Thursday, 20 September 2007

ENB தமிழ்: செய்திகள் 200907

அமைதி முயற்சிக்கான ஏது நிலையை உருவாக்க இலங்கைக்கான சகல உதவிகளையும் சர்வதேச நாடுகள் நிறுத்த வேண்டும்!
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்

அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக, இலங்கை அர சாங்கத்துக்கு வழங்கும் சகல வகையான உதவிகளையும் சர்வதேச நாடு கள் நிறுத்த வேண்டும்.தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.""தமிழ் நெற்'' இணையத் தளத்திற்கு அவர் நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:வலிந்த தாக்குதல் நடவடிக்கையிலி ருந்து தடுத்துக்கொண்டு தமிழீழ விடுத லைப் புலிகள் பொறுமை காத்து வருகின் றனர். இத்தகைய ஒரு அரசுடன் இணைந்து அமைதி முயற்சிகளை முன்னெடுப்பது பயனற்றது என்பதை சர்வதேச நாடுகள் உணரவேண்டும்.இலங்கைக்கு வழங்கும் ஒவ்வொரு உதவியும் திட்டமிட்ட வகையில் தவறா கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அபிவி ருத்தி என்ற பெயரில் தமிழர் தாயக நிலைப் பரப்பை அகதிகள் நிலமாக்கி, சிங்களக் குடியேற்றம் நடத்தப்படுகிறது.இலங்கை அரசுக்கு வழங்கும் அனைத்து வகையான உதவிகளையும் நிறுத்தி அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்த வேண்டுகோளை விடுக்கிறோம்.இலங்கை அரசு தமது மனித உரிமை மீறல்கள் வெளி உலகத்தைச் சென்றடைய விடாமல் தடுத்து வருகிறது. இதற்காகப் பொய்யான பரப்புரைகளுக்கான தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. சர்வதேச சமூகத்தின் பிரதிநிதி கள் இலங்கைக்கு வருகை தருகின்றபோது மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அமைச்சர வைச் சகாக்களும் தவறான தகவல்களை யும் பிம்பத்தையும் உருவாக்குகின்றனர்.மேலும் அனைத்துலக சமூகத்தின் கவ லைகளை ஏற்காமல் இலங்கை அரசு இனப் படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இது ஒரு பயங்கரவாத அரசின் செயற்பா டாகவே இருக்கின்றது.சில சர்வதேச அரசுகள் உண்மை நிலை களை அறியாமல் இலங்கை அரசின் இத்த கைய நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன. இது இந்த தீவில் இனமோதலை அதிகரிக் கத்தான் உதவும்.ஆகையால் சர்வதேச சமுதாயமானது பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தானே நேரில் பார்வயிட்டு நிலைமைகளை அவதானிக்க வேண்டும் தரவுகளை தங்களது சொந்த வளங்களினூடக சேகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

மூக்குத்தியை கழற்ற மறுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்
வீரகேசரி நாளேடு

பெண்மணியொருவர் மூக்குத்தி அணிந்தமைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. வட மேற்கு லண்டனைச் சேர்ந்த அம்ரித் லால்ஜி (40 வயது) என்ற இந்த இந்து மதத்தைச் சேர்ந்த பெண்மணி, மேற்படி விமான நிலையத்தில் யூரெஸ்ட் விமான சேவை கம்பனிக்காக உணவு பரிமாறுபவராக பணியாற்றி வருகிறார்.
மூக்குத்தியை கழற்றும்படி விமான நிலைய முகாமையாளர்கள் பணிப்பதற்கு முன் ஒருவருடத்திற்கு மேலாக மூக்குத்தி அணிந்தே தான் பணிக்குச் சென்று வந்ததாகவும் மூக்குத்தியை கழற்ற மறுத்ததையடுத்து தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அம்ரித் லால்ஜி தெரிவித்தார் .
இந்நிலையில் மேற்படி ஊழியரை பணிநீக்கம் செய்தமை குறித்து யூரெஸ்ட் நிறுவன அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில், சுகாதாரப் பாதுகாப்பு காரணங்களுக்காகவே பணியிடத்தில் நகைகளை அணிவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என கூறினார். பற்றீரியா போன்ற நுண்கிருமிகளின் பெருக்கத்திற்கு நகைகள் துணை செய்யும் என்பதாலேயே இக்கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பில் அம்ரித் லால்ஜி விபரிக்கையில், ""எனக்கு எதிராக பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். நான் எனது இந்துமத நம்பிக்கையின் அங்கமாக இந்த மூக்குத்தியை மட்டுமே அணிந்துள்ளேன்'' என தெரிவித்தார்.
தன்னுடைய விவகாரம் குறித்து ஆதரவு நாடி உள்ளூர் இந்து சமூக மொன்றிடமிருந்தான கடிதமொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கடந்த வருடம் ஹீத்ரோ விமான நிலைய பணியாளரான நாடியா எவெய்டா கிறிஸ் தவ சிலுவை அணிந்தமைக்காக பிரித்தானிய விமான சேவையால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
எனினும் மதத்தலைவர்கள், மற்றும் அரசியல் வாதிகளின் தலையீட்டால் அவர் மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.


ஈரான் மீது போர் தொடுக்கப்படுமாயின் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் ரஷ்யா எச்சரிக்கை
வீரகேசரி நாளேடு

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் உள்ளடங்கலான நவீனத்துவ பிரச்சினைகளுக்கு இராணுவ நடவடிக்கையால் தீர்வு எட்ட முடியாது என ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் ஸெர்கி லாவ்ரோவ் தெரிவித்தார்.
பிரான்ஸின் வெளிநாட்டு அமைச்சர் பெர்னார்ட் கோச்னெருடனான சந்திப்பையடுத்து ஈரானிலõன போர் குறித்து தனது அச்சத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். ஈரானில் இராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீவிரமான திட்டங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டும் அறிக்கைகளால் கவலையடைந்துள்ளதாக தெரிவித்த ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர், ""போரைத் தவிர்த்தே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். நாங்கள் முடிவற்ற விதத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அவசியம்'' என வலியுறுத்தினார்.
இதன்போது ஏற்கனவே ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இடம் பெற்றுவரும் போரினால் சந்தித்த மோசமான பிரச்சினைகள் குறித்து ஸெர்கி லாவ்ரோவ் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானுடனான பதட்ட நிலைமைகள் குறித்து பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர் கோச்னெர் விபரிக்கையில், ""மிகவும் மோ
சமான போருக்கு நாம் தயாராக வேண்டியுள்ளது'' என்று தெரிவித்தார். ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அந்நாட்டின் மீதான அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் மூன்றாம் சுற்றுத் தடைகள் என்பன தொடர்பில் இச்சந்திப்பின் போது ரஷ்ய மற்றும் பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்கள் ஆராய்ந்துள்ளனர். ஈரானின் அணுசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் மீதான உலக சமூகத்தின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த அதன் மீது தடைகளை விதிப்பது அவசியம் என கோச்னெர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் இது தொடர்பில் லாவ்ரோவ் மறுப்புத் தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகள் சபையானது அத னது சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்துக்கும் ஈரானுக்குமிடையிலான அண்மைய ஒப்பந்தத்தை குழிதோண்டிப் புதைக்கும் விதத்தில் செயற்படக் கூடாது என அவர் குறிப்பிட்டார்.
ஈரான் மீதான புதிய தடைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மறுப்பாணை அதிகாரமொன்றை ரஷ்யா கொண்டிருப்பதால், ஈரானின் அணுசக்தி நிகழ்ச்சித்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய இராணுவ அணுகு முறையொன்றை பிரயோகிக்க ரஷ்யாவின் ஆதரவு அவசியமாகவுள்ளது.


ஈராக்கில் ஈரான் எல்லையருகே புதிய அமெரிக்க இராணுவத்தளம்
வீரகேசரி நாளேடு

பென்டகனானது ஈராக் ஈரான் எல்லைக்கு அருகே இராணுவ தளமொன்றை நிர்மாணிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஈராக்கிலுள்ள ஷியா முஸ்லிம்களுக்கு ஈரானிலிருந்து முன்னேற்றகரமான ஆயுதங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் முகமாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இத் தகவலை அமெரிக்க மூன்றாவது தரைப்படை இராணுவ பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் றிக் லின்ச் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விவகாரம் தொடர் பான அறிக்கை அமெரிக்க வோல் ஸ்ரீட் பத்திரிகையில் நேற்று திங்கட் கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் ஈரானிய எல்லையிலிருந்து ஈராக்கின் தலைநகர் பக்தாத்திற்கான பிரதான நெடுஞ்சாலைகளில் பலமிக்க சோதனைச் சாவடிகள் ஸ்தாபிக்கவும் இரு நாடுகளுக்குமிடையிலான எல்லைப் பகுதியில் எகஸ்ரே இயந்திரங்களையும் வெடிகுண்டுகளை அடையாளங் காணும் உணர்கருவிகளையும் பொருத்தவும் பென்டகன் திட்டமிட்டுள்ளது. ஈரானிய எல்லையிலிருந்து நான்கு மைல் தொலைவில் உருவாக்கப்படவுள்ள இப்புதிய இராணுவத் தளமானது குறைந்தது இரு வருட காலத்துக்குள் பாவனையிலிருக்கும் என தெரிவிக்கப் படுகிறது. எதிர்காலத்தில் ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படையினர் பாரிய அளவில் வாபஸ் பெறும் பட்சத்தில் இந்த இராணுவ படைத்தளத்தின் நிலைப்பாடு குறித்து எதுவும் கூறமுடியாதுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய இராணுவத் தளம் தொடர்பான அறிக்கையானது ஈராக் போரிலான தற்போதைய அபிவிருத்தி நிலைப்பாடு குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்க கட்டளைத் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரேயஸும், தூதுவர் ரேயன் குரொக்கரும் அறிக்கை சமர்ப்பிக்கும் அதே தினத்தில் வெளியிடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
.

உலக சந்தையில் விலை அதிகரிப்பு ஏற்படும்போது பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருக்க முடியாது
வீரகேசரி நாளேடு

ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கத்தாலும் உலக சந்தையில் பெற்றோல், காஸ், கோதுமை மா, பால்மா போன்றவற்றின் விலைகள் உயரும்போது உள்நாட்டில் அவற்றின் விலைகளை அதிகரிக்காமல் இருக்க முடியாது. நாட்டில் கூட்டுறவு விற்பனை நிலையங்களையும், ச.தொ.ச. நிலையங்களையும் அதிகளவில் திறந்து தனியாருடன் வர்த்தக போட்டியை ஏற்படுத்துவதன்மூலமே அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என்று வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அண்மையில் பாராளுமன்றத்தில், 2004ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க நிதிச்சட்டம், 2005ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க நிதிச்சட்டம் பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தி அறவீடு சட்டம், உற்பத்தித் தீர்வைகள் (விஷேட ஏற்பாடு), விஷேட வியாபார பண்ட அறவீடு ஆகிய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நிதிச்சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பந்துல குணவர்த்தன மேலும் கூறியதாவது: அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தவில்லை. மாறாக கையடக்கத் தொலைபேசி, சொகுசு வாகனங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகள் தொடர்பாகவே அவர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சில வரிகளை முற்றாக நீக்கியுள்ளதோடு, சில வரிகளை குறைத்தும் உள்ளது. இதனால் அத்தியõவசியப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. இதன் அடிப்படையில் ச.தொ.ச. மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில், ரின்மீனின் விலை 125 ரூபாவில் இருந்து 90 ரூபாவாகவும், கோழி இறைச்சியின் விலை 260 ரூபாவில் இருந்து 235 ரூபாவாகவும் வெள்ளை சீனி 65 ரூபாவில் இருந்து 48 ரூபாவாகவும் செத்தல் மிளகாய் 270 ரூபாவில் இருந்து 145 ரூபாவாகவும் பருப்பு 115 ரூபாவில் இருந்து 72 ரூபாவாகவும் கிழங்கு 115 ரூபாவில் இருந்து 70 ரூபாவாகவும் கடலை 120 ரூபாவில் இருந்து 70 ரூபாவாகவும் உப்பு 70 ரூபாவில் இருந்து 20 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் அரசாங்கத்துக்கு சுமார் 9 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் சமுர்த்திக்காக 10 கோடி ரூபாவை செலவு செய்கின்றது. அந்த வகையில் இது மற்றுமொரு சமுர்த்தியைப்போன்று உள்ளது.
பெற்றோல், காஸ், கோதுமை மா, பால்மா என்பவற்றின் விலைகளை உலக சந்தையே தீர்மானிக்கின்றது. உலக சந்தையில் விலைகள் அதிகரிக்கும்போது, மேற்படி பொருட்களை இறக்குமதி செய்து எவ்வாறு குறைந்த விலையில் விற்பது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் உலக சந்தை விலைத்தளம்பலுக்கு ஏற்ப உள்நாட்டில் ஏற்படும் விலை மாற்றத்தை கட்டுப்படுத்த முடியாது.


War cost Rs. 50 billion this year
By Kelum Bandara and Yohan Perera - Daily Mirror LK

The government has spent over Rs. 50 billon to procure arms and ammunition for the present military exercise during this year alone, Deputy Finance Minister Ranjith Siyambalapitiya told Parliament yesterday.
(Read more: ENB English)

No comments: