Sunday 13 January, 2008

ஈழச்செய்திகள்:14012008

மட்டக்களப்பில் பள்ளிவாசல் அருகில் துப்பாக்கிச் சூடு
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் முன்பாக கூடியிருந்தவர்கள் மீது சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஆட்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பள்ளிவாசல் பேஷிமாம் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
ஆரையம்பதி - கர்ததான்குடி எல்லையிலுள்ள கர்பாலா கிராமத்தில் ஜாமி - உல் ஹசனத் பள்ளிவாசலில் இரவு நேர இஷா தொழுகையை முடித்துக்
கொண்டு வீடு திரும்புவதற்காக நின்றவர்கள் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஆரையம்பதி பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள ஆயுதக் குழுவொன்றே இதற்கு பொறுப்பு என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ள அதேவேளை, அந்த குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

Posted on : Sun Jan 13 8:15:00 2008
கண்காணிப்புக் குழுவினரின் வவுனியா அலுவலகம் நேற்று மூடப்பட்டது; குடாநாட்டிலிருந்து நாளை புறப்படுவர்
இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப் புக் குழுவின் வவுனியா மாவட்ட அலுவ லகம் நேற்று சனிக்கிழமை மூடப்பட்டது. வவுனியா குருமண்காட்டுப்
பகுதியில் உள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வின் அலுவலகம் நேற்றுக் காலை மூடப் பட்டது. கண்காணிப்புக் குழுப் பிரதிநிதிகள் பயன்படுத்திய பொருள்கள் பலவும் வவு னியாவிலுள்ள முதியோர் இல்லங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. கண்காணிப்புக் குழுவினரின் திரு கோணமலை மற்றும் அம்பாறை மாவட் டங்களில் இயங்கிய அலுவலகங்கள் ஏற் கனவே மூடப்பட்டுள்ளன. அங்கு
அலுவ லகங்களாக இயங்கி வந்த கட்டடங்களை அரசிடம் கையளித்ததாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் பியா ஹன்சன்
தெரிவித்தார். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் நாளையே புறப்படுகின்றனர். யாழ். அலுவலகத்தை மூடி நேற்று கண்காணிப்பாளர்கள் கொழும்பு புறப்பட முடிவு செய்திருந்தனர். எனினும் நேற்று கொழும்புக்கான விமா னச் சேவை இடம்பெறாத காரணத்தால் நாளையே கண்காணிப்பாளர்கள் கொழும்பு செல்கின்றனர். அவர்களின் உடைமைகள் நேற்று கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கொழும்பில் பிரதான வீதிகளில் 24 மணிநேர தேடுதல் நடவடிக்கை
[13 - January - 2008]
.......கொழும்பு நகரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படையினரை ஈடுபடுத்தி முக்கிய பல வீதிகளில் 24 மணிநேர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் வழமையாகப் பயன்படுத்தும் பல வீதிகளிலேயே இந்த 24 மணிநேர
தேடுதல்களும் சோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்காக பத்தாயிரம் ஊர்காவல் படையினர் அடுத்த ஓரிரு நாட்களில் கொழும்புக்கு வரவுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
பேஸ்லைன் வீதி, கொழும்பு - நீர்கொழும்பு வீதி, காலி வீதி மற்றும் பாராளுமன்ற வீதி உட்பட பல்வேறு வீதிகளிலேயே இந்த 24 மணிநேரத் தேடுதலும் சோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறான வீதிகளில் 24 மணிநேரக் கண்காணிப்பை மேற்கொள்ளும் விதத்தில் வீதித் தடைகளும் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலுள்ள எல்லைப்புற கிராமங்களில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள ஊர்காவல் படையினர், கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ள மேற்படி நடவடிக்கைக்காக கொழும்புக்கு வரவுள்ளதாக ஊர்காவல் படைப் பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊர்காவல் படையினரை விட முப்படையினரும் பொலிஸாரும் தேவைக்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை கொழும்பு- நீர்கொழும்பு வீதியில் அமைச்சர் த.மு. தஸநாயக்கா கொல்லப்பட்டதையடுத்தும் கொழும்பு நகரில் இடம்பெறும்
குண்டுவெடிப்புக்களையடுத்துமே அரசு இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இதேநேரம், அமைச்சர்கள், எம்.பி.க்களின் பாதுகாப்புக்கு அரசு விஷேட பாதுகாப்புத் திட்டமொன்றையும் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறைமைக்காக மரணிப்பதற்கு மக்கள் தயாராகவுள்ளனர்
அகாசியிடம் ஜே.வி.பி.தெரிவிப்பு
1/13/2008 11:46:28 PM வீரகேசரி நாளேடு
இலங்கை நாட்டு மக்களை யாரும் பொருளாதாரத்தின் கீழ் அடிபணிய வை க்க முடியாது, எனினும் சர்வதேச சமூகங்களின்
தலையீடுகளினால் நாம் அதிருப்தியடைந் துள்ளளோம் நாட்டின் இறைமை மற்றும் கௌரவத்தை காட்டிக்கொடுப்பதற்கு பதிலாக மக்கள்
மரணிப்பதற்கும் தயாராக இருக்கின்றனர் அந்த மக்களுக்கு பின்னாலே மக்கள் விடுதலை முன்னணியும் இருக்கின்றது என்று ஜே.வி.பியின் தலைவர் சோமவங்ச அமர சிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவை விடவும் இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய சோமவங்ச பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே ஜனநாயகம் நிலைநாட்டப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று நாள் வியத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின்
தலைவர் சோமவங்ச அமரசிங்கவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே சோமவங்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி கட்சி காரியாலயத்தில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகி சுமார் ஒரு மணித்தியாலயமாக
இடம்பெற்றதுள்ளது. சந்திப்பு தொடர்பாக ஜே.வி.பி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இந்த சந்திப்பில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகிகொண்டமை, அதனால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் ஜே.வி.பியின் நிலைப்பாடு தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. ஜப்பான் உள்ளுராட்சி நிறுவனங்களுக்காக அதிகாரம் பகிரப்பட்டுள்ள முறைமை, நாட்டின்
இறையை பாதுகாப்பதற்காக ஜப்பான் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முறையை, தேசிய பாதுகாப்பு நிதி மற்றும் வெளிவிவகார போன்றன
மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் இருப்பதை ஜப்பான் அரசாங்கத்தின் அரசியலமைப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஒளி நாடா
மூலமாக தெளிவு படுத்தினார்.
அதற்கு மேலாக தேவையான நிதியுடன் நிர்வாக அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதற்கு ஜே.வி.பி தயார் என்று சுட்டிக்காட்டினார்.
ஜப்பான் மற்றும் இதர நாடுகள் இலங்கைக்கு கூடுதலான நிதியுதவிகளை வழங்கிவருகின்றது இந்நிலையில் இலங்கையின் யதார்த்த நிலைமையினை
கருத்தில் கொண்டு அந்த நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அகாசி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவை விடவும் இலங்கை மனித உரிமைகளை பாதுகாப்பதாக சுட்டிக்காட்டிய சோமவங்ச, மனித உரிமைகளை பாதுகாப்பது
தொடர்பாக இலங்கை பல்வேறான சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதுடன் அவற்றை அவ்வாறே நடைமுறைப்படுத்துகின்றது.
புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை உயர்நீதிமன்றம் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான
தீர்ப்புகளை வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கை நாட்டு மக்களை யாரும் பொருளாதாரத்தின் கீழ் அடிபணியவைக்க முடியாது எனினும் சர்வதேச சமூகங்களின் தலையீடுகள் மூலமாக நாம்
அதிருப்திகொண்டேயிருக்கின்றோம். நாட்டின் இறைமை மற்றும் கௌரவத்தை காட்டிக்கொடுப்பதற்கு பதிலாக மக்கள் மரணிப்பதற்கும் தயாராக இருக்கின்றனர் அந்த மக்களுக்கு பின்னாலே மக்கள் விடுதலை முன்னணியும் இருக்கின்றது. அரசாங்கம் அந்த பொறுப்பை முறையாக
முன்னெடுக்கவில்லையாயின் அந்த பொறுப்பை கையேற்பதற்கு ஜே.வி.பி தயாராகவே இருக்கின்றது என்பதை மேற்குலக நாடுகளுக்கு மிகவும்
பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக அந்த நாட்டிற்கு நிதியுதவிகளை வழங்குகின்ற ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு மட்டும்
ஏன் நிதியுதவிகளை வழங்க முடியாது என்று கேள்வியெழுப்பியதுடன் இலங்கை விடயத்தில் வெளிநாட்டு இராணுவம் தலையிடவேண்டும் என்று யசூசி
அகாசி அவுஸ்திரேலியா வானொலிக்கு பேட்டியளித்தமையை சுட்டிக்காட்டி அதற்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சோமவங்ச
தெரிவித்துள்ளார்.

இணைத்தலைமைகளின் வேண்டுகோளை அரசாங்கம் அவசியம் நிராகரிக்க வேண்டும்- ஹெல உறுமய
1/13/2008 11:44:40 PM வீரகேசரி நாளேடு - (ப. பன்னீர்செல்வம்)
விடுதலைப் புலிகளை சந்திப்பதற்கான இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை அரசாங்கம் நிராகரிக்க
வேண்டும். இலங்கை வந்துள்ள ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாசிக்கும் புலிகளை சந்திப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் வழங்கக்
கூடாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரும் மத்திய குழு உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்தார்.
இணைத் தலைமை நாடுகளின் பங்களிப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்துடன் முடிவடைந்து விட்டது. இனிமேல் இலங்கை விவகாரத்தில்
இணைத்தலைமை நாடுகள் தலையிட முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
விடுதலைப் புலிகளுடனான சர்வதேச சந்திப்புக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற இணைத்தலைமை நாடுகளின்
கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதோடு அதிலிருந்து விலகி விட்டது. இந்த நிலையில் இணைத் தலைமை
நாடுகளின் பங்களிப்பும் முடிந்து விட்டது. இனி அந்நாடுகள் எமது நாட்டு விடயத்தில் தலையிட அதிகாரம் கிடையாது. எனவே, அரசாங்கம் இணைத்
தலைமை நாடுகளின் வேண்டுகோளை கவனத்தில் கொள்ளாது நிராகரிக்க வேண்டும்.
அதேவேளை தற்போது இலங்கை வந்துள்ள ஜப்பானிய வி÷சட தூதுவர் யசூசி அகாசிக்கும் வன்னிக்கு செல்வதை தடை செய்து கதவுகளை பூட்ட
வேண்டும்.

செய்தியறிக்கை சீனாவில் இந்தியப் பிரதமர்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இருநாடுகளிடையில் அவ்வப்போது நெருடல்கள் ஏற்படுத்தும் உறவை
மேம்படுத்த அவர் இப்பயணத்தின்போது முயலுவார்.
சீனா சென்றிரங்கியபோது அந்நாட்டின் அரசு ஊடகத்தில் கருத்துவெளியிட்ட மன்மோகன் சிங், இந்தியாவும் சீனாவும் உலக அளவில் முக்கியத்துவம்
பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார்.
சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ ஆகியோரை நாளை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் அவர்
சந்திக்கவிருக்கிறார். பொருளாதார வல்லரசுகளாக உருவெடுத்துவரும் இந்த இருநாடுகளிடையில் 3000 கோடி டொலர்கள் பெருமதியளவுக்கு வர்த்தகம்
வளர்ந்துவருகின்ற ஒரு நேரத்தில் இந்தியப் பிரதமரின் இந்த விஜயம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் தீர்க்கப்படாத எல்லைத் தகராறு தொடர்பாக இருநாடுகளிடையில் பரஸ்பரம் அவநம்பிக்கையும் சந்தேகமும் நிலவுவதாக செய்தியாளர்கள்
குறிப்பிடுகின்றனர்.


இரான் மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டு
அமெரிக்க இராணுவ தளபதி
இராக்கில் இருக்கும் அதி பயங்கரமான ஷியா குழுக்களுக்கு இரான் ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகின்றது என்ற அமெரிக்காவின்
குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் ராஜாங்க அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மீண்டும் கூறியுள்ளார்.
அமெரிக்க ராஜாங்க அலுவலகத்தின் இராக் ஒருங்கிணைப்பாளரான டேவிட் சாட்டர்ஃபீல்டு பிபிசியிடம் கூறும் போது, ஒருங்கிணைந்து இருக்க
வேண்டும் என்ற இராக்கின் எண்ணத்திற்கு இரான் மதிப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
முன்னதாக சனிக்கிழமையன்று இராக்கில் இருக்கும் அமெரிக்க இராணுவத்தின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் கூறும் போது, கடந்த சில
நாட்களாக கவசத்தை துளைக்க கூடிய வெடிக்குண்டு தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும், இதனை இரான் கொடுக்கின்றது எனவும் குற்றம்
சாட்டியிருந்தார். எனினும் இக்குற்றச்சாட்டுகளை இரான் மறுத்திருந்தது.

இண்டர்போல் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் ஜாக்கி செலபி
ஜாக்கி செலபி
கையூட்டு குற்றச்சாட்டின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க காவல்துறையின் தலைவர் ஜாக்கி செலபி இண்டர்போல் தலைவர்
பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவருடைய பணிக்கு இண்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பு நன்றிகளை தெரிவித்துள்ளது, அதே சமயத்தில் ஊழல் என்பது ஒரு
காவல்துறை அதிகாரி மீது சுமத்தப்படும் மிக தீவிரமான குற்றச்சாட்டு என்றும் கூறியுள்ளது.
ஆப்ரிக்க தேசிய பொலிஸ் ஆணையாளர் பதவியில் இருந்து ஜாக்கி செலபிக்கு நீண்ட விடுமுறை கொடுக்கப்பட்ட ஒர் தினத்திற்கு பின்னர், அவர்
இப்பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படைகள் பல ஆண்டுகள் இருக்க நேரும் - பிரிட்டிஷ் பாதுகாப்புச் செயலர்
ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படையினர்
ஆப்கானிஸ்தானில் இருக்கும் பிரிட்டிஷ் படைகள் அங்கு பல தசாப்த காலங்களுக்கு இருக்கக் கூடும் என பிரிட்டிஷ் பாதுகாப்புச் செயலர் டேஸ்
பிரவுன் கூறியுள்ளார்.
நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த அவர், தீவிரவாதிகளுக்கு யாருடைய தலையீடும் இல்லாத பயிற்சிக்கான சொர்க்க பூமியாக ஆப்கானிஸ்தான்
மாறுவதை பிரிட்டன் மறுபடியும் அனுமதிக்க முடியாது என கூறினார்.
அதே சமயம் பிரிட்டிஷ் படைகள் செய்ய கூடியதற்கு ஒரு அளவு உள்ளது என்றும், சர்வதேச சமுதாயமும், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மற்றும்
இராணுவத்தினருடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Posted on : Sat Jan 12 9:30:00 2008
போர்நிறுத்தம் குறித்த புலிகளின் அறிவிப்பை அரசு நிராகரித்தது போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந் தும் நடைமுறைப்படுத்த தாம் தயாராக இருக்கின்றனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போதும், அரசு
அதனை நிராகரித்துள்ளது.கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இதனை நேற்றுத்
தெரிவித்தார்.அவர் மேலும் கூறியவை வருமாறுபோர்நிறுத்த ஒப்பந்த காலத்தில் அவர்கள் பொதுமக்களையே தாக்கினார்கள். இந்த நாடு முழுவதையுமே பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து
விடுவிக்கவேண்டிய தேவை எமக்கு உள்ளது. அவர்களை அழித்தே தீருவோம் என்றார்.இதேவேளை, போர் நிறுத்தம் தொடர்பாக 2002ஆம் ஆண்டில் புலிகள் யோசித்திருக்க வேண்டுமே தவிர 2008ஆம் ஆண்டில் அல்ல. அரசை விட
போர்நிறுத்த ஒப்பந்த மீறலில் அதிகம் ஈடுபட்டவர்கள் புலிகளே. புலிகளின் போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்புக் காலம் கடந்துவிட்ட ஒன்று
என ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி தயான் ஜெயதிலக்க தெரிவித்துள்ளார்.

மன்னாரில் படையினரின் நகர்வு முறியடிப்பு -புலிகள்
மன்னார், உயிலங்குளம் மற்றும் பாலமோட்டை ஆகிய இரு முனைகளிலிருந்து நேற்றுக்காலை முதல் படையினர் கடும் ஷெல் மற்றும் பல்குழல்
தாக்குதல்களுடன் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியைத் தாங்கள் முறியடித்திருப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருக்கின்றது.சில மணிநேரம் நீடித்த இந்தத் தாக்குதலில் படைச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் பல படையினர் காயங்களுக்குள்ளாகியிருக்கின்றனர்
என்று புலிகள் கூறுகின்றனர். தாக்குதலின் பின்னர் படைத்தரப்பினர் பழைய நிலைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர் என்றும் விடுதலைப் புலிகள்
தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் படைத்தரப்புத் தகவல்கள் எவையும் நேற்று மாலைவரை வெளியாகவில்லை.இதேவேளை மன்னார், பிரப்பங் கண்டல் மற்றும் வவுனியா, ஒமந்தை ஆகிய பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற மோதல் ஒன்றில் 7
விடுதலைப் புலிகள் உயிரிழந்திருக்கின்றனர் என்றும், 8 புலிகள் காயமடைந்துள்ளனர் என்றும் பாதுகாப்புப் பிரிவினர் விடுத்த செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.மேலும் இந்த மோதலில் தமது தரப்பில் 6 படையினர் காயமடைந்திருக்கின்றனர் எனவும் மோதலின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல்
நடவடிக்கையில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் சடலம் ஒன்றையும், அவர்களின் சில ஆயுதங்களையும் தாங்கள் மீட்டிருக்கின்றனர் எனவும்
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Sat Jan 12 9:40:00 2008
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு குடாநாட்டிலிருந்து வெளியேற்றம் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இன்று டன் தமது பணிகளை நிறுத்திக்கொள் கின் றனர் என
அறிவித்துள்ளனர்.யாழ். அலுவலகத்தில் பணியாற்றி வந்த இரு கண்காணிப்பாளர்களில் ஒருவர் இன்றும் மற்றையவர் நாளையும் கொழும்புக்குச் செல்கின்றனர்.அவர்களின் பாவனையில் இருந்த ஐந்து வாகனங்களையும் கப்பல் மூலம் கொழும்பு எடுத்துச் செல்ல ஏற்பாடாகியுள்ளது. இந்த வாகனங்கள் நோர்வேத்
தூதரகத்திடம் கையளிக்கப்படவிருக்கின்றன.யாழ். அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலர்களுக்கு எட்டு மாதச் சம்பளம் வழங்கப்பட்டு வேலையில் இருந்து அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.கண்காணிப்புக் குழுவின் அலுவலகம் நல்லூர் கோயில் வீதியில் தனியாரின் கட்டடம் ஒன்றில் இயங்கிவந்தது.

Posted on : Sat Jan 12 9:40:00 2008
புலிகளுக்காக நிதி திரட்டப்படுவதை முழு அளவில் தடுக்க எவ்.பி.ஐ. மும்முரம்
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டும் முன்னணி அமைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும் படி அமெரிக்க சமஷ்டி விசாரணைப்
பணியகம் (எவ்.பி.ஐ.) வேண்டுகோள் விடுத்துள்ளது.எவ்.பி.ஐ. தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நபர்கள் அமெரிக்காவிலும் செயற்படுகின்றனர். ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கொள்வனவு செய்வதற்காக
அவர்கள் இரகசியமாக நிதி திரட்டுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்க அரசு விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. அவர்களது செயற்பாடுகள் அமெரிக்காவில்
சட்டவிரோதமானவை என எவ்.பி.ஐ. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுடன், தனது முழுமையான விசாரணை மற்றும் புலனாய்வுத் திறனைப்
பயன்படுத்தி இதனைக் கட்டுப்படுத்தப் போகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.ஆயுதக் கொள்வனவு முயற்சிகளில் ஈடுபட்ட 11 தமிழர்களைத் தான் கைதுசெய்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.விடுதலைப் புலிகள் தமது முன்னணி அமைப்புகளைப் பயன்படுத்தி நிதியைத் திரட்டுகின்றனர். ஆழிப்பேரலையைத் தொடர்ந்து பெருமளவு நிதி
திரட்டப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:செய்திமூலம் உதயன், தினக்குரல், வீரகேசரி,பி.ஒ.கூ.தமிழோசை; தொகுப்பு ENB.

No comments: