Thursday 8 November, 2007

புலிகளின் பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதே ஒரே வழி!

புலிகளின் பயங்கரவாதத்தை பூண்டோடு
அழிப்பதே ஒரே வழி!
பட்ஜெட் பேச்சில் மஹிந்த சூளுரை
நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முற்றாக பூண்டோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என சூளுரைக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதைத்தவிர தமது அரசுக்கு வேறு மார்க்கமில்லை. அதுவே ஒரே வழி என்றும் அவர் கூறினார்.தமது அரசின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார்.நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.40 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது. சரியாக 9.45 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபைக்குள் பிரவேசித்தார். சபையில் பிரதமரின் ஆசனத்தில் அவர் அமர, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபை முதல்வரின் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.பின்னர் சபாநாயகரின் அறிவித்தலைத் தொடர்ந்து ஜனாதிபதி தனது வரவு செலவுத்திட்ட உரையை ஆரம்பித்தார்.கடந்த வருடத்தைப் போன்றே இம்முறையும் தனது வரவு செலவுத்திட்ட ஆலோசனைகளை அவர் பெட்டியில் வைத்து எடுத்துவரவில்லை. கையடக்க மான ஒரு "பைல்' கட்டுக்குள் கொண்டு வந்த வரவு செலவுத்திட்ட ஆலோசனை களை ஜனாதிபதி சமர்ப்பித்தார்.ஜனாதிபதி சபைக்குள் பிர வேசித்தபோது ஆளும்கட்சி உறுப்பினர்கள் எழுந்துநின்று மேசைகளைத் தட்டி ஆரவா ரமாக வரவேற்றனர்.எதிரணியில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பியினர் ஜனாதிபதியின் வருகையைச் சட்டை செய்யாமல் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்ட உரையைப் பகிஷ்கரிக்கும் வகையில் சபைக்கு சமுகமளிக்கவில்லை.புலிகள் அரசியல் தீர்வுக்கு வரத் தயாரில்லைஇந்நிலையில் தனது வரவு செலவுத்திட்ட உரையை நிகழ்த்திய ஜனாதிபதி அதில் கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு:புலிகள் தமது ஆயுதங்களைக் கைவிடவோ அல்லது ஜனநாயக அரசியல் தீர்வுகளுக்கு வரவோ தயாராக இல்லை. பயங்கரவாதப் பிடியில் சிக்கியிருக்கும் மக்களை விடுவித்து அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பேணும் அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமானால் புலிகளின் பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அண்மைக்காலங்களில் நாம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் பயனாக புலிகளிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்கள் , சுடுபடைக்கலங்கள், வெடிபொருட்கள் என்பனவற்றைக் கைப்பற்றி உள்ளோம்.படை வலிமையும் கொடூரப் பயங்கரவாத நடவடிக்கையும் காணப்பட்டபோதும் யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களை நாம் கைப்பற்றியுள்ளோம். கிழக்கு மாகாணத்தை முற்றும் முழுதுமாக அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளோம்.அநுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் பின் நமது படையினர் நடத்திய விவேகமான தாக்குதல்களினாலும் நடவடிக்கைகளினாலும் புலிகள் தமது முகாம்களுக்குள் முடங்கி உள்ளனர்.என்றாலும் கூட அவர்கள் தமது பயங்கரவாதச் செயல்களை நிறுத்தவோ அரசியல் தீர்வு ஒன்றைக் காணவோ தயாராக இல்லை. எனவே அவர்களை முற்றாக அழித்து ஒழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதுவே ஒரே வழி. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் கடந்த 25 வருடங்களாக நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி என்பனவற்றில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. என்றாலும் கூட நமது திறமையான நடவடிக்கைகளினால் கடந்த வருடம் அபிவிருத்தி வளர்ச்சி ஏழு வீதமாக உயர்ந்துள்ளது. இது ஒரு சாதனை.பாதுகாப்பு செலவின அதிகரிப்பை விமர்சிக்க முடியாதுநாட்டினதும் பொதுமக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. இதனால் எமது முப்படைகளினதும் பலத்தை ஸ்திரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த வருடம் ஆறாயிரத்து முந்நூறு கோடி ரூபாவாக இருந்த பாதுகாப்பு செலவினங்கள் இம்முறை 11 ஆயிரத்து 700 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனை எவரும் தவறாக விமர்சிக்க முடியாது.2002 2004 காலப்பகுதியில் பாதுகாப்புச் செலவைக் குறைத்து சமாதான சூழலை ஏற்படுத்தினோம் எனச் சிலர் பெருமை அடித்துக் கொண்டாலும் நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் சிறு அபிவிருத்தியைக் கூட அவர்கள் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.இவ்வளவு நெருக்கடியான நிலையிலும் கூட "கமநெகும', "ஜாதிக சவிய' ஆகிய திட்டங்களின் மூலம் சிறு பயிற்செய்கையாளர்ர்களுக்கும் சமுர்த்தி உதவிகளைப் பெறுவோருக்கும் பல நன்மைகளை ஏற்படுத்தியுள்÷ளாம். நெல் மற்றும் ஏனைய உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலைகளை வழங்கியுள்ளோம்.உலக சந்தையில் எரிபொருள், கோதுமை மா, பால்மா என்பனவற்றின் விலை பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதி செலவினங்களும் அதிகரித்துள்ளன.பாவனையாளர்களின் நலன் கருதி அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிச் சலுகை அளித்துள்ளோம்.ஆழிப்பேரலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் சுற்றுலாத்துறை, மீன்பிடித் தொழில் போன்றவை பாதிக்கப்பட்டபோதிலும் தேயிலை, இறப்பர், கறுவா, நெல், வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம் மற்றும் பாற்பண்ணை உற்பத்திப் பொருட்கள் நல்ல நிலைகளைப் பெற்றுள்ளன.ஆடை உற்பத்தித்துறை மற்றும் இரத்தின்கல் ஆபரண ஏற்றுமதித்துறைகளுக்கு வழங்கிய ஊக்குவிப்புகளினால் இத்துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டுள்ளது.போக்குவரத்து வசதிகளை அபிவிருத்தி செய்யும் வகையில் 2,200 புதிய பஸ்களையும் பெரும் எண்ணிக்கையிலான ரயில் பெட்டிகளையும் இறக்குமதி செய்துள்ளோம். துறைமுகம் மற்றும் உள்நாட்டுச் சர்வதேச வர்த்தகம் ஏழுவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.வெளிநாட்டு முதலீடு அதிகரிப்புஇரண்டு வருடங்களுக்கு முன் ரூ. 250 மில்லியன் டொலராக இருந்த வெளிநாட்டு முதலீடுகள் இப்பொழுது ரூ. 650 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இது எமது அரசின் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் விளைவுதான் என்றும் ஜனாதிபதி கூறினார்.நேற்று நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன்ன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதி மைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, மேல்மாகண ஆளுநர் அலவிமௌலான, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரம, சப்ரகமுவ ஆளுநர் ரெஜிரணதுங்க மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆகியோர் வந்து பார்வையாளர் களரியில் அமர்ந்திருந்தனர்.வழமைபோல் அல்லாது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பார்வையாளர்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினரும் இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.11.20 இற்கு ஜனாதிபதியின் உரை நிறைவு பெற்றதும் அவர் ஹெலிக்கொப்டரில் ஏறிச்சென்று விட்டார். (சி)வரவு - செலவுத் திட்டம் ஒரே பார்வையில்.....மொத்தச் செலவினம் ரூ. 104 ஆயிரத்து 418 கோடிமொத்தச் வருமானம் ரூ. 75 ஆயிரத்து 74 கோடிதுண்டு விழும் தொகை ரூ. 29 ஆயித்து 344 கோடிதுண்டு விழும் தொகையைச் சமாளித்தல்:வெளிநாட்டு நிதியில் ரூ. 13 ஆயிரத்து 864 கோடிஉள்நாட்டு நிதியில் ரூ. 15 ஆயிரத்து 480 கோடி

முகமாலையில் மூன்று மணி நேரம் கடும் மோதல்!
முன்னநகர்வு முறியடிப்பு என புலிகள் தரப்பு அறிவிப்பு 5 கி.மீற்றர் முன்னேறிவிட்டதாக இராணுவம் தெரிவிப்பு நேற்று அதிகாலை 5 மணி தொடக்கம் காலை 8 மணி வரை முகமாலை கிளா லிப் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுஞ்சமர் நடைபெற்றது. இந்த மோதலின்போது தாம் ஐந்து கிலோ மீற்றர் முன்னேறி புலிகளின் முன் னரங்கப் பகுதிகளுக்குள் உட்புகுந்ததாக இராணுவத் தரப்பில் நேற்று நண்பகல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் படையினரை முன்னேற விடாது கடும் தாக்குதல் நடத்தி முன்நகர்வு முயற்சியைத் தாம் முறியடித்து விட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 20 படையினர் பலிநேற்றைய சமரின்போது 20 இராணு வத்தினர் கொல்லப்பட்டதாகவும் 100 பேர் வரை காயமுற்றதாகவும் விடுதலைப் புலி கள் மேலும் தெரிவித்தனர். தமது தரப்பில் ஒருவர் வீரச்சாவடைந் ததாகவும் இராணுவத்தினரிடமிருந்து பெரும் எண்ணிக்கையான போர்க்கலங்கள் கைப் பற்றப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். 52 புலி உறுப்பினர் பலிநேற்றை மோதலில் தமது தரப்பில் 11 இராணுவத்தினர் பலியானதாகவும் 41 பேர் காயமுற்றதாகவும் அதேவேளை விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகளை அழித்தபோது அதில் 52 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் படைத்தரப்பு அறிவித்தது. காயமுற்ற இராணுவத்தினர் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது. நேற்யை மோதல்கள் குறித்து விடு தலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:பாரிய அளவிலான திட்டமிடலுடன் நேற்று அதிகாலை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடனும் பீரங்கி உலங்கு வானூர்த் திகளின் தாக்குதல் ஒத்துழைப்புடனும் படையினர் கிளாலி முதல் முகமாலை வரையான முன்னரங்கப் பகுதியில் பல முனைகளில் இருந்து பாரியளவிலான முன்நகர்வை மேற்கொண்டனர்.இந்நகர்வில் படையினரின் ரி.55 ரக போர்த்தாங்கிகள், கவச ஊர்திகள் ஆகிய வற்றையும் பயன்படுத்தினர். அதிகாலை 5 மணி முதல் படையினர் மேற்கொண்ட இம் முன் நகர்வு காலை 8 மணிவரை நீடித்தது. இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.இத்தாக்குதலையடுத்து படையினர் காலை 8 மணிக்கு பலத்த இழப்புகளுடன் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப் பட்டனர். போர்த்தாங்கி சேதம்பாரிய திட்டமிடலுடன் சிறிலாங்காப் படைக் கொமாண்டோக்கள் இம்முன்நகர் வில் ஈடுபட்டனர். இதில் படைத் தரப்பில் பலத்த இழப்புகள், சேதங்கள் ஏற்பட்டன. படையினரின் ரி55 ரக போர்த் தாங்கி ஒன்று கடுமையாகச் சேதமாக்கப்பட்டுள் ளது. அந்தப் போர்த்தங்கியை படையினர் இழுத்துக்கொண்டு தமது நிலைகளுக்குத் தப்பினர் என்றுள்ளது. படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போர்க்கருவிகளின் பட்டியலையும் விடு தலைப் புலிகள் வெளியிட்டனர்.

No comments: