புதிதாக வான் தளபாடங்களை கொள்வனவு செய்ய ஏற்பாடுகள்
பசில் ராஜபக்ஷ தகவல்
அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக் குதலில் அழிக்கப்பட்ட விமானங்கள் உள் ளிட்ட வான் தளபாடங்களுக்குப் பதிலாக புதியன நட்பு நாடுகளிடம் இருந்து கொள் வனவு செய்யப்படும். இது தொடர்பாக அரசு சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இப்போது தொடர்பு கொண்டுள்ளது.ஜனாதிபதியின் சகோதரரும் நாடாளு மன்ற உறுப்பினரு மான பஸில் ராஜபக்ஷ இத்தகவலைத் தெரி வித்துள்ளார்.கொழும்பு ஆங் கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.அழிக்கப்பட்ட விமானங்களுக்குப் பதிலாக புதியனவற்றை உடனடியாகத் தருவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்தக் கொள்வனவுக்கு உதவ பல்வேறு நாடுகள் எம்முடன் தொடர்பு கொண்டுள் ளன. வெளிப்படையான சில காரணங்களால் அந்த நாடுகளின் பெயர்களை வெளியிட இயலாது.அரசாங்கத்தின் அனைத்து அலுவல்களை யும்விட விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.விடுதலைப் புலிகள் தங்களது இலக்கை அடைவதற்காக உணர்வுபூர்வமான இடங் களில் மேலதிக தாக்குதல்களை நடத்தக் கூடும். விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடிக்கும் வரை இத்தகைய தாக்கு தல்களைத் தடுக்க முடியாது.பொதுமக்கள் இதனை உணர்ந்து அனைத்து நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண் டும்.அநுராதபுரம் தாக்குதலுக்கு பாதுகாப் புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் உதவியிருக் கிறார்களா என்பது குறித்த உள்ளக விசா ரணைகள் முன்னேற்றமடைந்துள்ளன. காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் பசில் ராஜபக்ஷ.
வான் பரப்பு முழுவதையும் பாதுகாக்கும் பலம் இல்லை!
சீராக்கக் காலம் பிடிக்கும் - விமானப்படைத் தளபதி றொஷான்
நாட்டின் வான் பரப்பு முழுவதையும் பாது காக்கும் பலம் இப்போது விமானப்படைக்கு இல்லை. அதனை முழுமையாகச் சீராக்குவதற்கு இன்னும் ஐந்து அல்லது ஆறுவருட காலம் தேவை. அதுவரை சில பகுதிகள் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து உண்டுஇவ்வாறு தெரிவித்திருக்கிறார் விமா னப்படைத் தளபதி றொஷான் குணதிலக்கா.எமது தாக்குதல் திறமை எந்த விதத்திலும் குறைந்து விட்டதாகக் கூறமுடியாது. எனினும் நாம் இழந்த வான் கலங்களுக்குப் பதிலாக புதிய வற்றை விரைவில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க் கிறோம் என்றும் நேற்று நடைபெற்ற ஊடக வியலாளர் மாநாட்டில் விமானப்படைத்தள பதி சொன்னார். விடுதலைப் புலிகள் அநுராதபுரம் விமா னத்தளம் மீது பெரும் தாக்குதலை நடத் திய நான்கு நாள்களின் பின்னர் விமானப் படைத் தளபதி இவ்வாறு தெரிவித்துள் ளார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததா வது:நாட்டின் வான் பரப்பில் சில பகுதிகளின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்க முடியாது. ஆனால் சில பகுதிகள் ஊறுபடக்கூடியவை. நாங்கள் சில பகுதிகளை பாதுகாத்துள்ளோம். எங்களுக்குத் தேவையானவற்றை நாம் பெறு மட்டும் இலங்கையின் வான் பிரதேசம் முழுவதையும் (அதாவது நாடு முழுவதையும்) காப்பாற்ற முடியாது. தாக்குதலுக்குள்ளாகக் கூடியாதாக பல பகுதிகள் உண்டு. முழுமையான வான் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கிச் செயற்படுத்த இன்னும் 5 அல்லது 6 வருடங்கள் ஆகலாம்.விடுதலைப் புலிகளின் அநுராதபுரத்தாக்குதல் விமானப்படைக்கு ஒரு சவால் அல்ல. அதனால் சுமார் 15 மில்லியன் டொலர்கள் மட்டுமே இழக்கப்பட்டுள்ளன என்றார்.
பால்மாவின் விலை 41 சதவீதம் அதிகரிப்பு!
பால்மாவின் விலையை 41 சதவீதத்தால் அதிகரிக்க நுகர்வோர் விவகார அமைச்சு அனு மதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.இதன் பிரகாரம் 400 கிராம் கொண்ட அங் கர் பால்மாவின் விலை 80 ரூபாவினால் அதி கரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 400 கிராம் கொண்ட அங்கர் மால்மா பைக்கற் 205 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.41 சத வீத விலை அதிகரிப்பு சகல பால்மா வகைகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment