பேச்சுக்கு வருகிறீர்களா, இல்லையா என்று புலிகளுக்கு கோத்தபாய சவால்!
அமைதி முயற்சிக்கு இணங்கினால் இராணுவம் அடங்கியிருக்குமாம்
"மேலும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்குத் தோதான சூழ்நிலை தற்போது தொடர்கின்றது. ஆனால், விடுதலைப் புலிகள் உடனடியாக அமைதிப் பேச்சு மேசைக்குத் திரும்புவார்களாயின், அத்தகைய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை அரசு சீர்குலைக்காது''இப்படிக் கூறியிருக்கின்றார் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசுப் படைகளின் நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் வழி நடத்துபவரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ.""இப்போதாவது அமைதிப் பேச்சுக்கு வருகிறீர்களா? இல்லையா? இல்லையேல் இராணுவம் உங்கள் மீது பாயும்!'' என்ற தொனியில் புலிகளுக்கு இறுதிச் சவாலும் எச்சரிக்கையும் விடும் தொனியில் அவர் கருத்துக் கூறியிருக்கின்றார்.அவரது இந்தக் கருத்தை ஆங்கில வார இதழ் ஒன்று நேற்று வெளியிட்டிருக்கின்றது.அவர் கூறியவை எனத் தெரிவித்து அந்த ஆங்கில வார இதழ் வெளியிட்ட தகவல்களின் விவரம் வருமாறு:""அமைதி முயற்சிகள் தொடர்பாக புலிகள் இதயசுத்தியுடன் எத்தனத்தில் ஈடுபடுவார்களாயின் நாங்கள் இப்போது உள்ள கள நிலைவரத்தை எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கமாட்டோம்.""தங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கு புலிகளுக்கு இது கடைசிக் சந்தர்ப்பம். 2003 ஏப்ரலில் அமைதி முயற்சிகளில் இருந்து புலிகள் வெளியேறியிருந்தனர். அந்த அமைதி முயற்சிகளுக்கு உடன் மீண்டும் திரும்புவதன் மூலம் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கு சாதக நிலை அவர்களுக்கு இப்போது கிட்டியிருக்கின்றது.புதிதாகப் போரைத் தொடங்கும்வலு புலிகளிடம் இந்போது இல்லை""நோர்வே அனுசரணையாளர்கள் ஊடாகவோ அல்லது ஜனாதிபதி ராஜபக்ஷ நிர்வாகத்துடன் நேரடியாகவோ அமைதி முயற்சிகளுக்குத் திரும்பும்படி புலிகளை வற்புறுத்தி, வலியுறுத்துவது முக்கியமானது.""வடக்கு, கிழக்கில் பெரும் இராணுவ வெற்றியை எதிர்நோக்கித்தான் புலிகள் அழுத்தமாக முயன்றார்கள். அதில் அவர்கள் வென்றிருப்பார்களோயானால் நிபந்தனைகள் போடும் நிலைக்கு அவர்களது கைகள் ஓங்கியிருக்கும். ஆனால், களநிலை யில் புதிதாக முன்முயற்சிகளைத் தொடரும் வலுவில் இப்போது அவர்கள் இல்லை என்பதால் அமைதி வழித்தீர்வு ஒன்றையே அவர் கள் இனித்தேடவேண்டும். ""புலிகளின் ஆயுதங்களை முற்றாகக் களைவதில் அரசு உறுதியாக உள்ளது. அதைத் தவிர வேறு மாற்றுவழியோ, மார்க்கமோ இல்லை.""ஆகவே, தங்களின் வலுவான வன்னித் தளத்தைப் பாதுகாப்பதற்காக யுத்தத்துக்குப் போவதா அல்லது பேச்சு மேசைக்குத் திரும்புவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்களாகப் புலிகள் உள்ளனர். ""எனவே, முடிவு அவர்களுடையதே. இந்தச் சந்தர்ப்பதை அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.புலிகள் ஆயுதங்களைத் தாங்கித் திரியும்எந்தத் தீர்வையும் நிராகரிக்கிறோம்""புலிகள் தாக்குதல் பலம் கொண்டவர்களாக இருக்கும் வரை அரசியல் தீர்வு சாத்தியமற்றது என்பதையே எனது திருமலை உரையில் நான் குறிப்பிட்டிருந்தேன். அதனை, நான் இராணுவ வழித் தீர்வையே அங்கு அறிவித்தேன் எனச் சிலர் பிழையாக விளங்கியுள்ளனர். ""புலிகள் ஆயுதங்களைத் தாங்கித் திரிவதை அங்கீகரிக்கும் எந்தத் தீர்வையும் நிராகரிக்கிறோம். அது ஏற்புடையதேயல்ல'' என்றார் அவர்.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி நியூயோர்க்கில் சந்திப்பு
[25 - September - 2007]
* கிழக்கு நிலைவரம் குறித்து விரிவாக எடுத்துரைப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 62ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச் சென்றிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு அங்கு மக்களின் ஜனநாயக உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளதாக இச் சந்திப்பில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு விளக்கிக் கூறியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி அங்குள்ள மக்களிடையே ஐக்கியமும் ஒற்றுமையாக வாழும் சூழ்நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இச்சந்திப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சர்வகட்சிப் பிரதிநிதிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் விபரித்திருக்கிறார்.
இதேவேளை, ஜனாதிபதிக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்குமிடையே நடைபெற்ற இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாஹம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, கலாநிதி பாலித கோஹன ஆகியோருடன் இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், ஐ.நா. சபையின் இந்தியாவின் பிரதிநிதி நிருபம் சென் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேசமயம், வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தலைமையிலான குழுவினர் ஊடகவியலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
2010 ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கத்துவ நாடாக இந்தியா இணைவதற்கு இலங்கை ஆதரவு தெரிவிக்குமென இதன் போது வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம குறிப்பிட்டுள்ளதுடன் இரு நாடுகளுக்கிடையே நிலவும் சிநேகப்பூர்வ உறவுகள் குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment