Thursday, 30 August 2007

நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட தளபதி சூசையின் நாட்டு விடுதலைப் போர் முழக்கம்!








'வல்லரசுகளைக் கண்டு நாம் அஞ்சவில்லை'.
தளபதி சூசை

விடுதலைப் புலிகளுடனான கடற் சமரில் விடுதலைப் புலிகளின் விசேட கடற்படைத் தளபதி சூசையின்
ஐந்து வயதுத் தனயன் வீரமரணம்!

தந்தையைப் பற்றி குழப்பம் அளிக்கும் தகவல்கள்!!

கடற்சமருக்குக் காரணம் ''கருத்து முரண்பாடு'' என புலிகள் வட்டாரத்தில் "பரப்புரை"!!!

உத்தியோகபூர்வ புலிச்சாதனங்கள்,

'கண்டிலோம்..கேட்டிலோம்' என மெளனம்!!!!
'கவன ஈர்ப்புக்காக' சில தகவல்கள்!
=======================================
என்ன இந்த கருத்து முரண்பாடு??
* வாய்க்கால் வெட்டவில்லையா? தண்ணீர் பாய்ச்சவில்லையா?
* மஞ்சள் அரைக்கவில்லையா? மைச்சானாய் இருக்கவில்லையா?
* வரியும் கேட்கவில்லையே, வட்டியும் கேட்கவில்லையே.........!
* மூச்சிலும் பேச்சிலும் தலைவர் விசுவாசம் தலை தாழ்ந்து நிற்கவிலையா?
* இங்கெல்லாம் ''விசுவாசமாய்'' இருந்தும் கூட, எங்கே கோபம் வந்தது கரிகாலனுக்கு?
தமிழீழ மக்கள் இராணுவ பயிற்சி நிறைவு விழாவில் தளபதி சூசை ஆற்றிய உரையைப் படியுங்கள்.

" தமிழீழ விடுதலையை வென்றெடுக்க ஆயுதம் ஏந்தியிருக்கும் உங்களிடமிருந்து சர்வதேச சமூகம் விரைவில் ஒரு தீர்க்கமான செய்தியை எதிர்கொள்ளும். உங்களுடைய தனிப்பட்ட வாழ்வைப் புறந்தள்ளி எங்களுடைய பொது இலட்சியமான தமிழீழ தேச விடுதலையை முன்நிறுத்தியுள்ளீர்கள். இன்று நாங்கள் ஒரு நெருக்கடி நிலையைச் சந்திக்கிறோம். இதுபோலவே 1999 இலும் எதிரி முப்பதினாயிரம் பேர் கொண்ட சேனையுடன் ' வெற்றி நிச்சயம்' என மார்தட்டிக்கொண்டு முன்னேறி எங்கள் வன்னி வள நிலத்தின் பெரும் பாகத்தைக் கைப்பற்றினான். வன்னி வளநிலத்தைக் கையகப்படுத்துவதும் கண்டி- யாழ்ப்பாண நில இணைப்பை உறுதி செய்வதும், தமிழீழ விடுதலைப்புலிகளை பூண்டோடு அழிப்பதும் எதிரியின் திட்டமாக இருந்தது. அத்தாக்குதலை முறியடித்து வன்னியை தொடர்ந்தும் எமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முன்னூறாயிரம் மக்கள் எம்முடன் தோளோடு தோள் நின்று போராடினார்கள். ஏறத்தாழ பத்தாயிரம் தமிழ் நெஞ்சங்கள் எல்லைப்பாதுகாப்புப் படையினராக எம்முடன் இணைந்தனர். ஆனால் இன்று புதுக்குடியிருப்பில் மட்டும் பத்தாயிரம் பேர் தமது ஆயுதப்பயிற்சியை முடித்துக்கொண்டுள்ளனர். அன்று வன்னியிலே பயிற்சியை முடித்துக்கொண்ட பத்தாயிரம் எல்லைப் பாதுகாப்புப்படையினரும் 'ஓயாத அலைகள் மூன்று' முன்னகர்வில் எம்முடன் தோளோடு தோள் நின்றனர். அவர்கள் துணையோடு முன்னேறித்தாக்கி இழந்த பிரதேசங்கள நாம் மீட்டெடுத்தோம். எதிரியை, அவனது ஆக்கிரமிப்புத் திட்டத்தை முடங்க வைத்தோம். எமது தலைவரின் வழிகாட்டலில் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை அதிகப்படுத்தினோம். அன்று அணிதிரண்ட பத்தாயிரம் மக்களில் இரு நூற்று எண்பத்தொருவர் வீரச்சாவடைந்தனர்.

இன்று மீண்டுமோரு நெருக்கடி நிலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. மகிந்த சிந்தனையானது எமது தாய் நிலத்தை மீளக்கைப்பற்றவே வடிவமைக்கப்பட்டது. இன்று அச்சிந்தனையானது ஐரோப்பிய யூனியன் எமது இயக்கத்தைத் தடை செய்தமையால் உக்கிரமடைந்து வெறிகொண்டலைகிறது. எமது வானொலியையும் செய்திப்பத்திரிகையையும் தொடர்ந்து கேட்டும் படித்தும் வரும் உங்களுக்கு தெரியும் தினமும் ஆறு அல்லது ஏழு தமிழீழ பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். எமது தொப்புள் கொடி உறவுகள் தொடர்ந்து வேட்டையாடப்படுகின்றனர். மனித வாழ்வுக்கு எந்தவித மதிப்புமின்றி அரசின் கொலைவெறித்தாண்டவம் தொடர்கின்றது.

ஜெனீவாப் பேச்சுக்கள் தோல்வியடைந்த பின்னர் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை இருநூற்றைத் தாண்டிவிட்டது. கடந்த நாலரை ஆண்டுகளாக நாம் கடைப்பிடித்த நல்லெண்ண வழிகளை அரசு அலட்சியப்படுத்தி தனது வேட்டையைத் தொடர்ந்த போதிலும் ஐரோப்பிய ஒன்றியம் எமது இயக்கத்தைத்தான் தடை செய்தது.

எமது இயக்கம் தமிழீழ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழீழ மக்களுக்காகப் போராடும் இயக்கமாகும். ஆதலால் இத்தடை குறித்து நாம் அச்சமுற வேண்டியதில்லை.

இது போலவே இந்திய இலங்கை ஒப்பந்தம் எம்மக்கள் மீது திணிக்கப்பட்டு இந்திய இராணுவம் எமது தேசத்தை ஆக்கிரமித்த போதும் விடுதலைப்புலிகள் இரண்டாயிரம் பேர் வரையிலேயே இருந்தார்கள். அவர்கள் தான் தம்மை அழித்தொழிக்க வந்த ஆக்கிரமிப்பு இராணுவத்தைத் தங்களுடைய தலைவரின் வழிகாட்டலில், அவரோடு தோளோடு தோள் நின்று போராடி விரட்டியடித்தார்கள். மணலாறில் நிலைகொண்டு

தலைவர் வழிகாட்ட திடங்கொண்டு போராடிய புலிகள் உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை புறம்கண்டனர். வல்லரசுகளைக் கண்டு நாம் அஞ்சவில்லை. ஐரோப்பியர்கள் விதித்துள்ள தடை அலட்சியப்படுத்தக் கூடிய முக்கியமற்ற ஒன்றுதான்.

கடந்த நாலரை ஆண்டுகளாக சர்வதேச சமூகம் எமக்கு நீதிவழங்குமென நாம் நம்பினோம். இனிமேல் அது ஒரு தப்பபிப்பிராயம். ஐரோப்பியர்கள் 1505 ம் ஆண்டில் எம்மண்ணிலே கால் பதித்தனர். அதனால் தான் நாம் எமது இறையாண்மையையும் சுதந்திரத்தையும் இழந்தோம். அதன் முன்பான காலப்பகுதியில் எம்மை நாமே ஆண்டு மகிழ்வோடு வளமாக வாழ்ந்திருந்தோம். இன்று நாம் எங்களது சொந்த மண்ணிலேயே
இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றோம்.

1999 இலே இந்திய இராணுவம் எம்மைச் சுற்றி வளைக்க முனைந்தபோது விடுதலைப்புலிகள் வன்னியைத் தளமாகக் கொண்டு நமது தலைவரோடு தோளோடு தோள் நின்று போராடினர். எமது மக்கள் எல்லைப் பாதுகாப்புப் படையாக நின்று எமது போராட்டத்துக்கு மாபெரும் வெற்றியைப் பரிசளித்தனர். ஆண்டு இரண்டாயிரத்திலே வெற்றிலைக்கேணியிலிருந்து மாமுனை வரைக்கும் அறுநூறு ஆண்கள், அறுநூறு பெண்களென ஆயிரத்து இருநூறு தொண்டர்களை நாம் அணிதிரட்டினோம். அந்தக் காலாற்படைக்கு தளபதி பால்ராஜ், தளபதி விதுசா, தளபதி துர்க்கா ஆகியோர் தலைமை தாங்கினர். எண்ணூறு பேர் கொண்ட அக் காலாற்படைக்குத் தளபதி வீரன் தலைமையில் எல்லைப் புறங்களைப் பாதுகாத்தனர். ஒரு மாத காலத்தில் எதிரியின் முன்னேற்றத்தை முறியடித்து எம்மால் பெரியதொரு நிலப்பரப்பை விடுவிக்க முடிந்தது. அச்சமரில் முன்னேறித் தாக்கியழித்த நமது தாக்கு திறனை நீங்கள் நன்கறிவீர்கள்.

நாங்கள் சர்வதேச நடுநிலைமையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். ஐந்து வருடங்கள் ஓடி விட்டது. சர்வதேச சமூகம், இலங்கை அரசு எம்மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு இப்போது ஆசீர்வாதம் அளிக்கிறது. வெறும் பசப்புவார்த்தைகளையே எமக்கு பரிசாக்குகின்றனர். சர்வதேச கண்காணிப்புக்குழுவின் தலலவர் என்னை முல்லைத்தீவில் சந்தித போது ' இலங்கை அரசுக்கு தாங்கள் உதவி செய்த போது அந்த நிதி இராணுவத் தளபாடங்களுக்காக செலவளிக்கக் கூடாது என நிபந்தனை இட்டதை நினைவு கூர்ந்தார். சர்வதேச சமூகத்தின் உதவிகள் பொருளாதார சுபீட்சத்துக்கும் மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதற்கும் மட்டுமே என்று கூறினார். பொங்கி வந்த சினத்தை அடக்கிக் கொண்டு அவருக்கு நாங்கள் பொறுமையாகப் பதிலளித்தோம், ''அமைதிப் பேச்சுவார்த்தைகள் அரங்கேறிக் கொண்டிருக்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒவ்வொரு போர்க் கப்பலை இலங்கை அரசுக்கு வழங்கியதை நாங்கள் அறிவோம்''....இந்தப் பதிலுடன் அவர் அமைதியாகிவிட்டார்.ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமிழர்கள் கொல்லப்படுவதை அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். சிங்கள அரசுக்கு யுத்தம் என்ற மொழி பேசப்படும் போதே விடயங்கள் புரிகின்ற நிலைமை நீடிக்கிறது.

சிங்கள அரசாங்கத்தில் வழி வழியாக வந்து அமரும் ஆட்சியாளர்களும் சரி, இராணுவத்தலைமகளும் சரி தமது ஐந்து வருட பதவிக்காலத்தை யுத்தத்திலேயே வீணடிக்கின்றனர்.மஹிந்த ராஜபக்ச அரசும் அதே வழியில் தான் பயணிக்கிறது. வெற்றிலைக்கேணியில் இருந்து மாமுனை வரையிலான பெரு நிலப்பரப்பை இரண்டாயிரம் பேர் கொண்ட எமது படையினரே மீட்டெடுத்தனர் என்ற வரலாற்று உண்மையை மீண்டும் நான் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.

இனித்தொடரப்போவது உச்சக்கட்ட யுத்தமுன்னெடுப்பு.எமதுதலைவர் அறுதியும் இறுதியுமான தமிழீழப் போருக்குத் தயாராகிவிட்டார். இந்தப் போரில் அங்குலம் அங்குலமாக எமது மன்ணை விடுவிக்க மாட்டோம், மாறாக இறுதித் தீர்வை, இறுதி வெற்றியை இந்தப் போர் முடிவு செய்யும்.
எமது தலைவரின் விருப்பத்தை நிறைவேற்ற மக்களே நீங்கள் தயாராகிவிட்டீர்களா?
( ஆம் நாங்கள் தயார்! ஆம் நாங்கள் தயார்!! திரண்டிருந்த மக்கள் ஆமோதிப்பு.)

இனிவரும் போர் முனை துண்டு துண்டாகவோ தவணை முறையிலோ முன்னேற மாட்டாது. எமது தலைவர் வடக்கிலும் கிழக்கிலும் ஏக காலத்தில் யுத்தத்தை முன்னெடுத்து தமிழர் தாயகத்தை மீட்கவே திட்டமிட்டுள்ளார். தலைவரின் கனவை செயலாக்க இது போன்ற பல பயிற்சி முகாம்கள் எமக்குத் தேவை. இது போன்ற பயிற்சி முகாம்கள் உருவாக்கும் மக்கள் படை, புலிப்படைக்குத் துணைப்படையாக தோளோடு தோள் நின்று போராடும். எமது தலைவரின் கரத்தைப் பலப்படுத்த முன்வருமாறு உங்களனைவரையும் அறை கூவி அழைக்கின்றேன். எதிரி போரை ஆரம்பிக்க முன்னால் நாங்கள் எதிரி நிலைகளத் தாக்கி நிர்மூலமாக்கி எமது நிலத்தை மீட்டெடுக்கவேண்டும். தாமதிக்காது நாம் முன்னேறித்தாக்க வேண்டும். இதுவே மிகச்சிறந்த வழி. எமது தலைவர் எப்போதும் தனது எண்ணங்களை செயல் வடிவாக்கியே அறியப்பட்டவர். இதனையே அவரும் விரும்புகிறார். அவர் வார்த்தைகளால் பேசுவதில்லை. தினசரி எமது மக்கள் கொல்லப்படுவது தலைவரின் இருதயத்தை முறுக்கிப் பிழிகின்றது. அவ்வேதனைக்கு மருந்தாக எமது தாய் நிலத்தினதும் மக்களதும் விடுதலையே அமையும்.

இளைஞர்களே, யுவதிகளே, அன்னையரே, தந்தையரே!

எதிரி எம்மை தாக்குவதற்கு முன்னால் நாம் முன்னேறித்தாக்க வேண்டும். எம்மோடிணைந்து எமது கரங்களை வலுப்படுத்துங்கள்.அதன் மூலமே வெற்றியை நாங்கள் விரைந்து ஈட்ட முடியும். சரமாரியாக தலைகளைக்குறி வைத்து நாம் தாக்குதலைத் தொடுக்க வேண்டும். நாங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நேரத்தில் எம்முடன் துணைப்படையாக முன் வந்து அணிவகுத்துப் போராடுமாறு தமிழீழ தேசியவாதிகளை நாம் அறை கூவி அழைகிறோம்.

மக்கள் படையாகத் திரண்டு எழுங்கள். நாங்கள் தொடர்ந்து தாமதித்தால் எமது முன்னேற்றம் தடைப்பட்டு ஒரு நெருக்கடியான நிலைக்குள் தள்ளப்படுவோம். இன்று எதிரி சர்வாதிகாரமாக எங்கள் மீது சட்ட விதிகளை ஏவுகின்றான். புளியங்குளத்தில் அவன் நின்று கொண்டு ஏ9 பாதை முகமாலை வரை மூடப்படும் என்றால் அது மூடப்படும்; திறக்கப்படும் என்றால் திறக்கப்படும்.எதிரி மனம் வைத்தால் மண்ணெண்ணை காவலரண் தாண்டி வரும்...இல்லையேல் இல்லை. நாங்கள் ஏற்கெனவே எண்ணிலடங்கா அழுத்தங்களுக்கும் பொருளாதாரத்தடைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளோம். பேச்சுவார்த்தை மேசைகளால் இவற்றைத்தாண்டி விட முடியாது. தமிழீழ தேசத்தை விடுதலை செய்வதாலேயே இத்தடைகளை உடைத்தெறிய முடியும். அதற்காக நாம் அனைவரும் முன்வந்து நமது தலைவரின் கரத்தைப் பலப்படுத்துவோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!
குறிப்பு: அழுத்தம் ENB

No comments: