Thursday 29 November, 2007

எங்கள் வாழ்விலும் எங்கள் வளத்திலும் மங்காத அகதி முகம்.

எங்கள் வாழ்விலும் எங்கள் வளத்திலும் மங்காத அகதி முகம்.
தமிழகத்தில் அகதிகளுக்குப் புத்தாடை..!

தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு புதுவருடத்தை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்படுமென மறுவாழ்வு ஆணையர் கற்பூர சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அகதி முகாம்களில் வாழும் இலங்கை அகதிகளுக்கு கூட்டுறவு விற்பனை நிலையம் மூலம் வழங்கப்படவுள்ளது. எட்டயபுரம் அருகிலுள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமில் சென்னை கத்தோலிக்க நிவாரண நிறுவனத்தின் நிதியுதவியுடன் தூத்துக்குடி பலநோக்குச் சமூகசேவை சங்கம் மூலம் கழிப்பறை வளாகம் மற்றும் குடிநீர் வசதிகள் என்பன செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது அவர் தெரிவிக்கையில், இலங்கையில் 1983ம் ஆண்டு ஏற்பட்ட இடர்பாடுகள் காரணமாகத் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வந்துள்ள நீங்கள் 24 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் ஆதரவுடன் வாழ்ந்து வருகின்றீர்கள். கடந்த 24 ஆண்டுகளில் உங்களது வாழ்வில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், கடந்த ஓராண்டாக அடைந்துள்ள வசதிகள், முன்னேற்றங்கள் என்பன திருப்திகரமானதாக அமைந்துள்ளன எனத் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அகதி முகாம்களின் வாழும் இலங்கை அகதிகளுக்குப் புதுவருடத்தை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, அகதிகள் முகாமில் வாழும் பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் மகப்பேறு உதவித் தொகையாக 6,000 ரூபா உதவித் தொகையாக வழங்குவதற்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
source: Agencies

No comments: