Tuesday, 4 September 2007

அமெரிக்காவின் ''பயங்கரவாத எதிர்ப்பு'' முழக்கம்! உலகெங்கும் தேசிய ஒடுக்குமுறைக்கான நியாயம்!!


மக்களைப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கும் தாக்குதல்கள் தொடரும்!

வடக்கைக் கைப்பற்றும் நடவடிக்கை எதுவுமில்லை!!

பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து அப்பாவிப் பொதுமக்களை மீட்கும் மனிதாபிமான நோக்கம் கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளை அரசு தொடரும். அது அரசின் கடமையும் கூட. ஆனால் இதனை வடக்கை மீட்கும் நடவடிக்கை என்று விவரிக்கவோ விமர்சிக்கவோ முடியாது.இவ்வாறு விளக்கத்துடன் கூடிய அறிவிப்பை விடுத்திருக்கின்றது இலங்கை அரசு. அரசின் பாதுகாப்புத் துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இந்த அறிவிப்பை விடுத்தார்.பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக நேற்று கொழும்பில் தாம் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டின் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் என்று எதுவும் அரசுக்குக் கிடையாது. இது விடயத்தில் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம மலேசியாவில் வைத்துக் கூறியவையே அரசின் நிலைப்பாடாகும். அதில் மாற்றம் ஏதும் இல்லை.சிலாவத்துறையில் இடம்பெற்றது பயங்கரவாதிகளின் பயங் கரவாதப் பிடியிலிருந்து அப்பாவி மக்களை மீட்கும் மனிதாபி மான நடவடிக்கையே. அத்தகைய செயற்பாட்டுக்கு ஊடகவிய லாளர்கள் என்ன பெயர் கொடுத்தாலும் அடைமொழி கொடுத்தாலும் எமக்கு ஒன்றுமில்லை. அதை நீங்கள் தாக்குதல் நட வடிக்கை என்று கூறலாம். அல்லது ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றும் இராணுவச் செயற்பாடு என்று அர்த்தப்படுத்தலாம். ஆனால் அரசைப் பொறுத்தவரை அது மக்களைப் பயங்கர வாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கை மட்டுமே.வடக்கைக் கைப்பற்றப் பெரும்படை நடவடிக்கை என்பதை என்பதைஅரசு ஏற்றுக்கொள்ளவில்லைவடக்கைப் பிடிக்க அரசுப் படைகள் பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம் பிக்கப் போகின்றன என்ற கூற்றை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.ஏனெனில், இந்த நாட்டில் புலிகளின் பிரதேசம், அரசின் பிரதேசம் என்று இரு வெவ்வேறு பிரதேசங்கள் இருக்கின்றன என அரசு கருதவில்லை. முழு நாடுமே அரசின் கீழ் வருவதுதான்.யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின்படி புலி களின் கட்டுப்பாட்டுப் பிரதேசம், அரசின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றெல்லாம் குறிப்பிடப்படுவதை இந்த அரசு ஏற்றுக் கொள்வில்லை. அதைக் கணக்கெடுக் கவும் இல்லை.முழு நாடுமே அரசின் கீழ்த்தான் உள் ளது என்ற நிலையில் வடக்கை கைப்பற்ற பெரும் படை நடவடிக்கையை அரசுப் படை கள் புதிதாக ஆரம்பிக்கப்போகின்றன என்று அர்த்தப்படுத்துவதை அல்லது கூறப் படுவதை அரசு ஏற்றுக் கொள்ள வேயில்லை.சில சமயம், ஏதேனும் பிரதேசத்தில் இருந்து கொண்டு பயங்கரவாதிகள் மேசமான பயங்கரவாதச் செயல்களில் ஈடு படலாம். அதனை முறியடித்து, அப் பிரதேச மக்களைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கும் மனிதாபிமா னப் பணியை அரசு தொடரும் அது அர சின் கடமையும் கூட.மக்களை மீட்கும் மனிதாபிமானப் பணிகிழக்கு மாகாணத்திலும் அதுதான் நடந்தது. மூதூர், மாவிலாறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதச் செயல் கள் முடியடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்தே கிழக்கில் பயங்கரவாதிகளின் பிடியிலி ருந்து மக்களை விடுவிக்கும் மனிதாபிமானப் பணியை அரசு பொறுப்போடு முன் னெடுத்தது.அதுவே சிலாவத்துறையிலும் இடம்பெற்றது. அத்தகைய நடவடிக்கைகள் தொடரும். அது தொடர்பான தனது கடப் பாட்டை பொறுப்பை அரசு தொடரும்.பயங்கவரவாதச் செயல்களைக் கை விட்டு, அரசுடன் பேசுவதற்கு புலிகளின் தலைவர் இப்போது வருவராரானாலும், அடுத்த நிமிடம் பேச்சு நடத்த அரசு தயார். என்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
யாழ்-உதயன்

No comments: