Wednesday, 14 November 2007

வரவு செலவுத்திட்டம் 2008 ,வர்க்கசக்திகளின் நோக்குநிலை.

வரவு செலவுத்திட்டம் 2008:
சமூக வர்க்கசக்திகளின் நோக்குநிலை

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு:

தேசிய வருமானத்துடன் ஒப்பிடும்போது தெற்காசியாவில் மாத்திரமல்ல, உலகிலேயே இலங்கையில்தான் இராணுவ செலவினம் அதிகம்
[13 - November - 2007]
* 10 இலட்சம் மக்களுக்கு 8000 இராணுவத்தினரை இலங்கை கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தானில் இது 4000 மாகவும், இந்தியாவில் இது 1300 ஆகவும், நேபாளத்தில் இது 2700 ஆகவும், பங்களாதேஷில் 1000 ஆகவும் உள்ளது। சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் பல யுத்தங்களைப் புரிந்த இந்தியா 1 மில்லியனுக்கு 1300 இராணுவத்தினரைக் கொண்டிருக்க, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்றுவரை மிக அதிக காலமாக இராணுவ ஆட்சியைக் கொண்டிருந்த பாகிஸ்தான் 1 மில்லியனுக்கு 4000 இராணுவத்தினரைக் கொண்டிருக்க, ஜனநாயக குடியரசாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எமது நாடு தனது நாட்டின் ஒரு பகுதி மக்களைக் கொலை செய்வதற்காக 1 மில்லியனுக்கு 8000 இராணுவத்தைக் கொண்டுள்ள கொடூரத்தைக் காண்கிறோம்।
** பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட எம்।பி। சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரை
இலங்கையில் வருடாந்தம் சமர்ப்பிக்கப்படும் வரவு - செலவுத்திட்டங்கள் எந்தளவுக்கு நாட்டின் அபிவிருத்திக்கு உதவியுள்ளன என்பதை பொருளாதார ரீதியில் பகுப்பாய்வு செய்வது அவசியமானதாகும். இங்கு சிங்கப்பூர் நாட்டின் முதலாவது பிரதமரும் அந்நாட்டின் இன்றைய மதியுரை அமைச்சருமாகிய (Minister Mentor) லீ குவான் யூ அவர்கள் இலங்கையைப் பற்றி அன்றும் இன்றும் கூறிய கருத்துகள் இந்நாட்டில் பிறந்த அனைவரும் நன்றாக தமது மனங்களில் பதிய வைக்க வேண்டிய விடயங்களாகும். இவர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் 1965 இல் பிரிந்து சுதந்திரம் பெற்ற போது Ceylon இன் பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிப்பதே எமது இலக்கு என்று கூறினார். அது தவிர, லண்டன் செல்வதற்கு சிங்கப்பூரிலிருந்து நேரடி விமான வசதி இல்லாமல் கொழும்பு வந்தே இலண்டனுக்கு விமானம் ஏறிச் சென்றார். ஆனால், அவர் இன்று Sri Lanka பற்றிக் கூறுவது எமக்கு சிறந்த படிப்பினையாகும்.
அவரது கூற்றில் கூறுவதானால் "எமது அதிர்ஷ்டம் என்னவெனில், நாம் காலம் பிந்தி சுதந்திரம் பெற்றமையாகும். நாம் சுதந்திரம் பெற்றபோது சிங்கப்பூர் நாட்டில் சீன இனத்தவர், மலே இனத்தவர், இந்திய உபகண்டத்தினர் என மூன்று வகையான இனக்குழுக்கள் காணப்பட்டன. நிர்வாக மொழியைத் தெரிவு செய்வதில் எமக்கு சிக்கல்கள் காணப்பட்டன. Sri Lanka வின் கசப்பான அனுபவம் எங்களுக்கு வழிகாட்டியது. ஏனெனில், Sri Lanka நிர்வாக, கல்வி மொழிக் கொள்கை தொடர்பில் ஆங்கிலத்திலிருந்து சிங்கள மொழிக்கு மாறியபோது அங்கு கலவரம் வெடித்தது. பொருளாதாரம் பாதிப்படைய ஆரம்பித்தது. சிங்கப்பூரிலும் மூன்று வகையான இனக்குழுக்கள் காணப்பட்டமையினால் அதாவது ஒரு மொழியைத் தெரிவு செய்யும் போது ஏனைய இனத்தவரும் தமது மொழிக்கு முன்னுரிமை கொடுப்பர். இதனால், சிங்கப்பூரின் தேசியத்துவம் கட்டி வளர்க்கப்பட முடியாது போகும் என்பதால் நிர்வாக, கல்வி மொழியாக ஆங்கிலத்தைத் தெரிவு செய்தோம். இதனால், நாங்கள் பொருளாதார சுபீட்சத்தை அடைந்து கொண்டோம். Sri Lanka இப்போதும் பணவீக்கம், வேலையின்மை, நாணயப் பெறுமதித்தேய்வு என்பவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, நாங்கள் பூமி வெப்பமடைதலைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றோம்" இதுவே லீ குவான் யூ அவர்கள் இன்று இலங்கை பற்றிக் கூறும் வார்த்தையாகும். இந்த இடத்திலிருந்தே நான் எனது வரவு - செலவுத் திட்ட உரையை ஆரம்பிக்க விரும்புகிறேன்.
இலங்கை சுதந்திரம் அடையும் போது ஆசியாவில் ஜப்பான், மலேசியாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது செல்வந்த நாடாகக் காணப்பட்டது. தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் தலா வருமானத்தைப் பொறுத்தவரையில் இலங்கையைவிட பின்தங்கியே காணப்பட்டன. இப்போது இந்நாடுகள் அனைத்தும் இலங்கையை விஞ்சிவிட்டன. அதுமட்டுமன்றி, சுதந்திரத்திற்கு பிந்திய கடந்த 59 வருட காலத்தில் இந்த அழகிய இந்து சமுத்திரத்தின் முத்து உலகின் கண்ணீர்த் தீவாக மாறிப்போனது. மொத்தச் செலவில் ஐந்தில் ஒரு பகுதியை பாதுகாப்புக்காக ஒதுக்கி சொந்தநாட்டு மக்களுக்கெதிராகவே யுத்தம் புரியும் நிலையும் ஏற்பட்டது. இதற்கான காரணங்கள் என்ன? விடை இந்த நாடே இனவாத, மதவாத, மொழிவாத அரசியலுக்குள் ஆரம்பத்திலிருந்தே விழுந்து விட்டமையாகும். இதனால், இலங்கைத்துவம் அழிந்து இனவாத அரசியலே நாட்டை இன்று வரை படு குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது.
எல்லா நாடுகளும் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்கையில், இலங்கை பின்னோக்கிச் செல்கின்றது. உலகளாவிய ரீதியில் மூன்று விடயங்களில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. முதலாவது சிங்கள அரசுக்கும் தமிழ்தேசிய இனத்துக்கும் இடையில் நடைபெறும் யுத்தமும் அதன் மூலமான படுகொலைகளும். இதுவே அந்நிய முதலீடுகள் பாரிய அளவில் உள்வராமல் தடுக்கின்றது.இரண்டாவது கிரிக்கெட் கிரிக்கெட் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. மூன்றாவது சமூக நலக் குறிகாட்டிகளில் பாரிய முன்னேற்றம். சமூக நலக் குறிகாட்டிகளைப் பொறுத்தவரையில் உலகிலேயே அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இலங்கை மட்டுமே அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கீடாக மேம்பட்ட சமூகநலக் குறிகாட்டிகளைக் கொண்டுள்ளது. ஆனால், அதன் பெறுபேற்றினை தொடர்ந்தேர்ச்சியாக மந்தமான பொருளாதார செயலாற்றத்தின் மூலம் எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. முடிந்திருந்தால் எமது நாட்டுப் பெண்கள் வெறும் 15,000 ரூபா சம்பளத்திற்காக 130 மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
பாதுகாப்புச் செலவீனம்
இந்த வரவு - செலவுத் திட்டமானது இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களான தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காக உருவாக்கிய வரவு - செலவுத்திட்டமே தவிர வேறல்ல. 1983 ஆம் ஆண்டு 1.7 பில்லியனாக இருந்த பாதுகாப்புச் செலவீனமானது, 2007 ஆம் ஆண்டிற்கு அதாவது 25 ஆவது வருடத்திற்கு 166.4 பில்லியனாக இது அதிகரிக்கப்பட்டுள்ளது. 2005 இல் 56.3 பில்லியனாக இருந்த இதே பாதுகாப்புச் செலவினமானது 2006 இல் 69.5 பில்லியனாகவும் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் திடீரென 100 பில்லியனையும் தாண்டியது. 2007 இல் 139.6 பில்லியனை எட்டி, 2008 இற்கு இது மீண்டும் அதிகரிக்கப்பட்டு நான் மேற்சொன்ன 166.4 பில்லியனாக இன்று உயர்ந்துள்ளது.
இதில் இராணுவத்திற்கு ஏறத்தாழ ஏழாயிரத்து இருநூற்றி அறுபத்தியெட்டு கோடியே எண்பது இலட்சமும் (7268,80,00000), கடற்படைக்கு 2717 கோடியே 40 இலட்சமும், விமானப்படைக்கு 1956 கோடியும், பொலிஸாருக்கு 3722 கோடியும், ஊர்காவல் படையினருக்கு 1155 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு வருமானத்தில் 20 வீதத்திற்கு மிக அதிகமானதாகும்.
அரசாங்க அறிவித்தலின்படி இராணுவம் 31582 பேராலும், கடற்படை 10891 பேராலும், விமானப்படை 4621 பேராலும் அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், விசேட அதிரடிப்படையானது 1496 பேராலும் ஊர்காவல் படையினர் 34900 பேராலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் யுத்தத்திற்கான ஆளணியினர் 74619 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆயுத தளபாட இறக்குமதியில் 3 ஆம் தரப்பினருக்கு எதுவும் போகாமல் அதுவும் முழுமையாக ராஜபக்ஷ கம்பனிக்கு கிடைக்கக்கூடிய வகையில் அரசாங்கம் Sri Lanka Logistic and technology என்ற கம்பனியையும் ஆரம்பித்துள்ளது. எதிர்காலத்தில் சகலவிதமான யுத்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் இக்கம்பனியே இறக்குமதி செய்யும். மொத்தத்தில் முழு மூச்சான ஓர் யுத்தத்தை நடத்துவதற்கான வரவு - செலவுத் திட்டமாகவே இது முன்வைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்திற்கு 166.4 பில்லியனை ஒதுக்கிய அரசாங்கம் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்யவும் பெரும் அழிவுகளை முகாமைத்துவம் செய்யவும் ஒதுக்கியுள்ள பணம் வெறும் 4.36 பில்லியன் மாத்திரம் தான். அதாவது, 4367 கோடியே எண்பத்தாறு இலட்சம் ரூபாய் மாத்திரமே இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கிழக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்களை இந்த அரசாங்கம் 2006, 2007 ஆம் ஆண்டுகளில் இடம்பெயர வைத்தது. இராணுவத்தின் மூர்க்கத்தனமான பல்குழல் பீரங்கித் தாக்குதலாலும், விமானக்குண்டு வீச்சினாலும், 300 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. விவசாயம் அழிக்கப்பட்டது. கால்நடைகள்,மீன்பிடி யாவும் அழிக்கப்பட்டன. இன்றுவரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழனுக்காவது நஷ்டஈடு கொடுக்கப்பட்டதாக அரசாங்கத்தால் சொல்ல முடியுமா? இதனை விட கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமது மண்ணை விட்டு விரட்டப்பட்டு இன்று பல்வேறுபட்ட அகதி முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தொண்டர் ஸ்தாபன அறிக்கையின் பிரகாரம், ஏறத்தாழ ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளூரில் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் இன்னும் அகதிகளாக்கப்படுவோருக்கும்,பெரும் அழிவுகளுக்குமென ஒதுக்கப்பட்டுள்ள தொகை வெறும் 4367 கோடி மாத்திரம் தான்.
இராணுவமயநாடு

தென்னாசியாவில் மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக ஷ்ரீலங்காவே விளங்குகின்றது. கிடைக்கும் தரவுகளின் பிரகாரம் அவதானிக்கின்ற பொழுது, 10 இலட்சம் மக்களுக்கு 8000 இராணுவத்தினரை இலங்கை கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தானில் இது 4000 மாகவும், இந்தியாவில் இது 1300 ஆகவும், நேபாளத்தில் இது 2700 ஆகவும், பங்களாதேஷில் இது 1000 ஆகவும் உள்ளது. சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் பல யுத்தங்களைப் புரிந்த இந்தியா 1 மில்லியனுக்கு 1300 இராணுவத்தினரைக் கொண்டிருக்க, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்றுவரை மிக அதிக காலமாக இராணுவ ஆட்சியைக் கொண்டிருந்த பாகிஸ்தான் 1 மில்லியனுக்கு 4000 இராணுவத்தினரைக் கொண்டிருக்க, ஜனநாயக குடியரசாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எமது நாடு தனது நாட்டின் ஒரு பகுதி மக்களைக் கொலை செய்வதற்காக 1 மில்லியனுக்கு 8000 இராணுவத்தைக் கொண்டுள்ள கொடூரத்தையும் நாம் இலங்கையில் தான் பார்க்க முடியும். இந்த இலட்சணத்தில் தான் 2008 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் இங்கு அரங்கேறுகின்றது. முரண்பாடுகளால் ஆயுதப் போராட்டம் நடக்கக் கூடிய, கொலம்பியா, மியன்மார், சிரலியோன், சூடான், பிலிப்பெய்ன்ஸ், உகண்டா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, இலங்கையின் இராணுவச் செலவானது மிக அதிகமானது. இலங்கையில் இராணுவச் செலவானது உள்நாட்டுத் தேசிய வருமானத்துடன் ஒப்பிடும் பொழுது தெற்காசியாவில் மாத்திரமல்ல, உலகத்திலேயே இங்குதான் மிக அதிகம்.
பாதுகாப்புச் செலவுக்கு ஒதுக்கிய நிதியானது (20 வீதம்) கல்வி, உயர் கல்வி, சுகாதாரம், விவசாயம், அபிவிருத்தி, போக்குவரத்து, மீன்பிடி மற்றும் நீரியியல் வளம் என்பவற்றுக்குக் கூட்டாக ஒதுக்கிய தொகையை (17 வீதம்) விட அதிகமாக உள்ளது. இங்கிலாந்தை விட பெற்றோல் இங்கு மலிவு என்று அமைச்சர் கூறுகின்றார். இங்கிலாந்தின் தலாவருமானத்தை மறந்து விட்டார். இந்தியாவை விட இங்கு பெற்றோல் மலிவு என்று அமைச்சர் கூறுகின்றார். இந்தியாவில் முட்டை 2 ரூபா, உருளைக்கிழங்கு 10 ரூபா, வெங்காயம் 10 ரூபா, அரச ஊழியர்களின் சம்பளம் இலங்கையை விட இந்தியாவில் அதிகம். விலைகள் இரண்டு மூன்று வருடங்களுக்கு மாறாமல் அப்படியே இருக்கும். இதையெல்லாம் நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள்.
பால் மா விலை அதிகம் என்றால் மாட்டுப்பாலை குடியுங்கள் என்கின்றீர்கள். அப்படியானால், நாம் மாடுகளை வளர்க்க வேண்டும். இந்த வரவு- செலவுத் திட்டத்தில் கால்நடை அபிவிருத்திக்கு மொத்த செலவில் 0.1 வீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியானால், மாட்டுப்பாலுக்கு எங்கு போவது? மக்களை கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்கின்றீர்கள். இந்தியாவுடன் இலங்கையை ஒப்பிடுகின்றீர்கள். இந்தியாவில் வெளிநாட்டுப் பால்மா பக்கற்றுக்களைக் காணமுடியாது. அந்நாடு பாலுற்பத்தியிலும் தன்னிறைவு கண்டுள்ளது. கோதுமை மா விலை அதிகம் என்றால் அரிசி மா சாப்பிடுங்கள் என்கின்றீர்கள். அரிசி கேட்டால் இந்தியாவிலிருந்து வர வேண்டும் என்கின்றீர்கள். வட- கிழக்கில் நெல் வயல்கள் சாம்பல் மேடுகளாகின்றன.
உங்களுக்கெல்லா நாடுகளும் பணவுதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள். ஆனால், மற்ற நாடுகளின் அனுபவங்களை ஏற்க மறுக்கின்றீர்கள். கிழக்குத் தீமோரில் என்ன நடந்தது என்பதை எண்ணிப்பாருங்கள். ஐ.நா. சபை உதவியுடன் நடைபெற்ற சர்வஜன வாக்குரிமையோடு அது தனிநாடாக செயற்பட தனது விருப்பத்தை வெளிக்காட்டியது. அதனை உலகமும் ஏற்றுக் கொண்டது. தென்னாசியாவிலேயே இலங்கைதான் முதன் முதலாக பொருளாதாரத்தை தாராளமயப்படுத்தியது. பொருளாதார தாராளமயமாக்கத்தின் பலாபலன்களை அனுபவிக்க வேண்டுமென்றால் அரசியல் தாராளமயமாக்கமும் இடம்பெறவேண்டும். அனைத்து இன மக்களையும் அரவணைத்து குரோத மனப்பான்மையின்றி அரசியல் நடத்துவதையே இங்கு நான் அரசியல் தாராளமயமாக்கம் என்று கூறுகின்றேன். சிங்கப்பூரிலும் அது நடந்தது. மலேசியாவிலும் அது நடந்தது. அதனால்தான் அவர்கள் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சி கண்டார்கள். இங்கு தமிழர்களுக்கு அடித்தால் பொருளாதாரம் வளரும் என மனக்கோட்டை கட்டினீர்கள். பொருளாதா(.....??குறிப்பு; தினக்குரலில் இச்செய்தி இத்துடன் குரல் அடைத்துக்கொண்டது நன்றி)

ஐ.தே.கட்சி
தமிழ்ச்செல்வனின் இறுதி நிகழ்வில் புலிகளின் முக்கிய தலைவர்கள் கூடியிருந்த சமயம் ஏன் தாக்குதல் நடத்தவில்லை?
[13 - November - 2007] 
ஐ.தே.க.எம்.பி.வஜிர அபயவர்த்தன கேள்வி; வெடிகொளுத்துவதால் பயனில்லையென்றும் கூறுகிறார் டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
தமிழ்ச்செல்வனின் மரணச்சடங்கின் இறுதி நிகழ்வில் முக்கிய புலிகளின் தலைவர்கள் கூடியிருந்த நிலையில் அவர்கள் மீது ஏன் தாக்குதல் நடத்தப்படவில்லையென சபையில் கேள்வியெழுப்பிய ஐ.தே.க.வின் வஜிர அபயவர்த்தன எம்.பி. புலிகளின் தலைவர்களை கொன்று விட்டு வெடிகொளுத்துவதால் பிரச்சினைகளை மூடிமறைத்துவிட முடியாதெனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாத உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அவர்,
மக்களுக்கு நிவாரணம் வழங்காத இதுபோன்ற பட்ஜெட்டை இதற்கு முன்னர் நான் ஒருபோதும் கண்டதில்லை.
தமிழ்ச்செல்வன், பிரேமதாஸ, ரோஹன விஜயவீர கொல்லப்பட்ட சமயங்களில் இந்நாட்டில் வெடிகொளுத்தப்பட்டது. இவ்வாறு உயிர்கள் பலியாகும் போது வெடிகொளுத்துமாறு பௌத்த சமயத்தில் கூறப்படவில்லை.
தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட பின்னர் நாம் வெடிகொளுத்துவதால் மாத்திரம் நமது தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாது. பிரச்சினைகளை மூடிமறைக்கவும் முடியாது.
ஜே.வி.பி.யினர் அன்று வீடு வீடாகச் சென்று ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு கோரினர். ஆனால், இன்று பாருங்கள் நிலமை தலைகீழாக மாறிவிட்டது. அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஜே.வி.பி.யினரை பொதுமக்கள் திட்ட ஆரம்பித்துவிட்டனர்.
இவ்வரவு செலவு திட்டத்தில் எவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்றவர்களும் தனியார் துறையினரும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சமுர்த்தி பயனாளிகளை அரசாங்கம் அப்படியே கைவிட்டுவிட்டது.
புலிகளுக்கு நாம் ஒரு போதும் பணம் கொடுக்கவில்லை. ஆளுங்கட்சி ஐ.தே.க.வுக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டில் எத்தகைய உண்மையுமில்லை.
கடந்த காலங்களில் புலிகளை தோற்கடிக்க அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. ஆயுதங்களை வீணாக்கியது மாத்திரமே இவ் யுத்தங்களின் முடிவுகளாகும்.
தமிழ்ச்செல்வனின் இறுதி மரணச் சடங்கு நடைபெற்றபோது அங்கு முக்கிய பல புலித்தலைவர்கள் கூடியிருந்தனர். அவர்கள் மீது தாக்குதலை நடத்தியிருந்தால் முக்கிய புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால் புலித்தலைவர்களை கொல்வதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகண்டுவிட முடியாது.
பொருளாதாரம் கீழ்மட்ட நிலைக்குச்சென்று வாழ்க்கைச் செலவு பெருமளவு அதிகரித்துள்ளது. மக்களின் பணம் இன்று அரசாங்கத்தால் சுரண்டப்படுகிறது. இதனால் அவர்களின் கையில் பணம் இல்லை.
பால்மா நிறுவனங்களினால் 50 கிராம் பொதி செய்யப்பட்ட பால்மா விற்பனை செய்யப்படுகிறது. சிறுதொகை பணத்தையே கொண்டுள்ள மக்கள் இவ்வாறான சிறுபால்மா வகைகளையே கொள்வனவு செய்கின்றனர். தேங்காய் ஒன்றின் விலை 40 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. இதனால் தேங்காயினை வாங்க முடியாத நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பொதுமக்கள் துன்பப்படுவது குறித்து பௌத்த குருமார், எம்।பி।க்கள் மௌனம் காக்கின்றனர். பொதுமக்களின் சாபம் இந்த ஹெல உறுமய எம்.பி.க்களை ஒரு போதும் சும்மாவிடாது.

`தமிழரை அழிக்க நிதி ஒதுக்கீடு; தோட்டத் தொழிலாளருக்கு வாய்க்கரிசி' ஒன்றுமில்லாத பட்ஜெட் அல்ல; நிரம்பத் திட்டங்கள் இதில் உள்ளன...

ஜனாதிபதி சமர்ப்பித்திருக்கும் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லையென்று பலரும் விமர்சிக்கின்ற போதிலும் தமிழ் மக்களை அழிக்க பாரிய நிதி ஒதுக்கீடு, தோட்ட தொழிலாள மக்களின் வாய்களுக்கு அரிசி போன்ற முக்கிய விடயங்கள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பி. அரியநேத்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பேசும் போதே அரியநேத்திரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
`அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவு - செலவுத் திட்டமானது தமிழின அழிப்புத் திட்டமாகும். இதில் பாதுகாப்பு செலவுக்கென்றே பாரிய தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புகென ஒதுக்கப்படும் நிதியானது தமிழர் அழிப்புக்காக பயன்படுத்தப் படுகிறது.
தெற்காசிய வலய நாடுகளான பாகிஸ்தானில் 10 இலட்சம் மக்களுக்கு 4 ஆயிரம் படையினரும் நேபாளத்தில் 10 இலட்சம் மக்களுக்கு 2,700 படையினரும் இந்தியாவில் 10 இலட்சம் மக்களுக்கு 1,300 படையினரும் இருக்கின்றனர். ஆனால், இலங்கையில் 10 இலட்சம் மக்களுக்கு 10 ஆயிரம் படையினர் இருக்கின்றனர்.
இதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஜே.வி.பி.யினரும் மக்களுக்கு நிவாரணமில்லை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு தீர்வில்லை, அபிவிருத்தித் திட்டங்கள் இல்லை போன்ற காரணங்களுக்காக வரவு- செலவுத் திட்டத்தை எதிர்ப்பதாக கூறுகிறார்கள். எனினும், யுத்தத்துக்கென பெருந்தொகை ஒதுக்கப்பட்டிருப்பது பற்றி இவர்கள் எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை இது தான் இனவாதம்.
இது இறைமையுள்ள நாடா அல்லது இனவாத நாடா என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும். பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காணும் நோக்கிலேயே ஜனாதிபதி பாதுகாப்புக்கு என பாரிய தொகையை ஒதுக்கியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி இலங்கையில் இனப் பிரச்சினை இல்லையென தெரிவித்திருந்தார். எனினும், இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுமென வரவு- செலவுத் திட்டத்தில் இங்கு கூறுகிறார். இதில் ஜனாதிபதியின் இரட்டை வேடம் தெளிவாகிறது.
இதேநேரம், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்திருந்தார். அரசு ஆதரவளிக்கா விட்டால் பாதுகாப்பு வழங்கப்படாது என்பதையே அவர் இதில் சுட்டிக் காட்டுகிறார். அப்படியென்றால் எமது 2 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு அரசாங்கம் தான் காரணம் என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 உறுப்பினர்களுக்கும் ஏதேனும் ஆபத்து வருமாயின் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்.
ஒருபுறம் ஊடகங்களை முடக்கி, ஊடகவியலாளர்களை கொலை செய்து கொண்டு மறுபுறத்தில் ஊடக சுதந்திரம் பற்றி பேசுவதற்கு அருகதையற்ற அரசாங்கம் இது.
இந்த வரவு- செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லையென்று பலரும் விமர்சிக்கின்றனர். எனினும், இதில் நிறையவே இருக்கிறது. அதாவது, தமிழர்களை அழிக்க நிதி ஒதுக்கீடு, கஷ்டத்துக்கு மத்தியில் கோதுமை மாவை பயன்படுத்தி வந்த தோட்டத் தொழிலாளர் மக்களின் வாய்களுக்கு அரிசி என பல விடயங்கள் இருக்கின்றன.
மக்களை அழிக்க நிதி ஒதுக்கி மக்களை அழித்தொழித்த பின்னர் அரசியல் தீர்வில் எந்த அர்த்தமும் கிடையாது.
அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்க நாம் இங்கு வரவில்லை. அடுத்த சந்ததியினரை நோக்காக கொண்டே நாம் இச் சபைக்கு வந்திருக்கிறோம். அடுத்து, அரசாங்கம் அமைக்கப் போவது யார் என்பது எமது சிந்தனையில்லை, அடுத்த சந்ததியினர் பாதுகாப்பாக இருப்பார்களாயின் அதற்காக எமது உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம்.
அரசியலில் எம்மை அடிமைகளாக நினைத்தீர்கள். விவசாய மொழியில் எம்மை களையாக நினைத்தீர்கள். சமையல் மொழியில் எம்மை கறிவேப்பிலை என்றீர்கள் கால்நடையில் எம்மை எருமை என்றீர்கள். இராணுவ மொழியில் எம்மை புலிகள் என்று சொன்னீர்கள். தமிழர்களாகிய எம்மை என்றுமே நீங்கள் தமிழர்கள் என்று சிந்திக்கவில்லை. தமிழர்கள் என்ற சிந்தனையுடன் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் போது அன்று தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். முறையான வரவு- செலவுத் திட்டமும் வரும்.
நாம் ஏனையவர்கள் போல அடிக்கடி கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்கள் அல்லர்। எமது கொள்கையின் பிரகாரமே நாம் செயற்படுவோம்। அதன் படி இந்த வரவு - செலவுத் திட்டத்தை எதிர்க்கிறோம் என்றார்।

ஜாதிக ஹெல உறுமய
வெளிநாட்டு பண உதவியுடன் அரசை பதவி கவிழ்க்கும் முயற்சி தோற்கடிக்கப்படும் [13 - November - 2007]

* ஜாதிக ஹெல உறுமய சூளுரை வெளிநாடுகளின் பணத்தை பெற்றுக்கொண்டு அரசாங்கத்தை பதவி கவிழ்க்க முயலும் சகல சக்திகளையும் தோற்கடிக்க ஜாதிக ஹெல உறுமய உறுதி பூண்டிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்।
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அமைச்சர்;
"சூழலைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். பசுமையான இலங்கையை கட்டியெழுப்புவதே எமது பிரதான இலக்காகும்.
பசுமையான நாட்டைப் பாதுகாப்பதற்கு எமக்கு செல்லிடத் தொலைபேசிகளும் கம்பியூட்டர்களும் சில படிப்பறிவில்லாத அரசியல்வாதிகளும் தடையாக உள்ளனர். செல்லிடத் தொலைபேசி மற்றும் கம்யூட்டரில் அடங்கியுள்ள சில வகை உலோகங்கள் சுகாதாரத்திற்கு பெரும்கேடு விளைவிப்பதுடன் பசுமையான இலங்கைக்கும் சவாலாக அமைந்துள்ளன.
எனவேதான் நாம் சூழல் பாதுகாப்பு வரியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு சிலர் தவறான அர்த்தம் கற்பிக்கின்றனர். குப்பை காணப்படும் வீடுகளில் எல்லாம் வரியை அறவிடும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை. மாறாக, சூழலுக்கு பங்கம் ஏற்படுத்துவோரிடமிருந்து வரியை அறவிடுவதே எமது நோக்கமாகும்.
மனிதர்களுக்கும் யானைகளுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் எமக்கு தற்போது பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதை கருத்திற்கொண்டு மின்வேலியை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் சக்திகளின் பணத்தைப்பெற்று அரசாங்கத்தை தோற்கடிக்க மேற்கொள்ளப்படும் அத்தனை முயற்சிகளையும் தோற்கடிக்க ஜாதிக ஹெல உறுமய உறுதிபூண்டுள்ளது.
ஜனாதிபதி ஈரானுக்கு விஜயம் மேற்கொள்வதை தடுக்கவும் சிலர் முயல்கின்றனர்। வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து நாம் எமது நாட்டின் சுதந்திரத்தை எவருக்கும் அடகுவைத்துவிட முடியாது" என்றார்।

பேராசிரியர் திஸ்ஸ விதாரண
மகிந்த சிந்தனைக்கு ஆதரவளித்த ஜே।வி।பி। பட்ஜெட்டுக்கும் ஆதரவளிக்க வேண்டும்
[13 - November - 2007] பேராசிரியர் திஸ்ஸ விதாரண

மகிந்த சிந்தனைக்கு ஆதரவளித்த ஜே।வி।பி।யினர், அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டம் வெற்றி பெறவும் ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரித்தார்।
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டப் பிரேரணை மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாத உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
"எந்தவொரு வரவு- செலவுத் திட்டமாயினும் அதில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும், அதனைத் தடுக்க முடியாது. எனினும், இவ்வரவு- செலவுத் திட்டத்தை நாம் ஆதரிக்கிறோம்.
ஜே.வி.பி.யினர் இவ்வரவு- செலவுத் திட்டத்தை எதிர்ப்பது ஆச்சரியமளிக்கிறது.ஐ.தே.க. மேற்கத்திய சக்திகளுக்கு அடிபணிந்து இதனை எதிர்ப்பது புதிரானதல்ல. ஆனால், மகிந்த சிந்தனை நடைமுறைக்கு வர உதவிய ஜே.வி.பி. இவ்வரவு- செலவுத் திட்டத்தை ஒதுக்கிவிட முடியாது.
தனியார் துறை மயமாக்கலை அரசாங்கம் கைவிட்டுள்ளது.அரசாங்கம் மீது நம்பிக்கை கொள்ள இவ்வழிமுறை ஜே.வி.பி.க்கு உதவுமென கருதுகிறேன்.
எமது சமூகத்தில் சமனற்ற அபிவிருத்தி காணப்படுகின்றது।இதனால் சில மாகாணங்கள் அபிவிருத்தியில் முன்னிலையிலும் சில மாகாணங்கள் பின் தங்கியும் காணப்படுகின்றன. இதனை மாற்றியமைப்பது எமது பிரதான கடமையாகும்."

Private sector completely neglected in the budget: JVP
By Kelum Bandra and Yohan परेरा

The JVP yesterday charged in parliament that the government had in the budget completely neglected the private sector workers.
JVP MP Wasantha Samarasinghe who joined the budget debate in the House yesterday said that the government had only succeeded in leaving the private sector workers to resolve their salary issues through collective agreements with the employees.
He said there are only 25 such collective agreements, which covers only 600,000 private sector workers. “These hardly cover the workers as there are 400,000 workers in the estate sector alone, while most of the collective agreements are defunct today,” he said. The JVP MP charged that the cost of living index has increased by 15450 points since President Mahinda Rajapaksa took office. He said Samba rice had increased from Rs. 22/= in November 2005 to Rs. 62/= a kilo during this year, while the price of big onions have increased form Rs. 70/= a kilo to Rs. 100/= kilo.
Citing the statistics put out by the department of census Mr. Samarasinghe said a family of four needs a monthly income of Rs. 22,671/= per month to survive but an average family earns an income of only Rs. 13,705/= today.
He charged that the government is planning to put burden on the people without giving concessions to them in such a difficult situation.
The MP further charged that expected tax differs from the amount shown in the budget speech of the President, as the amount shown in the annual report of the Inland Revenue Department. The JVP further charged that more priority is given to the President’s expenditure although the government is claiming that funds have been allocated for various development projects.
He said while the government has allocated only Rs 315 million for the “Api Wawamu Rata Hadamu” programme the allocation for the expenditure e of the President’s office is increased by Rs.1.4 billion this year. “More is allocated for ‘Mama Nagum’ than Maga Naguma or Api Wawamu Rata Hadamu projects,” he added.
Mr. Samarasinghe also charged that the government has brought proposals to safeguard those involved in the VAT fraud and others who are involved in large scale scandals revealed by the COPE report.
He said the head of the Inland revenue Department who was found guilty by the COPE investigations has been allowed to continue to date, without holding a disciplinary action against him.
“He charged that this had allowed him to get hold of vital files of the department and blame an officer who is no more for all the scandals of the Inland Revenue Department।” He charged।

This budget is a complete tragedy to the people says Bahu

Press Statement from Dr Vickramabahu
The masses suffering under the weight of the unnecessary massive war efforts;corruption and rackets;and inflationary anti poor, mega projects; have not got any relief from this budget. public sector workers expected that in lieu of wage increases according to the inflation, at least three thousand rs will be given. the offered 375 is not a relief but a slap in the face. nothing at all for the workers in the private sector except greater suffering. the promise in the budget is that the people will be dragged along the same tragic path in the coming period too. The proposed tax relief to cooperatives and peoples participatory sector is a great fraud to cover up the tragedy faced by the people. It will be massive crime to vote for this budget that promises to drag the people along the path of rising prices ,rackets and corruption, and the misery of war.
We appeal to all trade unions to get together to campaign for the defeat of this budget।

Budget: path to a sustainable economy - Central Bank Governor Tuesday, 13 November 2007 Governor of the Central Bank, Ajith Nivard Cabraal, at the post-Budget press conference held in Colombo recently said that this year’s budget would help build a developed regional economy। This would be the basis of creating a sustainable economy in the long term, he said। The Governor also said that the 2008 Budget will consolidate the fiscal position, enable the continuation of major infrastructure projects and provide relief to low-income groups and local entrepreneurs।The Governor added that despite many setbacks occurred due to natural disasters along with the external pressure such as the unpredictable increase of the oil price, the Sri Lankan economy was growing reasonably well। “It has grown at an average of 6% during the past three years. The economy is due to grow at 6.7% this year,” Mr. Cabraal added.
He said that the country was able to register growth in every sector and most importantly the service sector has grown the most, which means that the private sector can become even more vibrant and engage in business.
The Governor said that Foreign Direct Investments (FDI) have increased by 8% while domestic investments increased by 41% during the past five years and is expected to grow by 33% by next year. The private sector accounted for 79% of the investments, he explained, adding that Forex reserves will increase to US$ 3 billion.
Clarifying the issue of the rupee getting depreciated, Mr. Cabraal said that the rupee depreciated by 5.2% in 2006, which was a lower depreciate rate when compared to previous years.
He said that allocations have been made to initiate massive infrastructure development program in every province during the next 3-4 years and that this is expected to revitalize local entrepreneurs and low-income groups. This would ensure that the economic growth is shared among all provinces, said the Governor.
Last Updated ( Tuesday, 13 November 2007 )

No comments: