தரைவழி, வான் வழிகளால் அ'புரம் விமானத் தளம் மீது புலிகள் இருமுனைத் தாக்குதல்!
அனுராதபுரத்திலுள்ள இலங்கை விமானப்படையினரின் தளம் மீது நேற்று அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும் அதிரடித் தாக்கு தல் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.விடிகாலை 3.30 மணியளவில் விமானப்படைத்தளத்தின் உள்ளே புலிகளின் கரும்புலிகள் அணி ஒன்று ஊடுருவித் தாக்குதல் நடத்த, அந்த அணிக்கு ஆதரவாக அதிகாலை 4.30 மணியளவில் புலிகளின் இரண்டு விமானங்கள் பறந்துவந்து விமானப் படைத்தளம் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கின்றன.தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தரைப்படை, வான்படை என்பவற்றை ஒரே நேரத்தில் பயன்டுத்தி நடத்தியிருக்கின்ற முதலாவது தாக்கு தல் இதுவாகும். குறித்த விமானத்தளத்தில் தரித்துநின்ற 5 விமானங்களும் 3 ஹெலிக் கொப்டர்களும் இந்த இருமுனைத் தாக்குதலில் அழிக்கப்பட்டுவிட்டன என்று விடுதலைப் புலிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இரண்டு எம்.ஐ. 24 ரக ஹெலிக்கொப்டர்களும் பயிற்சி விமானம் ஒன்றுமே அழிக்கப்பட்டன என்று விமானப்படைப் பேச்சா ளர் தெரிவித்தார்.அதிகாலை முதல் விமானத்தளப் பகுதியில் பெரும் வெடியோசை கள் கேட்டவண்ணம் இருந்தன. தாக்குதல் தொடங்கியதும் அநு ராதபுரம் எங்குமே மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. அதிகாலை தொடங்கிய தாக்குதல் காலை சுமார் 9 மணிவரை தொடர்ந்ததாகத் தக வல்கள் தெரிவித்தன.இருள் சூழ்ந்த வேளையில் திடீரெனக் கேட்ட வெடிச்சத்தங்களால் அந்தப் பிரதேசம் முழுவதுமே அதிர்ந்தது. மக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பீதியில் உறைந்தனர்.தாக்குதலை அடுத்து அனுராதபுரம் மாவட்டம் முழுவதும் ஊரடங் குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, தேடுதல் நடத்தப்பட்டது. மக்கள் எவ ரும் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கினர். மாவட் டம் முழுவதுமே சனநடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது.இதேவேளை நேற்று அதிகாலை அனுராதபுரம் தளம் மீது புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கொழும்பிலும் வான்தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக தலைநகரெங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
5 விமானங்கள், 3 ஹெலிகள் அழிப்பு! 21 கரும்புலிகள் வீரச்சாவு - புலிகள் அறிவிப்பு
அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நேற்று அதிகாலை தமது சிறப்புக் கரும்புலி கள் அணியொன்று ஊடுருவி நடத்திய தாக்குதலில் 3 ஹெலிகொப்டர்களும் 5 விமா னங்களும் அழிக்கப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக் கின்றனர்.இந்தத் தாக்குதலில் தமது தரப்பில் 3 பெண் கரும்புலிகள் உட்பட 21 கரும்புலிகள் அடங்கிய விசேட அணி ஒன்றே தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ள புலிகள், அந்த 21 கரும்புலிகளும் நேற்றைய வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவடைந்துவிட்டனர் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.இந்தத் தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று விடுத்த அறிக்கை யில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவையாவன:திங்கட்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் 21 பேர் கொண்ட சிறப்புக் கரும்புலி அணியினர் அனுராத புரம் ஸ்ரீலங்கா வான்படைத் தளத்திற்குள் உள்நுழைந்து தாக்குதல் தொடுத்தனர்.இதனைத் தொடர்ந்து அதிகாலை 4.30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினர் தளத்தின் மீது குண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர்.நேற்றைய தாக்குதலில் ஸ்ரீலங்கா வான்படைக்குச் சொந்தமான பின்வரும் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் வருமாறு:* பயிற்சி விமானம் 01 * எம்.ஐ. 24 ரக ஹெலிகொப்டர்கள் 02* பி.ரி. 6 ரக விமானம் 01* பெல் 212 ரக ஹெலிகொப்டர் 01* வேவு விமானம் 01*செஸ்னா 768 விமானம் 01* கே. 8 ரக விமானம் 01 கரும்புலி அணியினரின் தாக்குதலுக்கு உதவியாக தமிழீழ வான்படையினரும் அனுராதபுரம் தளம் மீது தாக்குதல் நடத்திவிட்டு வெற்றிகரமாகத் தளம் திரும்பியிருப்பதாக வான் புலிகளின் தளபதி தெரிவித்துள்ளார்.என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
4 வானூர்திகளே இழப்பு; 14 படையினர் பலி! 20 இராணுவத்தினர் காயம் - அரசு அறிவிப்பு
புலிகளின் நேற்றைய தாக்குதலின்போது விமானப்படையினருக்குச் சொந்தமான இரண்டு எம்.ஐ.24 ரக ஹெலிக்கொப்டர்களும் ஒரு பயிற்சி விமானமும் மாத்திரமே அழிக் கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மொத்தமாக எட்டு விமானங்களைத் தாங்கள் அழித்துவிட்டனர் எனப் புலிகள் அறிவித் திருப்பதை அடியோடு மறுத்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, புலி களின் தாக்குதலின்போது இரண்டு ஹெலிகொப்டர்களும் இரு பயிற்சி விமானமும் இயந் திரக் கோளாறினால் ஒரு ஹெலிகொப்டருமாக மொத்தம் நான்கு வான் கலங்களையே தாங்கள் நேற்று இழந்திருக்கின்றனர் என்று கூறினார்.சம்பவத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 9 விமானப்படையினர் பலியாகினர் என் றும் 20 பேர் படுகாயங்களுடன் அனுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்ற னர் என்றும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.""விமானப்படைத்தளத்துக்குள் அதிகாலை 3.10 மணியளவில் ஊடுருவிய புலிகளின் குழுவொன்று அங்கு தாக்குதலைத் தொடுத்தது. இருசாராருக்கும் இடையில் நடந்த நீண்ட பலமணி நேர மோதலில் 9 விமானப்படை யினர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். ""இதேவேளை, சிலமணி நேரங்களில் புறப்பட்டு வந்த புலிகளின் இலகு ரக விமானங்கள் இரண்டும் விமானப்படைத் தளம் மீது இரு குண்டுகளை வீசிவிட்டுச் சென்றுவிட்டன.இதற்கும் அதற்கும் தொடர்பில்லைஇந்நிலையில் புலிகளைத் தேடி அழிக்கும் நோக்கில் வந்த எமது ஹெலிக்கொப்டர் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக மிகிந்தலையில் தரையிறங்க முயற்சித்ததில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கியது. இச் சம்பவத்தில் விமானி, உதவி விமானி மற்றும் விமானப்படையினர் என மொத்தம் 4பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கும் புலிகளின் தாக்குதலுக்கும் தொடர்பில்லை. தாக்குதல் ஓய்ந்தபிறகு விமானப்படைத் தளப்பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது 20 புலிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன'' இப்படி அரசுத் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது
துரத்திய ஹெலி வீழ்ந்தது!
அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது நேற்று அதி காலை குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும் பிக்கொண்டிருந்த புலிகளின் விமானங்களைச் சுட்டு வீழ்த்து வதற்காக வவுனியாவிலிருந்து மேலெழுந்து துரத்திச் சென்ற "பெல் 212' ரக ஹெலிக்கொப்டர் ஒன்று மிகிந்த லையில் வீழ்ந்து நொறுங்கியது. இதன்போது குறித்த ஹெலியில் இருந்த 4 விமானப்படை யினரும் உயிரிழந்தனர்.வீசறட்ட சில்வா, அமிலமுர்தி, எஸ்.ஏ.பி. குணவர்த் தன மற்றும் கோப்ரல் பிரதீப்குமார ஆகிய விமானப்படை யினரே இதில் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.மிகிந்தலைப் பகுதியில் நேற்றுக் காலை தேடுதல் மேற் கொண்ட படையினர் உயிரிழந்த தமது சகாக்களின் சடலங் களையும், ஹெலியின் பாகங்களையும் மீட்டனர்.இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த ஹெலிக்கொப் டர் வீழ்ந்து நொறுங்கியதாக விமானப்படைப் பேச்சாளர் அஜந்த டீ சில்வா தெரிவித்தார்.
''அதிர்ச்சிகள் தொடரும்! "
"எதிர்காலத்திலும் படையினருக்கும் அரசுத் தரப்புக்கும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.''இப்படித் தெரிவித்திருக்கிறார் விடுதலைப் புலிகளின் படைத் துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன்.நேற்றைய தாக்குதல் தொடர்பாக என்ன கூறுகிறீர்கள்? இனிமேலும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடருமா என்று இளந்திரையனிடம் கேட்டபோது, ""அதிர்ச்சி தொடரும்'' என்று சூசகமாகத் தெரிவித்தார்.""கடந்த 87 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கரும்புலிகள் நடத் திய பாரிய தாக்குதல் இது. (நேற்றைய தாக்குதல்). இவ்வா றான தாக்குதல்கள் தொடரும் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் மக்கள் மீது ஈவு இரக்கமற்ற தாக்குதல்களை நடத்தி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் படைத்தரப் புக்கு இதுபோன்ற அதிர்ச்சிகள் இன்னும் காத்திருக்கின் றன'' என்றார் அவர்.
விமான எதிர்ப்பு கருவிகளை கைப்பற்றிய பின்னரேவிமானக் குண்டு வீச்சினை மேற்கொண்டோம்
8 விமானங்கள் தாக்கியழிப்பு என்கிறார் இளந்திரையன்
வீரகேசரி நாளேடு
அநுராதபுரம் விமானப்படைத் தளத்திற்குள் பிரவேசித்த சிறப்பு கரும்புலிகள் அணியினர் விமான எதிர்ப்புக் கருவிகளை கைப்பற்றியதையடுத்தே விமா னக் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.கரும்புலிகளும் புலிகளின் விமானப்பிரிவினரும் கூட்டாக நடத்திய இத்தாக்குதலில் இலங்கை விமானப்படையினருக்குச் சொந்தமான 8 விமானங்கள் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
விடுதலைப்புலிகளின் சிறப்பு கரும்புலிகள் அணியினர் நேற்று அதிகாலை 3.20 மணியளவில் அநுராதபுரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நடவடிக்கை விநியோகத் தளம் மீது தரை வழியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வேளையில், இரு விமானங்கள் மூலமாகவும் விமானப்படைத் தளம் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
கரும்புலிகள் விமான எதிர்ப்புக் கருவிகளை கைப்பற்றயதையடுத்தே விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. வெற்றிகரமான எமது இருவழித் தாக்குதலில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 8 விமானங்கள் தாக்கியழிக்கப்பட்டுள்ளன.
பயிற்சி விமானம் ஒன்று, எம்.ஐ. 24 ரக ஹெலிக்கொப்டர்கள் இரண்டு, பி.டி. 6 ரக விமானம் ஒன்று, பெல் 212 ரக ஹெலிக்கொப்டர் ஒன்று, உளவு விமானம் ஒன்று, சி.டி.எச். 748 ரக விமானம் ஒன்று, இன்னுமொரு விமானம் ஆகியனவே தாக்கியழிக்கப்பட்ட விமானங்களாகும்.
இத்தாக்குதலில் 21 கரும்புலிகள் ஈடுபடுத்தப்பட்டனர். எமது முயற்சி வெற்றியளித்துள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் இரண்டும் திரும்பிவந்துள்ளன. முதன்முறையாக தரை மற்றும் வான் வழியாக இணைந்த தாக்குதல் ஒன்றை நாம் நடத்தியுள்ளோம்.
பல குழுக்களாக பிரிந்தே புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்
அமைச்சர் கெஹலிய கூறுகிறார்
வீரகேசரி நாளேடு
வடக்கு,கிழக்கு பகுதிகளில் அண்மைய காலங்களில் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை அடுத்தே விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தில் பயிற்சி பெற்ற தற்கொலைப் புலிகள் அநுராதபுரம் விமான படைத்தளம் மற்றும்
படையியினர் மீது பல குழுக்களாக பிரிந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்று அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு தப்பிசென்ற புலிகள் மீது படையினர் பதில் தாக்குதல்களை மேற்கொண்டதுடன் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர் அப்போது புலிகள் மரங்களிலிருந்து சினைப்பர் தாக்குதல்களை மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் மேலும் சொன்னார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; வடக்கு, கிழக்கில் பகுதிகளில் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற பதில் நடவடிக்கைகள் காரணமாக புலிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, பின்னடைவுகள் அடுத்தே புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறான தாக்குதல்களை முற்றாக எதிர்பார்க்காமல் இருக்க முடியாது.
இந்த தாக்குதல்களில் உயர்மட்டத்தில் பயிற்சி பெற்ற புலிகளும்,தற்கொலை புலிகளுமே ஈடுபட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தாக்குதலில் பலியான 20 புலிகளின் சடலங்களை படையினர் மீட்டுள்ளனர். நன்கு திட்டமிட்டு ஆயுதங்களை சேகரித்தே இந்த தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதல்களை அடுத்து படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது இந்த மோதல் சம்பவங்களின் போது புலிகளிள் மரங்களிலிருந்து ஸ்னைப்பர் தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் புலிகளிடமிருந்து தாக்குதல்களை எதிர்பார்க்காமல் இருக்க முடியாது.
பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போது இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்களை எதிர்பார்க்காமல் இருக்கமுடியாது படையினரின் அவதானம், கவனத்தை திசை திருப்பியே புலிகள் இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
விமான படையின் பாதுகாப்பு குறைப்பாடுகள் காரணமாகவே இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான தகவல்களில் எவ்விதமான உண்மையும் இல்லை. படையினரின் அவதானத்துடன் இருந்தமையினால் தான் புலிகளின் மீது பதில் தாக்குதல்களை மேற்கொள்ள முடிந்ததுடன் இழப்புகளையும் ஏற்படுத்த முடிந்தது.
No comments:
Post a Comment