கொழும்பு வீரகேசரி செய்திகள்
மட்டக்களப்பு மாநகர சபையில் ஜ.ம.சு.மு. - த.ம.வி.பு. கூட்டணி
வீரகேசரி இணையம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபையில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், தமிழ் மக்கள் விடுதலை புலிகளும் இணைந்து வெற்றிலை சின்னத்தில்
போட்டியிடவுள்ளன.மட்டக்களப்பு மாநகர சபையில் இணைந்து போட்டியிடுவதுடன் ஏனைய எட்டு பிரதேச சபைகளில் ஐந்து பிரதேச சபைகளில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிலை சின்னத்திலும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் எட்டு பிரதேச சபைகளில் வள்ளம் சின்னத்திலும் தனி
தனியாக போட்டியிடவுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளும் மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கான
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் புரிந்துணவர்வு ஒப்பந்தம்மொன்றும் கைசாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த புரிந்து ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவும் தமிழ் மக்கள் விடுதலை
புலிகள் சார்பில் அதன் பிரதி தலைவர் பிள்ளையானும் கைச்சாத்திட விருப்பதாகவும் அந்த வைபவம் கொழும்பில் வைத்தே
மேற்கொள்ளப்பட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கு அண்மையிலுள்ள மண்டபமொன்றில் வைத்தே நேற்று நண்பகல் 12.01 மணியான சுபநேரத்தில் இந்த புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது .
மன்முனை பிரதேச சபை(ஆரையம்பதி), ஏறாவூர் பற்று (செங்கலடி), கோரளைப்பற்று பிரதேச சபை(வாழைச்சேனை), கோரளைப்பற்று வடக்கு(வாகரை)
ஆகிய நான் உள்ளுராட்சி சபைகளிலுமேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனித்து போட்டியிடவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் ஐக்கிய
மக்கள் சுதந்தி முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவினால் மட்டக்களப்பு தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதேவேளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் மட்டக்களப்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து வெற்றிலை
சின்னத்தில் போட்டியிடுவதுடன் ஏனைய எட்டு சபைகளிலும் வள்ளம் சின்னத்தில் தனித்தே போட்டியிடவுள்ளது. தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
தனித்து போட்டியிடவுள்ள உள்ளுராட்சி சபைகளில் ஐந்து சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன, ஏனையவற்றிற்கான
வேட்பு மனுக்கள் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட வைபவத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அமைச்சர்களான ரோஹித்த அபே குணவர்தன, அமிர் அலி ஆகியோரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பில் அதன் அரசியல் துறை பொறுப்பாளர் கோகுலன், பேச்சாளர் அஷாத் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்
யாழ் உதயன் செய்திகள்
Posted on : Wed Jan 23 10:15:00 2008
இனப்பிரச்சினைக்கே தீர்வுத் திட்டம் பயங்கரவாதத்துக்கு வேறு பதில் ஜனாதிபதி மஹிந்த நேற்று விளக்கம்
"இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித் தீர்வில் அரசு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. சிறுபான்மையினர் எதிர்நோக்கும் சிக்கலைக்
களைவதற் காக அரசு தீர்வுத் திட்ட யோசனையை முன்வைக்கிறது. அது புலிகளுக்கு முன் வைக்கப்படவில்லை. ""பயங்கரவாதிகளை அரசு கையாள்வது தீர்வுத் திட்ட முறையில் அல்ல. அதற்கு வேறு பதில் உண்டு.''இப்படித் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.ஊடகநிறுவனங்களின் தலைவர்களையும் ஆசிரியர்களையும் நேற்றுத் தமது அலரி மாளிகை இல்லத்துக்கு அழைத்து, அவர்களுக்கு மதியம் விருந்து
அளித்து, அவர்களுடன் உரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.அங்கு அவர் கூறியவை வருமாறு:இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட் டுள்ள சிறுபான்மை மக்களுக்கான தீர்வையே அரசு முன்வைக்க முயற்சிக்கின்றது. அந் தத் தீர்வு புலிகளுக்கானது
அல்ல. பயங்கர வாதிகளைக் கையாள்வதற்கும் பதிலளிப்பதற்கும் வேறு மார்க்கம் உண்டு.போர் நிறுத்த உடன்படிக்கையை நான் அவசரப்பட்டு ரத்துச் செய்துவிட்டேன் என்று கூறுவது தவறு. இந்த உடன்படிக்கை செய்யப்பட்டபோதே
அச்சமயம் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்த நான் அதை எதிர்த்து நாடாளுமன்றில் பேசினேன். அது தவறு என்றேன். நான் அதிகாரத்துக்கு வந்த பின்னரும் இரண்டு வருடங்கள் பொறுத்திருந்தேன். நாம் ஆட்சிக்கு வந்ததும் இந்த உடன் பாட்டை மாற்றியமைப்போம்
என்றோம். அதற்காக முயன்றோம். சரிவரவில்லை. தவறான இந்த உடன்படிக்கையை இப்போது ரத்துச் செய்திருக்கிறோம்.போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது அவசர முடிவல்லஇந்த யுத்த நிறுத்த உடன்பாட்டின் கீழ் பேச்சு நடத்திப் பார்த்தோம். அமைதி வழி யில் தீர்வு காண முயன்றோம். கடைசி வழி யாக இதை ரத்துச் செய்ய
வேண்டியதா யிற்று. எனவே இது அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல.புலிகளைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் இப்போது எமக்கு இல்லை. புலிகளை நாம் ஏன் இப்போது தடைசெய்ய வேண் டும்? அது குறித்துத்
தேவைப்படும்போது பார்க்கலாம்.இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13ஆவது அரசமைப் புத் திருத்தத்தை ஆரம்பத்தில் நானும் எதிர்த் தேன் என்பது உண்மைதான்.ஆனால், கணிசமான அதிகாரப் பகிர் வுத் திட்டம் அதன் ஊடாக அரசமைப்பில் இணைக்கப்பட்டிருக்கின்றது. அதை நடைமுறைப்படுத்துமாறு
பிரேரிக்கப்படு கின்றது.அதை ஆரம்பமாகக் கொண்டு தீர்வுக்கு முயற்சிப்பது எமது எண்ணம்.அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை, தீர்வுத் திட்டம் ஒன்றைப் பெறு வதற்காக நானாகவே அமைத்தேன்.திட்டமிட்டப்படி நாம் காலக்கெடு கொடுத்தப்படி புதன்கிழமையன்று (இன்று) அதனை அக்குழு தருமா என்ப தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்
டும். அக்குழுவினரிடம்தான் அதைக் கேட்க வேண்டும்.இப்போது மாலையிலும் அது குறித்து அவர்களுடன் பேசவிருக்கிறேன்.அவர்கள் தரும் சிபார்சு குறித்து முத லில் எனது கட்சியுடன் பேச வேண்டும். பின்னர் பிரதான எதிர்க் கட்சிகளுடன் பேச வேண்டும். பின்பு தமிழர்
உட்பட சிறு பான்மையினர் தரப்புடன் பேசவேண்டும். மிதவாதத் தலைவர்களுடன் நாம் ஆராய வேண்டும். தீர்வு தமிழர்களுக்குத்தான் புலிகளுக்கு அல்லபுலிகளைத் தமிழர் தரப்பின் ஏகப் பிரதிநிதிகளாக நாம் ஏற்கவில்லை.தீர்வு தமிழர்களுக்குத்தான். புலிகளுக்கு அல்ல. புலிகளைக் கையாள வேறு வழியுள்ளது. எனக்கு இராணுவத் தீர்வில் நம்பிக்கை இல்லை. எனது நிலைப்பாட்டை நம்புங் கள். எந்தத் தீர்வும் பேச்சு மூலமான அர சியல் ரீதியான அம்சமாக
அமைய வேண்டும். எங்களது யுத்தம் புலிகளுக்கு எதிரா னது மட்டுமே. தமிழர்களுக்கு எதிரானது அல்ல.தமிழர்களிடம் கோரிக்கையும் அபிலாஷையும், ஆதங்கமும் இருப்பது எங்களுக் குத் தெரியும். அவை கவனிக்கப்பட வேண்டும்.ஏன், இலங்கையின் ஒவ்வொரு பிரிவு மக்கள் மத்தியிலும் தமிழர்கள், முஸ்லிம் கள், பறங்கியர்கள் ஏன் சிங்களவர்கள் மத்தியில் இருந்தும்
கோரிக்கைகள், நிபந் தனைகள் முன்வைக்கப்படுகின்றன. சிங் களவர்களின் நிபந்தனைகளைப் புறக் கணித்து நாம் தீர்வை எட்டமுடியாது.இலங்கையில் அமைதியை நிலை நாட்ட உதவும் எந்த நாட்டையும் நாம் வர வேற்கத் தயாராக உள்ளோம். ஆனாலும், பல சமையல்காரர்கள் சேர்ந்தால்
"சூப்' கெட்டுவிடும் என்பதையும் நாம் கவனத் தில் கொள்ளவேண்டும்.புலிகளின் அடுத்த இலக்காக இந்தியா இருக்கலாம் என்பதை இந்தியா இப்போது உணர்ந்துள்ளது.பயங்கரவாதம் எங்கிருந்தாலும் பயங்கரவாதம்தான்அல் குவைதா இயக்கத்தின் உறுப்பினர்களை உஷார்படுத்தித் தூண்டி தற்கொலைத் தாக்குதலாளிகளாக மாற்றுவதற்கான ஒப்பந்தம் ஒன்றுக்குப் புலிகள்
இணங்கியிருக்கின்றார்கள் என்று எனக்கு இப் போது கூறப்பட்டிருக்கின்றது.பயங்கரவாதம் எங்கிருந்தாலும் பயங்கரவாதம்தான். என்ன நோக்கத்துக்காகப் பயங்கரவாத வழிகளை நாடினாலும் அது பயங்கரவாதம்தான். இதில் அல்
குவைதாவுக்கு ஒரு சட்டம், புலிகளுக்கு வேறு சட்டம் என்று இல்லை. "நல்ல பயங்கர வாதி', "கூடாத பயங்கரவாதி' என்று வேறு பாடு இல்லை.
எல்லாப் பயங்கரவாதி களும் பிழையாவர்கள் தான்.பயங்கரவாதத்துக்கு எதிரான எமது அரசின் நிலைப்பாட்டை உலக நாடுகள் அனைத்துமே வரவேற்றுள்ளன.இங்கு பத்திரிகைச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாக மட்டுப்படுத்தப்படு வதாக பத்திரிகையாளர்கள் அடக்கப்படுகின்றனர் என கூறப்படுகின்றது. அது
தவறு. ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகை களை எடுத்துப் பாருங்கள். எப்படி அரசை விமர்சிக்கின்றார்கள் என்று நோக்குங்கள். அது ஒன்றே இங்கு
பத்திரிகைச் சுதந்திரம் எவ்வளவு தாராளமாக உள்ளது என்பதற்கு நல்ல சான்று. தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட விமர்சித்து எழுதுகிறார்கள். என்றார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
Posted on : Wed Jan 23 10:15:00 2008
*வடக்கிலும் கிழக்கிலும் உடனடியாக இடை நிலை நிர்வாகங்கள்;
*அதன் பின்னர் 13ஆவது திருத்தத்தின் சட்ட ரீதியான அதிகாரங்கள்.
அனைத்துக் கட்சிக் குழுவிடம் நேற்றுமாலை மஹிந்த தகவல் வடக்கிலும் கிழக்கிலும் இடைநிலை நிர்வாக முறைமைகளை விரைந்து உருவாக்க எண்ணுகிறேன். அதன் பின்னர் அரசமைப்பின் 13ஆவது திருத்தச்
சட்டத்தில் மாகா ணங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சட்டரீதியான அதிகாரங்களை அந்த நிர்வாகங் களுக்கு வழங்க யோசிக்கிறேன். இதுவே தனது தற்போதைய நடவடிக் கைத் திட்டம் எனக் கோடி காட்டியிருக் கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்க் கட்சி கள் உட்பட ஏனைய கட்சிகளின் தலைவர் கள் ஆகியோரை
நேற்றுமாலை தமது அலரி மாளிகை இல்லத்துக்கு அழைத்து அவர் கள் மத்தியில் உரையாற்றிய சமயமே ஜனா திபதி இத்தகவல்களை
வெளியிட்டிருக்கின்றார்.இக்கூட்டத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்.
(பத்மநாபா பிரிவு) தலைவர் ஸ்ரீதரன் ஆகியோரும் அழைக்கப் பட்டிருந்தனர். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தக் கூட்டத்துக்கு
அழைக்கப்படவில்லை.அங்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய கருத்துகள் வருமாறு:அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழு தனது ஆராய்வை கலந்துரையாடலை தொடர்ந்து கொண்டு நடத்தட்டும். அதன் செயற்பாடுகளுக்கு நான்
காலவரம்போ அல்லது வரையறையோ விதிக்க முடியாது. தேவையானால் அனைத்துக்கட்சிப் பிரதி நிதிகள் குழு தனக்குத் தானே காலவரம்பு விதித்துச்
செயற்படலாம். ஆனால், நான் கால வரையறையை அதற்கு விதிக்க விரும்பவில்லை.எனினும், அதேநேரம் காலம் இழுபட விட்டுவிட்டு நான் ஒன்றும் செய்யாமல் பார்த்துக்கொண்டு சும்மாவும் இருக்க முடி யாது. ஏதேனும் செய்தாகவே
வேண்டும் என்ற அழுத்தம் எனக்கும் உண்டு.எனவே, நான் இடைக்கால ஏற்பாடு ஒன்றைச் செய்யத் திட்டமிடுகிறேன். அதற்கு அனைத்துக் கட்சியினரதும் ஒத்துழைப்பும் பக்கபலமும் எனக்கு
அவசியம். அதை உங்களிடம் கோருகின்றேன்.கிழக்கில் உடனடியாக மாகாணத் தேர்தலை நடத்தியும் வடக்கில் இடைக்காலத் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தியும் அந்த இரு மாகாணங்களிலும் நிர்வாக முறைமையை விரைந்து உருவாக்க எண்ணுகிறேன்.அதன் பின்னர் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் மாகாணங்களுக்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்ட சட்டரீதியான அதிகாரங்களை அந்த நிர்வாகங்களுக்கு வழங்க
யோசிக்கின்றேன்.இவ்விடயம் குறித்தும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஆராய்ந்து தனது பரிந்துரைகளைச் செய்யலாம்.அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இன்றும் (புதனன்றும்) மாலையில் அலரி மாளிகையில் கூடும்.அதிகாரப் பகிர்வுக்கான திட்டத்தை எங்கிருந்தாவது ஆரம்பிக்க வேண்டும். அரசமைப்பில் அதற்கு இடமுண்டு. ஏற்கனவே, அதிகாரப் பகிர்வுக்காக
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. அது சட்ட ரீதியாகவும் நிறைவு செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால்,
நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதை நடைமுறைப்படுத்துவதோடு தீர்வு முயற்சியை நாம் ஆரம்பிக்கலாம். அதன் பின்னர் ஏற்ற வேளையில், உரிய
வடிவில் விரிவு படுத்தலாம்.அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதுதான் இனப்பிரச்சினைக்கான தீர்வாகிவிடாது. அது ஆரம்பம் மட்டுமே. அதற்கான தொடக்கமாக இம்முயற்சியைக் கொள்ளலாம் என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
No comments:
Post a Comment