Wednesday, 30 January 2008

வட போர் முனை முன்னெடுப்பு முறியடிப்பு.

வட போர்முனையில் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த வந்த படையினரின் முயற்சி முறியடிப்பு
[புதன்கிழமை, 30 சனவரி 2008, 11:07 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வட போர்முனையான யாழ். கிளாலி, முகமாலை, நாகர்கோவில். பகுதிகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த
வந்த சிறிலங்காப் படையினரின் தாக்குதல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. படையினரின் பின்தளங்களில் இருந்து இன்று புதன்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் செறிவான ஆட்டிலெறி எறிகணை மற்றும் பல்குழல்
வெடிகணை எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த படையினர் முயற்சித்தனர்.
இம் முயற்சிக்கு எதிராக சுமார் 45 நிமிட நேரம் விடுதலைப் புலிகள் நடத்திய கடும் எதிர்த்தாக்குதலில் படையினர் இழப்புக்களுடன் தமது
நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலின் பின்னர் விடுதலைப் புலிகள் நடத்திய தேடுதலின் போது ஆர்.பி.ஜி எறிகணை உள்ளிட்ட படையினரின் பொருட்கள் விடுதலைப்
புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments: