Sunday, 12 August 2007

திருமலை சென்று குடியமர மறுத்தால் மூதூர் மக்களின் நிவாரணம் நிறுத்தப்படும்

ஆளுநர் மொஹான் பணிப்புரை

இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தமது சொந்த இடங்களான மூதூர் கிழக்கு மற்றும் சம்பூரை விட்டு இடம்பெயர்ந்து மட்டக்களப்பு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள தமிழ்மக்களை திரு கோணமலைக்குச் சென்று குடியமருமாறு அரசாங்கம் நிர்ப்பந்திக்கிறது. அவ்வாறு செய்ய மறுப்பின், அவர்களுக்கு வழங்கப்படும் சகல வகையான நிவாரண உதவிகளும் நிறுத்தப்படும் என்று வடக்கு , கிழக்கு மாகாணங்களின் ஆளுநர் கொமடோர் மொஹான் ஜெய விக்கிரம எச்சரித்துள்ளார். இதுதொடர்பான பணிப்புரையை அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளார்.மூதூர் கிழக்கு, சம்பூர், ஈச்சிலம்பற்று பகுதி களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மட் டக்களப்பில் நலன்புரி நிலையங்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கி யுள்ளனர்.அவர்களை திருகோணமலையில் அர சாங்கத்தால் ஒதுக்கப்படும் காணிகளில் குடியமருமாறு அரச அதிகாரிகள் வலி யுறுத்தி உள்ளனர். ஆயினும், தமது சொந்த இடங்களில் தம்மை குடியமர அனுமதிக்கவேண்டும் என்றும் இல்லையேல் தாம் மட்டக்களப்பி லேயே தங்கப் போவதாகவும் மக்கள் தெரி வித்துள்ளனர்.இந்த முரண்பாடு நிலையை அடுத்து திருகோணமலையில் மீளக்குடியமர மறுப் பவர்களுக்கான சகல வகை நிவாரணங் களும் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து வந்தனர். அந்த எச்சரிக்கை செயல் வடிவம் பெறும் வகையில திருகோண மலை சென்று குடியமர மறுப்பவர்களுக் கான நிவாரண உதவிகளை நிறுத்துமாறு ஆளுநர் மொஹான் சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு வார இறுதியில் பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ்: உதயன்

No comments: