தமிழ் மக்களின் எதிர்காலத்தை அடுத்துவரும் சமர்கள் தீர்மானிக்கும் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை - புலித்தேவன்
இனிவரப் போகும் காலமே எமக் குச் சாத்தியமான காலம். இக்காலகட் டத்தில் நடைபெறும் சமரே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சமராக அமையப் போகின்றது. இவ்வாறு விடுதலைப் புலிகளின் சமாதான செய லகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரி வித்துள்ளார்.கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற 2ஆம் லெப்.மாலதியின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித் ததாவது:தமது இராணுவம் நூறுவிழுக்காடு வெற்றிக்களிப்பில் உள்ளதெனவும் இனி மிகுதிப் பகுதிகளையும் கைப் பற்றுவதே தமது கடமையெனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவற் றுக்கெல்லாம் சரியான பதில்கள் உள் ளன.ஏனெனில் இனிவரப் போகும் காலமே எமக்குச் சாத்தியமான காலம். இந்தக் காலத்தை நாங்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எனவே இனி வரும் காலத்தில் கடும் சமர் மூளப் போகின்றது. இனி சமாதானப் பேச்சுக் கள் நடைபெற வாய்ப்பில்லை.அனைத்துக் கள முனைகளிலும் எதிரி கடும் சமர்களை ஆரம்பிக்கத் தயாராகி விட்ட நிலையில் அதற்கான பதிலடிகளை வழங்க நாமும் தயாரா கவே உள்ளோம்.அண்மைக் காலமாக மன்னார் பகுதி யில் கடும் தாக்குதல்களை நடத்தி னோம் இதன் மூலம் எதிரியின் உடல் களையும், ஆயுதங்களையும் கைப் பற்றியுள்ளோம். இவ்வாறுதான் இனி நடக்கப்போகும் சமர்கள் கடும் உக்கிர மானவையாக இருக்கும். மஹிந்த அரசு தொட்டம் தொட்டமாக இருந்த நிலப் பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டு அதைப் பெரும் வெற்றியாகக் காட் டிக்கொண்டு சிங்கள மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றித் தனது அரசியலை நடத்தி வருகின்றது.இனிவரப்போவதுதான்நிஜமான சமர்கள்இனிவரப் போவதுதான் நிஜமான சமர்க்களங்கள். இச்சமர்கள் எவ்வாறு இருக்கப் போகின்றன என்பவை இனித் தான் முக்கியமானவையாக அமையும். வரப்போகும் நவம்பர் மாதம் என்பது ஒரு முக்கியமான காலம். தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் தின உரையை நிகழ்த்தவுள்ளார்.அடுத்து சிறிலங்காவில் வரவு செல வுத் திட்டத்தை மகிந்தராஜபக்ஷ கொண்டு வரப்போகின்றார். வரவு செலவுத் திட்டம் வெற்றியளிக்க வேண்டுமெனில் ஜே.வி.பி., புத்த பிக்குகள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். ஆதரவளிப்பதாயின் சண் டையை ஆரம்பிக்குமாறு அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அடுத்து வரும் காலத்தில் மிகப் பெரும் சமர்க் களங்கள் இங்குதான் நடைபெறப் போகின்றன. நாங்கள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலிருந்து தற்பாதுகாப்பு யுத்தத்திலேயே ஈடுபட் டோம்.கிழக்கிலிருந்த எமது போராளி களும் தளபதிகளும் வந்துசேர்ந்து விட்டார்கள். அவர்கள் அதிகரித்துள்ள எமது படையணிகளை வழிநடத்தி வருகின்றனர். எனவே இனிவரும் சமர் சிறிய சமர்களாக அமையப் போவதில்லை.இனிக்கடும் சமர்களே நடைபெறப் போகின்றன. இதில்தான் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படப் போகி றது. எனவே நாம் ஓர் இறுக்கமான முடிவை எடுத்துள்ளோம். அதாவது வன்னி நிலப்பரப்பினுள் சிங்கள இரா ணுவம் காலடி எடுத்துவைப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அந்த நோக்குடனும் இலக்குடனுமே நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கின் றோம். எனவே எமது மக்களின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கின்ற சமராக அடுத்துவரப் போகும் சமரே அமைய வுள்ளது.சண்டை நடைபெற்றே தீரும்உலகின் பலநாடுகளில் இவ்வாறு யுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இரண் டாம் உலக மகாயுத்தத்தில் ரஷ்யா வில் போர் நடைபெறும்போது வயது முதிர்ந்தவர்களும் குழந்தைகளும் மட்டுமே வீடுகளில் இருந்தனர். ஏனை யோர் அனைவரும் களமுனைகளில் நின்றனர். ஆண், பெண் என்ற பேத மின்றி சகலரும் போர் முனைக்கே சென்றனர். இவ்வாறான ஒரு காலம் நிச்சயமாக எமது பகுதியிலும் உருவா கும்.அப்போது நிச்சயமாக அனை வரும் போராடியே ஆகவேண்டும். இங்கு நூற்றுக்கணக்கில் விமானங்கள் குண்டுகளை வீசினாலும் இராணுவம் அனைத்துப் பகுதிகளிலும் முன்னே றினாலும் சண்டை நடைபெற்றே தீரும். எனவே மக்கள் அவற்றை எதிர் கொள்ளத்தயாராக இருக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment