Saturday, 10 November 2007

விடுதலைப் போரை நசுக்க அமெரிக்கா இராணுவ உதவி

புலிகளின் ஆயுதக் கடத்தலைத்தடுக்க நவீன கடற் கண்காணிப்புத் தளபாடம்
திருமலையில்வைத்து அமெரிக்கத்தூதுவர் கையளிப்பு- யாழ் உதயன்

விடுதலைப்புலிகளின் ஆயுதக் கடத்தலைத் தடுப்பதற்காக நவீன ராடர் வசதிகொண்ட கடற் கண்காணிப்புத் தளபாடங்களையும் திடீரென மிதக்கும் கண்காணிப்புப் படகுகளையும் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துக்குவழங்கியுள்ளது.இந்த ஆயுதத்தளபாடங்களை கையளிக் கும் வைபவம் நேற்று திரு கோணமலை கடற்படைத் தளத்தில் இடம் பெற்றது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றெபேட் ஓ பிளாக் அவற்றை கடற்படைத்தளபதி வைஸ்அட்மிரல் வசந்த கரணகொடவிடம் கையளித்தார்.கடற்படையின் ரோந்துக் கண்காணிப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா இந்த உபகரணங்களை வழங்கியுள்ளது.அமெரிக்காவின் தேசியபாதுகாப்புச் சட்டத்தின் (1206இன்) கீழேயே இலங்கைக்கு இந்த நவீன இராணுவத் தளபாடங்கள் வழங்கப்படுகின்றன. பயங்கர வாதத்தைத் தடுப்பதற்கான இராணுவ உபகரணங்களையும் மற்றும்பயிற்சிகளையும் நட்புநாடுகளுக்கு வழங்குவதற்கு இந்தச்சட்டம் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரம் வழங்குகிறது.அமெரிக்கா வழங்கும் இந்த கடற்கண்காணிப்பு இராணுவஉபகரணங்கள் அமெரிக்கா வினால்1997ஆம் ஆண்டில் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்யப் பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் கண்டறிந்து இடை மறிப்பதற்கும் பெரிதும் உதவும் என்று தூதுவர் அங்குஉரையாற்றிய போதுதெரிவித்தார். இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை முழுமையாகமதிக்க வேண்டியது முக்கியம். இலங்கைஇனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கேட்டுக் கொண்டார்.

தமிழ்ச்செல்வனின் படுகொலை போர்நிறுத்த மீறல்
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துலகின் உதவியுடன் நடவடிக்கை நோர்வேயிடம் புலிகள் வலியுறுத்து

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலை தொடர்பாக, அனைத்துலக நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நோர்வே நடடிக்கை எடுக்கவேண்டும். போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரூடாக தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்ச்செல்வனின் படுகொலையின் பின்னர் முதல் தடவையாக நேற்றுக் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜோன் சொல்பேர்க் ஊடாக நோர்வேக்கு இந்தச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.தமிழீழ அரசியல் துறைப் பொறுப் பாளர் பா.நடேசனை இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர் லார்ஸ் ஜோன் செல்பேர்க் நேற்று வியாழக் கிழமை கிளிநொச்சியில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் காலை 9 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை நடைபெற்றது. போர்நிறுத்தக் கண்காணிப்பு குழுத்தலைவருடனான சந்திப்பின் பின்னர் இச்சந்திப்பு தொடர்பாக அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கூறியதாவது@பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மீது சிறீலங்கா வான்படை குண்டுவீசிப் படுகொலை செய்தமை குறித்த எமது கண்டனத்தைத் தெரிவிப்பதற்காக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுத்தலை வரை வன்னிக்கு அழைத்திருந்தோம் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் போர்நிறுத்த ஒப்பந்த மீறல் என்பதை அவரிடம் வலியுறுத்தி இருக்கின்றோம்.சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கிச் செயற்பட்ட, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உழைத்த அரசியல்துறைப் பொறுப்பாளர் மீது நடத்தப்பட்ட இத் தாக்குதலை இச்சந்திப்பில் வன்மையாகக் கண்டித் தோம். அத்துடன் எமது இக் கண்டனத்தை கண்காணிப்புகுழு தலைவர் ஊடாக நோர்வே அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம். சமாதானப் பேச்சு தயாரிப்பு பணி நடக்கும் இடத்திலேயே கொலைபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்பதையும் அவர் படுகொலை செய்யபட்ட இடத்தின் முக்கியத்துவம் குறித்தும் கண்காணிப்புக் குழுத் தலைவருக்கு தெரியப்படுத்தினோம். சமாதானப் பேச்சுக்கான தயாரிப்பு வேலை கள் நடைபெறும் பகுதியில் வைத்தே பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.எனவே பிரிகேடியர் சு.ப.தமிழ்ச் செல்வன் படுகொலைக்கு எதிராக நோர்வே உடனடியாக அனைத்துலகின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதைகண்காணிப்புக்குழுத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம்.சமாதானப் பேச்சுவார்த்தைக் குழு வுக்கு பொறுப்பாக இருந்த ஒருவரை படுகொலை செய்ததன் மூலம் பேச்சுவார்தையின் மூலம் இனப் பிரச்சினைக்கான தீர்வை ஒரு போதும் காணமுடியாது. படைத்துறை அழுத்தங் களின் ஊடாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து, படைத்துறை வல்லாதிக்க நிலையில் இருந்து கொண்டும் எந்த ஒரு இன பிரச்சினையையும் தீர்க்க முடியாது. அப்படித் தீர்த்ததாக வரலாறும் இல்லை.பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்புத் தொடர்பாக தமிழகத்தில் மக்கள் பல்வேறு வடிவங்களில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள மத்தி அரசும் இதனை உணர்ந்துகொள்ளும் என்று நினைக்கின்றேன் என்றார்.இச் சந்திப்பில் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவனும், படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையனும் கலந்துகொண்டார்.

மௌனம் காக்கும் புலிகளின் குற்றச்சாட்டுக்கு நோர்வே மறுப்பு வீரகேசரி நாளேடு

தமிழ்ச்செல்வனின் மறைவு குறித்து நோர்வே மௌனம் காப்பதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள கருத்தை கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மறுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியற் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலை குறித்து ஒஸ்லோவில் விஷேட சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் வெளியிட்ட கருத்தே நோர்வே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தியாகுமென தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சமாதான செயற்பாட்டாளரான சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலை குறித்து சமாதான அனுசரணையாளரான நோர்வே மௌனம் காப்பது குறித்து தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் கவலையடைந்துள்ளதாக புலிகளின் புதிய அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நேற்று முன்தினம் இடம்பெற்ற போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினருடனான சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பில் கேசரிக்கு கருத்து தெரிவித்த நோர்வே தூதரக பேச்சாளர் எரிக் நூண்ஸ்பேர்க், தமிழ்ச்செல்வனின் படுகொலை குறித்து நோர்வே அரசாங்கம் மௌனம் காக்கவில்லை.
கடந்த இரண்டாம் திகதி ஒஸ்லோவில் என்.ரி.பி. செய்தி முகவர் ஸ்தாபனத்துக்கு கருத்து தெரிவித்த எரிக்சொல்ஹெய்ம் தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
எரிக்சொல்ஹெய்மின் கருத்தே நோர்வே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தியாகும். இந்நிலையில் இவ்விடயம் குறித்து நாம் மேலும் கருத்து கூற முடியாது என்றார்.
தமிழ்ச்செல்வனின் படுகொலை குறித்து கடந்த 2ஆம் திகதி என்.ரி.பி. செய்தி முகவர் ஸ்தாபனத்துக்கு கருத்து தெரிவித்த சொல்ஹெய்ம் , தமிழ்ச்செல்வனின் படுகொலை குறித்து கவலை வெளியிட்டதோடு, அவரின் மரணம் பேரிழப்பாகும் என தெரிவித்திருந்தார்.
சமாதான செயற்பாடுகள் தொடர்பான அனுசரணை பணிகளில் நோர்வேயிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் தமிழ்ச்செல்வன் ஓர் தொடர்பூடகமாக திகழ்ந்ததாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு; அழுத்தம் நமது.

No comments: