Saturday, 17 November 2007

ஈழச்செய்திகள் 171107

முறிகண்டி பிரதேசத்தில் விமானக்குண்டு வீச்சு
வீரகேசரி நாளேடு

கிளிநொச்சி இரணைமடு மேற்கு பகுதியில் உள்ள முறிகண்டி பிரதேசத்தில் நேற்றுக்காலை 6.30 மணியளவில் விமானப்படையினரின் ஜெட் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இனங்காணப்பட்ட கடற்புலிகளின் படகு தயாரிக்கும் நிலையத்தின் மீதே விமானக்குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் அஜந்த சில்வா தெரிவித்தார்.
தாக்குதலில் கடற்புலிகளின் நிலைகள் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கடற்புலிகள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, சுனாமி அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்குவதற்கான படகுகள் தயாரிக்கும் நிலையத்தின் மீதே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி தகவல்கள் தெரிவித்தன.

தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதியை அமெரிக்க அரசாங்கம் முடக்கியது
புலிகளுக்கு இராணுவத் தளபாடங்கள் வாங்கியதாகக் குற்றச்சாட்டு

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி களை முடக்கவும் அதன் செயற்பாடுகளைத் தடை செய்யவும் அமெரிக்காவின் திறை சேரி நேற்று உத்தரவு பிறப்பித்தது.பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி செய்வதனை தடை செய்யும் 13224 ஆம் இலக்க நிறைவேற்று சட்ட விதிகளின் கீழ் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சகல செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட் டுள்ளதாக அமெரிக்கத் திறைசேரியின் அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூத ரகம் நேற்று விடுத்த அறிக்கையொன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.தர்மஸ்தாபனம் என்ற பெயரில் அமெ ரிக்காவில் 1997ஆம் ஆண்டில் பயங்கர வாத அமைப்பாகப் பிரகனடப்படுத்தப் பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்துக்கு, நிதி திரட்டியது, அந்த நிதியை புலிகளின் இராணுவத் தளபாடக் கொள்வன வுக்குப் பயன்படுத்தியது ஆகிய செயற் பாடுகளில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஈடுபட்டு வருவதால் அதன் நிதி முடக் கப்படுவதாக அமெரிக்கத் திறைசேரி அறிவித்துள்ளது. தர்மஸ்தாபனமாகவும், தொண்டர் நிறு வனமாகவும் பதிவு செய்துள்ள தமிழர் புனர் வாழ்வுக்கழகம், தமிழீழ விடுதலைப் புலி களின் ஓர் அங்கமாகவே செயற்படுகிறது. அமெரிக்காவில் தனக்குக் கிடைக்கும் நிதி உதவிகளை விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், இராணுவ உபகரணங்கள், தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில் நுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்திஉள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற் பாடுகளை முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளே கண்காணித்து வருகின்றனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைமைச் செயலகம் கிளிநொச்சியில் இயங்குகிறது. அதன் கிளைகள் பிரிட்டன், ஆஸ் திரேலியா, பெல்ஜியம், கனடா, டென் மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மலேசியா, நெதர்லாந்து, நியூ சிலாந்து நோர்வே, தென்னாபிரிக்கா, சுவீ டன், சுவிற்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய பதினேழு வெளிநாடுகளில் இயங்குகின் றன. என்று தனது நீண்ட அறிக்கையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள் ளது.

தமிழ்ச்செல்வன் எம்மிடமிருந்து பிரிக்கப்பட்டதற்கு விலையாக நாம் சிங்களவரிடமிருந்து பிரிவதைத் தவிர வேறு வழியில்லை
[16 - November - 2007] * சிவநேசன் எம்.பி. தெரிவிப்பு

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் இலங்கையரசினால் படுகொலை செய்யப்பட்டு தமிழ் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டதற்கு விலையாக தமிழ் மக்கள் பேரினவாதிகளிடமிருந்து பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
இன்று 2008 ஆம் ஆண்டுக்கான ஷ்ரீலங்கா அரசின் வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொள்வதில் வேதனை அடைகின்றேன். காரணம் "ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பது போலவே வட, கிழக்கு வாழ் தமிழர்களுக்கு இவ்வரவு- செலவுத் திட்டம் வெறுமனவே எழுத்து வடிவமானதே ஒழிய தமது பிரதேசத்தில் எவ்வித மனித நேய அபிவிருத்திக்குரியதல்ல.
இவ்வரவு- செலவுத் திட்டம் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் இன அழிப்புக்குமான திட்டமிடல் ஏற்பாடாகவே தமிழ் மக்கள் கணிப்பிட்டுள்ளனர்.
மகிந்த சிந்தனை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 2006 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைமுறைக்கிட்டபோது தமிழர் தேசத்தில் மனித படுகொலைகள், ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள், கொள்ளைகள், இடப்பெயர்வுகள் போன்ற மனிதப் பேரவலம் ஏற்படுத்தியமையையே வட, கிழக்கு பிரதேசத்தில் அவதானிக்க முடிகிறது. அதேபோன்றே 2006 இல் சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டம் 2007 இல் நடைமுறைக்கிட்டபோதும் இதே நிலைதான் கிழக்கு மாகாணத்தில் மிகவும் மோசமாக காணப்பட்டது.
இதுவரை இரு ஆண்டுகளில் 2031 தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 961 பேர் காணாமல் போயுள்ளனர். 340,000 பேர் இடம்பெயர்ந்து அவல வாழ்வை அனுபவிக்கின்றனர். அரச பயங்கரவாதத்தின் உச்ச செயற்பாட்டால் உயிருக்கு உத்தரவாதமற்றவர்களாக வாழும் வாழ்க்கை முறையே தமிழர் தாயக வாழ்வாகும். தமிழர் தேசம் இன்று இலங்கை அரசின் மனிதக் கொல்களமாகவுள்ளது.
இவை மட்டுமல்ல, தமிழர் நிலங்களை அபகரித்து வளங்களை அழித்து வாழ்வாதாரமற்ற பிரதேசமாக தமிழர் தாயகத்தை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில் மட்டும் 556 பேர் கொல்லப்பட்டும் 395 பேர் காணாமல்போயும் உள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைகளை மேலும் தமிழர் தேசத்தில் முன்னெடுப்பதற்கான வரவு- செலவுத் திட்டமே இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வட, கிழக்கில் 27 இலட்சம் தமிழ் மக்கள் பல இன்னல்களுடன் அடிப்படை வசதிகளற்று, இராணுவ துன்புறுத்தல்களின் மத்தியில் வாழ்கின்றனர். இந்நிலையில் அவர்களின் வாழ்வில் தொடர்ந்தும் மனித அவலத்தை ஏற்படுத்தும் நோக்கமாகவே எந்த அபிவிருத்தியும் இல்லாது 16,644 கோடி ரூபா யுத்தச் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 34 ரூபாவுக்கு பாண் வாங்க வழி தெரியாது மக்கள் அவலப்படும் போது ஜனாதிபதியின் செலவுக்கு 578 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது நகைப்புக்கு உரியது. இதனடிப்படையில் ஒரு மணிநேரத்திற்கு ஜனாதிபதியின் செலவு 600,000 ரூபா என்பதை அண்ணளவாக கணிப்பிடலாம். இது தேவைதானா?
இடம்பெயர்ந்து இன்னல்களில் வாழும் மக்களுக்கு 20,000 ரூபா பெறுமதியான ஓர் குடிசை அமைத்து வாழவைக்க முடியாத அரசு அத்தியாவசிய சேவைகளுக்கு ஒதுக்கிய நிதிகூட வியப்புக்குரியது. 340,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் மீள்குடியேற்ற நிவாரண சேவைக்கு 436 கோடி ரூபாவும் சமூக சேவைகள் சமூக நலனோம்புகை அமைச்சுக்கு 83 கோடி ரூபாவும் ஷ்ரீலங்காவில் வாழும் 5,000,000 (ஐம்பது இலட்சம்) மாணவரின் கல்விக்காக 4,635 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பதும் இரண்டு கோடி மக்களுக்கான சுகாதார சேவைக்கு 5,779 கோடி ரூபாவும் ஒதுக்கியிருப்பதை பார்க்கும்போது சமூக அபிவிருத்திக்கான செலவுத் தொகையை விட சமூக இன அழிப்புத் தேவைக்கு ஒதுக்கிய நிதி மிகவும் அதிகமாக உள்ளது.
படைத்துறைக்கான நிதியானது கடந்த ஆண்டு வரவு- செலவுத் திட்ட ஒதுக்கத்தைவிட 2,689 கோடி அதிகமாக இவ்வருடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒதுக்கத்தின் மூலமாக அரசின் தமிழர் தாயக அபிவிருத்திகள் என்ன?
தமிழரின் நில அபகரிப்பும் அதனை உயர்பாதுகாப்பு வலயமாக்கி புத்தமத அபிவிருத்திக்கானதும் சிங்கள குடியேற்ற முன்னெடுப்பை செய்தல்.
தமிழர்களின் இனத்தை முழுமையாக அழிக்கும் நோக்கில் கொலைகள், ஆட்கடத்தல், கொள்ளை, உடைமைகள் அழித்தல். வளங்களை அழித்தல், பட்டினிச்சாவை ஏற்படுத்தல், பாலியல் வல்லுறவு, இலட்சக்கணக்கான மக்களை இடப்பெயர்வு செய்தல், ஊனமடைந்தவர்களாக்குதல்.
தமிழர்களை அறிவிலிகளாக ஆக்கும் நோக்கில் பாடசாலைகளை அழித்தல், பல்கலைக்கழக கல்விமான்களையும் மாணவர்களையும் கொலை செய்தல், கடத்தல் போன்றவை.
தமிழ் தேசியப் பற்றாளர்கள், ஊடகவியலாளர், மதகுருமார்களை, தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளரை கொன்று தமிழினத்தின் குரலை நசித்தல்.
கடற்தொழில் தடைசெய்தல், பனை, தென்னைகளை அழித்தல், விவசாய உள்ளீடுகளை தடுத்து, மக்களின் உழைப்பை இல்லாதொழிப்பதுடன் நாளாந்த உழைப்பாளர்களை நடுத்தெருவில் அவல வாழ்வில் தள்ளிவிடல்.
தொழில்சார் மக்களின் மூலப்பொருட்களை தடை செய்தல், தொழிலற்றவர்களாக்கி பட்டினிச்சாவுக்குள்ளாக்குதல்.
அரச திணைக்களங்களில் வெற்றிடங்களை நிரப்பாது அவர்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு வேலைச் சுமையினை அதிகரிக்கச் செய்தல்.
அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை தடுத்தல்.
இத்தகைய செயல்பாடுகளையே தமிழர் தாயகத்தின் அபிவிருத்தியாக இலங்கை அரசு கருதிச் செயல்படுகின்றது. இந்நிலை தொடராது இருக்கவே சமாதான ஏற்பாட்டை சர்வதேச மத்தியஸ்தத்தில் முன்னெடுத்த போதும் அது புறந்தள்ளி போர்தான் அபிவிருத்திக்கான வழி என்கின்றனர்.
இலங்கை அரசு யுத்த முன்னெடுப்புக்கான போக்கை தீவிரப்படுத்துகிறது. குறிப்பாக, எமது தமிழ் மக்களின் சமாதானத்திற்கான தலைமைப் பேச்சாளரான சு.ப.தமிழ்ச்செல்வனையும் அவரது பாதுகாப்பாளர்களையும் அவரது சமாதான திட்டமிடல் செயலகத்தில் வைத்து கொலை செய்ததன் ஊடாக சாதனை படைத்தவர்களாக சிலர் நினைத்துக்கொள்ளலாம், இவ்விடயம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இந்நிகழ்வு தமிழர்களின் சுதந்திரத்திற்கான போராட்ட வீச்சை மேலும் வேகப்படுத்தியுள்ளது. இதை அவரின் இறுதி வணக்க நிகழ்வின் போது உலகம் உணர்ந்திருக்கும்.
தமிழ்ச்செல்வனை கொன்றதனூடாக தமிழினத்தின் போராட்டத்தை நசுக்கிவிட்டதாக யாரும் கருதினால் அது பகல் கனவு என்பதை உணரும் நேரம் வரும். அதைத்தான் முகமாலை முன்னரங்க தாக்குதல்கள் வெளிக்காட்டியுள்ளது.
இந்நிலையை இலங்கை அரசு புரிந்துகொள்ளத் தவறினாலும் சர்வதேசமும் புரிந்துகொள்ளத் தவறக்கூடாது. எதிர்காலத்தில் சில நாடுகளின் நிதி உதவியோடு, இராணுவ தளபாட உதவியோடு, இராணுவ ஆலோசனைகளோடு அரசு தமிழர் தாயகத்தின் மீது பாரிய படை நடவடிக்கையினை மேற்கொள்வதற்கான வரவு- செலவுத் திட்டமாகவே இத்திட்டம் அமைந்திருக்கிறது. இந்நிலையை எதிர்கொள்ள தமிழர் தேசமும் தயாராகியுள்ளது.
இதனால் பாரிய அழிவுகள் ஏற்படலாம். இந்த அழிவுகள் ஏற்படாமல் பாதுகாக்க சர்வதேசத்தாலும் முடியாதெனில், தமிழர் தேசம் போராட்ட வெற்றியினூடாக இலங்கை அரசிடம் இருந்து பிரிந்துசெல்லும். இந்நிலையே தமிழ்ச்செல்வனின் பிரிவுக்கான விலையாக அமையும். அதுவே தமிழர்களின் எதிர்பார்ப்பும் தமிழர்களின் உறுதியான இலட்சியமும் ஆகும்.
இதனால் பாதிப்பை எதிர்கொள்பவர்கள் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களுமே என்பதை உணர்ந்துகொண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கும் பாரிய நிதியை விரயமாக்காது அபிவிருத்திப் பாதையில் அரசு செயல்படுவதே புத்திசாலித்தனமானது, சமாதானத்துக்கான வழியும் ஆகும் என்பதை உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும்.

கடத்தப்பட்ட தமிழ் யுவதி கத்தியால் குத்தி கொலை
வீரகேசரி நாளேடு
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி ஜீவாபுரம் பிரதேச வீடொன்றில் வைத்து ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் யுவதி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்திவெளி ஜீவாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மணிமேகம் சண்முகப் பிரியா (16 வயது) என்றழைக்கப்படும் தமிழ் யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.இவரின் சடலம் கத்திக்குத்து காயங்களுடன் நேற்றுக்காலை
7.00 மணியளவில் சந்திவெளி ஜின்னாபுரம் பாலையடித்தோனா புகையிரத வீதிக்கருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் நெஞ்சு மற்றும் கழுத்து என்பனவற்றில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் இவ் யுவதி வீட்டார்களுடன் வீட்டில் நித்திரை செய்து கொண்டிருக்கும்வேளையில் இவரின் வீட்டிற்கு வந்ததாக கூறப்படும் இனம் தெரியாத ஆயுததாரிகள் வீட்டுக் கதவைத் தட்டி இவ் யுவதியை எழுப்பி கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து இவர் குத்திக் கொலை செய்யப்பட்ட பின்னர் மேற்படி பிரதேசத்தில் சடலமாக போடப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
இருப்பினும் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: