்னரே கொரில்லா போர்முறைக்கு எங்களுடைய போர் உத்தியை மாற்றிவிட்டோம் எனவே, எதிர்காலத்தில் எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன நடக்கப்போகின்றது என் பதைப் பொறுத்திருந்துபாருங்கள்'' இவ்வாறு விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.கிழக்கில் அரச படையினர் தொப்பிகலவை கைப் பற்றியது தொடர்பாக நேற்றுப்பி.பி.ஸிக்கு கருத்துக் கூறும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:அரசு, கிழக்கில் நடத்துகின்ற போர் முடிவுக்கு வந்துவிட்டது எனக் கூறுகின்றது. ஆனால், அது உண்மை அல்ல ஏன் என்றால் எங்களுக்கு 24 வருட கால அனுபவம் இருக்கிறது. கெரில்லாப் போர் அனுபவம் இருக்கின்றது.இந்தப் பகுதியில் நாங்கள் பல வாரங்களுக்கு முன்னரே கெரில்லாப் போர் முறைக்கு எங்களுடைய போர் உத்தியை மாற்றிவிட்டோம். கிழக்கைப் பொறுத்தவரை நிலப்பரப்பைப் பிடிப்பது என்பது எங்களுக்கு முக்கியமானது அல்ல. நிச்சயமாக இலங்கைப் படையினர் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். பெரும் நிலப்பரப்பை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.பெரும் விஸ்தீரணமான நிலப்பரப்பில் துருப்புக்களை நிலை நிறுத்துவது என்பதும் அதில் ஏதும் ஒரு சம்பவமும் நடைபெறாமல் பார்துக்கொள்வது என்பதும் இரு வேறுபட்ட விடயங்கள்.எனவே, எதிர்காலத்தில் எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன நடக்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.எமது மக்களை இந்த அடக்குமுறை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க முடியவில்லை என்றவகையில் இது ஒரு பின்னடைவுதான் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசுகள் இதனை முயற்சி செய்தன. ஆனால், அனைவரும் இதில் தோல்வி அடைந்துவிட்டனர்.ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதல் சந்திரிகா பண்டாரநாயக்கா வரை அனைவரும் இதில் தோற்றுப் போய்விட்டார்கள்.தற்போது இது ராஜபக்ஷவின் தருணம். அவர் தனது முயற்சியை செய்கின்றார். இதுவொரு இராணுவ ரீதியான முன்னேற்றகரமான நிலை என்று நான் கருதவில்லை. ஏன் என்றால், நீங்கள் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டைப் பெறவேண்டும் என்றால் நீங்கள் அடுத்த பகுதியின் கட்டுப்பாட்டை இழக்கவேண்டி நேரிடும் ஆகவே, அவர்கள் ஒருவகையில் செயல்பட முயற்சிக்கின்றபோது அதற்கு ஏற்ப நாங்கள் எங்களது பாணியை அதாவது யுத்தியை மாற்றுவோம்.எங்களுடைய யுத்தியை மாற்றும் பாணி என்று கூறுவது ஒரு பிராந்தியத்தைப் பொறுத்தவரை நாங்கள் எதிரியை மரபு ரீதியாகவோ அல்லது மரபு சாராத முறையிலோ எதிர்கொள்வதேயாகும். என்றார் இளந்திரையன்.
தொப்பிகலவை கைப்பற்றியதாக அரசு அறிவிப்பு
தினக்குரல்(12 - July - 2007)
கிழக்கில் விடுதலைப் புலிகள் வசமிருந்த கடைசிப் பிரதேசமான தொப்பிகலவையும் (குடும்பிமலை) நேற்று புதன்கிழமை காலை படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போது தொப்பிகலவுக்கு மேற்கே சிறு சிறு குழுக்களாக சில சில பகுதிகளிலிருக்கும் எஞ்சிய புலிகளையும் அடுத்து வரும் நாட்களில் படையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவரெனவும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் திருகோணமலை மாவட்டத்தில் மாவிலாறு பகுதியில் ஆரம்பமான பாரிய படை நடவடிக்கை, தொப்பிகலவையும் கைப்பற்றியதன் மூலம் கிழக்கில் முடிவுக்கு வருவதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் புலிகள் வசமிருந்த அனைத்துப் பிரதேசங்களும் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறையில் புலிகள் வசமிருந்த பகுதிகள் கைப்பற்றப்பட்டு இறுதியாக மட்டக்களப்பில் தொப்பிகலவும் கைப்பற்றப்பட்டதன் மூலம் கிழக்கு மாகாணம் முழுமையாக புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் புலிகள் வசமிருந்த பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் அவர்களது இறுதிக் கோட்டையான தொப்பிகலவை கைப்பற்றும் படை நடவடிக்கையை மே மாதம் ஆரம்பித்திருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொப்பிகலவை அண்மித்த பகுதிகளைச் சென்றடைந்த படையினர், நேற்று அதிகாலை தொப்பிகலவில் புலிகளின் பிரதான முகாமான `பரன்ஸ்' முகாமை கைபற்றியதாகவும் தெரிவித்தனர்.
தற்போது இப்பிரதேசத்தில் தங்கள் நிலைகளைப் பலப்படுத்திவரும் படையினர் கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அகற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொப்பிகலவுக்கு மேற்கே சில சில பகுதிகளில் பதுங்கியிருக்கும் புலிகளும் அடுத்த ஓரிரு தினங்களில் விரட்டப்பட்டு அவர்கள் காடுகளுக்குள் துரத்தப்பட்டு விடுவரெனவும் படையினர் கூறியுள்ளனர்.
தொப்பிகலவுக்குள் படையினர் நுழைந்த போது எரிந்துபோன நிலையில் இரு `டபிள்கப்' வாகனங்களும், ஐந்து ட்ராக்டர்களும், உலருணவுப் பொருட்களும், புல்டோசர் ஒன்றும், ஐந்து மோட்டார் சைக்கிள்களும், கன்ரர் ரக லொறியும் காணப்பட்டதாகவும் படையினர் கூறுகின்றனர்.
நேற்று முன்தினம் நரக்கமுல்லவுக்கு தென்மேற்குப் பகுதியில் தேடுதல் நடத்திய படையினரால், சேதமாக்கப்பட்ட நிலையிலும் உதிரிப்பாகங்களாக்கப்பட்ட நிலையிலும் இரு 120 மில்லிமீற்றர் கனரக மோட்டார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், தொப்பிகல மற்றும் அதனையண்டிய பகுதிகளில், தப்பியோடிய புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கையும் தொடர்வதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
தொப்பிகலவுக்குள் படையினர் நுழைந்த போது புலிகள் வசமிருந்து எதுவித எதிர்ப்பும் காட்டப்படவில்லையெனவும் படையினர் தெரிவித்தனர்.
தொப்பிகலவும் புலிகள் வசமிருந்து கைப்பற்றப்பட்டதன் மூலம் கிழக்கிலிருந்து அவர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் படையினர் கூறுகின்றனர்.
கடந்த 14 வருடங்களுக்குப் பின்னர் தற்போது முதல் தடவையாக கிழக்கு மாகாணம் முழுமையாக அரசகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

குடும்பிமலையிலிருந்து விடுதலை புலிகள் வெளியேற்றியமை வரலாற்று முக்கியதும் மிக்க நிகழ்வு
வீரகேசரி இணையத்தளப்பிரிவு
குடும்பி மலையையிலிருந்து விடுதலை புலிகளை வெளியேற்றியமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் முக்கிய தலமையகமாக இருந்த குடும்பிமலையியை பாதுகாப்பு படையினர் மீட்டதை குறைவாக மதிப்பிடமுடியாது குடும்பிமலையை கைப்பற்றியமை சிலர் கேலி செய்து விமர்சிப்பது விடுதலைப் புலிகளிற்கு உந்துதலளிக்கும் செயலென பிரதமர் தெரிவித்துள்ளார்
தற்போது பெற்றுள்ள வெற்றிய முன்கொண்டு செல்வதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment