Sunday, 6 January 2008

ஈழச்செய்திகள் 06012008 புலிகள் பலம் இழந்துவிட்டார்கள்- அரசு, நம்பக்கூடியது அல்ல- அத்தாஸ்

Posted on : Sun Jan 6 7:55:00 2008
புலிகள் பலம் இழந்துவிட்டார்கள் என்பது நம்பக்கூடியது அல்ல
இராணுவ ஆய்வாளர் அத்தாஸ் கருத்து

விடுதலைப் புலி கள் பலமிழந்து விட் டார்கள் என்று கூறுவது நம்பக்கூடிய தாக அல்ல.இப்படிக் கூறியி ருக்கிறார் பிரபல இரா ணுவ ஆய்வாளர் இக் பால் அத்தாஸ் வெளிநாட்டுச் செய்திச் சேவை ஒன் றுக்கு அளித்த பேட்டியிலேயே அத்தாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.இராணுவரீதியில் புலிகளை வெல்ல முடியும் என்று படைத்தளபதிகளும் மற் றும் அரசுத் தலைவர்களும் கூறியுள்ள னர். அடுத்து உடனடியாக போர்
மூளுமா என்று கூற இயலாது. ஆனால் நிச்சயமாக போர் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையிலும் பல வெளிநாடுகளி லும் ஸ்ரீலங்கா இராணுவம் பலம் மிக்கதாகி விட்டது போன்ற கருத்து நிலவுகின்றது .உண்மையில் இங்கு என்ன நடக்கிறது என்பதை ஊடகங்களில் எழுதமுடியாது என்பது இதற்கு முக்கியமான ஒருகாரணம். மேலும் "பயங்கரவாதத்தை
இதோ ஒழித்துக் கட்டுகிறோம்' என்று கூறி கடந்த 20 வருட காலப்பகுதியில் சொன்னவர்கள் பலர்.என்னைப் பொறுத்தவரையில் புலிகள் பலமிழந்துவிட்டார்கள் என்று கூறுவது நம் பக்கூடியதாக இல்லை. அவர்கள் இன்னமும் முழு பலத்துடன்
உள்ளதாகவே நான் கருது கிறேன் .தினமும் இவ்வளவு புலிகள் கொல் லப்படுகிறார்கள் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் இதுவரை கூறிய எண்ணிக்கையின்படி பார்த் தால் இப்போது ஒரு
புலிவீரர்கூட இருக்க முடியாது. இப்படி அத்தாஸ் மேலும் கூறினார்.

யுத்தநிறுத்தத்தை கைவிடும் தீர்மானம் நோர்வக்கு அறிவிப்பு
[04 - January - 2008]

*இணைத்தலைமை, இந்தியாவுக்கு விளக்கமளித்தார் போகொல்லாகம -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் விலகிக் கொள்ளும் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக
சமாதான அனுசரணையாளரான நோர்வேக்கு நேற்று வியாழக்கிழமை மாலை அறிவித்திருக்கிறது.
கொழும்பிலுள்ள நோர்வேத் தூதுவர் ரொரி காத்ரெம்மை நேற்று மாலை சந்தித்த வெளி விவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அரசாங்கத்தின் தீர்மானத்தை அவருக்கு தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, 2002 பெப்ரவரி 22 இல் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் அரசின் தீர்மானம் அமைச்சர்
போகொல்லாகமவால் இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு கூட்டுத் தலைமை வகித்த அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம்
ஆகியவற்றுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்தியாவுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை, அரசாங்கத்தின் முடிவு இந்தியா மற்றும் இணைத்தலைமை நாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் நோர்வே
தவிர்ந்த சர்வதேச சமூகம் இதுவரை அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து எத்தகைய பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தவில்லை என அறியவருகிறது.
அலரி மாளிகையில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அன்றைய ஐ.தே.க அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு புலிகளுடன்
மேற்கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்தும் விலகிக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
இவ்வறிவிப்பு வெளியானவுடனேயே நோர்வேயின் சர்வதேச சமாதான அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இது தொடர்பில் தனது
கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையிலேயே, அரசாங்கம் யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதென தீர்மானித்துள்ளதையடுத்து எதிர்பார்க்கப்படும் சர்வதேச
அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள தூதுவர்களை வெளிவிவகார அமைச்சிற்கு அழைத்து அவசர விளக்கம்
வழங்கியுள்ளதாக அறியவருகிறது.
நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தனது அமைச்சில், கொழும்பிற்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தை
அழைத்து யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலக நேர்ந்தமைக்கான காரணத்தை விபரித்துள்ளார்.
இவ்வாறே அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களுக்கும் இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விளக்கியுள்ளார்.
அத்துடன், கொழும்பிற்கான நோர்வே தூதுவர் ரொரி காத்ரெமுக்கும் யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலக நேர்ந்தமைக்கான
காரணத்தையும் விரிவாக வெளிவிவகார அமைச்சர் விளக்கியுள்ளார்.
இச் சந்திப்பு தனியாகவே நேற்று மாலை நடைபெற்றுள்ளது. அரசாங்கத்தின் தீர்மானமும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, அரசாங்கத்தின் இத்தீர்மானம் குறித்து நோர்வே தவிர்ந்த சர்வதேச சமூகத்திடமிருந்து எத்தகைய பிரதிபலிப்புகளும் வெளிவராத
நிலையில், சிங்கள கடும்போக்கு கட்சிகள் வரவு - செலவுத் திட்ட வாக்களிப்பில் நடுநிலையாக வாக்களித்து அரசாங்கத்தை காப்பாற்றியதற்கு
பிரதியுபகாரமாகவே யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலக நேர்ந்தமைக்கான காரணமென சிலதரப்புகள் சுட்டிக்காட்டுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் உத்தியோக பூர்வமாக முடிவு
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதியுடன் உத்தியோக பூர்வமாக செல்லுபடியற்றதாகிவிடும்.
இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை நோர்வே அரசாங்கத்துக்கு இலங்கை அறிவித்துள்ளது.
22 பெப்ரவரி 2002 இல் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் சரத்து 4.4 இன் பிரகாரம் போர் நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட
தரப்பினரில் ஒருசாரார் 14 நாட்களுக்கு முன்னர் யுத்த நிறுத்தத்தை கைவிடுவதாக அனுசரணையாளரான நோர்வேக்கு அறிவித்தால் அன்றைய
தினத்திலிருந்து 14 நாட்களின் பின் உடன்படிக்கை செல்லுபடியற்றதாகிவிடும். இதற்கு இணங்க அரசாங்கம் நேற்று 3 ஆம் திகதி நோர்வேக்கு
அறிவித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
அத்துடன், இலங்கை கண்காணிப்புக் குழுவை அமைத்தல், நிர்வகித்தல் தொடர்பான உடன்படிக்கையும் 18 மார்ச் 2002 இல் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையில் 18-3-2002 இல் கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையும் 16 ஜனவரி 2008 உடன் முடிவுக்கு
கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக புலிகளை தடைசெய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை
[04 - January - 2008]
திட்டமிட்டபடி தீர்வு முயற்சி முன்னெடுப்பு; அமைச்சர் யாப்பா எம்.ஏ.எம்.நிலாம்
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசு விலகிக்கொள்வதால் இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு எந்தவிதமான தடையும்
ஏற்படப் போவதில்லையெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்யும் முடிவேதுவும் உடனடியாக
மேற்கொள்ளும் எண்ணம் அரசுக்குக் கிடையாதெனவும் சுட்டிக்காட்டியது.
சர்வகட்சி மாநாடு தெரிவிக்கும் சிபாரிசுகளின் அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அரசு அறிவித்தது.
அமைச்சரைவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்
கூடத்தில் நடைபெற்ற போது அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷண யாப்பா மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
"நாட்டின் தற்போதைய நிலைமைகளை அமைச்சரவை விரிவாக ஆராய்ந்த நிலையில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கவினால் அரசுக்கும்
விடுதலைப் புலிகளுக்குமிடையில் 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன் படிக்கையை விடுதலைப் புலிகள் பல
தடவைகள் மீறியுள்ளதாலும் சமாதானத் தீர்வொன்றுக்கு வருவதில் புலிகள் ஒருபோதும் இணக்கப்பாட்டுக்கு வராததாலும் இந்த உடன்படிக்கையை
தொடர்ந்தும் பின்பற்றுவது என்பதில் அர்த்தமில்லையெனவும் அதிலிருந்து அரசு விலகுவதே சரியானதெனவும் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த யோசனையை அமைச்சரவை கொள்கை ரீதியில் ஏற்றுக் கொண்டு அதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையை பிரதமரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசு விலகுவதால் அரசியல் தீர்வு முயற்சிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. ஜனாதிபதியால்
அமைக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு அதன் சிபாரிசுகளை அரசுக்கு தந்த பின்னர் அதனடிப்படையில் அரசியல் தீர்வு முயற்சிகள் முன்கொண்டு
செல்லப்படும். பெப்ரவரி மாதத்தில் சர்வகட்சி குழு சிபாரிசுகளை அரசுக்குத் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உடன் படிக்கையிலிருந்து அரசு விலகியதன் பின்னர் புலிகளுடன் எதிர்காலத்தில் புதிதாக எந்த விதமான உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட மாட்டாது. பயங்கரவாதத்தை எதிர் கொண்டு தோற்கடிப்பதும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் இரண்டு விடயங்களாகும்.
அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டு தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் அங்கீ காரம் பெறப்பட்டதும் விடுதலைப் புலிகள் உட்பட சகல
அமைப்புகளுக்கும் அதனை வழங்கி பேச்சுவார்த்தையை தொடர்வோம். புலிகள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் தமிழ் மக்களின்
பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியை அரசு ஒரு போதும் கைவிடப்போவதில்லை.
அரசின் முடிவு விரைவில் சர்தேச சமூகத்துக்கும் அனுசரணையாளர்களுக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்பாளர் குழுவுக்கும் அறிவிக்கப் படும். போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவுக்கு அரசாங்கம் முக்கிய ஆலோசனைகளை வழங்கவிருக்கின்றது. அதனடிப்படையிலேயே அவர்களது பணிகள் எதிர் காலத்தில் அமைய வேண்டுமெனக் கேட்கப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று உக்கிரச் சண்டை

மன்னார் மேற்கை அண்டிய பாலைக்குழி அணைக்கட்டுப் பகுதியில் நேற்று அதிகாலை முதல் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையில்
கடும் மோதல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று அறியவந்திருக்கிறது. எனினும், வழமைபோல் இரு தரப்பினரும் இந்த மோதல் தொடர்பில்
முரண்பட்ட தகவல்களை தெரிவித்திருக்கின்றனர்.அதிகாலை 5.30 மணியளவில் அந்தப் பகுதியிலிருந்து படையினர் ஆட்லறிகள், மோட்டார்கள், பல்குழல் ஏவுகணைகள் மற்றும் எறிகணைகள் சகிதம்
முன்னேறி வந்தனர் என்றும், இவர்களின் முன்னேற்றத்திற்கு முகம்கொடுத்து, கடும் எதிர்த் தாக்குதலை நடத்திய தமது போராளிகள், அரச
படையினரின் முன்னேற்ற நடவடிக்கையை வெற்றிகரமாக முறியடித்திருக்கின்றனர் என்றும் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.முற்பகல் 11 மணிவரை நீடித்த இந்த மோதலில் பத்துப் படையினர் உயிரிழந்துள்ளனர் என்றும், 15 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தனர்
என்றும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்திருக்கின்றனர். தமது தரப்பில் எதுவித இழப்புகளும் ஏற்படவில்லை என்றும், மோதலின் பின்னர்
படையினர் பழைய நிலைகளுக்கு பின்வாங்கி ஓடிவிட்டனர் என்றும் புலிகள் மேலும் குறிப்பிட்டனர்.இதேவேளை, இந்த மோதலில் ஆறு விடுதலைப்புலி உறுப்பினர்கள் உயிரிழந்திருக்கின்றனர்,மேலும் 12 பேர் காயமடைந்திருக்கின்- றனர் என்று படைத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.அத்துடன், தமது தரப்பில் படைவீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் 6 பேர் வரை காயமடைந்தனர் என்றும், விடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகள் மோதலில் தாக்கியழிக்கப்பட்டன என்றும் படைத்தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை முன்வைத்தால் சித்திரை புதுவருடத்துக்கு முன் ஆட்சியை கவிழ்ப்போம் வீரவன்ச எச்சரிக்கை;
1/4/2008 7:01:12 PM வீரகேசரி இணையம்

இந்தியத் தலைவர்களையும் சர்வதேச சமூகத்தையும் திருப்திபடுத்துவதற்காக அரசாங்கம் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்
அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தினை முன்வைத்தால் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேசப்பற்றாளர்களுடன் இணைந்து
அரசாங்கத்தினை கவிழ்ப்போம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளரும் ஜே.வி.பியின் பிரசார செயலாளருமான விமல் வீரவன்ச
தெரிவித்தார்.
அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையினை இரத்துச் செய்ததுடன் நின்று விடாது புலிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின்
ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது:
எமது படையினர் தமது உயிர்களை கொடுத்து விடுதலைப் புலிகளை பலவீனமடையச் செய்து வன்னியையும், முல்லைத்தீவையும் மீட்க தயாராகின்ற
வேளையில் அமைச்சர் திஸ்ஸ விதாரண போன்று மக்கள் பலமில்லாதவர்களின் நாட்டை பிரிக்கும் அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை
முன்வைக்க இடமளிக்க முடியாது.
அத்தோடு அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை முன்வைக்க இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே, அதனை மீறும்
அதிகாரம் அரசிற்கு கிடையாது. திஸ்ஸவின் கிராம வைத்தியத்திற்கு இடமில்லை.
எனவே, அரசாங்கம் இந்தியத் தலைவர்களையும், சர்வதேச சமூகத்தையும் திருப்திபடுத்த அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை பெப்ரவரி 4 ஆம்
திகதிக்கு முன்பதாக முன்வைத்தால் ஏப்ரல் தமிழ், சிங்கள புதுவருடத்திற்கும் முன்பதாக தேசப்பற்றாளர்களுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்போம்.
எனவே, இந்தியத் தலைவர்களை திருப்திப்படுத்துவதா? ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதா? என்பதனை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்தவுடன் செய்ய வேண்டியதை இரண்டு வருடங்கள் கழித்து அரசாங்கம் செய்துள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச்
செய்துள்ளதோடு அதிலிருந்து விலகியுள்ளது. இதனை வரவேற்கின்றோம். இத்தோடு நின்று விடாது விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்து
தனிமைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சர்வதேச தொடர்புகளும், ஊடகங்களில் செய்திகளும் தொடர்புகளும் தொடரும்.
ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததன் மூலம் சர்வதேச, தேசிய சதிகாரர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். இதனை உருவாக்கிய ஜ.தே. கட்சிக்கு பதில் கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments: