அரசாங்கத்திற்கு கேட்டதைவிட இரட்டிப்பு மடங்கு கடன் கிடைத்தது.
அநுர பிரியதர்ஷன யாப்பா
500 மில்லியன் டொலர் கடனை சர்வதேச சமூகத்திடமிருந்து எதிர்பார்த்திருந்த நிலையில், அதனைப் போல் இரண்டு மடங்கு கடனை வழங்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷ யாப்பா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அந்தக் கடனை வழங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தும் அழுத்தம் கொடுத்தும் வந்த நிலையில், அதனைக் கருத்திற் கொள்ளாது எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு கடனை வழங்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்று (ஒக்.18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சரவைப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி சர்வதேச சமூகத்தைச் சந்தித்து எந்தளவு அழுத்தங்களைக் கொடுத்தாலும் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார ஸ்திர நிலை மற்றும் நிதிக் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து சர்வதேச சமூகம் இந்தக் கடனைப் பெற்றுத் தந்துள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார்.
ஆட்சியைக் கைப்பற்றும் குறுகிய இலாபத்தைக் கருத்திற்கொண்டு இவ்வாறான பிரசாரங்களை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிகளின் கருத்துக்களைப் பொருட்படுத்தாது சர்வதேச சமூகம் இந்தக் கடன் உதவியை பெற்றுத்தருகின்றமைக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்தக் கடன் தொகையின் ஒவ்வொரு சதத்தையும் மக்களுக்காக முதலீடு செய்வதாகவும், இதன்மூலம் வேறு எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளதாது அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment