அரசின் அமைதி முயற்சிகள்: இந்தியப் பிரதமர் மகிழ்ச்சி
சந்திப்பின் பின் மஹிந்த தகவல்
இலங்கையின் அமைதி முயற்சிகள் தொடர்பான எமது அரசின் நிலைப்பாடுகள் குறித்து இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங் மகிழ்ச்சி தெரிவிக்கின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.புதுடில்லியில் நடைபெறும் "ஹிந்துஸ் தான் ரைம்ஸ்' மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் இந்தியா சென்ற ஜனாதிபதி, நேற்று மாலை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.இந்தச் சந்திப்புக்களின் போது என்ன விடயங்கள் பற் றிப் பேசினீர்கள் என்று ஜனாதிபதி மஹிந்தவிடம் செய்தி யாளர்கள் கேட்டபோது அமைதி முயற்சிகள் தொடர்பான அரசின் நிலைப்பாடுகள், நட வடிக்கைகள் குறித்து நான் பிரதமர் மன்மோகனுக்கு விளக்கினேன். அதற்கு அவர் தன் மகிழ்ச்சியை தெரிவித்தார் என்று ஜனாதிபதி கூறினார்.இந்தியாவின் தார்மீக ஆதரவு எப்போதும் உண்டுநாங்கள் மிகவும் சுமுகமான சந்திப்பை மேற்கொண்டோம். இரு நாடுகளும் தற் போது சிறப்பான உறவுகளை வைத் திருக் கின்றன. இந்தியாவின் தார்மீக ஆதரவு எங்களுக்கு எப்போதுமே இருக்கிறது என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக நாங்கள் எதுவுமே பேசவில்லை. இரு நாடு களின் கடற்படைகளும் ஒருங்கிணைந்த ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதனால் அதைப்பற்றி பேசவேண்டிய அவசியம் இருக்கவில்லை என்று ஜனா திபதி சொன்னார்.
வெலிக்கடைத் தமிழ் கைதிகளை ஆர்பர் அம்மையார் சந்தித்தார்
உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
============================================
13-10-2007 + மூன்று மாதம்= 13-01-2008
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அரசியல் கைதிகள் அனைவரினதும் வழக்குகளை விசாரித்து தீர்வுகாணுமாறு இலங்கை அரசிடம் தாம் வலியுறுத்துவார் என்றும்; அதற்கு பின்னரும் உரிய தீர்வுவழங்கப்படாவிட்டால் ஐ.நா.சபை இவ்விடயத்தில் மீண்டும் தலையிட்டு நடவடிக்ககை எடுக்கும் என்று உறுதியளித்தார்.
=============================================
வெலிக்கடைச் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வந்த தமிழ் அரசியல் கைதிகளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் நேற்றுப் பிற்பகல் சந்தித்துப் பேசினார்.கைதிகளுக்கு லூயிஸ் அம்மையார் சில உறுதிமொழி கள் வழங்கியதையடுத்து அவர்கள் நேற்றுமாலை தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த 82 கைதிகள் சார் பாக அவர்களின் பிரதிநிதிகள் ஐவரை சிறைச்சாலையின் பொது மண்டபத்தில் வைத்து ஆர்பர் அம்மையார் சந்தித் தார். கைதிகள் தமது பிரச்சினைகளை அம்மையாருக்கு விளக் கிக் கூறினர். விசாரணைகள் எவையும் இன்றி நீண்ட கால மாக தாங்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறிய கைதிகள், தங்களின் விடுதலைக்கு ஐ.நா.சபை யும், மனித உரிமைகள் ஆணையமும் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.இதனைச் செவிமடுத்த அம்மையார், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அரசியல் கைதிகள் அனைவரினதும் வழக்கு களை விசாரித்து தீர்வுகாணுமாறு இலங்கை அரசிடம் தாம் வலியுறுத்துவார் என்றும்.அதற்கு பின்னரும் உரிய தீர்வுவழங் கப்படாவிட்டால் ஐ.நா.சபை இவ்விடயத் தில் மீண்டும் தலையிட்டு நடவடிக்ககை எடுக்கும் என்று உறுதியளித்தார். அம்மை யாரின் உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட் டத்தைக் கைவிட்டனர்.
No comments:
Post a Comment