Saturday, 18 August 2007

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறும் சம்பந்தன்

கிழக்கை அபிவிருத்தி செய்யும் ஆணை ஜனாதிபதிக்கு மக்களால் வழங்கப்படவில்லை
தமிழ், முஸ்லிம் எம்.பிக்களுக்கே தரப்பட்டது என்கிறார் சம்பந்தன்

தாம் கைப்பற்றிய கிழக்கை அபிவிருத்தி செய்யப்போவதாக அரசு கூறுகிறது. ஆனால், அதைத் தீர்மானிப்பதற்கான ஆணையை கிழக்கு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வில்லை. தமிழ், முஸ்லிம் எம்.பிக்களுக்கே அந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுடன் கலந்தாலோசிக்காமல் அங்கு அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி பேசுகிறார்.இப்படி விசனம் தெரிவிக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்றக் குழுத் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயக மும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன்.""இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை இலங்கை அரசு தன்னிச்சை யாகப் பிரித்த செயலை இந்தியா ஒருபோதும் ஏற்காது. இது இலங்கை அரசின் சர்வதேச ஒப்பந்த மீறலாகும்.'' என்றும் அவர் குறிப்பிட்டார்."சமாதானத்திற்கான வர்த்தகம்' என்ற தலைப்பில் இலங்கை வர்த்தக சம்மேள னம் நேற்றுமுன்தினம் கொழும்பில் நடத் திய ஒரு கருத்துப்பட்டறையில் பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற் றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறியவை வரு மாறு:இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் இணைக்கப்பட்ட வடக்கு கிழக் கைத் தன்னிச்சையாகப் பிரித்துவிட்டது இலங்கை அரசு. இது மிகவும் மோசமான செயல். தன்னுடன் ஒப்பந்தம் செய்த நாட் டோடு பேசி ஓர் இணக்கத்திற்கு வராமல், அந்த ஒப்பந்தத்தை மீறுவது ஏற்றுக்கொள் ளக்கூடியதல்ல. இந்தியா நிச்சயம் இலங்கை அரசின் இந்தச் செயற்பாட்டிற்கு உடன் படாது.வடக்கு கிழக்கைத் தனித்தனியாகப் பிரித்ததன் மூலம் அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களுக்குத் தொல்லைகளையே அரசு கொடுத்து வருகின்றது.உயர் பாதுகாப்பு வலயத்தால் 60,000 தமிழர்கள் பாதிப்புதிருகோணமலை உள்ளிட்ட தமிழர் கள் வாழும் பல இடங்களை அரசு உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றியுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இதனால் தமது வாழ்விடங்களை இழந்துள் ளனர்.தமிழர்களைப் புலிகள் பிடியில் இருந்து காப்பாற்றுவதற்காக நாம் புலிகளிட மிருந்து கிழக்கை மீட்டெடுத்தோம் என்று அரசு கூறுகின்றது.அப்படியென்றால் இப்போது கிழக்கில் புலிகள் இல்லை. இந்த நிலையில் எதற்கு அங்கு உயர் பாதுகாப்பு வலயங்கள்? உண் மையில் அரசு கிழக்கைக் கைப்பற்றிய பின்பு தான் தமிழ் மக்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள். கிழக்கு கைப்பற்றப்படுவதற்கு முன் அங்கு தமிழர்கள் தமது சொந்த இடங் களை இழந்து எங்கும் செல்லவில்லை.கொழும்பில் கொலன்னாவையில் உயர் பாதுகாப்பு வலயம் உள்ளது. கட்டுநாயக் காவில் உயர்பாதுகாப்பு வலயம் உள்ளது. ஆனால் அந்தந்தப் பகுதிகளில் மக்கள் வாழ்கிறார்கள்தானே. அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் எவரும் வேறு இடங்களுக்கு விரட்டப்படவில்லையே. தமிழர்களை மாத்திரம் ஏன் கிழக்கில் இருந்து அரசு விரட்டவேண்டும்?தற்போது கிழக்கை அபிவிருத்திசெய்யப் போவதாக அரசு கூறிக்கொள்கிறது. கிழக்கை அபிவிருத்தி செய்யும் ஆணை யைக் கிழக்கு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கவில்லை.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ கிழக்கில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை விடவும் குறை வான வாக்குகளைத் தான் பெற்றார். இவ ரால் எப்படிக் கிழக்கை அபிவிருத்தி செய் யும் தீர்மானத்தைத் தனித்து எடுக்கமுடி யும்?கிழக்கை அபிவிருத்தி செய்யும் ஆணையை அம்மக்கள் எமக்குத்தான் தந் தர்கள். தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை கிழக்கு மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதன் மூலம் அம்மக்கள் அந்த ஆணையை எமக்குத் தந்தனர்.கிழக்கை அபிவிருத்தி செய்வதாக இருந்தால் கிழக்கில் மக்கள் பிரதிநிதிகளான, தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப் பினர்களை ஜனாதிபதி கலந்தா லோசித்தி ருக்கவேண்டும். அவர் அப்படி எதுவும் செய்யவில்லை.முழு இலங்கையுமே இராணுவ மயமாகி உள்ளதுகிழக்கு மாத்திரமன்றி முழு இலங்கை யுமே இராணுவ மயமாகியுள்ளது. தமி ழர்கள் வாழமுடியாதநிலை தோன்றியுள் ளது. உண்மையில் வெளிநாடுகளில் தற் போது வசிக்கின்ற இலங்கைத் தமிழர்கள் குறிப்பாக வடக்கு, கிழக்குத் தமிழர்கள் இலங்கையிலேயே வாழ விரும்புகின்றனர்."பணத்தைச் சம்பாதித்துக்கொண்டுவந்து நமது சொந்த இடங்களில் வாழவே நாம் விரும்புகிறோம்' என்று ஆஸ்திரேலி யாவில் வசிக்கின்ற யாழ். தமிழர்கள் அண்மையில் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் இலங்கையில் வாழ் வதற்கான சூழல் இங்கில்லை.சமாதானம் ஏற்பட்டால் மாத்திரமே தமி ழர்கள் இலங்கையில் நிம்மதியாக வாழும் நிலை ஏற்படும். சமாதானத்தை ஒருபோதும் யுத்தம் மூலம் கொண்டு வரமுடியாது. பேச்சு மேசையில் மாத்திரமே அதைக் கொண்டு வர முடியும்.ஆனால், இலங்கை அரசோ யுத்தம் மூலமே சமாதானத்தைக்கொண்டுவர முயற்சி செய்கிறது. இதற்காகக் கோடிக்கணக்கான ரூபா பணத்தை இலங்கையின் அரசு செல விடுகிறது. இதனால் இலங்கை பொருளா தாரமும் பாரியளவில் வீழச்சிகண்டுள்ளது.2005ஆம் அண்டைவிடவும் 2007இல் யுத்த செலவீனம் இருமடங்காக அதிகரித் துள்ளது. யுத்தம் மூலம் சமாதானத்தை நிலைநாட்டி விடலாம் என்று மஹிந்த ராஜ பக்ஷ கனவு காண்கிறார்.வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டமையா லும், கிழக்கு அரசால் கைப்பற்றப்பட்டமை யாலும் கிழக்குத் தமிழர்கள் துன்பங்களையே அனுபவிக்கின்றனர். இதுதான் கிழக்கின் உண்மை நிலை. என்றார் .

மீண்டும் அமைச்சுப் பதவிகளை இ.தொ.கா. விரைவில் ஏற்கும்

வீறாப்புடன் அமைச்சுப் பதவிகளை உதறிவிட்டுச் சென்ற இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அடுத்த வார இறுதியில் மீண்டும் அமைச்சுப் பதவி களை ஏற்றுக்கொள்ளவிருக்கின்றனர் என அக்கட்சியின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பான திரை மறை வுப் பேச்சுகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று இந்தியா புறப்பட்டார்.வாய்வார்த்தைக்காக வீறாப்புடன் வெளி யேறிய நாம் மீண்டும் போய் மண்டியிடக் கூடாது எனக் கட்சிக்குள் ஒரு சாரார் வலியு றுத்திய போதும், பதவிகளில் இருந்தவர் கள் மீண்டும் அவற்றைப் பெற்றே தீர வேண்டும் என பிடிவாதமாக இருக்கின்ற னர் என்றும் கூறப்படுகிறது.அமைச்சுப் பதவிகளை துறந்தபின் அது தொடர்பாக இ.தொ.கா. தொடர்ச்சியாக தேசிய சபை, நிர்வாக சபை என தெரிவுசெய் யப்பட்ட முக்கிய உறுப்பினர்களுடன் உள் வீட்டு ஆலோசனைகளை நடத்தியுள்ளது.இக் கூட்டங்களில் இந்தியத் தூதரகத்தில் செல்வாக்குப் பெற்ற வர்த்தகப் புள்ளிகள் சிலரும் கலந்துகொண்டனர் எனவும் தெரியவந்துள்ளது.அதன் பின்னரே அரச தலைவர்களு டன் இ.தொ.கா. பேச்சு நடத்தியதாகவும், எந்தவிதமான நிபந்தனையும் இன்றி மீண் டும் அமைச்சுப் பதவிகளில் இ.தொ.கா வினர் இணைந்து கொள்வதில் தமக்கு எவ் வித ஆட்சேபனையும் இல்லை என்று ஜனாதிபதி கூறினார் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.""அவர்களாகவே போனார்கள். அவர் களாகவே வருகின்றார்கள். இது வழமை'' என்று ஜனாதிபதி தரப்பில் கூறப்பட் டதாகவும் தெரிகிறது.தற்பொழுது அமைச்சரவையில் இருக் கும் அமைச்சர் ஒருவர், இ.தொ.காவுக்கும் அரச தலைவருக்கும் இடையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள பேச்சுகளை உறுதிப்படுத்தினார்.அமைச்சுப் பதவிகளைத் துறந்துவிட்டு அரசின் பக்கம் ஒட்டிக் கொண்டு இருப் பதில் ஏதும் அர்த்தம் இல்லை என இ.தொ. காவில் ஒரு தரப்பினர் கட்சித் தலைமைக்கு இடித்துக் காட்டினராம்.அதேவேளை, நமக்கு அமைச்சுப் பதவி களை வழங்கியவர் ஜனாதிபதி, இக்கட்டான நிலையில் ஜனாதிபதிக்கு கை கொடுக்கவேண் டியது நமது கடமை, எனவே, நாம் மீண் டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மறுசாரார் வாதிட்டுள்ளனர்.இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சுப் பொறுப்பை மீள ஏற்பதை இன்னும் முழுமனதுடன் அங்கீகரிக்காவிட்டாலும் அந்தத் தீர்மானத் துக்கு அவர் தள்ளப்படுவது உறுதியென வும் நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் நுழைவாயில்களில் படையினரும் பொலிசாரும் பாரிய தேடுதல் வேட்டை
வீரகேசரி

கொழும்பு நகரருக்குள் வாகனங்கள் பிரவேசிக்கும் நுழைவாயில்களில் படையினரும் பொலிசாரும் இணைந்து நேற்று பாரிய தேடுதலில் ஈடுபட்டமையினால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் பயணிகளும் பெரும் அசெகளியங்களுக்குள்ளாகினர். காலிவீதி,நீர்கொழும்பு வீதி,கண்டி வீதி பாராளுமன்ற வீதி என்பவற்றினூடாக
கொழும்பு நகருக்குள் பிரவேசித்த வாகனங்கள் நகருக்கான நுழைவாயில்களில் மறிக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது இதனால் கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது.
காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த திடீர் சோதனை நடவடிக்கை பிற்பகல் 1 மணிவரை நீடித்தது சோதனை காணமாக வாகனங்கள் கொழும்பு நகருக்குள் பிரவேசிப்பதற்கு பல மணி நேரம் சென்றது.
இந்த சோதனை நடவடிக்கைகள் முப்படையினராலும் மேற்கொள்ளப்பட்டன. நேற்றுக்காலை 9 மணிமுதல் முற்பகல் 1 மணிவரை மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் ஒவ்வொரு வாகனமும் தனித்தனியாக தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே கொழும்பிற்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டது.இதனால் கொழும்புடன் இணைந்த பிரதான வீதிகளில் நேற்றுக்காலை முதல் பிற்பகல் வரை பெரும் வாகன நெரிசல் காணப்பட்டது.
காலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனை நடவடிக்கைகளினால் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் காரியாலங்களுக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் உரிய நேரத்திற்கு செல்லமுடியாமல் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
பெரும் வாகன நெரிசல் காணப்பட்டதனால் பொது போக்குவரத்து பஸ்களில் பயணம் செய்தோர் பஸ்களிலிருந்து இறங்கி வீதிச்சோதனை சாவடிகள் இல்லாத வீதிகள் அல்லது சோதனை சாவடிகளுக்கு எதிர்புற பாதையூடாக செல்வதற்கு முயற்சித்த போதும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் அதற்கு அனுமதியளிக்கவில்லை.
படையினரின் அறிவுறுத்தல்களை மதிக்காது சென்ற பயணிகள் சிலர் சோதனை சாவடியில் நீண்ட நேரம் தடுத்துவைக்கப்பட்டு கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன சில வீதி சோதனை சாவடிகளில் பொலிஸ் மோப்ப நாய்கள் மூலமாக வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

No comments: