Thursday, 22 November 2007

ஈழச்செய்திகள் 221107

முகமாலை, நாகர்கோவில், கிளாலி மோதலில் படையினர் இருவர் படுகாயம்
வீரகேசரி நாளேடு
முகமாலை, நாகர்கோவில், கிளாலி மற்றும் வவுனியா முன்னரங்கப் பகுதிகளில் நேற்றும் நேற்றுமுன்தினமும் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இம்மேதால் சம்பவங்களில் புலிகள் தரப்பில் 13 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் பதுங்குகுழிகள் மூன்று சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
கிளாலி முன்னரங்கப் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் மூன்று பதுங்குகுழிகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதுடன் ஐந்து புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர்.
புலிகளின் முன்னரங்கப் பகுதிக்குள் முன்னேறி படையினர் தாக்குதல் நடத்தியதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்ததாக படையித்தரப்பினர் கூறினர்.
இதேபோன்று, முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னரங்கப் பகுதிகளில் நேற்றுமுன்தினம் 7.10 மணியளவிலும் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
புலிகள் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் புலிகள் தாக்குதல் நடத்தியதையடுத்தே, இருதரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்ததாகவும் படைத்தரப்பிர் தெரிவித்தனர்.

ஈழத்தமிழரின் தாயக கனவுக்கு தமிழகமும் இந்தியாவும் துணையாக இருக்க வேண்டும்
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் வீரகேசரி நாளேடு

எமது மக்களின் நீண்டகால விடுதலைப் போரின் நியாயங்களைப் புரிந்துகொண்டு ஈழ மக்களின தாயகக்கனவுக்குத் துணையாக தமிழகமும் இந்தியாவும் இருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழகத்திலிருந்து வெளிவரும் வாரமிருமுறை இதழான ஜுனியர் விகடனுக்கு மின்னஞ்சல்மூலம் பா. நடேசன் அளித்த பேட்டியின் விபரம் வருமாறு,

கேள்வி: தமிழ்ச்செல்வனின் படுகொலை புலிகள் அமைப்பிலும் ஈழ மக்களிடமும் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
பதில்: தமிழ்ச்செல்வன் எமது போராளி அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஒரு படைத் தளபதியாக மட்டுமின்றி அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் இராஜதந்திரியாகவும் செயல்பட்டார். அவரது இழப்பு எமக்குப் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவர் மக்களை எவ்வளவு நேசித்தார் என்பதும் மக்கள் அவரை எவ்வளவு நேசித்தார்கள் என்பதும் உலகெங்கும் அவருக்காக நடந்த அஞ்சலிக் கூட்டங்களில் வெளிப்பட்டது. ஈழத்தில் அவரது இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டபோது மேலே இலங்கை இராணுவ விமானங்கள் பறந்து அச்சுறுத்தின. ஆனால் அதற்கு அஞ்சாமல் தமிழீழ மக்கள் அந்தத் தளபதிக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள். தமிழ்ச்செல்வனின் கொலை, எங்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.
கேள்வி: அநுராதபுரம் இராணுவத் தளம் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட எழுநூறு கோடி ரூபாய் இழப்பால் விளைந்த கோபம்தான் தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு காரணம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில்: இலங்கை அரசு தொடர்ந்து நடத்திவரும் தமிழின அழிப்பின் ஒரு பகுதியே தமிழ்ச்செல்வன் கொலை. அநுராதபுரம் விமானப் படைத்தளத் தாக்குதல் நடத்தப்படாவிட்டாலும் இப்படிப்பட்ட கொலைகளை சிங்கள அரசு செய்யும். அதன் இனவெறி வரலாற்றில் இதற்கு பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
கேள்வி: நோர்வே தூதுவரை அழைத்து தமிழ்ச்செல்வன் கொலைக்காகப் புலிகளின் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள். சர்வதேச சமூகம் இந்தக் கொலையை எப்படி எடுத்துக் கொள்கிறது?
பதில்:போர் நிறுத்தக் கண்காணிப்புபக் குழுத் தலைவரையே அழைத்து இலங்கை அரசின் இந்தப் படுகொலை குறித்து எங்கள் விளக்கத்தையும் கண்டனத்தையும் நோர்வே அரசுக்குத் öரிவிக்க வேண்டும் என்றும் இந்தப் படுகொலை என்னவிதமான நடவடிக்கையை இலங்கை அரசின் மீது எடுக்கப் போகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம் என்றும் நாங்கள் கேட்டிருக்கிறோம். பல நாடுகளுக்கும் இலங்கை அரசின் தமிழர் விரோத பாசிசப் போக்கு இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
பிரிட்டன் பாராளுமன்றத்தில் தமிழர் விவகாரங்களுக்கான பல கட்சிக் குழுவினரும் இந்தக் கொலையைப் பகிரங்கமாக கண்டித்திருக்கிறார்கள். மற்ற பல நாடுகளும் கண்டிக்கும் என நம்புகிறேன்.
கேள்வி: தமிழகத்தில் உங்களை ஆதரிப்பவர்கள் பல குழுக்களாக சிதைந்து கிடக்கிறார்களே?
பதில்: தமிழகத்தில் உள்ள பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் எங்களை ஆதரிக்கின்றன. எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் ஆறரை கோடி மக்களும் எமது ஈழ விடுதலைப் போரின்பால் அக்கறையும் ஆதரவும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். எவ்வளவுதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஈழத் தமிழர் போராட்டம் என வரும்போது உணர்வால் ஒன்றுபட்டே நிற்கிறார்கள்.
கேள்வி: தமிழ்ச்செல்வனுக்கு தமிழக முதல்வர் இரங்கல் கவிதை எழுதினார். அந்தக் கவிதை ஈழத் தமிழரிடம் வரவேற்பையும் தமிழகத்தில் சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறதே?
பதில்: தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் கவிதை வரிகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருந்தது. எங்கள் காயங்களுக்கு களிம்பு தடவுவதாக இருந்த அந்தக் கவிதைக்கு ஈழத் தமிழர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள். மற்றபடி இந்த இரங்கல் கவிதையை முன்வைத்து எழுப்பப்படும் சர்ச்சைகள் பற்றி நான் கூற எதுவும் இல்லை.
கேள்வி: தமிழகத்திடமும் இந்தியாவிடமும் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: எமது மக்களின் நீண்டகால விடுதலை போரின் நியாயங்களைப் புரிந்துகொண்டு ஈழ மக்களின் தாயகக் கனவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. கேள்வி: புலித் தலைவர்களின் வசிப்பிடங்கள் எங்களுக்குத் தெரியும்... அவர்களை ஒவ்வொருவராகக் கொல்வோம் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறதே?
பதில்: எமது முப்பதாண்டு கால ஈழ விடுதலைப் போரில் இவ்வாறான அறிவிப்புக்களை பலமுறை செய்திருக்கிறார்கள். எங்கள் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரையும் கொல்லும் வல்லமை தனக்கிருப்பதாக இலங்கை அரசு சொல்வது பகல் கனவுதான்.
கேள்வி: நான்கு வருட சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் இரு தரப்பிலும் ஏராளமான உளவாளிகள் ஊடுருவி இருப்பதாகவும் அப்படி ஊடுருவிய உளவாளிதான் தமிழ்ச்செல்வனின் துல்லியமான கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறதே?
பதில்: தமிழ்ச்செல்வனின் படுகொலை அப்படி நடந்ததாக நாங்கள் கருதவில்லை.
கேள்வி: அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு பிறகு சர்வதேச அளவில் உங்கள் அமைப்புக்காகப் பணியாற்ற சரியான ஒரு பிரதிநிதி இல்லை என்று சொல்லப்படுகிறதே?
பதில்: எமது தேசியத் தலைவர் ஆழமான திட்டங்கள், சிந்தனைகளின் அடிப்படையிலேயே பல்வேறு துறைகளிலும் பொறுப்பாளர்களை வளர்த்து வருகிறார். அவ்வாறான ஒரு கட்டமைப்பின் மூலமே எமது விடுதலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். போராட்டம் என்றால் இழப்புகளையும் எதிர்பார்த்துத்தான் நாங்கள் இருக்கிறோம். எத்தனை இழப்புகள், இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை நிரப்பத் தயார் நிலையில்தான் எங்கள் அமைப்பு எங்கள் தேசிய நாயகனின் தலைமையில் அணிவகுத்து நிற்கிறது. துயர் சூழ்ந்த வேளைகளில் அதை வெற்றியின் படிக்கட்டுகளாக நாங்கள் மாற்றிக் காட்டியிருக்கிறோம். இனியும் அது தொடரும்.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கொள்கையை அமெரிக்கா மீள்பரிசீலனை செய்வது அவசியம் [22 - November - 2007]

ஈழத் தமிழர்கள் தொடர்பான கொள்கையை அமெரிக்க அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோரி அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை அமெரிக்க ஜானதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில்,
புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் ஒன்றியமான சுவிஸ் தமிழர் பேரவை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துகளை அமெரிக்கா முடக்கிய செய்தியைக் கேட்டும் இலங்கைத் தமிழ் மக்களின் காவலர்களான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிடுவதற்காக இலங்கை கடற்படைக்கு `ராடர்' தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்புக் கருவிகளையும் நவீன ரக படகுகளையும் வழங்கியதான செய்தியைக் கேட்டும் பேரதிர்ச்சி கொண்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும் மனித உரிமைகளைத் தடுப்பதற்கான வழிவகைகளை கண்டறியும் நோக்குடன் ஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் திருமதி லூயிஸ் ஆர்பர் அம்மையார் மேற்கொண்ட விஜயம், விடுதலைப்புலிகளின் அரசியல் துறைத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மரணம் என்பவை நிகழ்ந்து அதிக நாட்கள் செல்லும் முன்னரேயே இந்தச் செய்திகள் வெளிவந்துள்ளன.
இலங்கைத் தீவிலே வாழ்கின்ற தமிழ் மக்கள் உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டிய பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதைச் சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளது. தமிழ் மக்கள் அனுபவித்துவரும் அனேக துன்பங்களுக்கு இலங்கை அரசே காரணம் எனவும் உலகம் புரிந்திருக்கின்றது. இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே 2002 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கையை சர்வதேச சமூகம் பரிந்துரைத்தது.
இந்தப் போர்நிறுத்த உடன்படிக்கையானது சிங்கள மக்களை இலங்கை அரசாங்கமும் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளும் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தான காலம் முதல் இன்றைய நாள்வரையான காலப்பகுதியில் பல நாடுகளின் செயற்பாடுகள் இதை எமக்குத் தெளிவாகப் புரியவைக்கின்றது.
ஒரு மக்கள் கூட்டத்துக்கு துன்ப துயரம் இருக்கின்றது என்பதை ஒருவர் ஏற்றுக் கொள்வாரேயானால் பாதிக்கப்படுகின்ற மக்கள் அதற்கு எதிராக போராடுவதற்கான உரிமையும் அவர்களுக்கு உள்ளது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்காகப் போராடுவதற்கு விடு தலைப் புலிகளைத் தவிர வேறு எவருமே இல்லை. சிங்களப் பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விடுகின்றபோது விடுதலைப் புலிகள் மாத்திரமே அவர்களைக் காத்து வருகின்றார்கள்.
பிரித்தானியாவின் `கார்டியன்' பத்திரிகைக்கு அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என எதிர்பார்க்கப்படுகின்ற கிலாரி கிளின்டன் வழங்கிய செவ்வியில் பின்வருமாறு கூறியிருந்தார்.
`...அடிப்படையில் அனைத்து பயங்கரவாதிகளையும் ஒன்றாகக் கருதிவிடமுடியாது... ஸ்ரீலங்காவில் போராடிவரும் தமிழ்ப்புலிகளோ அன்றி ஸ்பெயினில் உள்ள பாஸ்க் பிரிவினைவாதிகளோ அல்லது அல்-அன்பார் மாகாணத்தில் உள்ள தீவிரவாதிகளோ தந்திரோபாயத்தில் மாத்திரமே ஒன்றாக வைத்துப் பார்க்கப்படக் கூடியவர்கள்'
திருமதி கிலாரி கிளின்டனின் அவதானிப்பு யதார்த்தமானது. சர்வதேச சமூகத்தின் பெரும்பகுதியும் இதே நோக்கையே கொண்டுள்ளது. இருந்த போதிலும் அமெரிக்க அரசாங்கம் வேறுவிதமான சிந்தனைகளைக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. இதற்கான காரணத்தையும் எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.
சு.ப. தமிழ்ச்செல்வன் தமிழ் மக்களின் சமாதானம் தொடர்பான வாஞ்சையின் அடையாளமாகக் கருதப்பட்டவர். திட்டமிட்ட முறையில் அவரை அழித்ததன் மூலம் இந்த முரண்பாட்டுக்கு எவ்வகையிலான தீர்வைக் காணப் போகின்றோம் என்பதைச் சிங்கள அரசாங்கம் நன்கு தெளிவுபடுத்தியிருக்கின்றது.
பேச்சுகளுக்குத் தயார் என்று கூறிக்கொண்டே சமாதானப் பேச்சாளரைச் சிங்கள அரசாங்கம் அழிப்பதென்பது பயங்கரவாதம் இல்லையா? இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் இல்லையா? இது உண்மையிலே குற்றமாயின் ஸ்ரீலங்கா அரசாங்கத்தைத் தண்டிக்கப்போவது யார்? அது எவ்வாறு தண்டிக்கப்படப்போகின்றது?
மறுபுறம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு சலிப்பில்லாமல் சேவையாற்றிவரும் ஒரேயொரு அரசசார்பற்ற நிறுவனமான தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துகளை அமெரிக்க திறைசேரி முடக்கியுள்ளது. பொருத்தமற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை சூழலை மிகவும் மோசமாக்கியுள்ளது.
2004 டிசம்பர் ஆழிப்பேரலை அனர்த்த காலகட்டத்திலே தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றிய பணி மிகவும் பெறுமதியானதும், பாராட்டத்தக்கது என்பதை யாவரும் அறிவர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களில் பணியாற்றுவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இன்றைய சூழலில் கூட அகதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உட்பட பல முக்கியமான பணிகளைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகமே மேற்கொண்டு வருகின்றது.
அமெரிக்க திறைசேரி திணைக்களம் `பயங்கரவாதக் குழுக்களையும் அவற்றுடன் தொடர்புடைய வலைபின்னல்களையும் பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்துதல்' என்ற வெற்று வார்த்தையினூடாக தனது செய்கையை நியாயப்படுத்தியுள்ள அதேவேளை,தமிழர்களுக்கு இத்தகைய தொண்டு நிறுவனமொன்றின் தேவை அத்தியாவசியமாக உள்ளது என்பதைக் கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளது. ஒரு அமைப்பைத் தண்டிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் பாதிக்கப்படக் கூடாது. ஏனெனில், அமெரிக்கா அத்தகையதொரு முடிவை அறிவிக்கும்போது ஏனைய நாடுகளும் அதைத் தொடருமோ என்ற அச்சம் எமக்கு ஏற்படுகின்றது.
மறுபுறம் இந்த முடிவு இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத தமிழர் விரோதப் போக்கை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த மோதல் ஆரம்பித்த நாள் முதலாக தமிழ் மக்களைத் துன்புறுத்துவதை விடுதலைப் புலிகளுடனான போர்த் தந்திரமாக இலங்கை அரசாங்கம் பாவித்து வருவதை நாம் கண்டுள்ளோம்.
சொந்த வாழ்விடங்களை விட்டு மக்களை பலாத்காரமாக வெளியேற்றுதல், பொருளாதாரத் தடை, பொது மக்கள் வாழும் பிரதேசங்களில் ஷெல் மற்றும் விமானக் குண்டு வீச்சுக்களை நடத்துதல், கடத்தல்கள்,காணமற்போகச் செய்தல் என்பவை அரசாங்கத்தின் கொடிய யுத்தத்தின் தந்திரோபாயங்களாக உள்ளன.
மோதல்களுக்கு சமாதானத் தீர்வைக் காணுமாறு போதிக்கின்ற அமெரிக்க அர சாங்கம்தான் கூறுவதற்கு முரணாக மோதலின் ஒரு தரப்பான இலங்கை அரசாங்கத்தைப் பலப்படுத்துவதையிட்டு நாம் ஆச்சர்யமடைகின்றோம். இதனை ஒரு நியாயமற்ற பக்கச் சார்பான நடவடிக்கையாகவே நாம் காண்கின்றோம்.
அமெரிக்க செனட் சபை, சர்வதேச மனிதாபிமான முகவர் அமைப்புகள், பிரபல ஊடகங்கள் ஆகியவையும் இதே கருத்தையே கொண்டுள்ளன.
அமெரிக்க பத்திரிகையான `பாஸ்டன் குளோப்' தனது அண்மைய ஆசிரியர் தலையங்கத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் மையம் எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டியிருந்ததுடன் பின்வருமாறு விதந்துரைத்திருந்தது.
`ஸ்ரீலங்காவிற்கான ஆயுத விற்பனையானது மனித உரிமை நிலைவரத்தில் அரசாங்கம் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதிலும் மோதலின்போது சிவிலியன்கள் பாதிக்கப்படுவதை கண்காணிக்கும் நோக்குடன் ஐ.நா. கண்காணிப்புக் குழு அமைக்கப்படுவதிலும் தங்கியிருக்க வேண்டும். அத்துடன், சமாதானப் பேச்சுகளின் ஊடாக தீர்வைக் காணுமாறு ஸ்ரீலங்காவைத் தூண்டுகின்ற அமெரிக்கா ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு ஆயுத தளபாடங்களை அன்பளிப்புச் செய்வதென்பது அமெரிக்கக் கொள்கையில் முரண்பாடு உள்ளதென்பதைத் தெளிவாக்குகின்றது'
ஆகவே, உங்கள் கொள்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு,விடயங்களை பூகோள அரசியல் கண்ணோட்டத்தில் நோக்காது மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் நோக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம். சுதந்திரம் மற்றும் தேசியம் என்பவற்றின் பெறுமதி பற்றி அமெரிக்க மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம்.
உலகின் மூலையில் உள்ள ஒரு சிறு எண்ணிக்கையிலான தமிழ் மக்களாகிய நாமும் சுதந்திரத்துக்காகவே போராடிக் கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு உதவ முன்வராவிட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து எங்கள் போராட்டத்துக்குத் தடையாக இல்லாதிருங்கள் என உங்களை அன்பாகக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted on : Wed Nov 21 9:20:00 2007 .
பிரபா பரிசீலிக்கத் தக்க தீர்வை இனிமேலாவது முன் வையுங்கள் நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து

"புலிகளின் தலைவர் பிரபாகரனால் பரிசீலிக்கப்படும் வகையில் தமிழ் மக் களைத் திருப்திப்படுத்தும் வகையில் இனி யாவது நல்லதொரு அரசியல் தீர்வு யோச னையை மஹிந்தவின் அரசு முன்வைக்க வேண்டும்.""மாறாகத் தொடர்ந்தும் யுத்தம் மூலம் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நடவடிக் கையை இந்த அரசு மேற்கொண்டால் அதற்கு எதிராக தமிழர்களின் சுயநிர்ணய உரி மையை அங்கீகரிக்க வைப்பதற்காக தமி ழர் போராட்டம் தொடரும்.''இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடா ளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட் டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகை யில் கூறியவை வருமாறு:எமது மக்கள் இராணுவ நடவடிக்கை கார ணமாக அழிந்துள்ளனர்; இடம்பெயர்ந்துள்ள னர்; தொழில்களை இழந்துள்ளனர்; இவர்களுக்கு நிவாரணமாக மிகச் சொற்ப தொகையான 400 கோடி ரூபா மாத்திரம்தான் ஒதுக்கப்பட் டுள்ளது.இந்தத் தொகை போதாது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் எமது மக்கள் முற்றா கப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.54 வீதமான தமிழர் கள் வடக்கு கிழக் கிற்கு வெளியே வாழ்க் கின்றனர் என்று ஜனா திபதி மஹிந்த நியூ யோர்க்கில் வைத்து அண்மையில் கூறினார்.தீர்வை முன் வைக்காமல் விலகி நிற்க முற்படுகிறார்இதன் மூலம் பெரும் பாலான தமிழர்கள் வடக்கு கிழக்கில் இல்லையென்றும் பெரும் பாலானவர்கள் சிங்களவர்களுடனேயே வாழ் கின்றனர் என்றும் காட்டி, தீர்வை முன் வைக் காமல் விலகி நிற்கமுற்படுகிறார்.தமிழ் மக்கள் ஏற்கக்கூடிய வகையில் ஜனா திபதி தீர்வை முன்வைக்கத் தயாரில்லை என் பதை எம்மால் மிகவும் தெளிவாக உணர முடிகிறது.தீர்வை முன்வைப்பதற்கான பொது இணக்கப்பாட்டைக் காண்பதற்காக ஐ.தே. கட்சியும் ஸ்ரீ.ல.சு.கட்சியும் இணைந்து செயற்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதி லும் அம் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.இரு கட்சிகளுக்குமிடையிலான ஒப்பந்தம் முறியடிக்கப்பட்டமையானது தேசிய பிரச் சினைக்கு நல்லதொரு தீர்வை முன்வைக் கும் வாய்ப்பை இல்லாது செய்துவிட்டது.குறைந்த பட்சம் தமிழ் மக்களால் முன் வைக்கப்பட்ட இடைக்கால அதிகாரசபை யோசனையைக் கூட சிங்கள அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே ஆயு தப் போராட்டம் இன்னும் தொடர்கிறது.தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை அரசிடம் இருந்து இன்னும் சரி யான பரிகாரம் வரவில்லை இதனாலேயே சண்டை தொடர்கிறது.உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குகஇதை இன்னும் நீடிக்கவிடாது எமது உள் ளக சுயநிர்ணய உரிமையை அரசு உடனே அங்கீகரிக்க வேண்டும்.தேசியப் பிரச்சினைக்கு இராணுவத் தீர் வொன்றைக் காணமுடியும் என்று சிலர் நினைக் கின்றனர். அரசும் அதையே செய்கிறது இதற்கான சரியான காரணத்தை அரசு காட்ட முடியாது.இடைக்கால நிர்வாக ஏற்பாட்டை ஏற் றிருந்தால் அல்லது பொதுக்கட்டமைப்பை ஏற்றிருந்தால் இப்படியானதொரு யுத்தம் தொடர்ந்திருக்காது. கோடிக்கணக்கான ரூபா பணத்தை யுத்தத்திற்கு ஒதுக்க வேண்டி யும் ஏற்பட்டிருக்காது.உலகிலேயே இலங்கையில்தான் இராணுவச் செலவீன வீதம் அதிகம். ஏன் இந்த அரசு இப்படிச் செய்கிறது?அரசு ஒருபோதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கமுடியாது. அது தமிழர்களின் அடிப்படை உரிமை. அதை அரசால் மீறமுடியாது.அரசு தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்காகவே இந்த யுத்த ஏற்பாடுகளைச் செய்கிறது. இது நாட்டின் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல. இப்படிப் போனால் நாடு அழிவை நோக்கித்தான் செல்லும்.புலிகளின் தலைவர் பிரபாகரன் பரிசீலிக்கும் வகையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் காத்திரமான யோசனை எதனையும் அரசு இதுவரை முன்வைக்கவில்லை.ஜனநாயகத்தை முற்றாகக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில்தான் அரசு செயற்படுகிறது. மனிதாபிமான அமைப்புகளையும் அழித்தொழிக்க அது முற்படுகிறது.தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் என்றும் ஓய்ந்துவிடாது. தமிழ், சிங்கள இளைஞர்கள் அநியாயமாகக் கொல்லப்படுவது ஏற்புடையதல்ல.இனிமேலும் இந்த நிலையை நீடிக்கவிடாது தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பிரபாகரன் பரிசீலிக்கும் வகையில் இந்த அரசு தீர்வு யோசனையை முன்வைக்க வேண்டும் என்றார்.

பாதுகாப்பு வலயத்தினுள் `லீடர்' அலுவலகம் தீ வைக்கப்பட்டதற்கு அரசே பொறுப்பாகும் (22 - November - 2007)
*எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு -எம்.ஏ.எம்.நிலாம்-

சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்திற்கு தீவைத்த சம்பவத்துக்கு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சாதாரணமானவர்களால் இது முடியாத காரியம். இதற்கு பொறுப்புக் கூற வேண்டியது அரசாங்கமேயெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை மாலை எதிர்க் கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற விஷேட ஊடக வியலாளர் மாநாட்டின்போதே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்;
"இந்த ஆட்சிக் காலத்திலேயே கூடுதலான ஊடகத்துறை சார்ந்தோர் கொல்லப்பட்டும் தாக்கப்பட்டுமுள்ளனர்.
அரசினதும் பாதுகாப்பு அமைச்சினதும் ஒத்துழைப்பின்றி எவராலும் இந்தப் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய முடியாது. ராஜபக்‌ஷ சகோதரர்களை கூடுதலாக விமர்சித்தது `சண்டே லீடர்' பத்திரிகைதான். இதற்கு முன்னர் பல தடவைகள் இப்பத்திரிகைக்கு சீல் வைக்கமுற்பட்டதை இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
உலகில் கூடுதலாக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நாடு இலங்கை தான். அத்துடன், அண்மைக்காலமாக ஊடகங்கள் மீது கூடுதல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பெறுமதிமிக்க விமானங்கள் இரத்மலானை விமான நிலையத்திலேயே உள்ளன. இப்பகுதி கடும் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆயுதக் குழுவொன்று எப்படி இங்கு நுழைந்தது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
இன்று நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தக நடவடிக்கைகள் அனைத்துமே சீர்குலைந்து போயுள்ளன.
ஊடகங்கள் மீது தடை, ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படல், ஊடக நிறுவனங்களுக்கு தீவைப்பு போன்ற விதத்தில் ஊடகங்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளை அரசு முயற்சிக்கின்றது.
ஊடக சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக எதிர்க்கின்றது. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க நாம் இறுதிவரை போராடுவோம்.
தங்களின் ஊழல், மோசடிகளை மூடிமறைப்பதற்கே அரசு ஊடகங்களை அச்சுறுத்துகின்றது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நாம் ஒன்றுபட வேண்டும். பேசிக்கொண்டிருக்க இனிமேலும் முடியாது. வீதியிலிறங்கிப் போராடத் தயாராக வேண்டும்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துச் சக்திகளும் ஓரணியில் திரள வேண்டு"மெனவும் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகக்கூடாது ஜப்பான்
விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசு எத்தனிக்கக்கூடாது என்று ஜப்பானிய அரசாங்கம் வலியுறுத்தியுள் ளது.ஜப்பானிய அரசாங்கம், ராஜதந்திர வட் டாரங்கள் ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இவ்வாறு வலியுறுத்தப் பட் டிருக்கிறது.இதேவேளை விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்வது சமா தானப் பேச்சுக்களுக்கு இடையூறாக அமையும் என அமெரிக்காவும் இந்தியா வும் கருத்து வெளியிட்டுள்ளன என இணைய தளச் செய்திகள் தெரிவித்தன.

ஈழத்தமிழ் மக்களினம் தாயகத்தை மீட்க தமிழகமும் இந்தியாவும் துணைதரவேண்டும்

அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் எமது மக்களின் நீண்டகால விடுத லைப் போரின் நியாயங்களைப் புரிந்து கொண்டு ஈழத்தமிழரின் தாயகக் கனவு செயல்வடிவம் பெறுவதற்கு தமிழகமும் இந்தியாவும் துணை நிற்கவேண்டும் என்பதே எங்களின் விரும்பமாகும்.விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் இதழுக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பேட்டியிலேயே அவர் இப் படிக் கூறியுள்ளார்.தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி கள் எங்களை ஆதரிக்கின்றன. எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் ஆறரைக் கோடி மக்களும் எமது ஈழ விடுதலைப் போரின்பால் அக்கறையும் ஆதரவும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தமக்கிடையே எவ்வளவுதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஈழத்தமிழர் போராட்டம் என்று வரும்போது உணர் வால் ஒன்றுபட்டே நிற்பார்கள் அவர்கள். தமிழக முதல்வரின் கவிதை வரிகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த தமிழ் மக்க ளின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. எங்கள் காயங்களுக்கு களிம்பு தடவுவதாக இருந்த அந்தக் கவிதைக்கு ஈழத்தமிழர்கள் நன்றிக்கடன்பட்டவர்கள் என்றார்.

மட்டக்களப்புச் சிறையில் 29 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 29 தமிழ்க் கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட் டத்தை ஆரம்பித்துள்ளனர்.தம்மீதான விசாரணையை துரிதப் படுத்தவேண்டும் அல்லது விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தே அவர்கள் போராட்டத்தை ஆரம் பித்துள்ளனர். சிறைச்சாலை கூரை மேல் அமர்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இக் கைதிகள் 2004 2007ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகின்றது. மூன்று வருடகாலத்துக்கும் அதிகமாக விசாரணை ஏதுமின்றித் தொடர்ந்தும் தடுத் துவைக்கப் பட்டுள்ள இக்கைதிகள் தமது கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகப் பிரதிநிதிகள், நீதி அமைச்சர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செஞ் சிலுவைச் சர்வதேசக் குழு மற்றும் ஐ.நா. பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரை தாம் சந்தித்து பேசவேண்டும் என்றும் மற்றுமொரு கோரிக்கையை முன்வைத் துள்ளனர். இக்கைதிகளில் 4 பேர் மட்டுமே விடு தலைப் புலி சந்தேக நபர்கள் என்றும் ஏனை யோர் பிற குற்றங்களுடன் தொடர்புடை யவர்கள் என்றும் இவர்களை விசாணை செய்வதா அல்லது விடுதலை செய்வதா என்பது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விடயம் என்று சிறைச்சாலை ஆணையா ளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர விஜய குணவர்த்தன தெரிவித்தார்.

No comments: