Friday, 3 August 2007

''மயிரிழைப் பெரும்பான்மை'' ?...இருக்கவே இருக்கிறது ஜனாதிபதி ஆட்சிமுறை!

50:50
'ஐம்பதுக்கு ஐம்பது' பாராளமன்றம்!

Posted on : Fri Aug 3 9:00:40 EEST 2007 .
மங்கள பக்கம் இ.தொ.கா. சாய்ந்ததால் வந்த விளைவு?

அரசுத் தரப்பிலிருந்து வெளியேறிய மங்கள சமரவீர சிறிபதி சூரியாராய்ச்சி அணியின் பக்கம் இ.தொ.காவின் தலைமை, அதிகம் தொடர்பு வைத்து அதனுடன் நெருங்கிச் செயற்பட முயற்சித்த காரணத்தினாலேயே அக்கட்சியோடு அரசுத் தலைமை முறுகும் நிலைமை உருவானது.இப்படி அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.மங்கள அணியுடன் இ.தொ.காவினர் மிக நெருக்கமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளனர் என்ற புலனாய்வுத் தகவல்கள் அரசுத் தலைமைக்கு எட்டியபோதே இத்தகைய விரிசல் எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.""ஜனாதிபதியின் சகோதரர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இ.தொ.கா. தலைவர்களுக்கும் இடையில்தான் நேரடி முறுகல் இடம்பெற்றுள்ளது. இந்த முறுகலை முரண்பாட்டை ஜனாதிபதி தாமே நேரடியாகத் தலையிட்டு, இரு சாரõரையும் அழைத்து சமரசம் செய்வதற்கான வாய்ப்பு உண்டா?'' என்று கேட்டதற்கு அதை நிராகரிக்க முடியாது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted on : Fri Aug 3 9:01:33 EEST 2007 .
அரசிலிருந்து* விலகியது இ.தொ.கா.!
(*அரசாங்கத்திலிருந்து-திருத்தம் ENB)

அரசிலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நேற்று விலகியது.அக்கட்சியின் சார்பில் அரசில் அங்கம் வகித்த கட்சித் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் மற்றும் நான்கு பிரதி அமைச்சசர்களும் தங்களது பதவி விலகல் கடிதங்களை நேற்று ஜனாதிபதியின் செயலாளரிடம் ஒப்படைத்ததுடன் தற்போதைய அரசில் இ.தொ.காவின் பங்களிப்பு முடி வுக்கு வந்தது.நேற்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதியின் சகோதரருமான பஸில் ராஜ பக்ஷவுக்கும், இ.தொ.கா. தலைவர்களுக் கும் இடையில் நடந்த ஒரு சந்திப்பில் வாக்கு வாதம் முற்றி, முரண்பாடு தீவிரமடைந் ததை அடுத்தே இந்தத் திடீர் விலகல் இடம் பெற்றதாகக் கூறப்படுகின்றது.இளைஞர் சக்தி வளம், சமூகப் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவியிலி ருந்து இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் விலகினார்.அதேசமயம், தபால் பிரதி அமைச்சர் பதவியிலிருந்து எம்.எஸ்.செல்லச்சாமியும், தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பதவியிலிருந்து முத்து சிவலிங்கமும், கல்வி பிரதி அமைச்சர் பதவியிலிருந்து எஸ்.சச்சி தானந்தனும், தேசிய நல்லிணக்க பிரதி அமைச்சர் பதவியிலிருந்து எஸ்.ஜெகதீஸ் வரனும் விலகினர்.இ.தொ.காவைச் சேர்ந்த எம்.பியான வி. புத்திரசிகாமணியும் தமது கட்சியினருடன் சேர்ந்து அரசுப் பக்கத்திலிருந்து எதிரணிக்கு வருவார் எனத் தெரிகின்றது.எனினும் ஏற்கனவே இ.தொ.காவிலி ருந்து தம்பாட்டில் அரசுப்பக்கம் பாய்ந்து பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் சுகாதாரப் பிரதி அமைச் சர் வடிவேல் சுரேஷûம், உல்லாசப் பயணத் துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் தொடர்ந்தும் அரசுப்பக்கமே இருப்பர் எனக் கூறப்பட்டது. என்றாலும் சில சமயங்களில் வி.புத்திரசிகாமணி எம்.பி. இ.தொ.கா. தலைமையோடு முரண்பட்டுக்கொண்டு அரசுப் பக்கத்தில் தொடர்ந்து இருப்பதற்கு வாய்ப்பு உண்டு என அரசுத் தரப்புத் தக வல் தெரிவித்தது.நேற்று முற்பகல் ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் கட்சியின் பிரதித்தலைவர் இரா. யோகராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.அப்போது, மலையகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆற்றிய உரை தொடர்பாக பஸில் ராஜபக்ஷ சூடாகக் கேள்வி எழுப்பினார் எனக் கூறப்படுகின்றது.சம்பந்தப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தை "மஹிந்த சிந்தனை' யின் அங்கமாக அறிவிக்காமல் புறம் ஒதுக்கி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் பேசினார் எனக் குறிப்பிட்ட பஸில், அதற்காக இ. தொ. காவினரைக் கடுமையாகக் கடிந்து கொண்டாராம்.ஆனால் சம்பந்தப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கை "மஹிந்த சிந்தனை' உருவாக்கத்துக்கு முன்னரே திட்டமிடப்பட்டது என்பதால் அதை "மஹிந்த சிந்தனை' அடிப்படையிலானது எனக் கூறவே முடியாது என இ. தொ. காவினர் வாதிட்டிருக்கின்றனர்.இதையடுத்தே வாதம் முறுகி சூடு பிடித்திருக்கின்றது. மிக மோசமான வார்த்தைப் பிரயோகத்துக்கு உள்ளான இ. தொ. கா. தலைவர்கள் அந்தச் சந்திப்பில் வைத்தே பதவி விலகி, அரசில் இருந்து வெளியேறத் தீர்மானித்து, அந்த முடிவை உடனடியாகச் செயற்படுத்தினர் என்று கூறப்பட்டது.மிகத் தரக்குறைவான வார்த்தைகளினாலான அர்ச்சனைக்கு இ.தொ.கா. தலைவர்கள் உட்பட்டமையை அடுத்தே இந்த முடிவை எடுக்கும் நிøலக்கு அவர்கள் தள்ளப்பட்டனர் என்று இ. தொ. கா. வட்டாரங்கள் தெரிவித்தன.பதவியை ராஜினாமாச் செய்ததை அடுத்து, இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கொட்டகலைக்கு விரைந்தார். அவரோடு தொடர்புகொள்ள அரசுத் தலைமை எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை எனத் தெரியவந்தது.இதற்கிடையில் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரையாடினார் எனத் தெரிகிறது.""நீங்கள் என்னுடைய அரசில் அமைச்சர்களாக இருக்கிறீர்களா அல்லது பஸில் ராஜபக்ஷவின் அரசில் அமைச்சர்களாக இருக்கிறீர்களா? பஸிலோடு கோபித்துக்கொண்டு எனது அரசில் இருந்து வெளியேறுவது சரியா?'' என்று ஜனாதிபதி, முத்துசிவலிங்கத்திடம் கேட்டார் எனத் தெரிகிறது.இதேசமயம், இ.தொ.காவுடனான முரண்பாடு தீர்க்கப்பட்டுவிட்டது என்ற சாரப்பட சில செய்திகள் அரச தரப்பினால் நேற்று மாலை கசியவிடப்பட்டன. ஆனால், இ.தொ.கா வட்டாரங்கள் அதை அடியோடு மறுத்ததோடு, இணக்க நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தெரிவித்தன.இந்தப் பின்னணியில் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடன் சமரசம் செய்யும் நோக்கில் அரச உயர்மட்டம் தனது தூதுவர்களை இன்று காலை கொட்டகலைக்கு அனுப்பக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted on : Fri Aug 3 9:00:15 EEST 2007 .
அரசுக்கு நாடாளுமன்றில் மயிரிழை பெரும்பான்மை!

அரசுப் பக்கத்திலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறியதை அடுத்து நாடாளுமன்றில் தற்போதைய அரசின் பெரும்பான்மைப் பலம் மயிரிழை யில் ஊசலாடும் கட்டத்தை அடைந்திருக் கின்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய போன்றவை அரசுப் பக்கம் சாய்ந் ததை அடுத்து நாடாளுமன்றில் அரசுத் தரப்பு எம்.பிக்களின் எண்ணிக்கை 121 ஆக இருந்தது.அதன் பின்னர் மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராய்ச்சி ஆகியோர் எதிரணிப் பக்கத்துக்கு வந்ததை அடுத்து அது 119 ஆகக் குறைந்தது. இதற்கிடையில் ஐ.தே.க. பக் கத்திலிருந்து அரச பக்கத்திற்கு வந்த 17 எம்.பிக்களில் ஒருவர் மீண்டும் ஐ.தே.க. பக்கம் திரும்பிவிட்டதால் மேலும் ஒரு எம்.பியை அரச தரப்பு இழந்தது.இப்போது இ.தொ.காவின் ஆறு எம்.பிக் களும் மீண்டும் எதிரணிக்கு வந்துவிட்ட தால் நாடாளுமன்றில் அரசின் பலம் 112 ஆகக் குறைந்திருக்கின்றது. மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் சபாநாயகர் நீங் கலாக இறுதி 224 எம்.பிக்களில் சரி அரை வாசித் தொகையினர் இப்போது அரசு பக்கத் திலும், எதிரணிப் பக்கத்திலும் உள்ளனர்.

No comments: