Saturday 24 November, 2007

இந்தியா வேண்டுவது மிதவாத தமிழர்களை திருப்திப்படுத்தும் திட்டம்

மிதவாதத் தமிழர்களும், இலங்கையின் பிரதான அரசியல் நீரோட்டத்திலிருந்து முற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டு, ஒதுங்கிப் போகும் நிலையைத் தவிர்ப்பதற்காக தீர்வுத் திட்டத்தை உடன் வெளியிட்டு நடை முறைப்படுத்துமாறு இந்தியா இலங்கையைக் கேட்டுக் கொண்டது.

புலிகளுடன் பேச்சு நடத்துமாறு அரசை வற்புறுத்துகிறது இந்தியா
தீர்வு யோசனையை விரைவில் வெளியிடவும் அறிவுறுத்து
* இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக விடுதலைப் புலிகளோடு அமைதிப் பேச்சுகளை நடத்துங்கள்.
* அமைதித் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கல் யோசனையை மேலும் தாமதிக்காமல் உடன் வெளியிட்டு அதை நடைமுறைப்படுத்துங்கள்.

இவ்வாறு இலங்கையை வற்புறுத்தியிருக்கின்றது இந்தியா. இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்பின்போதே இவ்வாறு வலியுறுத்தப்பட் டிருக்கின்றது.உகண்டாவின் கம்பாலாவில் நடைபெறும் பொதுநல அமைப்பு நாடுகளின் தலை வர்கள் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக அங்கு சென்றிருக்கும் இந்திய வெளிவிவ கார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகமவும் நேற்றுமுன்தினம் அங்கு சுமார் நாற்பது நிமிட நேரம் சந்தித்துப் பேசினர்.அப்போதே அமைதி முயற்சிகள் தொடர் பாக விடுதலைப் புலிகளோடு தாமதிக்கா மல் பேச்சுகளை நடத்தும்படியும், தமிழர் களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற் கான யோசனைத் திட்டத்தை விரைந்து வெளியிட்டு அதை நடைமுறைப்படுத்தும்படியும் இலங்கையை இந்தியா வற்புறுத் தியிருக்கின்றது.மிதவாதத் தமிழர்களும், இலங்கையின் பிரதான அரசியல் நீரோட்டத்திலிருந்து முற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டு, ஒதுங் கிப் போகும் நிலையைத் தவிர்ப்பதற்காக தீர்வுத் திட்டத்தை உடன் வெளியிட்டு நடை முறைப்படுத்துமாறு இந்தியா இலங்கையைக் கேட்டுக் கொண்டது.அதேசமயம், இலங்கை அரசு புலிகளு டன் பேசி, நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டுக் குள் தீர்வு ஒன்றைக் காண முயலவேண் டும் என்றும் இந்தச் சந்திப்பின்போது இந் தியா வலியுறுத்தியது எனக் கூறப்படுகின் றது.அதி உச்ச அதிகாரப் பரவலாக்கல்தமிழர்கள் தங்கள் மொழி, கலாசாரம் மற் றும் இனத்துவ அடையாளங்களைப் பேணிப் பாதுகாப்பதை உறுதி செய்யக்கூடிய அதி உச்ச அதிகாரப் பரவலாக்கல் தமிழர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையே இந்தியா எதிர்பார்க்கின்றது என்பது இச்சந்திப் பின்போது இந்தியத் தரப்பால் தெளிவுபடுத்தப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.""அதிகாரப் பகிர்வு உட்பட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பின்போது பேசப்பட்டது'' என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை சிபார்சு செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக் குழு அந்த யோசனையை சிபார்சு செய்வதற்கான இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோடியாக இந்த வருட முடிவுக்கு முன்னர் அது வெளியிடப்படும் என்றும் இந்தச் சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார் எனக் கூறப்படுகின்றது.""இலங்கை அரசு தனது வரவு செலவுத் திட்டத்தை ஜே.வி.பியின் ஆதரவு இன்றியே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கின்றது. அதேபோல, அதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கும் ஜே.வி.பியின் சம்மதத்தைப் பார்த்துக் கொண்டிராமல் அதனை முன்னெடுக்க அரசு முன்வரவேண்டும்'' என இந்தியா இந்தச் சந்திப்பில் இலங்கையை வற்புறுத்திக்கேட்டுக் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டது

No comments: