Saturday, 8 September 2007

ஈழச்செய்திகள்:080907

முள்ளிக்குளத்தில் ஒரு வாரம் சிக்குண்டிருந்த மக்கள் பட்டினியோடு 12 மைல்கள் நடந்து வந்து சோர்வுற்ற நிலையில் சிலாவத்துறை சேர்ந்தனர்!

கடந்த ஒரு வார காலமாக, முள்ளிக் குளத் தில் சிக்குண்டு இருந்த சிறுவர்களும் முதிய வர்களும் ஆண்களும் பெண்களுமாகச் சுமார் 600 பொது மக்கள், 12 மைல் தூரத்தை நடந்து வந்து, நேற்று ஒருவாறு சிலாவத் துறையை அடைந்தனர்.சுமார் நான்கு நாள்களாக போதிய உண வின்றி, அரைப்பட்டினி, காற்பட்டினியாக இருந்த இந்த மக்கள், சிலாவத்துறை வந்து சேர்ந்தபோது, களைப்புற்று, சோர்ந்து பேச முடியாது, இயங்க முடியாத மிகவும் பரிதா பகரமான நிலையில் காணப்பட்டனர்.இவர்களில் சிறுவர்கள், முதியவர்கள் வயிற்றோட்ட நோயினாலும் பாதிக்கப்பட் டுள்ளனர்.கடந்த ஆறு தினங்களாக எமது கிரா மத்துக்கு உணவுப் பொருள்கள் எதுவும் வந்துசேரவில்லை. கையிருப்பில் இருந்த பொருள்கள் இரண்டொரு நாள்களில் குறைந் தும், தீர்ந்தும் போயின. பலரும் அரைப்பட் டினி இருந்தோம் என்று அவர்கள் தெரி வித்தனர்.இன்று (வெள்ளிக்கிழமை) எம்மை மீட்க நடவடிக்கை எடுத்திருக்காவிடில், நாம் பட்டினிச் சாவுக்கு ஆளாக நேரிட்டிருக்கும் என்றும் அவர்களில் பலரும் அழுதழுது கூறினர். கடந்த முதலாம் திகதி சிலாவத்துறை யில் படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக முள்ளிக்குளத் தில் 155 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் வெளியேற முடியாமல் அங்கு சிக்குண்டு இருந்தமை தெரிந்ததே.12 மைல்கள் நடந்து வந்து நேற்று சிலா வத்துறையை வந்தடைந்த இவர்கள் அங் கிருந்து செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வின் வழித்துணையுடன் அவர்கள் அங்கி ருந்து வாகனங்களில் முருங்கன் மகா வித்தியாலயத்திற்கு கூட்டி வரப்பட்டுத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.மன்னார் ஆயர் அதிவண ராஜப்பு ஜோசப், மன்னார் அரச அதிபர் ஏ. நிக்கலஸ் பிள்ளை, நானாட்டான் பிரதேச செயலர் எம். திருஞானசுந்தரம் ஆகியோர் தள்ளாடி மற்றும் உயிலங்குளம் படை அதிகாரிகளு டன் நடத்திய பேச்சுக்களின் பலனாக இந்த மக்கள் மீட்கப்பட்டனர்.முள்ளிக்குளம் பகுதியில் வசிப்பவர்கள் அங்கிருந்து சிலாவத்துறைக்கு கால்நடை யாக வருவதற்கு படையினர் அனுமதி வழங் கினர். நேற்றுமாலை சிலாவத்துறையை வந்தடைந்தனர்.அவர்கள் அங்கிருந்து ஆறு பஸ்களில் முருங்கன் மத்திய மகா வித்தியாலயத் துக்கு அழைத்து வரப்பட்டனர். 1990ஆம் ஆண்டு முள்ளிக்குளம் பகுதி யில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், மன் னாரில் வாழ்ந்து வந்தனர். அவர்களில் சுமார் 155 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபின் முள்ளிக்குளத்துக்குச்சென்று மீளக்குடியமர்ந்திருந்தனர்.கடலோடு அண்டியுள்ள முள்ளிக்குளம் கிராமம் மன்னார் புத்தளம் எல்லைப் பகு தியில் அமைந்துள்ளது.

சிலாவத்துறையிலும் முள்ளிக்குளத்திலும் கடற்படையினரின் இரண்டு முகாம்கள்

அண்மையில் படையினரால் கைப் பற்றப்பட்ட சிலாவத்துறை, முள்ளிக் குளம் ஆகிய பிரதேசங்களில் கடற் படையினர் இரண்டு முகாம்களை அமைத்துள்ளனர்.கடற்படையின் கொமடோர் கே.பி. ரட்நாயக்க இதனைத் தெரிவித்தார்.இங்குள்ள கடற்பிரதேசங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே எமது நோக் கம். இதன்மூலம் இப்பிரதேசங்களில் இடம்பெறும் பயங்கரவாதச் செயற் பாடுகளை நிறுத்தமுடியும்.சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற் பகுதிகளில் இடம்பெறும் மீன்பிடித் தொழிலை வழமைக்கு கொண்டுவர இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.மேற்படி பிரதேசங்களில் இருந்தே கொழும்புத்துறைமுகம் உட்பட தலை நகரின் பிரதான பொருளாதார மையங் கள் மீது விடுதலைப் புலிகள் தாக்கு தல் நடத்த வருவது கண்டறியப்பட் டுள்ளது.விடுதலைப் புலிகள் தாம் கொள் வனவு செய்யும் ஆயுதங்களை சிலாவத் துறைப் பிரதேசத்திலேயே இறக்கு வது கண்டறியப்பட்டது. கடந்த வரு டத்தில் பல தடவைகள் இவ்வாறு கொண்டு வரப்பட்ட ஆயுதங்களும் இழுவைப் படகுகளும் கடற்படையின ரால் அழிக்கப்பட்டிருந்தன என் றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரி வித்தார்.

சிங்கள மாவட்டம் எதனையேதும் உருவாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை

ஊடகத்துறை அமைச்சர் சொல்கிறார் திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக் கும் இடடையில் புதிய சிங்கள மாவட்டம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடு பட்டிருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட் டில் உண்மை எதுவும் இல்லை.ஊடகத்துøறு அமைச்சர் பிரியதர்சன யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.சிங்கள மாவட்டம் ஒன்றை உருவாக்க முயற்சி நடப்பதாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் புதனன்று நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டிருந்தார்.இது தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப் பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் பிரியதர்சன யாப்பா அதனை மறுத்தார்.அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக் கில் இக்கருத்து வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசின் கண்டனத்தைத் தெரி விக்கின்றேன்.எந்தவொரு சிங்கள மாவட்டத்தையும் உரு வாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அவர்.

வடபகுதி முன்னரங்க காவல் நிலைகளில் படையினர், விடுதலைப்புலிகள் மோதல்
[08 - September - 2007]

வவுனியாவிலும் யாழ்.குடாநாட்டிலும் முன்னரங்க காவல் நிலைப் பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே தொடர்ந்தும் பரவலாக மோதல்கள் நடைபெற்றுள்ளன. வவுனியாவில் ஓமந்தைக்கு கிழக்கே முன்னரங்க காவல் நிலைப் பகுதிகளில் இந்த மோதல்கள் நடைபெற்ற அதேநேரம், யாழ். குடாவிலும் முகமாலை முன்னரங்க காவல் நிலைப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
வவுனியா குதிரைவித்தான்குளம் முன்னரங்க நிலைகளில் நேற்று முன்தினம் மாலை இரு தரப்புக்குமிடையே கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
இந்த மோதலில் இரு புலிகள் கொல்லப்பட்டதாகவும் படையினரில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம். வவுனியாவுக்கு மேற்கே தம்பனைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய பலத்த ஷெல் தாக்குதலில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார்.
படையினரும் புலிகளின் நிலைகள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதேநேரம், நேற்றுக் காலை முகமாலை பகுதியில் இரு தரப்புக்குமிடையே பரஸ்பரம் கடும் ஷெல் வீச்சுகள் நடைபெற்றுள்ளன.
முன்னரங்க காவல் நிலைப் பகுதியில் மோதல்களும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


புதிய வரிச் சட்ட மூலங்களின் நிறைவேற்றத்தில் எத்தகைய மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது
சபையில் சபாநாயகர் அறிவிப்பு
வீரகேசரி நாளேடு

அரசாங்கம் சமர்ப்பித்த ஐந்து புதிய வரிச்சட்ட மூலங்களும் சபையின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் எத்தகைய மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என்று சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார நேற்று சபையில் அறிவித்தார்.
ஐந்து புதிய வரிச்சட்டமூலங்களும் சபையில் நிறைவேற்றப்பட்ட முறைமையானது நிலையியற் கட்டளை சட்ட விதிகளுக்கு மாறானது எனவும் ஆகவே மீள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் எதி ர்க்கட்சிகள் விடுத்த வேண்டுகோளுக்கு
பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் நேற்றுக்காலை 9.30 மணியளவில் கூடியதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடாவும் கம்பஹா மாவட்ட எம்.பி. யுமான ஜோசப் மைக்கல் பெரேரா சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்தார். எதிர்க்கட்சிகள் விரும்பாத நிலையில் அவர்களின் சந்தேகங்களுக்கு சரியான பதில் வழங்காமல் நிலையியற் கட்டளை சட்டங்களுக்கு மாறாக ஐந்து புதிய வரிச் சட்ட மூலங்கள் நேற்று (நேற்று முன்தினம்) நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சபையின் அனுமதியுடன் நிறைவேற்றப்பட்டதாகவும் நீங்கள் அறிவித்துள்ளீர்கள். இது நியாயமானது அல்ல என்றும் ஜோசப் மைக்கல் பெரேரா சுட்டிக்காட்டினார்.
ரணில் விக்கிரமசிங்க
அதனையடுத்து கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மின்னியல் மூலம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் சில தவறுகள் இருந்தன. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசம் காணப்பட்டது. அதனால்தான் அது தொடர்பாக விளக்கத்தை உங்களிடம் எமது உறுப்பினர்கள் கேட்டிருந்தார்கள் என்று கூறினார். அத்துடன் முதல் கட்ட வாக்கெடுப்பின்போது வாக்குகள் பதிவாகிய முறையில் குழப்பங்கள் காணப்பட்டன என்றும் சுட்டிக்காட்டிய அவர் தற்போது எங்களுக்கு அதுவல்ல பிரச்சினை மின்னியல் முறை மூலமான வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாட்டு திட்டங்கள் எதுவும் எமது நிலையியற் கட்டளை விதிகளில் இல்லை எனவும் கூறினார். வருத்தமடைகின்றோம்
மின்னியல் முறை மூலமாக இந்தியாவில் நடத்தப்படுகின்ற வாக்கெடுப்புகள் தொடர்பாகவும் மற்றும் வாக்கெடுப்பின் தன்மைகள் அதற்கான கால நேரங்கள் வரன் முறைகள் பற்றியும் தொடர்ந்து நீண்ட விளக்கமளித்த ரணில் விக்ரமசிங்க நேற்று (நேற்று முன்தினம் வியாழக்கிழமை) புதிய வரிச்சட்டங்கள் மீதான வாக்கெடுப்பின் போது இடம்பெற்ற குழப்பமான நிலைமைக்கும் வருத்தம் தெரிவித்தார். அத்துடன் பாராளுமன்ற ஜனநாயகம் மரபுகள், வழக்காறுகள், சம்பிரதாயங்கள், ஏற்புடைமையான பொருள் கோடங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டி நீண்ட விளக்கமளித்தார். அந்த வேளை சபையில் அமைதி நிலவியது. பாராட்டும் நன்றியும்
அதனையடுத்து உரிமைக் கோட்பாட்டு முறைமைகளையும் ஜனநாயக தத்துவார்த்தங்களையும் மேற்கோள்காட்டி அரசியல் பண்புகள் எடுத்துரைத்த ரணில் விக்ரமசிங்கவை சபாநாயகர் பாராட்டியதுடன் நன்றியும் தெரிவித்துக் கொண்டார். எம்.பி. க்களை தூண்டிவிட்டவர் ரணில்
இதன்போது கருத்து வெளியிட்ட அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, தனது எம்.பி. க்களை தூண்டிவிட்டு சபை நடுவாக இறக்கிவிட்டு குழப்பம் விளைவித்தவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். அவர் தற்போது பாராளுமன்ற ஜனநாயகம் பற்றி பேசுகின்றார் என கூறினார். அத்துடன் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின்னியல் வாக்கெடுப்பு முறைக்கு எதற்காக எதிர்ப்பு தெரிவித்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். ஏகமனதாக நிறைவேற்றமா?
அதற்கிடையே ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த ஜே.வி. பி. யின் குருநாகல் மாவட்ட எம்.பி. அநுர குமார திஸாநாயக்க, ஐந்து புதிய வரித்திருத்த சட்ட மூலங்களும் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்திகளை பிரசுரித்துள்ளன. இது சரியானதா என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சட்ட மூலங்கள் சபையின் இணக்கத்துடன் நிறைவேற்றப்பட்டதாக நீங்கள் அறிவித்ததன் காரணமாகவே ஊடகங்கள் அவ்வாறு பிரசுரித்திருக்கின்றன எனவும் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியதுடன் நிலையியல் கட்டளை சட்டத்திற்கு மாறக நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மூலங்களை ஜே.வி.பி. ஏற்காது எனவும் கூறினார். யாருக்கும் ஆதரவுஅல்ல
தொடர்ந்து கருத்துரைத்த அனுர குமார திஸாநாயக்க சட்ட மூலங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் நாங்கள் (ஜே.வி.பி.) ஐ.தே.க. வுக்கு ஆதரவு என்று அரச தரப்பு கூறுகின்றது. மக்களை பாதிக்கின்ற சட்ட மூலங்கள் என்ற அடிப்படையிலேயே நாங்கள் இதனை எதிர்த்தோம் என எடுத்துக் கூறினார். தவறான அறிவிப்பு
அதனையடுத்து கருத்து வெளியிட்ட ஜே.வி.பி. யின் குருநாகல் மாவட்ட எம்.பி. பிமல் ரட்நாயக்க, புதிய சட்ட மூலங்கள் ஐந்தும் திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே சபாநாயகர் அறிவித்திருக்கின்றார். அது தவறு எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று கூறினார். அத்துடன் வாக்கெடுப்பு தவறு என்றால் ஆம், இல்லை என்ற முறைப்படி பெயர் குறிப்பிட்ட குரல் மூலமான வாக்கெடுப்பை நடத்தியிருக்கலாம். அல்லது பழைய முறைப்படி நடத்தியிருக்கலாம். இரண்டில் ஒன்றை செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். சபாநாயகர் விளக்கம்
சபையின் அங்கீகாரத்துடன் மேலதிக 23 வாக்குகளுடன் முதலாவது சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது என்று தான் அறிவித்தேன். ஏனைய சட்ட மூலங்கள் சபையின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த முடிவிலே எத்தகைய மாற்றங்களையும் செய்ய முடியாது எனது தீர்மானத்தை மாற்ற முற்பட வேண்டாம் என்றும் கூறினார்.

No comments: