Thursday, 24 January 2008

தொழில் வாய்ப்பு: மத்திய கிழக்கு, மரணக்கிடங்கு!

துபாய் விமான நிலையத்தில் இலங்கை பணிப்பெண் தற்கொலை
January 24th, 2008 பகுப்புகள்: அமீரகம், இலங்கை, குவைத், தற்கொலை, பெண்கள், மரணம் தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத்
துபாய் விமான நிலையத்தில் இலங்கை- மட்டக்களப்பு -பணிப்பெண் தற்கொலை
துபாய் விமான நிலையத்தில் இலங்கை பணிப்பெண் கலா சங்கரபிள்ளை ( வயது 30 ) பெண்கள் ஓய்வறையில் தற்கொலை செய்து கொண்டார்.
குவைத்தில் பணிபுரிந்து வந்த இவர் துபாய் வழியாக செல்லும் போது கொழும்பு விமானத்திற்காக பயணிகள் ஓய்வறையில் இருந்த போது தற்கொலை
செய்து கொண்டுள்ளார். கணவரால் கைவிடப்பட்ட இவருக்கு ஒரு ஆண், மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் குவைத்திற்கு சென்றார். குடும்பத்தினர் இவரது வருகையை
எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலதிக விபரங்கள் ஆங்கில ஏடு Khaleej Times இலிருந்து கீழே.

Lankan maid commits suicide at Dubai airport
By Preeti Kannan and Amira Agarib (Our staff reporters)
24 January 2008 DUBAI — A Sri Lankan woman committed suicide at the Dubai International Airport recently by hanging herself.
Her young children, who are in shock, are now waiting anxiously for the remains of their mother to reach them.
Kala Sangarapillai, 30, who was working as a housemaid in Kuwait and was on her way to Sri Lanka via Dubai to see her family when she allegedly hanged herself in
the ladies restroom at the Dubai airport three weeks back.
An official from the General Department of Forensic Science of Dubai Police said, “The Sri Lankan woman hanged herself from the ceiling of the airport’s ladies
restroom and was found by the cleaners. The body of the victim is still in the police mortuary.”
He added that the body would be handed over to the authorities concerned after getting approval from the Dubai Public Prosecution on completion of all legal and
administrative procedures.
The family of the woman is devastated. Thangeswari Sivalingam, aunt of Kala, told Khaleej Times over the phone from Batticolao district in Sri Lanka, “We cannot
believe this has happened. Her four children were eagerly waiting to see their mother, who was supposed to spend a few days with them before she went back to
work. We see no reason for her to have resorted to such an extreme step.”
According to Thangeswari, Kala, who had been abandoned by her husband, was working in Kuwait for the past three years and this was her first trip to see them.
She had borrowed heavily and had gone to work as she was keen on giving her son and three daughters a good education.
“We were all so happy that we were going to see her. Now, we are waiting for the body to reach us. Only then, we would really believe she is no more.”
Consul-General of Sri Lanka Wasantha Senanayake said the consulate was in touch with Emirates airline, on whose flight Kala arrived from Kuwait, and the Dubai
Airport authorities to repatriate the body.
“We have received the power of attorney from the next of kin in Sri Lanka and are now awaiting the necessary documentation to be completed to repatriate the
body. Since it is a suicide case, it is still not clear who will bear the cost of repatriation,” said the Consul-General.
An Emirates spokesperson told Khaleej Times that while it was inappropriate for the airline to comment on the incident as it was currently under police jurisdiction,
the airline had a dedicated special assistance team to assist affected passengers and family members in situations of accident and death.
“The team liaises with the relevant authorities and consulates to handle the necessary legal formalities. If the deceased passenger is not covered by travel and health
insurance, and if his/her family does not have the funds to meet the death formalities, Emirates explores options to resolve the cost towards repatriating the body or
for local burial/cremation in Dubai.”


துபாய் இந்தியப் பள்ளி ஆசிரியை தற்கொலை
January 17th, 2008 பகுப்புகள்: அமீரகம், கல்வி, சர்ச்சை, துபாய் தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத்
துபாய் அவர் ஓன் இந்தியப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆரம்பப் பள்ளி ஆசிரியை மேரி ( வயது 25 ). மேரி தன்னுடன் பணிபுரிந்து வரும் இரண்டு
ஆசிரியைகளுடன் ஷார்ஜாவில் தங்கி வருகிறார். அவர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டுள்ளார்.
திருமணமாகாத இந்த ஆசிரியை தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்ததும் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
சமீபகாலமாக இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது அமீரகத்தில் மட்டுமன்றி வளைகுடாவின் பல்வேறு நாடுகளிலும் அதிகரித்து வருகிறது.

துபாயில் இந்திய தொழிலாளி தற்கொலை
January 23rd, 2008 பகுப்புகள்: *பொது, அமீரகம், சமூகம், துபாய் தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத்
துபாயில் பணிபுரிந்து வந்த இந்திய தொழிலாளி சந்திரன் பிள்ளை ( வயது 54 ) சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் இரவு உணவு உண்டார். சனிக்கிழமை காலை பணிக்குச் செல்லவில்லை. வேலைக்கு நண்பர்கள் சென்று வந்ததும் அறையைத் திறந்த போது சந்திரன் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சமீபத்தில் தனது மனைவியிடம் இருந்து வந்த கடிதத்தில் திருமணமான தனது மகள் பிரச்சனை காரணமாக தாய் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டதாக எழுதியிருந்தார்.இதனால் சோகம் அவரை வாட்டியது. இதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
போலீஸார் அக்கடிதத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி: 'சற்றுமுன்'

No comments: