மன்னாரில் பலியான மதகுருவின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
[28 - September - 2007] தினக்குரல்
நாளை நல்லடக்கம். மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதலில் கொல்லப்பட்ட வண பிதா. நீக்கிலாஸ்பிள்ளை பாக்கியரஞ்சித்துக்கு மன்னாரில் நேற்று மாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாந்தை மேற்கில் இடம்பெற்ற கடும் ஷெல் தாக்குதலால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் பொருட்டு தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜே.ஆர்.எவ்.அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளரான வண.நீ.பாக்கிய ரஞ்சித் என்பவரே வெள்ளாங்குளம் கல்விலான் பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் உயிரிழந்தார்.
இவரது பூதவுடல் நேற்றுக்காலை அங்கிருந்து ஓமந்தையூடாக வவுனியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இவரது பூதவுடல் ஓமந்தைக்கு கொண்டு வரப்பட்டபோது அதனை மன்னார் மாவட்ட ஆயர் வண.இராயப்பு ஜோசப் பொறுப்பேற்று நண்பகல் 11.45 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் கோவிலுக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மன்னார் ஆயர் தலைமையில் இரங்கல் திருப்பலி நடைபெற்றது. இங்கு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை, வாழ்வோதய பணிப்பாளர் பெப்சி சோசை மற்றும் பெருமளவு மத குருமார்களும் பொதுமக்களும் திரண்டிருந்தனர்.
இதன் பின்னர் இலங்கை செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் பூதவுடல் மன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மன்னாரில் பூதவுடலுடன் வந்த வாகனத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பூதவுடல் பேழையுடன் அரச உயர் அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெருமளவு மக்களும் திரண்டு ஆயர் இல்லம் நோக்கிச் சென்றனர்.
இதன்போது, வீதியின் இரு மருங்கிலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினர்.
இவ்வேளையில் பிற்பகல் 1 மணி முதல் 1.30 மணி வரை கடைகள், வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன.
இதையடுத்து பூதவுடல் தாங்கிய பேழை ஆயர் இல்லத்தை சென்றடைந்தது. அங்கு மாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வண பிதாவுக்கு தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தியவாறிருந்தனர்.
பூதவுடல் இன்று மாலை 4.30 மணி வரை ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டு அதன்பின் புனித செபஸ்தியார் தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்படும். நாளைக் காலை 9 மணியளவில் மன்னார் சேமக்காலையில் காலை 9 மணிக்கு ஈமக்கிரியை நடைபெறும்.
நேற்று மாலை இவரது பூதவுடலுக்கு மன்னார் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அரச உயரதிகாரிகளும் பெருமளவு மதகுருமார்களும் அஞ்சலி செலுத்தினர்.

நெருப்புத் தேனீக்களின் அதிரடிச் செய்தி!
கிளேமோர் தாக்குதலில் கத்தோலிக்க மதகுரு பலி!
இந்த தாக்குதல் புலிகளாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
26 September 2007
கத்தோலிக்க தொண்டர் அமைப்பான ஜே.ஆர்.எஸ்.அமைப்பின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான 40 வயதுடைய நிக்கிலஸ்பிள்ளை பாக்கியரஞ்சித் அடிகளார் கிளேமோர் குண்டு தாக்குதலிற்கு இலக்காகி பலியாகியுள்ளார். மன்னார் ப+னகரி வீதியின் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற இவ் கிளேமோர் தாக்குதலை இராணுவத்தினரின் ஊடுருவும் பிரிவே மேற்கொண்டதாக வன்னிபுலிகள் தெரிவித்துள்ளபோதும் அதனை இராணுவம் மறுத்துள்ளது. இந்த தாக்குதல் புலிகளாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment