நுகேகொடையில் புலிகளின் குண்டுத்தாக்குதலில் 17 பொதுமக்கள் பலி. 40 பேர் படுகாயம்..!
நுகேகொடையில் அமைந்துள்ள நோலிமிட் வர்த்தக நிலையத்தினுள் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 17 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று மாலை 5.50 மணியளவில் பரபரப்பான சனசந்தடி மிக்க வேளையில் மேற்படி வர்த்தக நிலையத்திற்கு சென்ற புலி ஆள் ஒருவர் அங்குள்ள பொதிகள் பிரிவில் தான் எடுத்துச் சென்றிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியை கையளித்துள்ளார். ஆயினும் மீண்டும் அதனை பெற்றுக் கொள்ளாமலேயே சென்றதை அவதானித்த ஊழியர் ஒருவர் இது குறித்து நிர்வாகமூடாக பொலிஸாருக்கு தகவலைத் தெரிவித்துள்ளார். பொலிஸார் விரைந்து வருவதற்குள் மேற்படி பொதியினுள்ளே வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 40 வரையிலான பொதுமக்கள் காயங்களுக்கிலக்காகியுள்ளனர். வர்த்தக நிலையமும் அருகிலுள்ள கட்டடங்கள் சிலவும் இக்குண்டு வெடிப்பினால் பலத்த சேதமடைந்துள்ளன.
காயமடைந்த பொதுமக்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை மிக மோசமாக பாதிக்கப்பட்ட 5 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வில்மட் குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இக்குண்டு வெடிப்பினை அடுத்து ஹைலெவல் பிரதான பாதையில் பலத்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
====புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது இறுதி பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு..!புலித்தலைவர் வே.பிரபாகரனை படுகொலை செய்வோம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சூ+ளுரைத்துள்ளார். புலிகளின் அரசியற்றுறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனை படுகொலை செய்ததன் மூலம் அவர்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளோம். எம்மிடம் சிறந்த உளவறியும் ஆற்றலும், அவர்களின் நடமாட்டத்தை அவதானிக்கும் ஆற்றலும் உள்ளது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஏ.எப்.பி.க்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது 53 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். எமது திட்டங்கள் யாவும் சரிவர நிறைவேறினால் இதுவே அவரது இறுதி பிறந்தநாள் கொண்டாட்டமாக அமையும். புலிகளின் குறிப்பாக தலைமைத்துவத்தை அழித்தொழிப்பதில் நாம் மிகவும் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
புலிகளை பலவீனமடையச் செய்வதே எமது நோக்கம். நாம் வன்னி பெரு நிலப்பரப்பை எமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவோம். அது சாத்தியமானதாகும். நாம் அவர்களை நெருக்கடிக்குள் உள்ளாக்கினால் தான் அரசியல் தீர்வு சாத்தியமாகும்.
புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையை ஆயுதக் கடத்தலுக்கும், குண்டு வைப்பதற்குமே பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
==========
இருவேறு உலகம்
செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இலக்கு வைத்து பாசிசப்புலிகள் தற்கொலைத்தாக்குதல்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது இறுதி பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு..!
=========
No comments:
Post a Comment