இந்திய விமானப் படைத் தளபதிகளின் மாநாடு புலிகளின் வான்பலம் குறித்தும் ஆராய்வர்
[14 - August - 2007]
தினக்குரல் இந்தியாவின் தென்பிராந்திய விமானப்படைத் தலைமையகத்தில் எதிர்வரும் 16 ம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை விமானப்படைத் தளபதிகளின் மாநாடு இடம்பெறவுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்பலம் உட்பட தெற்கு குடாவில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள், சவால்கள் தொடர்பான நடவடிக்கைகள்,இவை தொடர்பாக புரிந்துகொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.
இந்த மூன்று நாள் மாநாட்டில் இந்திய விமானப்படைத் தளபதி பாலி எஸ். மேகர், உதவி தளபதி பி.என். கோகவே மற்றும் 7 விமானப்படை கட்டளைத்தளபதிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.
அத்துடன், கொச்சியிலுள்ள இந்திய தென்பிராந்திய கடற்படைத்தளபதிகளுடனும் இம்மாநாட்டின் இறுதிநாளான 19 ஆம் திகதி கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் பூகோள அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரத்தினால் இந்தியாவின் தென்பிராந்திய விமானப்படை கட்டளைப்பிரிவு கேந்திர முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது.
No comments:
Post a Comment