Friday, 13 July 2007

இன்று: வரலாற்றில் ஒரு ஏடு



13 ஜுலை (1987) 2007

1978 ம் ஆண்டின் பாசிச அரசியல் யாப்பின் மூலம் அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாக்கிக்கொண்ட ஜெ.ஆர். அரசாங்கம் ஸ்ரீறீலங்கா சுதந்திரக்கட்சி தலைவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையை பறித்தது.

1983 ஜுலை 25 இல் தமிழ் இனப்படுகொலையை கட்டவிழ்த்தது.

இதைச் சாட்டி ஜெ.வி.பி.தடை செய்யப்பட்டது.

ஈழத் தமிழரின் பிரிவினைக்கோரிக்கையை சட்டவிரோதமாக்கும் ஆறாவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் அமூலானது.

இதன் படி தமிழர் விடுதலைக் கூட்டணி சட்டவிரோத அமைப்பாக்கப்பட்டது.

1978 அரசியல் யாப்புக்கு அஞ்சி இந்தியாவுக்கு ஓடிய கும்பல் இந்திய மத்திய மாநில அரசுகளை மண்டியிட்டு இந்தியப்படைகளோடு திரும்பி வந்தன!

இப்போது இந்தியப் படைகளின் ஆயுதம் ''சட்டபூர்வ ஆயுதம்'' என்றும், விடுதலைப் புலிகளின் ஆயுதம் '' சட்ட விரோத ஆயுதம் '' என்றும் பிரகடனப்படுத்தியது.

எனினும் இந்திய நலன்களை அமூலாக்க எந்த வலிமையும் அந்த அமைப்புக்கு இருக்கவில்லை.

இந்த அரும்பணியை நிறைவேற்றியது -அசோக்கா ஹொட்டேலின் தலைமைத் தளபதி- சுரேஸ் பிரேமச்சந்திரன்


13 ஜுலை 1987 இல் தேசத்துரோகத்துக்காக திரு.அமிர்தலிங்கம் அவர்கள் விடுதலைப் புலிகளால் (கயமைத்தனமாக) படுகொலை செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகளை தமிழ் ஈழமக்களின் ஏக பிரதிநிதிகளாக்கிய TNA இன் இரண்டு பெரும் தூண்கள்,

1) சம்பந்தன்: தமிழர் விடுதலைக்கூட்டணி

2)சு.பி.சந்திரன்: ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

'' புலிகளின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்'' ???????

No comments: