Sunday, 28 October 2007

இந்தியா ஆயுத காணிக்கை! பாராளமன்றவாதிகள் இந்தியாவிடம் யுத்தத்தைத் தடுக்க கோரிக்கை!!

இலங்கைக்கு இந்தியாவின் வான் பாதுகாப்பு ஆயுதங்கள்!
கொந்தளிப்பான நிலை கருதி வழங்கப்பட்டதாக புதிய இராணுவத் தளபதி தீபக் தகவல்

இந்தியா இலங்கைக்கு வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்கி உள்ளது. இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவின் புதிய இராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் இத்தகவலை நேற்றுத் தாம் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிட்டார். இலங்கையின் தற்போதைய மிகவும் "கொந்தளிப்பான' நிலையைக் கருத்திற்கொண்டே அந்த நாட் டுக்கு வான் பாதுகாப்பு ஆயுதங்கள் வழங்கப்பட்டன அந்த நாடு தனக்கு ஆயுத உதவி வழங்குமாறு பல தடவைகள் எமக்கு வேண்டுகோள் விடுத்து வந் தது. அங்குள்ள தற்போதைய அமைதியற்ற குழப்பமுற்ற நிலையைக் கருத்திற்கொண்டு வான் பாதுகாப்பு ஆயுதங்களைக் கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. என்றும் ஜெனரல் தீபக் கபூர் விளக்கினார். இந்தியாவின் புதிய இராணுவத் தளபதியாக ஜெனரல் தீபக் கபூர் இம்மாதம் முதலாம் திகதி பதவியேற்றிருந்தார். அதன் பின்னர் அவர் முதல் தடவையாக நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரது நீண்ட பத்திரிகையாளர் மாநாட்டின் போது இலங்கைக்கு வான் பாதுகாப்பு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தனக்கு ஆயுத உதவிகளை வழங்கு மாறு இலங்கை பல தடவைகள் வேண்டுகோள் விடுத்துள்ளது. அது குறித்து நாம் இப்போது ஆராய்ந்து வருகிறோம் அந்த நாட்டின் இப்போதைய "கொந்தளிப்பான' நிலைமையைக் கருத்தில் கொண்டு வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்கியுள்ளோம் மேலும் இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு எமது நாட்டில் பயிற்சிகளையும் வழங்குகிறோம் என்றும் இந்தியவின் புதிய இராணுவத் தளபதி கூறினார்.அநுராதபுரம் விமானத் தளத் தாக்குதல் நடைபெற்ற பின்னணியில் ஐந்தாவது நாளில் இந்திய இராணுவத் தளபதி இவற் றைத் தெரிவித்திருக்கின்றார். இதேவேளைஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் இழக்கப்பட்ட வான்கலன்களுக்குப் பதிலாக புதியனவற்றை கொள்வனவு செய்வதற்கு கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்புச் சபையின் வாராந்த மகாநாட்டில் முடிவு செய்யப்பட்டது தெரிந்ததே.இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமைவகித்தார். விமானப் படைத்தளபதி சமர்ப் பித்த தேவைக்கு முன்னுரிமை அடிப்படையில் வான்கலங்களை கொள்வனவு செய்யுமாறு பாதுகாப்புச் சபையினர் பாதுகாப்பு சபையை ஜனாதிபதி பணித்திருந்தார்.அத்தோடுஅநுராதபுரத் தாக்குதலில் அழிக்கப்பட்ட வான்கலன்களுக்கு பதிலாக புதியன நட்பு நாடுகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படவிருப்பதாகவும் அவை நட்பு நாடுகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட நாடுகளுடன் நாம் தொடர்பு கொண்டுள்ளோம். சில காரணத்தால் அந்த நாடுகள் என்ன என்பதையும் கூறமுடியாது என்று ஜனாதிபதி யின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினமான பசில் ராஜபக்ஷ கொழும்பில் ஊடகம் ஒன்றுக்கு அவரளித்த பேட்டியில் கூறியிருந்தவையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய ராடர் சமிக்ஞை காட்டிய போதிலும் புலிகளின் விமானங்களை இடைமறிக்கவில்லை!
தவறு எங்கே என்று விசாரணை

வவுனியா விமானத் தளத்தில் இந்தியா வழங்கிய ராடர்கள் பொருத்தப்பட்டுள் ளன. விடுதலைப் புலிகளின் விமானங்கள் அந்த வான் வழியாக பறந்தபோது ராடர் கருவியில் தக்க நேரத்தில் சமிக்ஞை வெளி யிட்டு எச்சரித்தன. எனினும் அதனை அவதானித்து விடு தலைப் புலிகளின் விமானத் தாக்குதலை விமானப் படையினரால் தவிர்க்க முடிய வில்லை .வவுனியாவில் இந்திய ராடர்கள் பொருத் தப்பட்டிருந்த போதிலும் எந்த விமானத்தா லும் விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்களை இடைமறித்துத் தாக்கமுடி யாமற்போனது குறித்து விசாரணைகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்திய ராடர்கள் உரிய முறையில் செயற்பட்டு எச்சரிக்கை ஒலி எழுப்பியதை விமானப்படைத் தளபதி றொஷான் குண திலகவும் ஊர்ஜிதம் செய்துள்ளார். விமானப் படைத் தளத்தில் இருந்த விமா னங்கள் விடுதலைப் புலிகள் நடத்திய தரை வழித் தாக்குதல் கரணமாகவே அழிந் தன. அவர்கள் நடத்திய விமானத் தாக்குத லால் அல்ல என்றும் றொஷான் மேலும் சொன்னார். --

வன்னிமுன்னரங்க பகுதிகளில் மோதல்
6 விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலி
வீரகேசரி இணையம்

நேற்று சனிகிழமை 3.30 மணியளவில் முள்ளிக்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது .இதில் 3 விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலியாகியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அதேவேளை பாலமோட்டடி பாதுகாப்பு எல்லைக்குள் நேற்று 6 மணியளவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழி ஒன்றை இராணுவத்தினர் தாக்கியளித்துள்ளதாக தேசிய பாதுக்காப்பிற்க்கான ஊடகமத்திய நிலையம் தெரிவிக்ககிறது.
அதேவேளை குடுருவிட்டக்குளம் பகுதியில் இராணுவ வீரர் ஒருவர் கண்ணிவெடி ஒன்றுக்கு இலக்காகி வவுனியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான தேசிய மத்தியநிலையம் மேலும் தெரிவிக்கிறது


Editorial Uthayan
தீர்வுக்கான திட்டம் எதையும் தெற்கு முன்வைக்கவே மாட்டாது இலங்கைத் தீவை கடந்த ஆறு தசாப்த காலமாக ஆட்டிப் படைத்துவரும் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழி யில் தீர்வு காண்பதற்கான நீதி, நியாயமான தீர்வுத் திட்டம் ஒன்றை தென்னிலங்கைச் சிங்கள சமூகம் ஒன்றுபட்டு முன்வைக்கும் என்ற சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு "பிள்ளையார் கல்யாணம்' போல நாளை நாளை என்று தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது.ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை நடு நிலை மனதோடு அணுகி நீதி செய்யும் மனப்பக்குவமோ, தீர்க்க தரிசனமான அரசியல் பார்வையோ, சகல இன மக்களையும் ஒன்றிணைக்கும் ஒத்திசைவு நோக்கோ தென்னிலங்கைக் கட்சிகள் இடையே இல்லை என்பதால், நியாயமான தீர்வுத் திட்டம் ஒன்றை அவற்றினால் ஐக்கியப்பட்டு முன்னெடுக் கவே முடியாது என்பதையும்அதன் காரணமாகத் தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் உரிமைப் போராட்டத்தை முழு அள வில் முழு மூச்சில் முன்னெடுப்பதைத் தவிர, ஈழத் தமிழர் களுக்கு வேறு மாற்று வழி ஏதும் இல்லை என்ப தையும்இப்பத்தியில் திரும்பத் திரும்ப தெளிவாகச் சுட்டிக் காட்டி வந்தோம். அக்கருத்து மென்மேலும் உறுதிப்பட்டு வரு வதையே தென்னிலங்கை அரசியல் போக்கு உணர்த்தி நிற் கின்றது.தாம் ஆட்சிக்கு வந்தால், இனப்பிரச்சினைக்கான தென்னி லங்கையின் தீர்வு யோசனையை மூன்று மாத காலத்துக்குள் பொது இணக்கப்பாட்டுடன் உருவாக்குவார் என்றும் அதன் பின்னர் அந்த யோசனைத் திட்டத்தின் அடிப் படை யில் தமிழர் தரப்புடன் பேச்சு நடத்தி இணக்கத்துக்கு வருவார் என்றும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்து அதி காரத்துக்கு வந்தவர் தென்னிலங்கையின் ஆட்சிப் பீடத் தலை வர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இப்போது அவர் பதவி யேற்று ஏறத்தாழ இரண்டு வருடங் கள் பூர்த்தியாகின்றன. தென்னிலங்கையில் இணக்கப்பாடு வரவும் இல்லை; தமிழர் தரப்புடன் சமரசப் பேச்சும் முன்நகர வில்லை.தென்னிலங்கையில் பொது இணக்கப்பாடு ஒன்றைத் தோற்றுவிக்கும் நடவடிக்கை என்ற பெயரில் அனைத்துக் கட் சிப் பிரதிநிதிகள் குழு ஒன்றைப் பெரும் ஆரவார அறிவிப்பு களோடு அரசுத் தலைவர் ஸ்தாபித்தார்.அமைதி வழித் தீர்வில் சமாதான முயற்சிகளில் தமக்கு விருப்பமும் ஈடுபாடும் உண்டு என்று சர்வதேச சமூ கத்துக் குக் காட்டும் எத்தனத்துடன் அரசுத் தலைவர் எடுத்த இந்தத் தந்திரோபாய நகர்வின் உட்சூட்சுமம் புரியாமல் இந்த முயற்சி யின் பின்னால் புதைந்து கிடக்கும் குள்ளநரித் தந்திரத்தை அறியாமல் இந்த எத்தனத்தில் அவிந்து, ஏமாந்து எடுபட்டுப் போனது சர்வதேச சமூகம்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்தாபித்துள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஓர் ஆக்கபூர்வமான முயற்சி என்றும் இந்தக் குழு மூலம் சாதகமான தீர்வுத் திட்டம் ஒன்று முன் வைக்கப்படும் சாத்தியம் கிட்டியிருக்கின்றது என்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் பல இதனை வர வேற்று அறிவிப்பும் விடுத்தன. ஆனால் பலன் ஒன்றுமில்லை. மாதங்கள் கடந்து வருடமும் தாண்டியதுதான் மிச்சம். பொது இணக்கம் வரவேயில்லை.இந்த வருடம் ஜனவரிக்கு முன்னர் தீர்வுக்கான பொது யோசனையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வெளி யிடும் என கடந்த வருட இறுதியில் அரசுத் தலைவரே, இந் தியா உட்பட பல சர்வதேச தரப்புகளுக்கு உறுதியளித்திருந் தார். இந்தக் காலக்கெடு பின்னர் கடந்த ஏப்ரல் வரை நீடிக்கப் பட்டது. பின்னர் அது ஓகஸ்ட் வரை பின்போடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முடிந்தாலும் அத் தகைய இணக்கப்பாடு வராது என்பது இப்போது உறுதி யாகியிருக்கின்றது.அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு கடந்த செவ் வாயன்று தனது 51 ஆவது கூட்டத்தை நடத்தி முடித்து விட் டது. சந்திப்புகள் அரைச் சதத்தைத் தாண்டியும் பொது இணக் கப்பாடு எட்டப்படாத நிலையில் குழுவின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.இனி நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக் கப்பட்டு, அதன் மீதான குழுநிலை விவாதம் ஆரம்பமாகி விடும். அத்தோடு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, "யுனெஸ்கோ'வின் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளிநாடு செல்கின்றார்.இக்காரணங்களால் குழுவின் கூட்டம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இனிமேல் நடக்காது என்பது உறுதியாகியுள் ளது. ஆகவே இந்த ஆண்டு முடிவுவரை இக்குழு இனிக் கூடாது.ஆக, இந்த ஆண்டு கடந்தாலும் இனப்பிரச்சினைத் தீர் வுக்கான தென்னிலங்கையின் இணக்கப்பாட்டுடன் கூடிய யோசனைத் திட்டம் வெளிவராது என்பது இப்போது உறுதி யாகிவிட்டது.தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வை உத றித் தள்ளி, உதாசீனப்படுத்திவிட்டு, இராணுவ வழித் தீர்வில் தீர்க்கம் கொண்டு, போரியல் போக்கில் யுத்த முனைப்போடு செயற்படும் கொழும்பு அரசுக்கு, அனைத் துக் கட்சிப் பிரதி நிதிகள் குழுவின் மூலம் ஆக்கபூர்வமான யோசனை ஒன்றை முன்வைக்கும் எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது.அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு மூலம் தமிழருக்கு நியாயம் செய்யும் தீர்வு யோசனைத் திட்டம் ஒன்றை முன் வைப்பதை அரசில் இணைந்திருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்குக் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின் றன. அரசுத் தரப்பு முதலில் தனக்குள் ஒன்றுபட்டு தீர்வுத் திட்டம் குறித்து பொது நிலைப்பாடு ஒன்றை அறிவிக்கட் டும் என்று நிபந்தனை விதித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவும் ஏற் கனவே மேற்படி குழுவின் நடவடிக்கைகளிலிருந்து விலகி, ஒதுங்கிவிட்டது.இந்தப் பின்னணிகளையும், கொழும்பு அரசின் இராணு வத் தீர்வு முனைப்பையும் கவனத்தில் எடுத்து, சர்வதேச சமூ கம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அமைதி வழித் தீர்வி லேயோ அல்லது அதற்கான நீதி, நியாயமான தீர்வு யோசனை ஒன்றை முன்வைப்பதிலேயோ கொழும்புக்கு நம்பிக்கை இல்லை என்பதை சர்வதேச சமூகம் இன்றைய நிலையில் இவ்வளவு காலம் கடந்த பின்னராவது புரிந்து கொண்டு, அதை உணர்ந்து, பகிரங்கப்படுத்த வெளிப்படுத்த முன் வரவேண்டும்.

இந்தியத் தலைவர்களை சந்திக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முயற்சி
[28 - October - 2007]
* யுத்த சூழ்நிலையை தடுத்து நிறுத்த டில்லியிடம் கட்சிகள் வேண்டுகோள்
பி.ரவிவர்மன்

உக்கிரமடைந்துவரும் யுத்த சூழ்நிலையை தடுத்து நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுப்பதற்காக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புதுடில்லியுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ள அதேசமயம், தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர இந்தியா நேரடியாக தலையிட வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய தமிழ்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று விரைவில் புதுடில்லிக்கு செல்லவுள்ளதாக அறியவருகிறது.
இத்தூதுக்குழுவினர் முதலில் தமிழகத்திற்கு சென்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் இராமதாஸ் உட்பட தமிழ் நாட்டின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் பின்னர் புதுடில்லிக்கு சென்று உயர்மட்டச் சந்திப்புகளை மேற்கொள்வதற்கு முயற்சித்து வருவதாக அறியவருகிறது.
இலங்கையின் யுத்த சூழ்நிலையை தடுத்து நிறுத்தி பாரிய மனித அவலங்களை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இலங்கையின் இனநெருக்கடி தீர்வு முயற்சிகளுக்கு சமாதான வழியில் தீர்வொன்றை காண்பதை விடுத்து இராணுவ ரீதியிலான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒரு போதும் துணை போகக் கூடாது.
இலங்கையின் தற்போதைய மிகமோசமான நெருக்கடி நிலைமைகள் தொடர்பாக இந்திய மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெளிவுபடுத்தவுள்ளது.
இந்திய மத்திய அரசு, தமிழ்நாடு என்பவற்றிலுள்ள முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் இன்றைய நெருக்கடியான நிலைமைகள் தொடர்பாக விரைவில் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
இந்தச் சந்திப்பின்போது இந்திய அரசியல் தலைவர்களுக்கு இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைகள் தொடர்பாகவும் அரசியலில் திட்டமிடப்பட்டுள்ள பாரிய இராணுவ நடவடிக்கைகள், அதனால் ஏற்படப்போகும் மனிதப் பேரவலம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலக மக்கள் முன்னணி
இலங்கையில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கு எதிராகவும் இடம்பெறப்போகும் பாரிய மனிதப் பேரழிவுகள், அவலங்கள் தொடர்பில் மீண்டும் மீண்டும் இந்திய அரசு தவறான முடிவை எடுக்குமானால் வரலாற்றில் அழிக்கமுடியாத அவப்பெயரை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி பேசினால் இந்தியா பயங்கரவாதம் பற்றிப்பேசுகின்றது. ஆனால், அரச பயங்கரவாதம் பற்றி வாய்மூடி மௌனியாக செயற்படுகின்றது.
இந்தியாவின் தூரநோக்கற்ற பார்வைகளின் முடிவுகள் இலங்கை, இந்தியா மற்றும் தமிழர்கள் என்ற எந்தவொரு தரப்பிற்கும் நன்மையளிக்கப் போவதில்லை.
இவ்வாறான அலட்சியப் போக்குடைய தூரநோக்கற்ற பார்வையின் முடிவுகளுக்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இலங்கையின் தற்போதைய நெருக்கடியான சூழலில் யுத்தமொன்றை தவிர்த்து இனநெருக்கடித் தீர்வுக்கும் அமைதியான சூழல் ஒன்று ஏற்படுவதற்கும் இந்தியா நேரடியாக தலையிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யோகராஜன் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா மத்தியஸ்தம் வகிப்பதன் மூலமே இருதரப்பினர் மத்தியிலும் நம்பிக்கையும் உரிய தீர்வொன்றையும் காணமுடியும்.
இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் கடந்த காலங்களில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பில் பல கசப்பான சம்பவங்களை உருவாக்கியிருக்கலாம். அதனை சகல தரப்பினரும் மறந்து நட்புறவுடன் அமைதியான சூழலை இந்த நாட்டில் உருவாக்க முன்வரவேண்டும்.
போர்நிறுத்தத்தை உடன் அமுல்படுத்தி இருதரப்புகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இந்தியா உடன் முன்வர வேண்டும். இதன் மூலமே பாரிய மனிதப் பேரழிவொன்றை இலங்கையில் தடுத்து நிறுத்த முடியும்.
அதேநேரம் ஹொங்கொங் - சீனா உடன்பாட்டின் பிரகாரம் ஒரு நாடு இரு அரசியல் அமைப்பு என்ற தீர்வொன்றே இன்று எமது நாட்டுக்கு அவசியமாகத் தேவைப்படுகின்றதென்றும் அவர் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணி
இலங்கையில் மீண்டுமோர் யுத்தப்பேரழிவை தடுத்துநிறுத்தக்கூடிய சக்தி இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரன் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;
ஏனைய நாடுகளை விட அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் இலங்கையில் சமாதானத்தை உருவாக்க கூடிய வல்லமை இந்தியாவுக்கு மட்டுமேயுள்ளது.
அயல்நாடுகளின் விவகாரத்தில், நலிந்த மக்களுக்கு அபயம் தரும் நாடாகவே தம்மை அடையாளப்படுத்தி வந்துள்ள இந்தியா இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய அமைதிகாக்கும் படையின் செயற்பாடுகளில் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
மற்றைய உலகநாடுகள் பல இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டிய காலகட்டத்தில் தமிழக மக்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் அறிக்கை விடும் நாடாக இந்தியா மாறியுள்ளதா என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
இது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் ஏற்பட்டுள்ள பலவீனமா என்ற சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது.
ஈழத்தமிழர் போராட்டம் ஆயுதங்கள் மூலம் ஒடுக்கப்படுமாயின் அது இங்குள்ள இந்தியவம்சாவளித் தமிழர்களுக்கும் எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

குறிப்பு; அழுத்தம்-enb

No comments: