Monday, 3 December 2007

அந்நிய முதலீட்டையும் அதற்கு வழங்கும் வர்த்தக நிர்வாக சேவைகளையும் பாதுகாக்க உள் நாட்டு மக்கள் மீது வெறி கொண்டு பாய்கிறது ராஜபக்ச அரசு!-ஈழச்செய்திகள்

அந்நிய முதலீட்டையும் அதற்கு வழங்கும் வர்த்தக நிர்வாக சேவைகளையும் பாதுகாக்க உள் நாட்டு மக்கள் மீது வெறி கொண்டு பாய்கிறது ராஜபக்ச அரசு!-ஈழச்செய்திகள் 03122007

கொழும்பில் தேடுதல் நடவடிக்கையில் 18,000 க்கும் மேற்பட்ட படையினர்
[03 - December - 2007]
கொழும்பில் தேடுதல்களை நடத்துவதற்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் 18,000 க்கும் மேற்பட்ட படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் இடம் பெற்ற குண்டு வெடிப்புகளையடுத்து கடந்த புதன்கிழமை முதல் கொழும்பில் வீடு வீடாகச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் உடனடியாக பூசா தடுப்பு முகாமிற்கு விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்படுவார்கள்.
மேல்மாகாணத்தில் நடைபெற்றுவரும் இந்த மிகப்பெரும் தேடுதல் வேட்டைகள் தொடர்ந்தும் நடைபெறுகிறது. இதில் 18,000 படையினர்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலதிக தாக்குதலை தடுக்கும் பொருட்டும் பெரும் தொகைப் படையினர் மேல் மாகாணத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.
கடந்தவெள்ளிக்கிழமை உயர் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச இந்தத் தேடுதல்
நடவடிக்கைக்கான உத்தரவுகளை வழங்கியிருந்தார். இந்த நடவடிக்கை மேல்மாகாணத்தின் சகல நடவடிக்கைகளுக்குமான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லோறன்ஸ் பெர்னாண்டோவின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முப்படையினர் மற்றும் பொலிஸாரென 18,000 படையினரை ஒருங்கிணைத்து கொழும்பை பாதுகாக்கும் விஷேட நடவடிக்கையை அவர்
மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் அதிகாலை முதல் தேடுதல் 200 க்கும் மேற்பட்டோர் கைது
[03 - December - 2007]
புத்தளம், தில்லையடி, பாலாவி பகுதிகளை உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் 203 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் 1 மணிவரை இந்தச் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் இடம் பெற்றதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
பொலிஸார், இராணுவம் மற்றும் விமானப்படையினர் இணைந்தே இந்தச் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதலை நடத்தினர்.
கல்பிட்டி, முந்தல், வண்ணாத்தவில்லு, ஆனமடுவ பொலிஸ் நிலையங்களைச் சேர்த்த பொலிஸார், புத்தளம் இராணுவ பிரிவினர் மற்றும் பாலாவி
விமானப்படையினர் என 300 க்கும் அதிகமானோர். இந்த சுற்றி வளைப்பிலும் தேடுதலிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
பிரதான சந்திகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் ஆள்அடையாள அட்டையின்றியும் வேறு பிரதேச அடையாள
அட்டைகளை வைத்திருந்தோருமென 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெருமளவு தமிழர்களும் முஸ்லிம் மற்றும் சிங்களவர்களும் அடங்குவர்.
இதேவேளை, மேற்படி தேடுதலின் போது அப்பகுதியில் சென்ற அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் புத்தளம் சென் அன்றூஸ் பாடசாலையில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு
வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் பெர்னாண்டோவின் தலைமையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் மற்றும் பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றுள்ளது.

மல்வானை, பியகம,சப்புகஸ்கந்தவில் எழுபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது
[03 - December - 2007]

மல்வானை, பியகம மற்றும் சப்புகஸ்கந்த பகுதியில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற தேடுதலில் 70க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் தென்பகுதியிச் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை முற்பகல் வரை மல்வானைப் பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைது செய்யப்பட்ட 20
பேரும் தீவிர விசாரணையின் பின்னர் பூசா முகாமுக்கு அனுப்பியுள்ளனர்.
இவர்களை விடுவிக்க பலத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பொலிஸார் எவரையும் விடுதலை செய்யாது தடுப்புக்காவல் உத்தரவைப்
போட்டு பூசாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதேநேரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை பியகம, சப்புகஸ்கந்த பகுதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து பாரிய தேடுதல்
நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
பியகம பண்டாரவத்தைப் பகுதியில் உள்ள கடைகள், குடியிருப்புகள் காலை முதல் சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.
பியகம பகுதியினூடாக உள்வரும் வாகனங்களும் வெளிச் செல்லும் வாகனங்களும் தீவிர சோதனைகளுக்குட்படுத்தப்பட்டன. இதன்போது, 50க்கும்
மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சப்புகஸ்கந்த மத்திய கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், அங்கு எவரையும் அனுமதிக்காது படையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இதில் பலர் தென்பகுதி சிறைச்சாலைகளுக்கு
அனுப்பப்பட்டனர்.

மலையகத்திலிருந்து கொழும்பு வந்த அனைத்து வாகனங்களும் சோதனை
[03 - December - 2007] மலையகத்திலிருந்து கொழும்பு நோக்கி வரும் அனைத்து வீதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனைகள் நடைபெற்றதால் பெரும்
போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. மலையகத்திலிருந்து கொழும்பு வரும் வீதிகளில் உள்ள வீதிச் சோதனை நிலையங்களிலும் திடீர்வீதிச் தடைகளும் ஏற்படுத்தப்பட்டே அனைத்து
வானகனங்களும் தீவிர சோதனைகளுக்குட்படுத்தப்பட்டன.
இந்த வாகனங்களில் வந்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு வீதிச் சோதனை நிலையங்களிலும் வீதித் தடைகளிலும் வாகனங்கள் அனைத்தும்
வழிமறிக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அதில் வந்தவர்களும் பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதன் போது பல இளைஞர்களும் யுவதிகளும் அந்தந்த சோதனை நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதுடன் பலர் மேலதிக
விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அதிகாலை முதல் பிற்பகலுக்குப் பின்னரும் நடைபெற்ற இந்த வீதிச் சோதனைகளினால் மேற்படி வீதிகளில் நீண்ட வாகன நெரிசல் காணப்பட்டது.
ஒவ்வொரு சோதனை நிலையங்களிலும் திடீர் வீதித் தடைகளிலும் 15 க்கும் மேற்பட்ட படையினரும் பொலிஸாரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
கொழும்பு செல்வதற்குரிய காரணங்களைக் கேட்டே, அவர்கள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மலையகப் பகுதியிருந்து கொழும்புக்கு வர ஆறு மணி நேரத்திற்கும் மேல் தாமதமேற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பலர் தெரிவித்தனர்.

கண்டி நகரில் தொடரும் தேடுதல்
[03 - December - 2007]
கண்டி நகரப் பிரதேசத்தினுள் பொலிஸாரின் சோதனைகளும் தேடுதல்களும் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. விடுதலைப் புலிகள் சிலர் கண்டிப் பிரதேசத்தினுள் நடமாடுவதாகக் கிடைத்த தகவல்களையடுத்தே பொலிஸார் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரால் கைது செய்யப்படுபவர்களில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாதவர்கள் தடுத்து வைக்கப்படுகின்றனர் . நகரின் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ளிக்கிழமை மாலை பொலிஸார் கண்டியில் நடத்திய சோதனையின்போது பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
கண்டி நகரில் இடம்பெற்ற கொள்ளை, கஞ்சா, போதைவஸ்துத் தொடர்பு போன்ற குற்றச்சாட்டில் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர்.

வதை முகாம் பூஸா
Posted on : Mon Dec 3 8:55:00 2007

*முகம் கழுவத் தண்ணீர் இல்லை
*மாற்றுடை இல்லை
*150 பேருக்கு 1 மலகூடம்

அடிப்படை வசதிகள் இன்றி அந்தரிக்கிறார்கள் பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள்! தலைநகர் கொழும்பிலும் அதனை அண்டிய புறநகரப் பகுதிகளிலும் தமிழர்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளிலும் கடந்த வெள்ளி மற்றும்
சனிக்கிழமைகளில் கைதுசெய்யப்பட்ட தமிழர்களில் பூஸா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 419 பேர் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி
அந்தரித்தவண்ணமுள்ளனர்.யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் மலையக மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பூஸா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டவர்களில் நூறுபேரும் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டவர்களில் 319 பேரும் பூஸா முகாமில்
தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகப் பிந்திய தகவல்கள் தெரிவித்தன.இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெற்றோர்கள், உறவினர்கள் நேற்று ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரனின் ஏற்பாட்டில் மதியம் பூஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கதறி அழுதனர் உறவினர்கள்ஐந்து பெரிய வாகனங்களில் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட பெற்றோரும், உறவினர்களுமாக சுமார் நூற்றியைம்பது பேர் பூஸாவில் தமதுஉறவுகளின்அவலநிலையை நேரில் கண்டு கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.நேற்றுமுன்தினம் பூஸாவுக்கு கூட்டிவரப்பட்ட 59 பெண்கள், 360 ஆண்கள் என சுமார் 419 தமிழர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் 150 பேருக்கு ஒரு மலசலகூடமே அங்கு உபயோகிக்கப்படுகின்றது என்றும் மாற்றுடைகளின்றி முகம் கழுவக்கூட தண்ணீர் வசதி இல்லாது அவர்கள் அவலப்படுகின்றார்கள் என்றும் உணவு வசதி போதுமானதாக இல்லாது
அரை அவியலுடன் சோறும் பருப்பும் மாத்திரமே நேற்று அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்றும் கைதானவர்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.அடிப்படை வசதிகள் அற்று அந்தரிக்கும் இந்த நிலைமை எவ்வளவு நாட்கள் தொடரும் என்ற வினா அவர்கள் முகங்களில் பிரதிபலித்தமையையும் அங்கு அவதானிக்க முடிந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.இதேசமயம், கொழும்பில் நேற்றுக் கைதானோரும் அங்கு கூட்டிவரப்படக்கூடும் என்பதால் அங்கு தடுத்துவைக்கப்படும் தமிழர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் அங்கு நிலவுகின்றது.

யாழ் உதயன் ஆசிரியர் தலையங்கம்:

தமிழ் பேசும் எம்.பிக்களே! உங்களின் பிரதிபலிப்பு என்ன?
கண்ணில்படும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்களாக நோக்கும் தென்னிலங்கைப்
பாதுகாப்புத்துறை உயர்மட் டத்தின் "அதிமேதாவித்தனத்தினால்' தெற்கில் குறிப்பாக மேற்கு மாகாணத்தில் தமிழர்களின் வாழ்வு பெரும்
அச்சத்துக்குள்ளும் அவலத்துக்குள்ளும் மூழ்கிக் கிடக் கின்றது.ஹிட்லர் யூதர்களை நாசிவதை முகாம்களுக்கு அள்ளிச் சென்ற மாதிரி தென்னிலங்கையில் தமிழருக்கு குறிப் பாகத் தமிழ் இளம் சமுதாயத்துக்கு
எதிரான இனச் சுத்திகரிப்பு மேலிடத்து ஆசியோடும், வழிகாட்டலோடும் முழு மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றது.தலைநகர் கொழும்பிலும் அதை அண்டிய பிரதேசங் களிலும் தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் சல்லடை போட்டுத் தேடுதல்கள்
மேற்கொள்ளப்படுகின்றன. வீதிக ளில் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு, பயணிகள் இறக்கப் பட்டு, துருவப்படுகின்றார்கள். தமிழர்கள் தடுத்து வைக்கப்
படுகின்றார்கள். உரிய ஆவணங்கள், அடையாளப் படுத்தல் பதிவுகள், சான்றுகள் இருந்தாலும் கூட வழி மறிக் கும் படையினருக்கு அல்லது
பொலிஸாருக்கு வழி மறிக் கப்பட்ட தமிழரின் தோற்றம் குறித்து மனதில் ஏதும் சந்தே கம் தோன்றுமானால் அந்தத் தமிழர் தடுக்கப்படுகின்றார்;
கைதுசெய்யப்படுகின்றார். ஏற்கனவே தயாராக இருக்கும் தடுப்புக் காவல் உத்தரவுப் பத்திரத்தில் அவரது பெயர் பொறிக் கப்படுவதோடு அவர் தடுப்புக்
காவல் கைதியாகின்றார்.இவ்வாறு கண்களில் கண்ட தமிழர்கள் எல்லோரையும் அள்ளுவதன் மூலம் புலிகளை மடக்கிப் பிடிக்கலாம் என்ற தென்னிலங்கை அறிவாளிகளின்
"அதிபுத்திசாலித்தன' சிந்தனை செயலுருவில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.தடுப்புக் காவல் கைதிகளாக மாறிக்கொண்டிருக்கும் தமி ழர்களின் எண்ணிக்கை கடந்த ஓரிரு நாட்களில் பல ஆயிரங் களைத் தாண்டிக்
கொண்டிருக்கின்றது.வேறு ஏதேனும் குற்றமும் செய்யாமல் தமிழனாகப் பிறந்த குற்றத்துக்காக கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப் படல் என்ற அவமானத்துக்கும்
அச்சுறுத்தலுக்கும் தமிழ்ச் சமூகம் முகம் கொடுத்துக் கொண்டிருக்க, அந்தத் தமிழ் மக் களின் வாக்குகளில் ஏறி, எம்.பிக்களான சிலர் அமைச்சு பதவி
களைச் சுகித்துக்கொண்டு உல்லாசம் கழிக்கின்றார்கள்.விடுதலைப் புலிகளோடு அரசு யுத்தம் புரிவதும், "பயங் கரவாத எதிர்ப்பு' நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வேறு. அதற்காகக் கண்ணில் கண்ட
எல்லாத் தமிழர்களையும் பயங்கரவாதச் சந்தேக நபர்களாக அடையாளம் கண்டு தீர் மானிப்பது வேறு.புலிகள் இயக்கத்தோடு அல்லது அதன் செயற்பாடுகளு டன் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள், அதன் மூலம் தனது நாட்டின் சட்டங்களை மீறியவர்கள்
என்று கருதுவோரை தென்னிலங்கை அரசு கைது செய்வதும், தடுத்து வைப்ப தும், விசாரணை செய்வதும் பெயருக்கேனும் நியாயப்படுத் தக்
கூடியவைதான்.இவை எதுவுமில்லாமல், தமிழன் என்பதற்காக ஒவ்வொ ருவரையும் சந்தேக நபராகவும், பயங்கரவாதியாகவும் நோக் குவதும் தீர்மானிப்பதுவும்
மிகமோசமான நடவடிக்கையா கும். ஒன்றுமறியாத அப்பாவிகளுக்கு புலிச் சந்தேக நபர்கள் என்ற நாமத்தைச் சூட்டித் தடுத்து வைப்பது தென்னிலங் கைப் பாதுகாப்புப் பிரிவினரின் கையாலாகாத்தனமன்றி வேறில்லை.தமிழ் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தமிழ் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது அரசியல், கொள்கை, கருத்து வேறுபாடுகளைத்
துறந்து ஒரே குரலில் கடுமையாக எதிர்த்துக் குரல் எழுப்பவேண்டிய அராஜகம் ஒன்று தமிழர்களுக்கு எதிராக பெரும் அட்டூழியமாக அரங் கேறிக்
கொண்டிருக்கின்றது.தமது குறுகிய அரசியல் லாபங்கள், பதவி நலன்களைத் துச்சமாக மதித்து; தூக்கி எறிந்துவிட்டு இனத்துக்காக ? தமிழ்பேசும் மக்களுக்கு அந்த இனத்தில்
பிறந்த குற்றத்துக் காக இழைக்கப்படும் இந்த அநாகரிகக் கொடூரத்துக்காக பொங்கியெழ வேண்டிய வேளை இது.தென்னிலங்கை அரசு தமிழ் பேசும் இனத்துக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தை அராஜகமாகப் பயன்படுத்தி அடாவடித்தனமாக நியாயப்படுத்த முடியாத
நீதியற்ற கைதுகளை பெரும் எடுப்பில் கட்டவிழ்த்துவிட்டிருக்கின் றது. புலிச்சந்தேகத்தின் பேரில் அகப்படும் தமிழர்களை எல்லாம் கைது செய்யும் இந்த மிலேச்சத்தனத்துக்கு கருவி யாக அமைந்திருப்பது அவசரகாலச்
சட்டமே என்பது வெள் ளிடைமலை.ஆகவே, இந்தக் கொடூரத்துக்காக அரசுடன் பேசுகின் றோம், கொஞ்சிக் குலாவுகின்றோம், உயர்மட்டத்தில் ஆலோசனை நடத்துகின்றோம். ஜனாதிபதிக்குக்
கடிதம் எழுதுகின்றோம், கடுமையாகக் கண்டிக்கின்றோம் என்று பத்திரிகைகளுக்குக் கதை அளந்து, அறிக்கை வெளியிட் டுக் கொண்டிருப்பதை விடுத்து, ஒருமித்த ஒரே குரலில், சர்வதேசத்தின் செவிப்பறையிலும் ஓங்கி அறையக் கூடிய
விதத்தில், ஏதேனும் காத்திரமான நடவடிக்கையைத் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டும்.வரவு செலவுத் திட்டத்துக்கு போதிய ஆதரவை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியாமல் அல்லாடும் மஹிந்தரின் அரசு, பேரினவாத
சர்ச்சையையும், பௌத்த சிங்கள தேசிய வாத உணர்ச்சியையும் தூண்டிவிட்டுத் தனக்குரிய ஆரவைத் திரட்ட முயல்கிறது. அதற்காக அது அரங்கேற்றும்
திருக் கூத்தே இப்போது கட்டவிழ்கின்றது.தெற்கில் குண்டு வெடித்தால் மட்டுமே தனக்குக் கேட் கும் என்று தனது காதை பக்கச் சார்பாக மூடி வைத்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்துக்கு,
இப்பிரச்சினையை உறைப்பாக உணர்த்தக் கூடிய வகையில் தமிழ் எம்.பிக்க ளின் பதில் நடவடிக்கை தீவிரமாகவும், காத்திரமாகவும், ஆழமாகவும்
இருக்க வேண்டும். செய்வார்களா அவர்கள்?

அரசிடமும், ஜனாதிபதியிடமும் முறையிட்டும் பயன் ஏதுமில்லை
தமிழர்கள் வகை தொகையின்றிக் கைதுசெய்து அடைக்கப்படு வது குறித்து ஜனாதி பதியிடமும் அர சிடமும் முறை யிட்டும் பயன் ஏதுமில்லை
என்று விசனம் தெரிவிக்கின்றது தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு.இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று விடுத்த அறிக்கையில் தெரி
விக்கப்பட்டிருப்பவை வருமாறு:அண்மைக்காலங்களில் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் வாழ்ந்துவரும் தங்கியிருக்கும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர்.தங்களுடைய அடையாள அட்டை, சான்றுகள் முதலான ஆவணங்கள் காண்பித்தும்கூட அவற்றைப் பொருட் படுத்தாமல் தமிழர் என்ற காரணத்திற் காகவே வகை, தொகையின்றி முதியோர், பெண்கள், மாணவர் யாவரையும் காவல்துறையினரும், ஆயுதப்படை யினரும் கைது செய்கின்றனர்.இவ்வாறு கைது செய்யப்படு வோர் ஏன் கைது செய்யப்படுகிறார்கள் என்பதோ, எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதோ தெரிவிக்கப்படுவதில்லை.இதனால் இவர்களின் பெற்றோரும் உறவினரும் கண்ணீர் விட்டுக் கதறி அழுகின்றனர். கைதுசெய்யப்படு பவர்களைத் தேடி அலைகின்றனர். அவலமும்
பதற்றமும் அதிகரித்துள்ளன. இந்நாட்டின் ஜனாதிபதியிடமும் அரசிடமும் இவ்விடயம் குறித்துமுறை யிட்டும் பயனில்லை என்பதே நிலை.இருப்பினும், தொடர்ந்தும் கண் மூடிக் கொண்டிருக்காமல் கைது செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை உடன் விடுதலை செய்விக்குமாறு ஜனாதிப
தியிடமும், சர்வதேச சமூகத்திடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.நாளை (திங்களன்று) நாடாளுமன் றத்திலும் இவ்விடயம் குறித்துக் குரலெ ழுப்புவோம். ஏனைய தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினனர்களுடனும்
கலந்து பேசி அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையிட்டுத் தீர்மானிப்போம்.இத்தகைய இனவாத அடிப்படை யிலான கைது நடவடிக்கைகள் மனித உரிமை மீறலின் உச்சக்கட்டமாக இலங் கையில் தொடர்கின்றன.குறிப்பாகச் சர்வதேசம் நேரடியாகத் தலையிட்டு மனிதஉரிமைகளையேனும் நிலைநாட்டவேண்டுமெனக் கோருகின்றோம். என்று உள்ளது.
நன்றி: உதயன், தினக்குரல்

No comments: