Friday, 28 September 2007

ஐ.நா. கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்தா மனித உரிமைகளைக் காப்பதற்கு எமக்கு எவரும் பழக்கித்தரத் தேவை இல்லை! காருண்யமும் அகிம்சையும் நாட்டின் நற்பண்புகள்!

மனித உரிமைகளைக் காப்பதற்கு எமக்கு எவரும் பழக்கித்தர வேண் டிய தேவையில்லை அரசியல் லாபம் கருதி அரசுகளைப் பழிவாங்குவதற்கு மனித உரிமை களை ஆயுதமாகப் பயன்படுத்துவது உஷிதமானது அல்ல. மனித உரிமைகள் தொடர்பான சாசனங்களுக்கு இணங்க சர்வதேச மட் டத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பொதுவானவையாயினும் அவை அனைவருக்கும் சமமானதாக இருத்தல் வேண்டும்.காருண்யமும் அகிம்சையும் இலங்கையின் நற்பண்புகள். காருண்யம் என்பது சகல மக்கள் தொடர்பாக உள்ள அனுதாபம் ஆகும். அகிம்சை என்பது எவரொருவராலும் வாழ்விலுள்ள பெரும் கௌரவமாகும். சகல இனங்களையும் ஒரே வகையில் கருத வேண்டுமென பௌத்த தர்மம் கூறுகின்றது. ஐ. நா. சபையின் 62 ஆவது கூட்டத் தொடரின் முதலாவது நாளன்று, கடந்த 25 ஆம் திகதி, முதலாவது கூட்டத்தில் பேசுகை யில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ மேற்கண்டவாறு சொன்னார்இலங்கை ஜனாதிபதி 18 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார். அவர் அப்போது கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு@யுத்தத்தின் மூலம் தீர்வொன்றைக் கண்டுவிட முடியாது என்பதை பயங் கரவாதிகளுக்குப் புரியவைப்பதற்காகவே நாம் யுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தத் துரதிஷ்டமான பிரச் சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதே எமது நோக்கமாகும். இந்நோக்கை நிறைவு செய்ய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வெற்றிகரமாகச் செயற்பட்டு வரு கிறது.இருபத்தைந்து வருடங்களாக இடம்பெறும் இந்தக் கொடூரமான யுத்தத்துக்கு முகம்கொடுத்துக்கொண்டே சமூக அபி விருத்தியை மேற்கொள்ள வேண்டிய நிலை யில் நாம் உள்ளோம்.சகல சர்வதேச மனித உரிமைகள் தொடர் பான செயற்பாடுகளுடனும் திறந்த முறை யில் ஒத்துழைப்போடு செயற்படும் முறை களைக் கடைப்பிடிப்பதே எனது அரசின் கொள்கையாகும். இது தொடர்பான நிறு வனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய் திருந்தனர்.இலங்கையின் பிரதான நற்பண்புகள், காருண்யம் மற்றும் அஹிம்சை போன்றன பௌத்த தர்மத்தின் அடிப்படையிலான வையாகும். காருண்யம் என்பது சகல மக் கள் தொடர்பாகவுள்ள தயவும் அனுதாபமு மாகும். அஹிம்சை என்பது எவரொருவர தும் வாழ்விலுள்ள பாரிய கௌரவமாகும். சகல இனங்களையும் ஒரே வகையில் கருத வேண்டுமென பௌத்த தர்மம் கூறு கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக மனித உரிமைகள் எமது சீரிய கலாசார பாரம் பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்துள் ளன. எனவே மனித உரிமைகளைப் பாது காப்பதென்பது எமக்கொன்றும் புதிய விட யமல்ல. ஏகாதிபத்தியத்தைக் கட்டியெழுப்புவதற்காகவோ அல்லது வர்த்தக ஆதிக் கத்துக்காகவோ அல்லது மத அடையாளத் தைக் கட்டியெழுப்புவதற்காகவோ அப்பாவி மக்களை வாட்டி வதைக்கும் முறையொன்று எங்கள் நாட்டில் என்றும் இருந்ததில்லை. ""பலதரப்பட்ட பயங்கரவாதச் செயற் பாடுகளை முறியடிப்பதற்கென அமைக்கப் பட்ட ஐ.நாவின் 13 சாசனங்களின் உடன் பாடுகளில் 11 இற்கு நாங்கள் பங்காளிக ளாக இருந்தாலும், எங்களின் கருத்துப்படி முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய உடன்பாடு இன்றுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.''ஆசிய வலய நாடுகளில், அபிவிருத்தியடைந்துவரும் ஏனைய நாடுகளைப்போல் இலங்கையும் பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் சவால்கள் தொடர்பாக நாம் திட்ட மிட்டுச் செயற்பட்டு வருகின்றோம்.இதேவேளை, உலகின் எப்பகுதியிலா வது பயங்கரவாதம் தலைதூக்கினால் அதற்கு நல்லது கெட்டது என்ற பக்கங்கள் இல்லை யென நாம் கருதுகிறோம். சர்வதேச நாடு கள் வரிசையில் எமது நாடும் பயங்கரவா தத்தைத் தோற்கடிப்பதில் முன்னணியில் திகழ்கின்றது.பயங்கரவாதத்தினால் ஜனநாயக மக் கள் வாழ்வுக்கு விடுக்கப்படும் அச்சுறுத் தல் எங்களனைவராலும் கடுமையாக வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய ஒன்றாகும். கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புத் தேவைஇலங்கையின் கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து, அப்பிரதேச மக்களது ஜனநாயகத்தை உறு திப்படுத்தி அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு ஐக்கிய நாடுகளைப் போல் உதவி வழங்கும் சர்வதேச சமூகங்களின் ஒத்துழைப் பைப் பெற்றுக்கொள்வதற்கும் உலகத் துக்கு முன்மாதிரியாக இதைச் செயற்படுத் திக் காட்டவும் நாம் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

No comments: