Thursday 1 November, 2007

விடத்தல்தீவு நோக்கி விடாது ஷெல் தாக்குதல்

விடத்தல்தீவு நோக்கி விடாது ஷெல் தாக்குதல்
மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாந்தை மேற்கு மற்றும் விடத்தல்தீவுப் பகுதிகளை நோக்கி நேற்றுமுன்தினம் தொடக்கம் விடாது ஷெல், பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று மன் னாரிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரி விக்கின்றன.மன்னார், சௌத்பார் இராணுவ முகா மிலிருந்தும் வங்காலை மற்றும் நானாட் டான் பகுதிகளில் உள்ள படை முகாம்களி லிருந்துமே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.இதேசமயம், நேற்று முன்தினம் மாலை 3.30 மணி முதல் சுமார் இரு மணி நேரம் மன்னார் முருங்கன் வீதியையும் மன்னார் வங்காலை ஊடான பாதையையும் படையினர் மூடியதால் அப்பகுதி ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்தும் உத்தேசம் இல்லை கிழக்கிலும் மாகாண சபைக்குத் தேர்தலின்றி பிரதிநிதிகளை நியமிப்பதற்கு அரசு திட்டம்

வடக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு வகை செய்யும் சட்டத் திருத்தம் நிறை வேற்றப்பட்ட போதிலும் அங்கு உடனடியாக தேர்தலை நடத்தும் திட்டம் எதுவும் அரசுக்குக் கிடை யாது. அதேபோன்று வட மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி மாகாணமாக்கப்பட்ட கிழக்கிலும் மாகாண சபைக்குரிய தேர்தல் இப்போதைக்கு நடத்தும் திட்டமும் அரசுக்கு இல்லையாம். கிழக்கு மாகாண சபைகளுக்குப் பிரதிநிதிகளை நியமித்து நிர்வாகத்தைப் பரவலாக்கி அங்கு வழமை நிலையைத் தோற்றுவிப்பதே அரசின் நோக்கம்.அரச உயர் வட்டாரங்கள் இத்தகவலை உதயனுக்குத் தெரிவித்தன. வடக்கில் உள்ளூராட்சிச் சபைகளுக் கான தேர்தல்களை நடத்துவதற்கு வகை செய்யும் விதத்தில் உள்ளூராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் கடந்த மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட நிய மனப் பத்திரங்களை ரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களைக் கோரி தேர்தலை நடத்த வசதியாக இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது. வடக்கு உள்ளூராட்சி சபைகளின் தேர் தல்கள் பல தடவைகள் வேட்புமனுக்கள் தாக் கல் செய்யப்படுவதும் பின்னர் ஒத்திவைக் கப்படுவதுமாக இருந்தன. புதிதாகத் தேர் தலை நடத்துவதற்கு ஏற்றவிதத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து வருட முற்பகுதியில் தேர்தல் நடத்தபடக் கூடும் என்று ஊகங்கள் எழுந்துள்ளன. இந் தப் போர்ச் சூழ்நிலையில் ஜனநாயக ரீதி யான முறையில் உரிய விதத்தில் சுதந்திர மாக வாக்களிக்கும் நிலை உண்டா என்ற சந்தேகங்களும் பரவலாக நிலவுகிறது. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல வடக்கில் உடனடியாக உள்ளூ ராட்சி சபைத் தேர்தலை நடத்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று உயர் மட்ட அதிகாரி ஒருவர் உதயனுக்குத் தெரிவித் தார். அங்கு தனியான மாகாணசபைத் தேர் தலை நடத்தக்கூடிய வாய்ப்பு இருந்தும் அதனைத் தற்போதைக்கு முன்னெடுக்கும் திட்டம் ஏதும் அரசுக்குக் கிடையாது என்கின்றன அந்த வட்டாரங்கள்.யுத்த முனையிலிருந்து மீண்டு தற் போதுதான் அங்கு வழமை நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இந் நிலையில் அங்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த முற்படுவது வீண் விபரீதங்களையும் குழப் பங்களையும் சிக்கல்களையும் கொண்டு வந்துவிடும். ஆகவே கிழக்கை அபிவி ருத்தி செய்து, அங்கு வழமை நிலை சுமுக சூழல் ஏற்படும் வரை மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடவே அரசு விரும் புகின்றது.கிழக்கு மாகாண சபைக்கு பிரதிநிதிகள்ஆனாலும், வேறு நியாயமான வழிகள் மூலம் மாகாண சபை நிர்வாகத்தைப் பரவ லாக்கி, மக்கள் பங்களிப்புடன் அதனை முன்னெடுக்க அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி சில பிரதிநிதி களை நியமித்து, அவர்கள் ஊடாக சம்பந் தப்பட்ட மாகாணசபை நிர்வாகத்தை சுமுக மாக முன்னெடுக்க முடியும். அந்த வாய்ப் புகளை அரசுத் தலைமை ஆராய்ந்து வருகிறது. அரசியல் தரப்புகளின் பிரதிநிதி களுக்கு அப்பால் சென்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூலம் கிழக்கு மாகாண நிர் வாகத்தைப் பரவலாக்கி, வழமை நிலையை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகின்றது. என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

முகமாலையில் தொடர்கிறது மோதல்

முகமாலை முன்னரங்கப் பகுதியில் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று அறிவிக் கப்படுகின்றது.நேற்றுமுன்தினமும் அங்கு மோதல் ஒன்று இடம்பெற்றிருக்கிறது என்று படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பிற்பகல் 3.35 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலில் 6 விடுதலைப்புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களின் பதுங்குகுழிகள் தாக்கியழிக் கப்பட்டுள்ளன என்றும் படையினர் கூறி யுள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னர் அந்தப் பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடு தல் நடவடிக்கையில் கைக்குண்டு 01, ஏ.கே.47 ரகத் துப்பாக்கி 01, இவற் றிற்குரிய மகஸின் 01, ரவைகள் 28 என்பவற் றையும் படையினர் கைப்பற்றி னர் என்று படைத்தரப்பில் மேலும் தெரி விக்கப்பட்டது.இந்தத் தாக்குதல் தொடர்பாக விடு தலைப் புலிகளின் தரப்பிலிருந்து எதுவித தகவலும் வெளியாகவில்லை

No comments: