Friday, 11 January 2008

ஈழச்செய்திகள்:110108:பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஒரு கட்டமாகவே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகினோம்

Posted on : Wed Jan 9 10:05:00 2008 .
பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஒரு கட்டமாகவே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகினோம்
புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்கமுடியாது
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமா கவே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசு விலகி யுள்ளது. ஒரு தலைப்பட்சமாக அந்த ஒப்பந்தத்தைப் பேணுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிக் கும் பிரேரனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பேசு கையில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இப்படித் தெரிவித்தார் அவர் அப்போது மேலும் கூறியதாவது: சமாதானப் பேச்சுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம். ஆனால், அதற்காகப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக நாம் ஏற்க முடியாது.ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச நாம் என்றும் தயாராகவுள்ளோம். இருந்தாலும் பேச்சுக்கு வர புலிகளுக்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளது. இது பற்றிய இறுதித் தீர்மானம் அவர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.மகேஸ்வரனின் கொலைக்கு அரசு தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறான கொலைகளை அரசு ஒருபோதும் ஏற்காது.வணக்கஸ்தலம் என்று கூடப் பார்க்காமல் புலிகள் கொலை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்கள். கொலைக் கலாசாரத்தை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் புலிகள்தான் என்றார்.

கொழும்பு கோட்டையின் கேந்திரப் பகுதியில் லேக்ஹவுஸ் முன்பாக இரவில் குண்டுவெடிப்பு!

தலைநகர் கொழும்பின் கேந்திர முக்கி யத்துவம் வாய்ந்த இடமான கோட்டையில் லேக்கவுஸ் பகுதியில் நேற்றிரவு 7.50 மணியளவில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அதி உச்ச பாதுகாப்பு வலயத்துக்கு உட் பட்ட இப்பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பொதுமக்களுக்கோ பாதுகாப் புத் தரப்பினருக்கோ எவ்வித சேதமும் ஏற் படவில்லை என்று முற்கொண்டு அறி விக்கப்பட்டது. "றீயன்ட்' தொடர் மாடியில் உள்ள மாடி ஒன்றில் அமைந்த தொலைபேசிக் கூண்டு (Telephone Booth) இற்குள் இக்குண்டு வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட் டது. குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி யினால் பாதிக்கப்பட்ட இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட் டனர் என வைத்தியசாலை வட்டராங்கள் தெரிவித்தன. இச்செய்தி எழுதப்படும் வரை குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய மேலதிக விவரங்கள் எதுவும் தெரியவரவில்லை. குண்டுவெடிப்பு இடம்பெற்ற தொலை பேசிக் கூண்டு சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. அப்பகுதியில் சிறியள விலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவம்இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த பொலி ஸாரும் படையினரும் வீதியைத் தடை செய்து சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.""லேக்ஹவுஸ் சுற்று வட்டத்துக்கு எதிரே உள்ள வர்த்தக நிறுவனங்கள் அமைந்த தொடர் மாடிகளுக்குச் சமீபமாக உள்ள தொலைபேசி கூண்டுக்கு உள் ளேயே இக்குண்டு வைக்கப்பட்டிருந்தது. இது நிச்சயமாக புலிகளின் வேலையே'' என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.தென்பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ள இந்த இரண்டாவது குண்டுவெடிப்புச் சம்பவம் தலைநகரில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் மட்டக்களப்பில் கொலை.
1/9/2008 3:16:05 PM வீரகேசரி இணையம்
மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான சங்கர் என்பவர் விசேட அதிரட்டிப்படையின்ரால் இன்று சுட்டுகொலைசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இன்று பகல் 12.45 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் சவுக்கடி என்ற இடத்தில் நடத்திய பதில் தாக்குதல் ஒன்றிலேயே இவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Wed Jan 9 10:05:00 2008
மன்னார், முகமாலையில் நேற்றும் மோதல்கள்
மன்னார் முன்னரங்க நிலைகளில் விடு தலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் இராணு வத்தினரின் நிலைகளுக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலின்போது 6 புலிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் பெரிய தம்பனைப் பகுதியில் மதியம் இடம்பெற்ற பிறிதொரு மோதலிலும் 4 புலிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.இதேவேளை யாழ்ப்பாணம் நாகர் கோவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதலில் 2 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளதுடன் இரு பதுங்கு குழிகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்றும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் கிளாலிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3 விடுதலைப் புலிகள் காயமடைந்துள்ளனர் என்றும் படைத்தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.இம் மோதல்கள் தொடர்பாக புலிகள் தரப்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Wed Jan 9 10:10:00 2008 .
ஜா-எல வீதியோரக் குண்டுவெடிப்பில் அமைச்சர் தஸநாயக்கா பலியானார் சாரதி, காவலரும் மரணம்; 10பேர் காயம் தலைநகர் கொழும்புக்கு வெளியே ஜாஎலவில் வீதியோரத்தில் இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர்க் குண்டுத் தாக்குதலில் தேச நிர்மாண அமைச்சர் டி.எம்.தஸநாயக்காவின் (வயது 54) வாகனம் சிக்கியதில் அவர் படுகாயமடைந்து, பின்னர் உயிரிழந்தார். அவரது வாகனச் சாரதியும் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் இச்சம்பவத்தில் பலியானார்கள். பொதுமக்கள் உட்படப் பத்துப்பேர் படுகாய மடைந்தனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரி விக்கப்பட்டது.புதுவருடத்தின் பின்னர் நேற்று முதல் தடவையாகக் கூடிய நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காகக் கொழும்பு நோக்கி அமைச்சர் வந்து கொண்டிருந்தபோதே காலை 10.38 மணியளவில், கொழும்பு நீர்கொழும்பு பிரதான வீதியில், ஜா எலப் பகுதியில், முன்னாள் சிங்கள நடிகை ருக்மணி தேவியின் சிலைக்கு அண்மித்த பகுதியில் அவரின் வாகனம் இந்த அனர்த்தத்தில் சிக்கியது.அமைச்சர் தஸநாயக்காவின் வாகன அணியில் அமைச்சர் பயணித்துக் கொண்டிருந்த வெள்ளை நிற டொயாட்டோ லாண்ட் குரூஸர் வாகனமே மேற்படி கிளை மோருக்கு பிரதான இலக்காகச் சிக்கியது. படுகாயமடைந்த அமைச்சரும், வாகனத்தில் இருந்த ஏனையோரும், அப்பகுதியில் காயமடைந்த ஏனைய பொதுமக்களும் உடனடியாக றாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.அமைச்சர் தஸநாயக்காவும் அவரது சாரதியும், மெய்ப்பாதுகாவலர்களுள் ஒருவரும் தங்களது காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.படுகாயமடைந்தவர்களில் மேலும் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. அவர்கள் றாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் தேச நிர்மாண அமைச்சில் பல்வேறு அமைச்சர்கள் அமைச்சரவை அந்தஸ்து அற்ற நிலையில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரே டி.எம். திஸநாயக்கா என்பது குறிப்பிடத்தக்கது.அண்மையில் அரச படையினரால் மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் புனர்வாழ்வுப் பணிகளை நேரடியாகக் கவனிக்கும் பொறுப்பாளராகச் செயற்பட்டு வந்தவர் தஸநாயக்கா. அவர் புத்தளம் மாட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

Tue Jan 8 9:05:00 2008
50%

மாகாணசபை முறைமை ஊடாக ஐம்பது வீதத் தீர்வை எட்டமுடியும் அதன் வழி முயற்சிக்க அமைச்சர் டக்ளஸ் வற்புறுத்தல் இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறைமையின் ஊடாகத் தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொள்கையளவில் இணங்கியுள்ளõர் என்றும், இம்முறைமை இனப்பிரச்சினைக்கு ஐம்பது வீதத் தீர்வைத் தரும் என்றும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்றுக் கூறினார்.சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி யோசனைக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் அங்கீகாரம் கிடைக்கப்போவதில்லை என்று கூறிய அவர், மாகாண சபை முறைமைதான் அனைவரும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான தீர்வு என்றும் சொன்னார்.மாகாணசபை முறைமையைவிட நடைமுறைச் சாத்தியமான தீர்வு யோசனைகளை எவராவது முன்வைத்தால் தனது யோசனையைத் தாம் வாபஸ் பெற்றுவிடுவார் என்றும், புலிகளின் தலைவர் பிரபாக ரன் வன்முறைகளைக் கைவிட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வு காணமுற்படுவாரேயானால் தாம் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்றும் கூட டக்ளஸ் தேவானந்தா கூறினார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தனது அமைச்சில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை தீர்த்துவைக்கப்படாமைக்கு புலிகள்தான் காரணம். புலிகளுடன் பேசித் தீர்வு காணவேண்டும் என்ற அபிப்பிராயம் இப்போது மாறிவிட்டது.புலிகள் வேறு; தமிழ் மக்கள் வேறு என்று வேறுபடுத்திப் பார்க்கும் நிலை இப்போது தோன்றிவிட்டது. புலிகளின் பிரச்சினை பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. தமிழர்களின் பிரச்சினை அவர்களின் உரிமைகளுடன் தொடர்புடையது.புலிகள் பேச்சு மீது நம்பிக்கை வைக்காது பயங்கரவாதம் மீது நம்பிக்கை வைத்துச் செயற்படுவதனாலேயே தீர்வு முயற்சிகள் முடங்கிக் கிடக்கின்றன.தமிழ் மக்களின் பிரச்சினைக்கு மாகாண சபை முறைமையே பொருத்தமானது. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். வடக்கு கிழக்கைத் தவிர நாட்டின் ஏனைய மாகாணங்களில் மாகாணசபை முறைமை நடைமுறையில் உள்ளது.பல அரசியல் கட்சிகள் இதை ஏற்றுள்ளன. ஜே.வி.பி. கொள்கையளவில் இம்முறைமையை எதிர்த்தாலும் கூட, இம்முறைமையின் ஊடாக தமிழர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வை வழங்கினால் அதைத்தான் எதிர்க்காது என்றும் கூறுகின்றது.இதேவேளை, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்கவுள்ள தீர்வு யோசனையையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால், அத்தீர்வுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அங்கீகாரம் கிடைக்கப்போவதில்லை.இடைக்காலத் தீர்வு அவசியம்சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனை இறுதிசெய்யப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படும் வரை மாகாணசபை முறைமையின் ஊடாக இடைக்காலத்தீர்வு ஒன்று வழங்கப்படுதல் அவசியம்.மாகாணசபை முறைமை எமது அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாலும், நாட்டின் பல இடங்களில் அம்முறைமை நடைமுறையில் இருப்பதனாலும் அம்முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியப்படும்.மாகாணசபை முறைமை மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். முதல் இரண்டு கட்டங்களும் வெற்றியைத் தரும். மூன்றாவது கட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது புலிகள் விரும்பியோ விரும்பாமலோ ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தே ஆகவேண்டி நேரும்.மாகாணசபை சட்டத்தின் கீழ் பிராந்திய பொலிஸ் நிலையங்களை அமைக்கமுடியும். இதன்மூலம் அந்தந்தப் பிராந்தியங்களில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கலாம். இவ்வாறு பல நன்மைகள் இம்முறைமையின் ஊடாக மக்களுக்குக் கிடைக்கும்.இம்முறைமை இனப்பிரச்சினையில் குறைந்தது ஐம்பது வீதத்தையாவது தீர்க்கும். இம்முறைமையின் ஊடாக இனப்பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி கொள்கையளவில் இணங்கியுள்ளார்.இதைவிடச் சிறந்த தீர்வுயோசனையை வேறு எவராவது முன்வைத்தால் எனது யோசனையை நான் வாபஸ் பெற்றுவிடுவேன்.அதேபோல் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிட்டு விட்டு அரசியல் தீர்வு மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருவாரானால் நான் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவேன்.நான் சமர்ப்பித்துள்ள தீர்வு யோசனைக்கு எனது அமைச்சுப் பதவி தடையாகவிருந்தால் தமிழ் மக்களுக்காக அப்பதவியைத் தூக்கி வீசவும் நான் தயார்.இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

Tue Jan 8 9:05:00 2008
தமிழர் பேரழிவுக்கு சாட்சியம் இல்லாமல் செய்யவே கண்காணிப்புக் குழு வெளியேற்றப்படுகிறது
**அரசின் உள்நோக்கத்தை அம்பலமாக்குகிறார் கஜேந்திரகுமார்

நாட்டின் இறைமையைப் பாதுகாப்பது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது தான் கட்டவிழ்த்துவிடப்போகின்ற பேரழிவிற்கு சாட்சியங்கள் எவையுமிருப்பதை அரசு விரும்பவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதன் காரணமாகவே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்."தமிழ்நெற்' இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள ஒரு செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:கேள்வி: இலங்கை அரசு யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு 16ஆம் திகதி முதல் தனது நடவடிக்கைகளை முடித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. யுத்தநிறுத்த உடன்படிக்கை வெறுமனே ஆவணம் என்ற ரீதியில் மாத்திரம் காணப்பட்ட ஒரு நிலையில் அரசு இந்த முடிவை எடுப்பதற்கான காரணம் என்னவெனக் கருதுகிறீர்கள்?பதில்: போர்நிறுத்த உடன்படிக்கை பயனற்றதாகக் காணப்பட்ட போதிலும் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரசன்னம் வடக்கு, கிழக்கில் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது. அக் குழு தொடர்ச்சியாக அறிக்கைகளை விடுத்துவந்தது. சமீபகாலமாக கிழக்கில் அரசின் செயற்பாடுகளை அக்குழு வெளிப்படுத்தி வந்தது.அரசு தனது இராணுவ செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவைச் செயலிழக்கச் செய்ய எண்ணியது.நாட்டின் இறைமையைப் பாதுகாப்பது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது தான் கட்டவிழ்த்துவிடப்போகின்ற பேரழிவிற்கு சாட்சியங்கள் எதுவும் இருப்பதை அரசு விரும்பவில்லை.அரசு எவ்வித கட்டுப்பாடுகளும், தடையுமின்றி செயற்பட விரும்புகின்றது. வடக்கு கிழக்கு குறித்துத் தனது (அரசினது) அறிக்கைகள் மாத்திரம் வெளிவரும் சூழலை அது உருவாக்க விரும்புகின்றது.இன்னுமொரு விடயம், அரசு தன்னைப் பற்றி உருவாக்க விரும்பும் தோற்றம். யுத்த நிறுத்த உடன்படிக்கையும் கண்காணிப்புக் குழுவும் மேற்குலகினால் உருவாக்கப்பட்டதாக ஒரு கருத்து உள்ளது. தென்னிலங்கையில் தற்போது காணப்படும் சிங்கள தேசியவாத உணர்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது இவற்றை ரத்துச் செய்வது வாக்காளர்கள் மத்தியில் அரசுக்கு சாதகமான நிலைமையை உருவாக்கும்.கே: வடக்கு, கிழக்கிலிருந்து சாட்சியங்களை அகற்றுவது, தகவல்களுக்குத் தான் மாத்திரமே சொந்தமாகவிருக்க வேண்டுமென நினைப்பது போன்றவையே காரணமென்றால் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு மாத்திரம் தகவல்களைத் தெரிவிப்பதில்லையே....?ப: நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடமிருந்து மாத்திரம் தகவல்கள் வெளியாவதில்லை. பல சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகள் உள்ளன. ஊடக அமைப்புகள் பொது அமைப்புகள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் என பல தரப்புகள் உள்ளன.சுயாதீனச் செயற்பாட்டுக்குஇதேவேளை, இருதரப்பினரும் திட்டமிட்ட வகையில் கடந்த இரு வருடங்களாக இலக்குவைக்கப்பட்டுவருகின்றனர். சுதந்திரமாக பாதுகாப்பாக செயற்பட முடியாத நிலையிலேயே அவர்களும் உள்ளனர்.சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் பாதுகாப்பாகச் செயற்படமுடியாத நிலையை அரசு உருவாக்குகின்றது என்பதும் நன்கு தெரிந்த விடயம்.வடக்குக் கிழக்கில் பணியாற்றிய பல சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகள் தற்போது செயற்படுவதில்லை. வேறு சிலர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.வடக்கு, கிழக்கில் சுயாதீன செயற்பாட்டாளர்களுக்கான இடம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. இதன் உச்சமே யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு வெளியேற்றம்.சாட்சியங்கள் இருப்பதைத் தவிர்ப்பதும், தனது தகவல்களுக்கு எதிர்ப்பு எழுவதைத் தவிர்ப்பதுமே ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்களை இலங்கை அனுமதிக்காததன் நோக்கம்.மனிதாபிமான நெருக்கடி ஒட்டுமொத்தத் தந்திரோபாயம்கே: சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகள் மீதான அரசின் நடவடிக்கைகள் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடியை அதிகரிக்கச் செய்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?ப: வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடி அரசின் இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உருவானதல்ல, மாறாக ஒட்டுமொத்த தந்திரோபாயத்தின் ஒரு பகுதியே அது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்திற்கு பல காலமாக எடுத்துக்காட்டி எச்சரித்து வந்துள்ளது.எமது எச்சரிக்கைகள் சரியானவை என்பது கிழக்கில் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட விதம் மூலம் புலனாகியுள்ளன.வடக்கு , கிழக்கில் அரசு இனிமேல் முன்னெடுக்கவுள்ள இராணுவ நடவடிக்கைகளும் இதுபோல அமையும், மனிதாபிமான நெருக்கடிகளை மேலும் மோசமாக்கும்.கே: வடக்கு, கிழக்கில் அரசின் நோக்கம் குறித்து நீங்கள் தெளிவுபடுத்தினீர்கள். மகேஸ்வரன் கோவிலுக்குள் படுகொலை செய்யப்பட்டார். மனோகணேசன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்கிறார். இவர்கள் இருவரும் வடக்கு,கிழக்கிற்கு வெளியே செயற்பட்டவர்கள். இது குறித்த உங்கள் கருத்தென்ன?ப: தென்பகுதித் தமிழர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதற்கான பல காரணங்கள் உள்ளன. முதலாவது இருவரும் தமிழர்கள். இலங்கை அரசைப் பொறுத்தவரை தமிழர்கள் இலகுவாக அழிக்கப்படக்கூடியவர்கள்.இரண்டாவது இருவரும் அரசை விமர்சிப்பவர்கள். அரசு தன்னை விமர்சிப்பவர்களை மௌனமாக்க முயல்கிறது. தமிழர்களாகவிருந்தால் அது மேலும் இலகுவாகும்.மூன்றாவதாக அரசிடம் பாரிய திட்டமுள்ளது. தனது இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தும் போது தென்பகுதி அமைதியாக இருப்பதை அது விரும்புகின்றது. இதனால், அனைத்துத் தமிழர்களையும் அது ஆபத்தாக கருதுகின்றது. இதற்காக தமிழர்களை முற்றாக கொழும்பிலிருந்து அகற்றவேண்டும் அல்லது அச்சுறுத்தவேண்டும் என அது நினைக்கிறது.பிரபலமான தமிழர்கள் இலகுவாகக் கொல்லப்படுவதன் மூலம், சாதாரண தமிழர்களுக்கான செய்தி தெளிவாகிறது.நான்காவது இலங்கை அரசு தேர்தல் குறித்தும் சிந்திக்கின்றது. தேர்தல்கள் இடம்பெற்றால் எதிரணிக்கான வாய்ப்பைக் குறைக்க அது விரும்புகின்றது. கொழும்பில் தமிழர்கள் தனக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதும் அதற்குத் தெரியும்.கொழும்பைத் தளமாகக் கொண்ட எதிர்க்கட்சித் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர்கள் கொழும்பில் போட்டியிட அஞ்சும் நிலையை அது உருவாக்குகின்றது என்றார். அரசின் வெளியேற்றம் தொடர்பில் இணைத்தலைமைகள் ஆராயும்
1/6/2008 11:53:10 PM வீரகேசரி நாளேடு - போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகியுள்ளமை மற்றும் கண்காணிப்புக்குழு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் இணைத் தலைமை நாடுகள் விரைவில் கூடி ஆராயவுள்ளன.
நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் அடுத்த வாரம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மாநாடு நடைபெறவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள இணைத்தலைமை நாடுகள், மாநாடு நடைபெறும் தினம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைத்தலைமை நாடுகளில் அடங்குகின்றன. அமெரிக்காவின் சார்பில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சர், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி, ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இத்தாலிய வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். இது தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த அமெரிக்க தூதரகப் பேச்சாளர் ரெறி வைற் ??? மாநாடொன்றை கூட்டுவதற்கு இணைத்தலைமை நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.
மாநாடு நடைபெறும் தினம் குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. எதிர்வரும் சில நாட்களில் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். அதில் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகியுள்ளமை கண்காணிப்புக் குழுவின் வெளியேற்றம் தொடர்பாக ஆராயப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் நடைபெறுவது சாத்தியமற்றது என தெரிவித்த நோர்வே தூதரக பேச்சாளர் எரிக் நூண்பேர்க், அது தொடர்பில் ஒஸ்லோவிடம் இருந்து தூதரகத்துக்கு இதுவரை எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லை என்றார்.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் முடிவால் இணைத்தலைமை நாடுகள் மிகுந்த கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்த ஜப்பான் தூதரக செயலாளரொருவர், அரசியல்ரீதியான தீர்வை நோக்கி செல்லுமாறு தாம் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இணைத்தலைமை நாடுகளின் கூட்டும் தொடர்பில் தூதரகத்துக்கு இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என அவர் மேலும் கூறினார். இணைத்தலைமை நாடுகளின் மாநாடை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரியொருவர் நிலைமையை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்தார்.

ஜயந்த தனபாலா ராஜினாமா
இலங்கை ஜனாதிபதியுடன் ஜயந்த தனபாலா
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுதலைப் புலிகள் உடனான சமாதான முயற்சியில் பிரதான ஆலோசகராக செயற்பட்ட ஜயந்த தனபாலா ராஜினாமா செய்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் கடந்த 2002 ம் ஆண்டு செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து தன்னிச்சையாக விலகி கொண்டதாக அரசாங்கம் அறிவித்த சில தினத்தில் இந்த ராஜினாமா இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜயந்த தனபாலா கூறியுள்ளார்.
கலாநிதி ஜயந்த தனபாலவை அரசாங்க சமாதான செயலகத்தின் பணியாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நியமித்திருந்தார், அதன் பின்னர் 2005 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இவரை தனது பிரதான ஆலோசகராக நியமித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் பதவிக்கு இலங்கை சார்பில் இலங்கையின் சார்பின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் ஜயந்த தனபாலா.

No comments: