Tuesday, 18 September 2007

சூசை இல்லா ஈழக்கடலில் விதேசிக்கு விருது!


புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்த கடற்படையினர் விருது வழங்கி கௌரவிப்பு
[18 - September - 2007]

தென்பிராந்திய கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை தகர்த்தழித்ததற்காக, நேற்று திங்கட்கிழமை கடற்படையினர் ஜனாதிபதியால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தெற்கே தெய்வேந்திரமுனைக் கடற்பரப்புக்கு அப்பால் புலிகளின் மூன்று ஆயுதக் கப்பல்களை கடற்படையினர் தாக்கி அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலை நடத்திய கடற்படையினரின் ஆறு கப்பல்களும் நேற்று திருகோணமலை துறைமுகப் பகுதிக்கு வந்ததுடன் அந்தக் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆறு கப்பல்களதும் கட்டளை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்ததுடன், திருகோணமலையிலுள்ள கிழக்கு பிராந்திய கடற்படைத் தளத்தில் நினைவுப் படிகமொன்றையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மிலிந்த மொரகொட , ஜி.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதிக்கு விஷேட அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. கடற்படையினரின் வீரதீரம் குறித்து கோதாபய ராஜபக்ஷ உரையாற்றினார்.
இந்த நிகழ்வை காலை முதல் நண்பகல் வரை ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

No comments: