புலிகளுக்குப் பணம் கொடுத்த குற்றச்சாட்டு நிரூபணமானால் மஹிந்த பதவி விலகுவாரா?
நாடாளுமன்றில் மங்கள சவால் ""மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுத்தார் என்று நாம் முன் வைக்கும் குற்றச்சாட்டு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் விசாரணைகள் மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்றச் சட்டத்தின்படி எமக்கு வழங்கப்படும் தண்டனை களை நாம் ஏற்றுக் கொள்வோம். அதற்கு மாறாக, அக்குற்றச்சாட்டு உண்மை என்பது நிரூபிக்கப்படுமானால் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஜனாதிபதிப் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும்.'' இப்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது நாடாளுமன்ற உரையில் சவால் விட்டிருக்கின்றார் மங்கள சமரவீர.மஹிந்த ராஜபக்ஷ புலிகள் இடையேயான ஒப்பந்தம் குறித்து விசாரணை செய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும் எனக் கோரி சிறிபதி சூரியாராய்ச்சி சமர்ப்பித்த பிரேரணையை நேற்று நாடாளுமன்றில் வழிமொழிந்து உரை யாற்றும்போதே மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டார்.அங்கு மங்கள சமரவீர மேலும் தெரிவித்தவை வருமாறு:2005 இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புலிகளுக்குமிடையில் செய் யப்பட்ட ஒப்பந்தம் காரணமாக 2005இல் ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் புலிகளுக்கு மஹிந்த ராஜ பக்ஷ தேர்தலுக்கு முன்பும் பின்பும் கோடிக் கணக்கில் பணம் கொடுத் தார். இப்போதும் கொடுத்துக்கெண்டிருக்கின்றார். 2005 ஜனாதிபதித் தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் இன்று இந்நாட்டின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான்.வடக்கு கிழக்குத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து, பணத் தின் ஊடாக தனக்குச் சொந்தமில்லாத ஜனாதிபதிக் கதிரையை மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ளார். புலிகளுடன் நான், ஸ்ரீபதி சூரியாராய்ச்சி, பஸில் ராஜபக்ஷ ஆகி யோர் முதற்சுற்றுப் பேச்சு நடத்தினோம். ஆனால் அடுத்த கட்டப் பேச்சு களில் என்ன நடந்தது என்பது எமக்குத் தெரியாது.பஸில் ராஜபக்ஷ பல தடவைகள் புலிகளுடன் பேச்சு நடத் தியிருக்கின்றார். தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் புலிகளுக்குக் கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது வழங் கப்பட்டுக்கொண்டிருப்பதும் உண்மை. இது தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன. எம்மிடமுள்ள தகவல்கள் அனைத்தையும் நாம் தெரிவுக் குழுவுக்கு வழங்குவோம்.புலிகளுக்கு எப்போது பணம் கொடுக் கப்பட்டது, எவ்வளவு கொடுக்கப்பட்டது என் பன பற்றி தெரிவுக்குழு விரிவாக விசா ரணை நடத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment