வடக்குப் படையெடுப்பில் புலிப் போராளிகளின் எதிர்ப்புக்கு முகம் கொடுக்கத் திராணியற்ற பக்ஸபாசிஸ்டுக்கள்,
பயபீதியூட்டி மக்களைப் பணிய வைக்க, துப்பாக்கி முனையில் அப்பாவி மக்களை கைது செய்து, கொன்றொழித்து
காடு மேடெல்லாம் வீசுகிறார்கள். ENB
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி மீது அரச படைகள் தாக்குதல்!
19 பேர் பலி, 15 பேர் படு காயம்!!
பக்ஸ பாசிஸ்டுக்களின் ஆழ ஊடுருவித் தாக்கும் படையணியே, ஈழப் பிஞ்சுகள் மீது இந்த ஈனத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது.
Posted on : Wed Jan 30 9:45:00 2008 மடுமாதா திருப்பதிக்குச் சமீபமாக கிளைமோர் தாக்குதலில் 17 பேர் பலி! அவர்களில் 11 பேர் மாணவர்கள் மன்னார் மாவட்டத்தில், மடுமாதா தேவாலயத்துக்குச் சமீபமாக, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள்
பயணம் செய்த பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் கோரப் பலியானார்கள். மற்றும் நால்வர்
ஆபத் தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மூன்று ஆசிரியர்கள், பத்து மாணவர்கள் உட்பட 17 பேர்
படுகாயமடைந்தனர். இந்தக் கொடூரம் நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சரித்திரப் பிரசித்திபெற்ற மடுமாதா தேவாலயத்துக்கு சமீபமாக ஒரு கிலோ மீற்றர் (0.6 மைல்) தொலைவில் இந்தக் கிளைமோர் தாக்குதல்
நடத்தப்பட்டிருப்பதாக மன்னார் ஆயர் அதி.வண இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.இலங்கை அரச படைகளின் ஆழ ஊடுருவும் அணியே இந்தத் தாக்குதலை நடத் தியிருப்பதாகப் புலிகள் தெரிவித்திருக் கின்றனர்.மடுவுக்கும், இலுப்பைக் கடவைக்கும் இடையில் பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபட்ட தனி யார் பஸ்ஸே இந்த விபரீதத்துக்கு இலக்கா னது.கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்ட இடம், படையினர் விடுதலைப் புலி களின் முன்னரங்க நிலையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் உள்ளே
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள் ளது.நேற்றுக்காலை மடுவிலிருந்து புறப் பட்டு இலுப்பைக் கடவைக்குச் சென்ற இந்த பஸ், நேற்றுப் பிற்பகலில் பாடசாலைகள் முடிந்ததும் இலுப்பைக்
கடவையிலிருந்து மடு நோக்கிப் புறப்பட் டது. தட்சணாமருதமடுவில் பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றிய அது, மடுத்தேவா லயத்துக்கு சுமார் ஒரு
கிலோ மீற்றர் தொலைவில் வந்து கொண்டிருந்த போது கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கானது.இந்தச் சம்பவத்தில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் பத்து வயதுக்கும் பதினாறு வயதுக்கும்
இடைப்பட்டவர்களாவர். இவர்களைத் தவிர ஆசிரியர் ஒருவர், மருத்துவ உதவியாளர் ஒருவர், பாடசாலை சிற்×ழியர் ஒருவர், சம்பந்தப்பட்ட பஸ்ஸின்
சாரதி, அதன் நடத்துநர் மற்றும் அவர்களுடன் பயணம் செய்த பிறிதொரு சாரதி ஆகியோரும் உயிரிழந்தனர்.படுகாயமுற்ற பதினேழு பேரில் மூவர் ஆசிரியர்கள். ஒருவர் அருட்சகோதரி. பத்துக்குக்கு மேற்பட்ட மாணவர்களும் அதில் அடங்குவர்.காயமுற்றவர்கள் உடனடியாக அருகில் பள்ளமடுப் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களும் அந்த
வைத்தியசாலையின் பிரேத அறைக்கு எடுத்து வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டன.இந்த தாக்குதலில் சின்னப்பண்டி விரிச்சான் அ.த.க. பாடசாலை, தட்சணாமருதமடு அ.த.க. பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களே மாணவர்களே
பாதிக்கப்பட்டனர்.இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். பலர் மோசமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சிலர் இரண்டு கண்களிலும் காயமடைந்துள்ளனர். சிலரது உடல் அவயங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. காயமடைந்த சுமார் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று
பள்ளமடுப் பகுதி வைத்திய அதிகாரி டாக்டர் வெற்றிநாதன் கூறினார்.
மன்னார் பனங்கட்டிக்கொட்டில் கடற்தொழிலாளி
'பக்ச பாசிஸ்டுக்களால் படுகொலை.enb
துவக்கு முனையில் கடத்தப்பட்ட மீன் வியாபாரி சுட்டுக்கொலை
கொழும்பு தினக்குரல் செய்திகள் [29 - January - 2008]
* மன்னார் பனங்கட்டிக்கொட்டு பகுதியில் சம்பவம் மன்னார், பனங்கட்டிக்கொட்டு பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆயுத பாணிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச்
செல்லப்பட்ட மீன் வியாபாரியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் இவரது வீட்டிற்குச் சென்ற நான்கு ஆயுத பாணிகள் இவரையும் குடும்பத்தவர்களையும் ஆயுத
முனையில் நிறுத்தி இவரை மட்டும் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுக்காலை இவரது சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உப்புக்குளம் நளவன்வாடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் கடத்தப்பட்டு ஒருமணி நேரத்தில் குடும்பத்தவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
எனினும் கடத்தல்காரர்கள் இவரைப் படுகொலை செய்துள்ளனர். தலைமற்றும் மார்புப் பகுதியில் பலத்த துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவரது
சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வநேசராஜா ரவி (44 வயது) என்பவரே கொல்லப்பட்டவராவார்.
சடலம் கிடந்த இடத்திற்கு நேற்று நண்பகல் சென்ற மாவட்ட நீதிபதி ரீ.ஜே.பிரபாகரன் மரண விசாரணைகளை நடத்தியதுடன் பிரேத பரிசோதனைக்காக
சடலத்தை மன்னார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
குவைத்தில் கொடுமைக்குள்ளான 17 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் கொழும்பு தினக்குரல் செய்திகள்[29 - January - 2008]
* சவூதியில் 2 இலங்கையருக்கு மரணதண்டனை
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
குவைத்தில் பல்வேறு கொடுமைகளுக்குள்ளான 17 பணிப்பெண்கள் நேற்று திங்கட்கிழமை நாடு திரும்பினர்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
குவைத்தில் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதில் வெளிவிவகார அமைச்சும் வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகமும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தன.
இதேவேளை, சவூதி அரேபியா நீதிமன்றம் இலங்கையர் இருவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்ததுள்ளது.
கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டமைக்காகவே இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 5
இலங்கையர்களுக்கு 5 வருட சிறைத் தண்டனையுடன் 500 கசையடிகளும் வழங்கப்படவுள்ளது.
ஹலீமா நிஷா காதர், பண்டாரநாயக்கா ஆகியோருக்கோ மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலையைச் சேர்ந்த சிங்கராயர்
விமலதாஸ், மதுரங்குளியைச் சேர்ந்த அப்துல் பசீர், சம்மாந்துறையைச் சேர்ந்த அமீர் ஜப்பார், கந்தளாயைச் சேர்ந்த றிஸ்மியா அப்துல் ஹக்,
கல்முனையைச் சேர்ந்த குழந்தைவேள் ஆகியோருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மரணதண்டனை மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு, அத்தண்டனையை
குறைவடையச் செய்யுமாறுகோரி நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்வதற்கு பெரும்தொகை பணம் தேவைப்படுவதாக வெளிவிவகார அமைச்சு
சுட்டிக்காட்டியது.
எனினும் சர்வதேச மன்னிப்புச் சபை சவூதி அரேபியா நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளதுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமது
வாதங்களை முன்வைக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளது.
இதேசமயம் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டுமென பாதிக்கப்பட்ட
சவூதிஅரேபியா குடும்பத்தின் சார்பில் கோரப்பட்டுள்ளதாக `அரபு நியூஸ்' தெரிவித்துள்ளது.
யாழ் உதயன் செய்திகள்Posted on : Tue Jan 29 9:40:00 2008
பிள்ளையான் குழு தனது ஆயுதப் பிரிவை முடக்கி வைத்திருப்பதாக அறிவிப்பு
கிழக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக அத்தேர்தலில் போட்டியிடும் பிள்ளையான்
குழு (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு) தனது ஆயுதப் பிரிவை முடக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.அக்குழுவின் வேட்பாளர்கள் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பொலிஸாரின் பாதுகாப்புடன் மட்டுமே பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
என்றும் பிள்ளையான் குழு மேலும் தெரிவிக்கின்றது.பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானாக இத்தகவலை "உதயனுக்கு' நேற்றுத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும்
கூறியவை வருமாறு:கிழக்கில் தேர்தல் நடைபெறவேண்டும் என்று விரும்புகின்ற ஒரேயொரு கட்சி எமது கட்சிதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேர்தலை விரும்பவில்லை.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் எதிரிகள் கிழக்கில் பலமாக இருக்கின்றனர். அவர்களுடன் போட்டிபோட
இக்கட்சிகள் அஞ்சுகின்றன.நாம் தேர்தலை முழுமையாக விரும்புகிறோம்இதன் காரணமாக தேர்தல் ஒன்றை இக்கட்சிகள் விரும்பவில்லை. நாம் தேர்தலை முழுமையாக விரும்புகிறோம். நாம் தேர்தலை விரும்புவதாலேயே
நாம் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றோம் என்று அக்கட்சிகள் கூறுகின்றன.நாம் யாருக்கும் அச்சுறுத்தலாக இல்லை. ஜனநாயக ரீதியில் மக்களுக்குச் சேவையாற்றுவதே எமது நோக்கம்.கிழக்கில் நாங்கள் மாத்திரம் ஆயுதங்கள் வைத்திருக்கவில்லை. ஈ.பி.டி.பியினரும் ஆயுதங்களை வைத்திருக்கின்றனர். ஆனால், எம்மிடம் ஆயுதங்கள்
இருக்கின்றன என்பதை நாம் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றோம். ஆனால், கிழக்கில் தேர்தல் நடந்து வருவதை அரசு தீர்மானித்து, தேர்தல்
அறிவிப்பை விடுத்தவுடனேயே நாம் எமது ஆயுதப் பிரிவை முடக்கி வைத்து விட்டோம்.கிழக்கில் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்று நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் இந்த முடிவை எடுத்தோம்.நாம் இப்போது நிராயுதபாணிகளாக பொலிஸாரின் பாதுகாப்புடன் மட்டும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். நாம் ஏனைய கட்சி
வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளோம் என்று கூறப்படுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றார் அவர்.
Posted on : Tue Jan 29 9:45:00 2008 .
பலாலி மீது நேற்று ஷெல் தாக்குதல்! படையினர் பதிலடி; குடாநாடு அதிர்வு!!
பூநகரிப் பிரதேசத்தில் "கிபிர்' குண்டுவீச்சு நேற்றுக் காலை சுமார் 9.15 மணியளவில் பலாலிப் படைத்தளத்தை நோக்கி, விடுதலைப் புலிகள் பூநகரிப் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக, ஷெல்
மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.அதற்குப் பதிலடியாக படையினர் குடாநாட்டின் பல முனைகளில் இருந்தும் ஷெல், பீரங்கித் தாக்குதல்களையும் பல்குழல் எறிகணை வீச்சுக்களையும்
தொடர்ந்து நடத்தினர். அவற்றின் கடும் சத்தத்தால் குடாநாடு அதிர்ந்தது.பரந்தனுக்கு வடக்÷ க கல்முனை முனைப் பகுதியைநோக்கித் தாம் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், விடுதலைப் புலிகள் ஏவிய பதினைந்துக்கும்
மேற்பட்ட ஷெல்கள் பலாலி விமானத் தளத்தில் வீழ்ந்ததாகவும் அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நேற்று நண்பகல் 11.45 மணியளவில் "கிபிர்' விமானங்கள் பூநகரிப் பகுதியில் குண்டுகளை வீசித் தாக்குதல்களை நடத்தின.கொழும்பில் இருந்து உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பலாலி விமான நிலையத்தில் இறங்க இருந்த வேளையிலேயே, விடுதலைப் புலிகள் தாக்குதல்
நடத்தினர் என்று சில தகவல்கள் தெரிவித்தன.எனினும், உயர் அதிகாரிகளை ஏற்றிவந்த விமானம் பலாலியில் இறங்கும் முயற்சியைக் கைவிட்டு, கொழும்பு மீண்டது என்றும் வேறு சில தகவல்கள்
தெரிவித்தன.திடீர் தாக்குதல்களை குடாநாட்டில் பெரும் பதற்றம் உண்டானது.அதேசமயம், யாழ்.குடாநாட்டு வீதிகளில் படையினரின் வாகனத் தொடரணிப் போக்குவரத்துகளும் நேற்று நிறுத்தப்பட்டன.விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து ஏவப்பட்ட ஷெல்கள் வரணி, கரம்பைக் குறிச்சி, உசன் போன்ற பகுதிகளிலும் வீழ்ந்து
வெடித்தன. அதனால் தென்மராட்சியில் மக்கள் மத்தியிலும் பதற்றம் ஏற்பட்டது. எனினும், இத்தாக்குதல்களினால் பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பு
ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
வடக்கில் காணாமல் போனோரின் உறவினர்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு படையெடுப்பு எட்டு சடலங்களின் மரண பரிசோதனை நிறைவ
1/27/2008 9:53:04 PM வீரகேசரி நாளேடு - கெப்பிட்டிக்கொல்லாவ கிரிக்கெட்டுவாவ பிரதேசத்திலிந்து 16 சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து வடக்கில் அண்மைக்காலமாக
காணõமல் போனவர்களின் உறவினர்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகைதந்து சடலங்களை
பார்வையிட்டுள்ளனர்.வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளில் அண்மைகாலமாக காணமல் போனவர்களின் உறவினர்களே இவ்வாறு
வைத்தியசாலைக்கு நேற்று சென்றுள்ளனர்.கிரிக்கெட்டுவாவ பகுதியில் மீட்கப்பட்ட சடலங்களில் 8 சடலங்களின் மரண பரிசோதனை நேற்று
நிறைவடைந்துள்ளது எனினும் அந்த சடலங்கள் வைத்தியசாலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருதந்திருதவர்களினால் அடையாளம்
காட்டப்படவில்லை.
கெப்பட்டிக்கொல்லாவவில் துப்பாக்கி சூடு மற்றும் வெட்டு காயங்களுடன் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள்
தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றதையடுத்தே வவுனியா,மன்னார் பகுதிகளில் அண்மைகாலங்களில் காணமல்
போனோரின் உறவினர்கள் அனுராதபுர வைத்தியசாலைக்கு வருகைதந்துள்ளனர்.
மரண பரிசோதனை நிறைவடைந்த சடலங்கள் அடையாளம் காணப்படாத போதும் வடக்கிலிருந்து அனுராதபுர வைத்தியசாலைக்கு
வருகைதந்திருந்தோர் காணமல் போனோரின் உடல்களில் காணப்பட்ட முக்கிய அடையாளங்களை சடலங்களை மரண பரிசோதøனக்கு
உட்படுத்துகின்ற வைத்திய பிரிவினரிடம் கையளித்து சென்றுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
கிரிக்கெட்டுவாவ பகுதியில் மீட்கப்பட்ட சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் சிதைந்திருப்பதனால் சடலங்கள் டீ.என்.ஏ பரிசோதனைக்கு
உட்படுத்துவதற்கு மரண பரிசோதனையை மேற்கொள்ளும் வைத்திய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா மன்னார் போன்ற பகுதியில் அண்மையில் காணமல் போனர்வர்களின் உறவினர்கள் இரண்டு பாதிரியார்களுடனேயே அனுராதபுர
வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் உதயன் செய்திகள்Posted on : Sun Jan 27 8:45:00 2008
புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களை இனங்காண மன்னார் வாசிகளுக்கு அனுமதியில்லை!
கெப்பிற்றிக்கொலாவப் பகுதியில் மீட் கப்பட்ட சடலங்கள், மன்னாரில் காணாமற் போனவர்களுடையனவா என்று இனங் காண்பதற்காகச் சென்ற
உறவினர்களை அவற்றைப் பார்வையிட விடாது தடுத்த னர் பொலிஸார்.அனுராதபுரம், கெப்பிற்றிக்கொலாவப் பகுதியில் இரண்டு புதைகுழிகளில் இருந்து சூட்டுக்காயங்களுடன் 16 ஆண்களின் சடலங்கள் வியாழக்கிழமை
மீட்கப்பட்டி ருந்தன. மீட்கப்பட்ட சடலங்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள் ளன. அவற்றைப் பார்வையிடுவதற்காக மன்னாரில் இருந்து
சென்றவர்களையே பொலிஸார் தடுத்து திருப்பி அனுப்பினர். எனினும் இந்த விடயம் தொடர்பில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலர் தலை யிட்டதன் அடிப்படையில் இன்று
ஞாயிற் றுக்கிழமை சடலங்களைப் பார்வையிட மன்னார்வாசிகள் அனுமதிக்கப்படுவர் என்று பிந்திய தகவல்கள் தெரிவித்தன.
Posted on : Sun Jan 27 8:45:00 2008
சகல இனமக்களுக்கும் ஏற்புடைய அரசியல் தீர்வு ஒன்றே இங்கு தேவை
இந்தியத் தூதுவர் அறிக்கை
இலங்கையில் வாழும் சகல இன மக் களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் அரசியல் தீர்வு காணப்படவேண்டும். இதுவே இந்தி யாவின் நிலைப்பாடாகும்.இந்தியாவின் 59 ஆவது குடியரசு தினத்தையொட்டி இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் நேற்று விடுத்த அறிக்கையில் இவ்வாறு
தெரிவித் திருக்கிறார்.இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே காணப்படவேண்டும். அது இங்கு வாழும் சகல இனமக்களுக்கும்ஏற்புடைய தீர்வாக அமைய வேண்டும். அந்தத்தீர்வு ஜனநாயகம், பன்முகத் தன்மை, மனித உரிமைகள் ஆகியவற்றின் அடிப் படைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இலங்கையின்
ஐக்கியம், இறைமை, ஆள்புல ஒற்றுமை ஆகிய பேணப்பட வேண்டும். என்பது இந்தியா வின் நிலையாகும் இந்தப் பிராந்தியத்திலும் அதற்கு அப் பாலும் உண்டாகி வரும் அபிவிருத்தி களின் பயன்களை இலங்கையும் பெறுவ தற்கு இங்கு சமாதானமும் ஸ்திர
நிலையும் உருவாக வேண்டும் என்பதிலும் இந்தியா அக்கறையாக உள்ளது என்றும் இந்திய தூதுவர் விடுத்த அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தினக்குரல் செய்திகள்
காணாமல் போகும் தமிழர்களும் மீட்கப்படும் சடலங்களும்!
[27 - January - 2008]
-அஜாதசத்ரு- தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் தோற்றுவித்து பல நூற்றுக்கணக்கானோரை காவுகொண்ட படுகொலை கலாசாரம் ஓரளவு
தணிந்திருந்த நிலையில் மீண்டும் பயங்கரமானதோர் சூழலைத் தோற்றுவிக்கும் வகையிலான சம்பவங்கள் புதுவருடத்தினத்தன்றிலிருந்து
ஆரம்பிக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரான தியாகராஜா மகேஸ்வரன் புதுவருட தினத்தன்று ஆலய
வழிபாட்டுக்காகச் சென்றிருந்தவேளையில் கொழும்பு கொச்சிக்கடை ஷ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்குள் வைத்து படுகொலை
செய்யப்பட்டதிலிருந்து இன்றுவரை தொடரும் ஒவ்வொரு சம்பவங்களும் அச்சமூட்டுவதாகவே உள்ளன.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தமை, தமிழ் மக்கள் மீதான அரச
படையினரின் உச்சக்கட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களை வெளிக்கொண்டுவந்தமை என்பவை காரணமாக மலையக மக்கள் முன்னணியின்
தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் , பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் எதிரணிக்கு ஆதரவு
வழங்கியமை காரணமாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பஷீர் சேகுதாவூத் எம்.பி. ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த
மேலதிகப் பாதுகாப்பு நீக்கப்பட்டு இரு பொலிஸார் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு மத்தியிலேயே தியாகராஜா மகேஸ்வரன் எம்.பி. புதுவருட தினமன்று படுகொலை செய்யப்பட்ட
அதேநேரம் மனோகணேசன் எம்.பி. பல்வேறு தரப்பினரின் வற்புறுத்தல்களுக்கு அமைய நாட்டை விட்டு வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
தியாகராஜா மகேஸ்வரன் எம்.பி.யின் கொலைச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இரு தடவைகள் நீதிமன்றில் அடையாள அணிவகுப்புகள்
நடைபெற்றுள்ள போதிலும் சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இதேவேளை, இரண்டாவது தடவை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அடையாள அணிவகுப்பின்போது சந்தேக நபரை அடையாளம்
காண்பிப்பதற்காக சென்ற ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்த இருவரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
தலைநகர் கொழும்பிலும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளிலும் கடந்த வருடத்தின் ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரை மிக மோசமான அளவில்
தமிழ் மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல், கைது , காணாமல்போதல், படுகொலை போன்ற மிக மோசமான
மனித உரிமை மீறல் சம்பவங்கள் ஓரளவு குறைந்திருந்த நிலையில் மீண்டும் புதுவருடதினத்திலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதையே தொடரும்
சம்பவங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
அநுராதபுரம் மாவட்டம், ஹொறவப்பொத்தானைக்கு அப்பால் கெப்பிட்டிக்கொல்லாவ காட்டுப் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை வெட்டுக்
காயங்களுடன் மீட்கப்பட்ட 16 ஆண்களின் சடலங்கள் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் பெரும்
அச்சுறுத்தலையும் தோற்றுவித்துள்ளது.
கெப்பிட்டிக் கொல்லாவ கிரிக்கெட்டுவெவ என்ற காட்டுப்பகுதியில் தமது கால்நடைகளை தேடிச் சென்ற கிராமவாசி ஒருவர் அப்பகுதியில் உள்ள
குப்பை மேடு ஒன்றை அண்மித்த பகுதியில் நிலத்துக்குமேல் புதைந்த நிலையில் மனிதக் கையொன்று தென்படுவதைக் கண்டு பொலிஸாருக்குத்
தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கெபிட்டிகொல்லாவப் பொலிஸார் அப்பகுதி நீதிவான் முன்னிலையில் புதைகுழிகளை தோன்டியுள்ளனர்.
ஒரு புதைகுழியில் இருந்து 10 ஆண்களின் சடலங்களும் மற்றைய புதைகுழியில் இருந்து 6 ஆண்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
புதைகுழிகளில் ஒன்றில் மீட்கப்பட் சடலம் ஒருவாரத்திற்கு முன்னரும் மற்றைய புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் இரு தினங்களுக்கு
முன்னரும் படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்றும் தெரியவருகிறது.
இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களிலே அல்லது அப்பகுதியின் ஏனைய இடங்களிலோ அண்மைக்காலத்தில்
இவ்வாறான எண்ணிக்கையிலான ஆண்கள் காணாமல் போனதாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லையென்றும் பொலிஸ் தகவல்கள் மூலம்
அறியவருகிறது.
அதேநேரம், அப்பகுதி கிராம மக்கள் இரு புதைகுழிகளிலிருந்தும் மீட்கப்பட்ட சடலங்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லையென்றும் தெரிந்துள்ள
நிலையில் இவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் கடத்தி வரப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகின்றது.
அதேநேரம், கெப்பிட்டிக்கொல்லாவ கிராமப்புறக் காட்டுப் பகுதியிலுள்ள இரு புதைகுழிகளிலிருந்தும் மீட்கப்பட்ட 16 சடலங்களும் ஏனையோரால்
இனங்காணப்படாத நிலையில் தமிழர்களுடையதாகவேயிருக்கலாம் என்று நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி
குற்றஞ்சாட்டியுள்ளது.
அரசபடையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப்பகுதியில் இரு புதைகுழிகளிலிருந்து 16 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கமே
முழுமையாகப் பொறுப்பேற்பதுடன், இது தொடர்பான நீதியான விசாரணையொன்று அவசியமென்றும் ஐக்கிய தேசியக் கட்சி வலிறுத்தியுள்ளது.
நாட்டில் இன்று சட்டமும், ஒழுங்கும் பேணப்படாமல் மக்கள் அச்சம், பயப்பீதிக்குள் தள்ளப்பட்டிருப்பதுடன், தொடரும் இவ்வாறான சம்பவங்கள்
ஒவ்வொன்றும் இராணுவ ஆட்சியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதையே காட்டுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேவேளை, இரு புதைகுழிகளிலிருந்தும் 16 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒலி,ஒளி பரப்புச் செய்ய வேண்டாமென்று அரச
உயரதிகாரிகளால் ஊடக நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டமை எதற்காக என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.
இவ்வாறே கடந்த வருடமும் அவிசாவளை, அநுராதபுரம், பமுனுகம சேற்றுநிலப்பகுதி ஆகிய இடங்களில் வெட்டுக் காயங்கள், துப்பாக்கிச் சூடு
என்பவற்றுடன் மீட்கப்பட்ட பல சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையிலேயே விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், கெப்பிட்டிக்கொல்லாவ காட்டுப் பகுதியிலிருந்து கடந்த வியாழக்கிழமை 16 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மூன்று விசேட
பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தலைநகர் கொழும்பில் மீண்டும் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும்,
பயப்பீதியையும் தோற்றுவித்துள்ளது.
கடந்த 14 ஆம் திகதி பொங்கல் தினத்திற்கு முதல்நாள் இரவு கொழும்பு கொட்டாஞ்சேனை கொலிஜ் வீதியில் வசிக்கும் மட்டக்களப்பு போரதீவைச்
சேர்ந்த அரசரட்ணம் நிர்மலகாந்தன் (வயது 27) என்ற இளைஞர் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவதற்காக தனது நண்பருடன் சென்ற இவர் ஹின்னிஅப்புஹாமி மாவத்தையில் வைத்து வெள்ளை வான்
ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவே அவரது உறவினர்கள் முறையிட்டுள்ளார்கள்.
இதேவேளை, கொழும்பு ஆமர் வீதியில் கட்டிட நிர்மாணப்பணியில் ஈடுபட்டு விட்டு அவரது இருப்பிடம் திரும்பிக்கொண்டிருந்த நீர்வேலியைச் சேர்ந்த
மார்க்கண்டு சுதன் (வயது 25) என்ற இளைஞர் வெள்ளை வான் ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனதாக உறவினர்களால்
முறையிடப்பட்ட நிலையில் ஒருவாரகாலத்திற்குப் பின்னர் ஹெட்டியாவத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட, கைது செய்யப்பட்ட மேலும் பலர் ஹெட்டியாவத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டள்ளதாகவும்
பிரதியமைச்சர் பி. இராதாகிருஷ்ணன் விசனம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த 8 தமிழ்
இளைஞர்களும் கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
கடவுச்சீட்டு பெற்று வெளிநாடு செல்வதற்காக வந்த இவர்கள் அனைவரிடமும் அவர்களை உறுதிப்படுத்தக்கூடிய அனைத்து ஆவணங்களும் உள்ள
நிலையிலும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், தலைநகரில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் காரணமாகவும், வீதிச்சோதனை நடவடிக்கைகள்
காரணமாகவும் தமிழ் மக்கள் தினமும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலைமையேற்பட்டுள்ளதுடன், சிவில் கண்காணிப்பு
நடவடிக்கையில் ஈடுபடுவர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் அதிகரித்துள்ள கடத்தல், கைது, காணாமல்போதல், படுகொலை போன்ற சம்பவங்கள் தமிழ் மக்களை பெரும் அச்சநிலைமைக்குள்
தள்ளிவீழ்த்தியுள்ளது.
கொழும்பு தினக்குரல் செய்திகள்தமிழக
மீனவரின் வாழ்வாதாரத்துக்கு கண்ணிவெடி வைத்துள்ள கடற்படை
[27 - January - 2008] -கலைஞன்-
கச்சதீவு தொடக்கம் நெடுந்தீவு வரையிலான கடற்பகுதிகளில் இலங்கை கடற்படையினர் விதைத்துள்ள கண்ணிவெடிகளினால் தமிழக மீனவர்களின்
வாழ்வாதாரம் தகர்க்கப்பட்டுள்ள அதேவேளை மீனவர்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் இலங்கை கடற்படை உலை வைத்தமைக்கு இந்திய
அரசு ஆதரவு தெரிவித்துள்ளமை தமிழக மீனவர்களை சீற்றமடைய வைத்துள்ளது.
கடற்புலிகளின் ஊடுருவல்கள் , கடத்தல்கள், தாக்குதல்களைத் தடுப்பதற்காகவென கச்சதீவு முதல் நெடுந்தீவு வரையான கடல்பகுதிகளில் நீரடி
பாதுகாப்பு பொறிமுறைகளை இலங்கை கடற்படை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கமைய இப்பகுதிகளில் கப்பல்கள், படகுகளைத் தகர்க்கக் கூடிய வகையிலான கண்ணிவெடிகள் பெருமளவில் விதைக்கப்பட்டுள்ளன.
இந்த நீரடி பாதுகாப்பு பொறிமுறை தொடர்பாக இந்தியக் கடற்படைக்கு தகவல் வழங்கியுள்ள இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை
தாண்ட விட வேண்டாமெனக் கூறியுள்ளதுடன் அவ்வாறு எல்லை தாண்டிவரும் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு தாம் பொறுப்பாளிகளாக
முடியாதெனவும் எச்சரித்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் இந்த அபாய அறிவிப்பு தமிழக முதன்மை செயலாளர் எல்.கே.திருப்பதிக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதுடன்
இராமேஸ்வரத்திலிருந்து நாகப்பட்டினம் வரையிலான கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு தமிழக மீனவர்களை
எச்சரிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழ் நாட்டுக் கடற்படைத் தளபதி கொமோடோர் பிலிப்வன் ஹால்ரென் கூறுகையில்;
கச்சதீவு முதல் நெடுந்தீவு கடல் பகுதி வரை கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிகளுக்குள் தமிழக மீனவர்கள் நுழைவதைத்
தடுக்குமாறும் கடந்த திங்கட்கிழமை இலங்கை கடற்படையின் வடபகுதித் தளபதி எமக்குத் தெரியப்படுத்தினார்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் எம்முடன் தொடர்பில் இருக்கிறார்கள். அதனாலேயே தமிழக மீனவர்கள் கச்சதீவு, நெடுந்தீவு கடற்பகுதிக்குள்
நுழைவதைத் தடுக்குமாறும் அப்படி அவர்கள் நுழையும் பட்சத்தில் அவர்களுக்கு பேராபத்து ஏற்படுமென்றும் எமக்கு உடனடியாகவே தகவல்
வழங்கினர்.
இதையடுத்து நாங்கள் இந்த ஆபத்து குறித்து அனைத்து மீனவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
தமிழக மீனவர்கள் தமது எல்லைகளுக்குள்ளேயே மீன் பிடியில் ஈடுபட வேண்டுமென நாமும் பல வருடமாக வலியுறுத்தி வருகின்றோம். இவர்கள்
எல்லை தாண்டுவதாலேயே பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
கடல் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பின் தன்மை குறித்து இலங்கை கடற்படை எமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை.
பாதுகாப்பு பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாக மட்டுமே அவர்கள் எமக்குத் தகவல் தந்தார்கள். ஆனால், எந்தெந்த இடங்களில்
கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் எமக்குத் தெரியாது.
தமிழக மீனவர்கள் விலகியிருக்க வேண்டிய இடங்களை மட்டும் இலங்கை கடற்படையினர் எமக்கு தெரிவித்துள்ளனர். அந்த விபரங்களை நாம்
மீனவர்களுக்கு தெரியப்படுத்தி எச்சரித்துள்ளோம்.
இலங்கை தனது அதிகாரத்திற்குட்பட்ட தனது எல்லையின் கரையோரத்தை அண்டிய பகுதிகளிலேயே இந்த பாதுகாப்பு நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளது. இது சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலல்ல. இந்த பாதுகாப்பு நடைமுறையை மேற்கொள்ள இலங்கைக்கு முழு உரிமையும்
உள்ளது.
ஏனெனில், இலங்கையில் ஒரு முழுப் போர்ச்சூழல் நிலவுகின்றது. அதனால் அவர்கள் ஒரு தற்பாதுகாப்பு நடவடிக்கையாகவே இதனை செய்துள்ளார்கள்.
தமக்கு எதிராக எழும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக எடுக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை தான் இந்த பாதுகாப்பு நடைமுறை.
சர்வதேச கடல் எல்லை என்று ஒன்று இருப்பதால் நாம் எமது மீனவர்களை எமது எல்லைக்குள்ளேயே மீன்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம் என்று
தெரிவித்துள்ளார்.
இதேவேளை , இது தொடர்பாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமோடோடர் தசநாயக்க கூறுகையில்;
எமது இந்த கண்ணிவெடி பாதுகாப்பு நடைமுறை தமிழக மீனவர்களுக்கு எதிரானதல்ல. எங்களது கடற்படைத் தளங்களை பாதுகாப்பதற்காகவே
தற்பாதுகாப்பு ரீதியாக கண்ணிவெடிகளை நெடுந்தீவு, நயினாதீவு கடற்பகுதிகளில் விதைத்திருக்கின்றோம்.
இந்தப் பகுதிகளில் மீனவர்கள் பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், கடற்படைத் தளங்களை சுற்றியுள்ள பகுதிகளை
நாங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்துள்ளோம். அதனாலேயே இப்பகுதிகளில் பொதுமக்கள் மீனவர்களின் போக்குவரத்தை தடை
செய்துள்ளோம். அதனாலேயே தமிழக மீனவர்களை இப்பகுதிக்குள் நுழைய வேண்டாமென எச்சரித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரின் இந்த அறிவிப்பு அந்நாட்டு மீனவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத போதும் அது தமிழக மீனவர்களை மிக மோசமாக
பாதித்துள்ளது. ஏற்கனவே இலங்கை கடற்படையின் அட்டூழியத்தினால் தொழிலுக்கு செல்ல முடியாமல் பல தமிழக மீனவர்கள் பட்டினியால் வாடிக்
கொண்டிருக்கும் நிலையே தற்போது வந்துள்ளது. இந்த அறிவிப்பு அவர்களை இன்னும் விசனமடைய வைத்துள்ளது.
இலங்கை - இந்திய கடல்பகுதி மிகவும் குறுகலானது. தனுஷ் கோடியிலிருந்து 6 கடல் மைல்தூரத்திலும் இராமேஸ்வரத்திலிருந்து 11 கடல்மைல்
தூரத்திலுமே இலங்கை கடல் எல்லையுள்ளது. இந்த குறுகிய கடல் எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கும் போது கடல்
எல்லையை தாண்டுவது தவிர்க்க முடியாதது.
காற்று, நீரோட்டம் போன்ற காரணங்களால் இலங்கை கடல் பகுதிக்குள் செல்வது இயல்பானதொன்று. அதேவேளை தமிழக மீனவர்கள் மட்டும் எல்லை
தாண்டிச் செல்லவில்லை. இலங்கை மீனவர்கள் பலரும் எல்லை தாண்டி வந்து இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்கின்றார்கள். இவர்களை இந்திய
கடற்படையினர் கண்டுகொள்வதேயில்லை. ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைவதால் கொல்லப்படுகிறார்கள், கைது
செய்யப்படுகின்றார்கள்.
கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டுள்ள கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. நல்லெண்ண அடிப்படையில் அதனை இலங்கைக்கு தாரைவார்த்துக்
கொடுத்து விட்டு இப்போது எமது மீனவர்களின் உயிர்களை பறிகொடுத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. அத்துடன் பலர் இலங்கை கடற்படையால்
கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கச்சதீவு கடற்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை இருக்கின்ற போதும் அதனை ஏற்க மறுக்கும் இலங்கை கடற்படையினர்
தொடர்ந்தும் தமிழக மீனவர்களை படுகொலை செய்தும் கைது செய்து சிறைகளிலடைத்தும் வருகின்றனர். இலங்கை கடற்படையின்
தாக்குதல்களினால் இதுவரை 300 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் உரியிழந்துள்ளனர். ஆனால் இன்று வரை இந்திய கடற்படை தாக்கி ஒரு இலங்கை
மீனவர் கூட உயிரிழந்ததில்லை.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும் மத்திய அரசு
இலங்கையரசுக்கு கடிதம் எழுதுவதும் வழக்கமாகிப்போன விடயமாகிவிட்டது.
அண்மையில் கூட 12 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களை சிறையிலடைத்து வைத்துள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வருவதாலேயே கைது செய்வதாக இலங்கையரசு தெரிவிக்கின்றது. விடுதலை புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக
இலங்கை, இந்திய கடற்படைகள் 24 மணிநேரமும் தீவிர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக மீனவர்களால் எவ்வாறு
எல்லையை தாண்டிச் செல்லமுடியும்?
பல சந்தர்ப்பங்களில் இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் வைத்தே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவற்படை, இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள், ரோந்து கப்பல்கள், வேவு விமானங்கள், கடற்படைப் படகுகளென இந்திய
கடற்பகுதியை கண்காணித்து வருகையில் இலங்கை கடற்படை சர்வசாதாரணமாக வந்து தமிழக மீனவர்களை தாக்குகின்றனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை கண்டு பிடிக்க முடியாது. இலங்கை கடற்படையாலும் இந்திய எல்லைக்குள் நுழைந்து மீனவர்கள் மீது
தாக்குதல் நடத்துவதை தடுக்க முடியாத இந்திய கடற்படையாலும் கடற்புலிகளை மட்டும் கட்டுப்படுத்திவிட முடியுமா? அல்லது புலிகளை மட்டுமே
கண்காணிப்போம்,தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டாலும் கண்டு கொள்ளமாட்டோம் என்ற நோக்கில் இந்திய கடற்படை உள்ளதா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
கச்சதீவுக் கடலில் மீன் பிடிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு முழு உரிமையும் இருப்பதாக கூறிக்கொள்ளும் தமிழக அரசு அப்பகுதியில் மீன்பிடிக்கும்
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல்களை கண்டு கொள்ள மறுக்கின்றது. அதேபோன்றே இந்திய கடற்படையும்
விடுதலைப்புலிகளை கண்காணிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதே தவிர தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து காப்பாற்ற
பின்னடிக்கின்றது.
இந்நிலையில் 2008 ஆம் ஆண்டுக்காண சட்டசபை கூட்டத்தொடர் கடந்தவாரம் ஆரம்பமான போது அதில் உரையாற்றிய தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங்
பர்னாலா. தமிழக மீனவர்கள் மீன் பிடித்து செல்லும் போது ஏற்படும் இன்னல்களை தீர்க்க நடவடிக்கையெடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார். ஆனால்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும்
எடுக்கவில்லையென்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இலங்கை கடற்படையால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க உடனடிநடவடிக்கையெடுப்பதாக தமிழக அரசு
உறுதிவழங்கியபோதும். மீனவர்கள் விடுவிக்கப்படாததால் இராமேஸ்வர மீனவர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்ததால்
அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் நீதிமன்ற உத்தரவுக்கமைய எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்க மறியலில்
வைக்கப்பட்டுள்ளதால் அவர்களை உடனடியாக விடுவிக்க முடியாதிருப்பதாக இலங்கையரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமது அன்றாட ஜீவனோபாயத்துக்காக கடலோடு போராடும் மீனவர்களுக்கு கடலில் கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டிருப்பதாக இலங்கை கடற்படை
அறிவித்துள்ளமை பேரிடியாகனே விழுந்துள்ளது. கச்ச தீவை முழுமையாக ஆக்கிரமிக்கவே இலங்கையரசு இவ்வாறு செய்வதாக மீனவர்கள்
குமுறுகின்றனர்.
அத்துடன் இலங்கையரசு எதைச் சொன்னாலும் அதற்கு "கோயில் மாடு" போல் தலையாட்டும் தமிழக மத்திய அரசுகள் மீதும் மீனவர்கள்
விசனமடைந்துள்ளனர்.
இதேவேளை விடுதலைப்புலிகளின் ஊடுருவல்கள், தாக்குதல்களை தடுக்கவே கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளதாக கூறும் இலங்கை கடற்படை
இப் பாதுகாப்பு எல்லைக்குள் ஊடுருவாதவரை இதனால் பொதுமக்களுக்கு மீனவர்களுக்கு ஆபத்தில்லையெனக் கூறுகிறது.
ஆனால் கடற்பகுதிகளில் விதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அலைகளினாலும் காற்றினாலும் அடித்துச் செல்லப்பட்டு வேறு இடங்களை
சென்றடையும் சாத்தியங்கள் அதிகமாக இருப்பதால் இலங்கை கடல்எல்லையையும் தாண்டி இதன் ஆபத்து விரிவடையப் போகின்றது.
இதனால் மீனவர்களும் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தப்பிச் செல்லும் அகதிகளுமே பேராபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மலையக மக்களின் சகல கோரிக்கைகளையும் ஜனாதிபதி இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பார் அமைச்சர் சந்திரசேகரன் கூறுகிறார்
1/27/2008 7:34:39 PM வீரகேசரி நாளேடு
கண்டி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் அரிசி வழங்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருப்பது மலையக
மக்களின் உடனடித் தேவைகளை அரசு கவனத்தில் எடுத்துள்ளது என்பதற்கான அடையாளமாகவே கருதுகிறேன் என்று மலையக மக்கள்
முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் குறிப்பிட்டார்.
தோட்ட மக்களுக்கு நிவாரணம் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்தளை, கண்டி மாவட்ட பெருந்தோட்டங்களை சேர்ந்த சுமார்
200 குடும்பங்களுக்கு இலவசமாக பத்து கிலோ அரிசியும் ஒரு கிலோ அரிசி மாவும் வழங்கினார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் அரிசி வழங்கும்
வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் சந்திரசேகரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகுமாரன் உபதலைவர் ஏ.லோரன்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இங்கு மேலும்
உரையாற்றிய அமைச்சர் சந்திர÷சகரன் கூறியதாவது:
அரிசி வழங்கும் வைபவம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உடனடி எதிர்பார்ப்பõக இருப்பினும் மலையக மக்களின் சகல கோரிக்கைகளையம்
ஜனாதிபதி இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பார்.
மலையக மக்களின் பிரச்சினைகள் குறிப்பாக மலையக இளைஞர்களின் கோரிக்கைகள் அவர்கள் எதிர்பார்ப்புக்கள் பற்றிய தெளிவான கண்ணோட்டம்
ஜனாதிபதியிடம் உள்ளது.
மலையக மக்களின் எதிர்கால சந்ததியினர் பெருந்தோட்ட தொழிலாளர்களாகவே தோட்டத்துக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்ற அடக்கு முறையில்
இருந்து விடுபட வேண்டுமென்பதே இன்றைய மலையக இளைஞர், யுவதிகளின் இதய துடிப்பாகும். மலையக மக்களின் குடியிருப்புக்கள் மாற்றப்பட
வேண்டும். நவீன வீடமைப்பு திட்டம் அமுலாக்க வேண்டும். அவசியமான சகல உட்கட்டமைப்பு தேவைகளும் அம்மக்களுக்கு கிடைப்பதற்கு
வழிசமைக்க வேண்டும். அத்துடன் மலையக மக்களின் அரசியல் உரிமைகளும், அந்தஸ்தும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை
ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
பாராளுமன்றம், மாகாணசபை, மாநகரசபை, நகரசபை, பிரதேசசபை ஆகியவற்றில் மலையக மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம்
உறுதிப்படுத்தப்படல் வேண்டும் பிரதேச செயலகங்கள் மாற்றியமைக்கப்படல் வேண்டும். சகல அம்சங்களிலும் மலையக சமூகம் ஒரு மாற்றத்தை
கண்டால் மட்டும் அது அபிவிருத்தியடைந்த சமூகமாக கருதமுடியும். ஜனாதிபதி தன் பதவிக்காலத்துக்குள் முப்பது சதவீத வறுமைக் கோட்டின் கீழ்
வாழும் மலையக மக்களின் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கின்றது.
தொலைநோக்குப்பார்வையோடு, தெளிவான அரசியல் சிந்தனைகொண்ட தலைமையக ஜனாதிபதியை நாங்கள் இனம் காண்கின்றோம்.
மலையகத்துக்கான பல்கலைக்கழகம், உயர்கல்விக்கான வாய்ப்புகள், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் மற்றும் பிரதேச நிருவாகத்தில்
மலையக மக்களுக்குள்ள நியாயமான உரிமைகள் போன்றவற்வற்றை செயற்படுத்த ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தேசிய இனப்பிரச்சினை என்றõல் அது வட கிழக்குதான் என்ற நிலைமையை மாற்றி மலையக மக்களின் பிரச்சினைகளும் கவனத்தில் எடுக்கப்படல்
வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகள் உள்வாங்கப்படல் வேண்டும். சுத்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை தலைவர்களில் இதனை மிகச் சரியாக
புரிந்துகொள்கின்ற ஆற்றல் உள்ளவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நாங்கள் கருதுகின்றோம்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்து முடிக்க வேண்டுமென்ற பிரசாரத்தில் துளிர்விட்டு, பரந்துவிரிந்து, சுயநலத்தோடு
உறுதியோடு நிற்கின்ற அரசியல் தைரியம் எங்களிடமுள்ளது. எனவே, ஜனாதிபதி அவர்கள் எமது அரசியல் பலத்தை புரிந்துகொள்ளும் வகையில்
எம்மோடு ஒத்துழைப்பார் என நான் எதிர்பார்க்கின்றேன்.
இந்நிலையில் ஜனாதிபதி அவர்கள் மலையக மக்கள் மீதுள்ள ஈடுபாட்டையும் உணர்வையும் தெளிவுபடுத்தும் விதத்தில் செயற்பட வேண்டுமென
மலையக மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது.
இந்த அரசியல் இலக்கை நோக்கி வேகமாக பயணம் செய்ய ஜனாதிபதியின் செயற்பாடுகள் தூண்டுதலாகவும் உற்சாகமூட்டுவதாகவும்,
நம்பிக்கையூட்டுவதாகவும் அமைய வேண்டும். இதன் மூலம் மட்டுமே மலையக எதிர்கால சந்ததியினரை நாம் சரியாக வழிநடத்த முடியும்.
No comments:
Post a Comment