Friday, 26 October 2007

முதுகெலும்புடைந்த ஸ்ரீலங்கா அரசுக்கு முண்டுகொடுக்கும் இந்தியவிஸ்தரிப்புவாத அரசு!

பயங்கரவாத கண்காணிப்பை வலுப்படுத்த

இந்தியா உதவும்

[26 - October - 2007]
* சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கைக்கு உறுதியளிப்பு தெற்காசியாவின் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் பயங்கரவாதம் பாரதூரமான அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்திருக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உறுப்புநாடுகள், பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான தகவல்களை கிரமமாக பரிமாறிக் கொள்வதெனவும் குற்றச் செயல்கள் தொடர்பாக பரஸ்பரம் சட்ட ரீதியான உதவிகளை வழங்கும் சாசனத்தை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதெனவும் நேற்று வியாழக்கிழமை தீர்மானித்துள்ளன.
அத்துடன், சார்க் உறுப்புநாடுகளிடையே இடம்பெற்றுவரும் பயங்கரவாத குற்றச்செயல்கள், போதைப் பொருள் வர்த்தகம் என்பன தொடர்பான கொழும்பிலுள்ள கண்காணிப்பு பிரிவுகளை வலுப்படுத்த உதவியளிக்க அதாவது இந்தப் பிரிவுகளின் உள்சார் கட்டமைப்பை பலமானதாக மாற்றியமைக்க உதவுவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.
சார்க் உள்துறை அமைச்சர்களின் மூன்று நாள் மாநாடு இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டின் இறுதிநாளான நேற்று செய்தியாளர்களுடன் சந்திப்பொன்றை நடத்திய இந்திய உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தா, சார்க் பிராந்தியத்தில் நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் எட்டுவதற்கு பாரதூரமான சவாலாக பயங்கரவாதம் இருக்கின்றது என்று மாநாட்டில் அவதானிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
உயர்மட்ட தொடர்பாடல் அடிக்கடி இடம்பெற வேண்டிய தேவை குறித்து மாநாட்டின் போது பரிசீலிக்கப்பட்டது. பொலிஸாரின் விவகாரங்கள் தொடர்பாக ஒத்துழைத்து செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை சார்க் நாடுகளில் இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகள், போதைப்பொருள் வர்த்தகம், ஆட்கடத்தல் போன்றவற்றை கண்காணிப்பதற்காக இலங்கையில் உள்ள பிரிவுகளை வலுப்படுத்த உதவியளிக்க இந்தியா முன்வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேசமயம் போதைப் பொருள், ஆட்கடத்தல், சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை, ஆயுதக் கடத்தல் போன்ற எல்லைதாண்டிய குற்றச்செயல்களை கையாள்வது தொடர்பான நிறுவன ரீதியான பொறிமுறைகளை வலுப்படுத்தவும் அதற்குரிய வசதிகளை ஏற்படுத்தவும் சார்க் அங்கத்துவ நாடுகள் இணங்கியுள்ளன.
அத்துடன், சார்க் அமைப்பிலுள்ள 8 நாடுகள் மத்தியிலும் இலத்திரனியல் வலைப்பின்னலை சிறப்பான முறையில் ஏற்படுத்த வேண்டிய தேவை குறித்தும் மாநாட்டில் உணரப்பட்டுள்ளது.
இந்த அமைச்சர்கள் மட்டச்சந்திப்பின் போது, பயங்கரவாதத்தை நசுக்குதல், மேலதிக ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் என்பன தொடர்பான சார்க் பிராந்திய சாசனம், போதைப்பொருள் மற்றும் உளப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் தொடர்பான சார்க் சாசனம் என்பனவற்றை அமுல்படுத்துவது தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டதாகவும் குப்தா கூறியுள்ளார். இந்தக் குற்றச் செயல்களை எதிர்த்துப் போராட பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என்பதும் தீவிர நடவடிக்கைகள் தேவை என்பதும் இந்த மாநாட்டில் உணரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
குற்றச்செயல்கள் தொடர்பாக பரஸ்பரம் சட்டரீதியான உதவிகள் வழங்குவது குறித்த உத்தேச சார்க் சாசனம் தொடர்பாக கருத்து தெரிவித்த மதுகர் குப்தா, இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் சார்க் உறுப்பு நாடுகளின் சட்ட ஆலோசகர்கள் இந்தச் சாசன நகல் வரை தொடர்பாக பரிசீலனை மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சார்க் பிராந்திய பொலிஸ் தலைமையதிகாரிகளின் (புலனாய்வுப் பிரிவு தலைவர்கள்) சந்திப்பை அடிக்கடி மேற்கொள்வதற்கும் மாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
சார்க் பொலிஸ் தலைமையதிகாரிகளின் அடுத்த சந்திப்பு 2008 பெப்ரவரியில் இஸ்லாமாபாத்தில் இடம்பெறவுள்ளது.
சார்க் அமைப்பின் மூன்றாவது உள்துறை அமைச்சர்கள் மாநாடு இஸ்லாமாபாத்திலும் நான்காவது மாநாடு மாலைதீவிலும் இடம்பெறவுள்ளது.
நேற்றைய மாநாட்டில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம கலந்துகொண்டார்.


சர்வகட்சிப் பிரதிநிதிகள் சந்திப்பு இடைநிறுத்தம்
[26 - October - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகளின் குழுக்கூட்டம் இரு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இது வரை 51 கூட்ட அமர்வுகளை நடத்தியிருந்த நிலையிலேயே மீண்டும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையியான காலப் பகுதிக்கு குழுக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சர்வகட்சிப் பிரதிநிதிகளின் அடுத்த கூட்ட அமர்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறுமென குழுவின் கட்சிப் பிரதிநிதிகளுக்கு குழுத் தவிசாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அறிவித்துள்ளார்.
இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை இவ்வருட இறுதிக்குள் வெளியிடப்படுமென அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், சர்வகட்சிப் பிரதிநிதிகளின் குழுக்கூட்டம் 2 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் இடைநிறுத்தப்பட்டமைக்கு யுனஸ்கோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பேராசிரியர் திஸ்ஸ விதாரண வெளிநாடு செல்கின்றமை மற்றும் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை ஆகியன காரணமாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இனநெருக்கடிக்கான தீர்வு யோசனையை நாளை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். எனினும் இதற்கு சிங்கள கடும்போக்கு கட்சிகள் பிரதான தடையாக விளங்குவதாக சிறுபான்மை கட்சியொன்றின் பிரதிநிதி குறிப்பிட்டதுடன் இதுவே யதார்த்த நிலையெனவும் சுட்டிக்காட்டினார்.
இதேசமயம், கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் கூடிய சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் மத்திய மாகாண அரசுகளின் சுற்றுச்சூழல் அதிகாரம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது, மாகாணங்களுக்கு மத்தியரசின் அதிகாரங்களை வழங்குவதற்கு ஜாதிக ஹெல உறுமய கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதனால், இக் கூட்டத்தில் சிறுபான்மை கட்சிகள் அதிருப்தியுற்ற நிலையிலேயே கலந்துகொண்டதாகவும் அறியவருகிறது.

தேர்தலில் போட்டியிடலாம் என்ற அரசின் அறிவிப்பு நகைப்புக்கிடமானது- தமிழ்ச்செல்வன்
வீரகேசரி நாளேடு

விடுதலைப் புலிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற இலங்கை அரசின் அறிவிப்பு நகைப்புக்குரியது. இது உலகத்தை ஏமாற்றும் செயல் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதாவது: அனுராதபுரம் விமான தளம் அழிக்கப்பட்டு விட்டது. அங்கிருந்த விமானங்களும் அழிக்கப்பட்டு விட்டன. இந்த விமான தளத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் குடியிருப்புகள், வாழ்விடங்கள், பள்ளிக் கூடங்கள் உள்ளிட்டவற்றை அழித்து வந்த இலங்கை படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தங்களை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட விமான தளம் அழிந்துள்ளதால் தமிழ் மக்கள் நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் உள்ளனர். கரும்புலிகள் படையினரின் சாதனைச் செயல் அவர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஆரம்ப காலத்தில் ஜனநாயக வழியில் தமிழர்களின் உரிமைகளை பெறுவதற்காக புலிகள் போராடிய காலத்தில், இலங்கை அரசும், சிங்கள இனவாதிகளும், ஏற்காமல் வன்முறையைக் கட்டவிழ்த்து தமிழ் இனப் படுகொலையை நடத்தி வந்தனர்.
எனவேதான் புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் இன்று, தேர்தலில் போட்டியிடலாம், அரசியல் கட்சியாக செயல்படலாம் என இலங்கை அரசு கூறுவது நகைப்புக்கிடமானது. ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. இது சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றும் செயலாகும்.


பெரியமடு பகுதியில் கடும் ஷெல் தாக்குதல் 8 மாத சிசுவும் மூன்று பொதுமக்களும் பலி
வீரகேசரி நாளேடு
மன்னார் பெரிய மடுபகுதியில் படையினர் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் சிக்கி 8 மாத சிசுவும் மூன்று பொதுமக்களும் பலியாகியுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று முற்பகல் 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஷெல் தாக்குதலில் பலியானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.தள்ளாடி முகாமிலிருந்து படையினர் மேற்கொண்ட ஷெல் பெரிய மடுப்பகுதியில் வீழ்ந்து வெடித்தமையினால், கர்ப்பிணிப் பெண் முதலில் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து அவரது கர்ப்பப்பையிலிருந்த எட்டு மாத சிசு இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதனையடுத்து கர்ப்பிணிப் பெண்ணான றஞ்சி(வயது 30) என்பவரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
அவரது தந்தையான ஜெயபாலசிங்கம் (வயது 61), சகோதரியான கௌசல்யா (வயது 10) ஆகிய இருவரும் ஷெல்தாக்குதலினால் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
பலியான கர்ப்பிணிப்பெண்ணின் தாயார் உட்பட 8 பேர் இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவர்.காயமடைந்தவர்கள் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயபாலசிங்கம் திரவியம் (வயது 44), பிரான்சிஸ் சுதர்சன் (வயது 15), லோகநாதன் (வயது 40), லோகநாதன் உமாதேவி (வயது13)சந்திரன் றெபேக்கா (வயது 04), பா. சுப்பிரமணியம் (வயது 58), சு.பால்ராஜ் (வயது 29), சொ. நிரோசன் (வயது 03) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
படுகாயமடைந்தோரில் இரு சிறுவர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது என்று வன்னித் தகவல்கள் தெரிவித்தன.

தமிழருக்காக குரல்* எழுப்புவது இராஜ துரோக குற்றமாயின் விளைவுகளை ஏற்கத் தயார்!


பிரதம நீதியரசருக்கு கூட்டமைப்புப் பதில் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பது இராஜ துரோ கக் குற்றாமாயின் அதற்கான விளைவுகளை ஏற் பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயார்.தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் மனித உரிமைகள் தொடர்பில் *இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையைக் கோருவது இராஜ துரோகம் என்றால் அதன் விளைவைச் சந்திக்க நாம் ஆயத்தமாக உள்ளோம்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகக் கட்டடத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்துப் பேசு கையில் பிரதம நீதியரசர் தெரிவித்த கருத்துக்கு ""இலங்கைக்கு உறுதியளிக்கப்பட்ட மொத்த வெளிநாட்டு உதவிகளில் 41 வீதமான பெரும் பங்கை ஜப்பான் வழங்குகின்றது. அடுத்த பெரிய பங்களிப்பு ஆசிய அபி விருத்தி வங்கியால் செய்யப்படுகின்றது. அமெரிக்கா அடங்கிய மற்றைய மேற்கத்தைய நாடு களின் பங்களிப்பு இதற்கும் குறைவானதாகும் எங்களை அடக்குவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் வரையறைகளை இடுவதற்கும், எங்கள் மக்களின் உரிமைகளை நாம் எப்படி மதிக்கவேண்டும் என்று கற்பிப்பதற்கும் அவர்கள் பிரம்புடன் வருவார்கள். எம்மில் சிலர் அவர்களிடம் போய் மண்டியிட்டு அந்தப் பிரம்பைப் பாவிக்குமாறும், எமது நாட்டின் மீது தடைகளை விதிக்குமாறும் இரந்து நிற்கிறார்கள். இது இராஜ துரோகம் அன்றி வேறொன்றுமில்லை என்று தெரிவித்த கருத்துக்கு பதில் தரும் விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா விடுத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தப் பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:கடந்த ஒன்றரை வருட காலத்தில் அரச படைகளினாலும் அரச ஆதரவு ஆயுதக் குழுக்களினாலும் எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.அரசியல் வாதிகள் பத்திரிகையாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள், உயர் கல்வி மாணவர்கள் மட்டுமன்றி அரசியல் ஈடுபாடு கொண்ட பொதுமக்கள் எனப் பலரும் நூற்றுக்கணக்கானோர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.ஆள் கடத்தல்களும்,காணாமல் போதல்களும் நூற்றுக்கணக்கில் நிகழ்த்தப்பட்டுள்ளன.கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களுக்கும், எறிகணைத் தாக்குதல்களுக்கும் குழந்தைகள், சிறார்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர். அகதிகளாக படகுகளில் அயல்நாடான இந்தியாவுக்குத் தப்பியோட முயன்ற பல தமிழர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.உணர்வுகளை உறைய வைக்கும் கொடூரமான வன்முறைச் சம்பவங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள், சிறார்கள் தொடர்பில் நிகழ்த்தப்பட்டுள்ளன.பாரிய இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக சம்பூர் பிரதேசத்தில் இடம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மீண்டும் தம் காணிகளில் குடியேற அனுமதி மறுக்கப்படுகின்றது.சட்டத்தரணிகளிடம் கப்பம் கோரும் அளவுக்கு ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடர்கின்றது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து ஆள்களை கொலை செய்யவும், கடத்தவும் இக்குழுக்கள் அனுமதிக்கப் படுகின்றன. வடக்கு கிழக்கு முழுவதிலும் தம் விருப்பம் போல் அவை செயற்படுகின்றன.போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் மட் டுமன்றி தலைநகர் கொழும்பு உட்பட தென்னிலங்கையிலும் தொடர்ந்து நிகழ்த்தப்படும் இந்த அப்பட்டமான பாரிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியும் எந்தப் பலனுமில்லை.மறுப்புக்கள், மழுப்பல்கள் இல்லையேல் மௌனம் என்பதே அரசின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது.மனித உரிமை அமைப்புகள் கொடுக்கும் எதிர்ப்புக் குரல்களை அரசு தொடர்ந்தும் அலட்சியப்படுத்துகின்றது.மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரகடனங்கள் மற்றும் சமவாயங்கள் பலவற்றை ஏற்றுக்கொண்டிருக்கும் இலங்கை அரசு பயங் கரவாதத்திற்கு எதிரான யுத்தம் ஒன்றை நடத்துவதாக உலகம் அறியக் கூவிக்கொண்டிருக்கையில், தமிழ் மக்களுக்கு எதிராக அரச பயங்கர வாதம் தொடர்ந்து ஏவி விடப்பட்டிருக்கின்றது.வெளிநாட்டு நிதி உதவியிலேயே ஆயுதங்கள் வாங்கப்படுகின்றனவெளிநாடுகள் வழங்கும் நிதி உதவி,கடன் உதவி என்பனவற்றைப் பயன் படுத்தியே இலங்கை அரசு யுத்தத்தை தொடர்ந்து நடத்துகின்றது.யுத்தம் தொடரும் வரையில், தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களும் தொடரும் என்பதே எமது அனுபவப் பாடம்.யுத்தத்தை நிறுத்தி பேச்சுகளை மீள ஆரம்பிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டு கோள்களை இலங்கை அரசு தொடர்ந்து புறக்கணிக்கின்றது.இந்த நிலைமைகளில் உள்நாட்டில் மிதித்து துவைக்கப்படும் எமது மக்களின் மனித உரிமைகள் பற்றிய பிரச்சினையை "பூகோளக் கிராம மாக' மாறியுள்ள புதிய உலகின் முன் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி கிடையாது. வெளிநாடுகளின் எந்த நல் உபதேசமும் இலங்கை அரசிடம் எடுபடாது என்பதும் தெளிவானது.உதவி கோரி வெளிநாடுகளிடம் "பிச்சைப் பாத்திரம்' ஏந்தத் தயங் காத இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிநாடு ஒன்று ஏதாவது பேசினால் கூட நெஞ்சை நிமிர்த்தி பதிலளிப்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.பொருளாதாரத் தடைகளே அரசியல் தீர்வுக்குத் தள்ளும்அதனால்தான் "காத்திரமான நடவடிக்கை' சர்வதேச சமூகத்திடமிருந்து மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேவைப்படுகின்றது.இலங்கைக்கு எதிராக விதிக்கப்படக்கூடிய பொருளாதாரத் தடைகளே இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காணும் அணுகுமுறைக்குப் பதிலாக "அரசியல் தீர்வு' அணுகுமுறைக்கு இலங்கை அரசை தள்ளமுடியும்.இந்த யதார்த்தத்தின் அடிப்படையில்தான் "பொருளாதாரத் தடை' என்ற வேண்டுகோள் எழுந்திருக்கின்றது.இலங்கைக்கு "பொருளாதார உதவி' புரியும் ஐரோப்பிய நாடுகளிடம் விடுக்கப்பட்டிருக்கும் இந்த வேண்டுகோளில் உள்ள தார்மீக நியாயம் தெளிவானது.ஆனால், இந்த வேண்டுகோளை "இராஜ துரோகம்' என பிரதம நீதியரசர் யாழ்ப்பாணத்தில் வைத்து விமர்சித்திருக்கின்றமை ஆச்சரியம் அளிக்கின்றது.தனது பேச்சில் ஜனாதிபதியின் உத்தேச அரசியல் தீர்வுத் திட்டம் பற்றியும் ஏற்கனவே இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்பில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக 1988 இல் புகுத்தப்பட்ட 13 ஆவது திருத்தம் பற்றியும் பிரதம நீதியரசர் பிரஸ்தாபித்திருக்கின்றார்.இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றியும் தமிழினத்தின் பிறப்புஉரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதன் தேசிய அபிலாசைகள் பற்றியும் அரசியல் மட்டத்திலேயே விவாதிக்கப்படவேண் டும். இது விடயம் பற்றி பிரதம நீதியரசரின் கருத்துகள் பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை.ஆனால் ஒன்று. எமது மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையைக் கோருவது "ராஜ துரோகம்' என்றால் அதன் விளைவுகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தயக்கமின்றிச் சந்திக்கும்.""செயல்களில் பலன்களில் பற்றில்லாது கடமையைச் செய்வாயாக' என்ற பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தின் பத்தொன்பதாவது சுலோகத்தை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்வது பொருத்தமானது என்று கூறினார்.

அநுராதபுரம் விமானத் தளத்தின் மீதான தாக்குதலின் போது உயிரிழந்த புலிகள் உறுப்பினர்களின் சடலங்களை புதைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்றம் உத்தரவு எதனையும் பிறப்பிக்கவில்லை
இதுதொடர்பாக நீதிமன்றின் பதிவாளர் கஜீதா சித்ராங்கனி செனிவிரட்ண பி.பிஸியின் சிங்கள சேவைக்கு தெரிவித்துளள்ளவையாவன. உயிரிழந்த புலி உறுப்பினர்களின் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் நீதிமன்றத்துக்கு வந்து அறிவித்து மேலதிக உத்தiவைப் பெறுமாறே நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார் ஆனால் பொலிஸார் அப்படிச் செய்யவில்லை கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்ற உத்தரவு இல்லாமலேயே அவர்கள் சடலங்களைப் புதைத்து விட்டனர் இதேவேளை அநுராதபுரம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே தாங்கள் புலிகளின் சடலங்களை அவர்களிடம் ஒப்படைக்காமல் புதைத்து விட்டனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அநுராதபுரத்தில் களப்பலியான கரும்புலிகளை நினைவு கூர்ந்து நேற்று வன்னியில் நிகழ்வுகள்
தனியிடத்தில் தலைவர் பிரபா அஞ்சலி

அநுராதபுரம் விமானத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ""எல் லாளன் நடவடிக்கை''யில் களப்பலியான 21 கரும்புலி களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிர பாகரன் நேற்று அக வணக்கம் செலுத்தினார்.வன்னியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் இடத் தில் கரும்புலிகளின் திருவுருவப் படங்களுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செய்து மலர்மாலை அணிவித்து தலைவர் பிரபாகரன் அஞ்சலி செலுத்தினார்.கரும்புலிகள் நினைவாக வன்னி எங்கும் விசேட நிகழ் வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மஞ்சள், சிவப்புக் கொடி கள் எங்கும் கட்டப்பட்டிருந்தன.கோட்டமட்டத்தில் விசேட அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றன. மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையான பொதுமக் களும் போராளிகளும் கலந்துகொண்டனர்.

No comments: