இலங்கையின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் உதவும்.
நிதியமைச்சர் ப.சிதம்பரம்
இலங்கையின் இறைமை ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றுக்கு இந்தியா எப்போதும் அர்பணிப்புடன் உதவும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் .
இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் இரண்டாவது வருட நினைவுதின வைபவம் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுப்பேருரையாற்றிய இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கூறியதாவது;
"கடந்த காலங்களில் இந்திய அரசு மத்தியஸ்தம் வகித்தபோது தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை இந்தியா முன்வைத்தது. அனைவராலும் அன்றைய காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தியாவின் அந்த நிலைப்பாட்டில் தற்போதும் எந்தவொரு மாற்றமுமில்லை.
இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனநெருக்கடிக்கு இராணுவ வழியல்லாத அரசியல் தீர்வொன்றே அவசியம் என்பதை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்துதிவருகின்றது.
இனப் பாரபட்சம், கலாசார, மொழி வேற்றுமைகளை களைந்தெறிந்து நேர்மையான தீர்வொன்றை காணவேண்டுமென்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாகும்.
சமாதான முயற்சியூடான அரசியல் தீர்வே இன்றைய அரசியல் தேவையாகும். இந்தத் தீர்வு அரசியல் அதிகாரத்தை கொண்டதாக இருக்க வேண்டும்.
இலங்கையின் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு நிலையான உறுதிப் பாடொன்று அவசியமாகும். இதேநேரம், தற்போது இலங்கையில் தொடரும் அனைத்து வன்முறைகளும் கண்டிக்கத்தக்கதொரு விடயமாகும்.
வன்முறைகளூடாக எவரும் வெற்றிகளைப் பெற்றுவிட முடியாது. பேச்சுவார்த்தைகள் ஊடாகவே சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப முடியும்.
காலத்திற்கு காலம் இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்தையடுத்து இறுக்கமான போக்கொன்றை கடைப்பிடித்துள்ளபோதும் சமாதான முயற்சிகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கி வருகின்றோம்.
அதேநேரம், இந்தப் பிராந்தியத்தின் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியா கரிசனையுடன் செயற்படுவதுடன் நேர்மையான தீர்வுக்காக சகல தரப்புக்களையும் வலியுறுத்தி வருகின்றது.
வட அயர்லாந்தில் இடம்பெற்ற வன்முறைகள் சமாதானத் தீர்வின் மூலமே தீர்க்கப்பட்டு அமைதியான வழியில் தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவே இலங்கைக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment