Wednesday, 20 February 2008

அமெரிக்காவுக்கு தாரை வார்க்க ஈழத்தமிழர்களின் திருமலையை திருடிக்கொண்டது இந்தியா!

Posted on : Tue Feb 19 13:00:00 2008
திருமலையில் அதிகரிக்கும் இந்தியச் செல்வாக்கு புலிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் "சண்டே ரைம்ஸ்' வார ஏடு கருத்து விடுதலைப் புலிகளின் தமிழீழத் தனி நாட்டின் தலைநகர் என்று கருதப்படும் திருகோணமலையில் அதிகரித்து வரும் இந்தியாவின் செல்வாக்கு, தமிழீழ
விடுத லைப் புலிகளுக்கு ஒரு பாரிய சாவாலக இருக்கப்போகின்றது.கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்' ஆங்கில வாரப் பத்திரிகையில் இவ் வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் மேலும்
தெரிவிக்கப்பட்டிருப்பவை வரு மாறு:திருகோணமலையில் இலங்கை அர சின் நடவடிக்கைகளால் இந்தியாவின் பிர சன்னம் அதிகரித்துவருகின்றது.இந்தியன் ஓயில் நிறுவனத்திடமிருந்து இலங்கை மின்சாரசபைக்கான எரிபொருள் கள் வழங்கப்படவுள்ளன.திருகோணமலையின் நிலாவெளியில் அனல்மின் நிலையம் அமைக்க இந்தியா வும் இலங்கையும் கடந்தவாரம் முடிவு செய் துள்ளன. 500 மெகாவாட்
மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இத்திட்டத்துக்கு 25 கோடி அமெரிக்க டொலர் செலவிடப்படு கிறது. இந்திய அனல்மின் உற்பத்திக் கூட் டுத்தாபனமும்
இலங்கை மின்சார சபை யும் இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றன.எதிர்வரும் ஏப்ரலில் இரண்டு தொகுதிகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.திருகோணமலையில் இந்தியாவின் பிரசன்னம்இலங்கையில் இத்தகைய நடவடிக்கை யானது இயல்பாகவே கேந்திர முக்கியத்து வம் வாய்ந்த திருகோணமலையில் இந்தி யாவின் பிரசன்னத்தை
அதிகரிக்கச் செய் யும். ஏற்கனவே திருகோணமலையில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்ப டுத்தப்பட்ட எண்ணெய்க் குதங்களை இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனத் திடமிருந்து "இந்தியன் ஓயில்' நிறுவனம் குத்தகைக்குப் பெற்றுள்ளது.தமிழீழத் தனிநாட்டின் தலைநகர் எனக் கருதப்படுகின்ற திருகோணமலையில் அதிகரித்துவரும் இந்தியாவின் செல்வாக் கானது தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கு ஒரு பாரிய சவாலாக இருக்கும். இதேபோல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோண மலை மீது கண் வைத்திருக்கும் உலக நாடு
களின் சக்திகளினது நகர்வுகளையும் இது முடிவுக்குக் கொண்டுவரும்.மன்னார் வளைகுடாவில்மற்றொரு இந்தியத் திட்டம்அதேபோல, மன்னார் வளைகுடாப் பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து குழாய் மூலம் இலங்கைக்கு குழாய்வழி மின்சாரம் கொண்டுவரும் மற்றொரு
திட்டமும் செயற் படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் விவா திக்க எதிர்வரும் வாரம் இந்தியக் குழுவி னர் இலங்கைக்கு வரவுள்ளனர்.கடந்தவாரம் வெள்ளிக்கிழமை புது டில்லி சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்தி யத் தரப்பினருடனான
நெருக்கமான உறவு குறித்து விவாதித்தார்.பாக்குநீரிணைப் பகுதியில் இந்தியக் கடலோரப் பொலிஸார் விடுதலைப் புலி களின் கடல்சார் நடவடிக்கைகளை ஒடுக்க பாரிய நடவடிக்கைகளை
மேற்கொண்டு வரு கின்றனர். இதன் மூலமாக விடுதலைப் புலிகளுக்கான ஆயுதங்கள் மற்றும் மருந்துப்பொருள்கள் விநியோகம் தடுக்கப்படும். அதேபோல் இலங்கை இராணுவப் புல னாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு இந்தியாவின் மராட்டிய மாநிலம் புனேயில் பயிற்சி அளித்தமையும் இருதரப்பு பாது காப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கிறது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted on : Tue Feb 19 13:10:00 2008
மன்னாரில் நேற்று மும்முனைகளில் 12 மணி நேரம் தொடர் மோதல்! முன்நகர்வு முறியடிப்பு எனப் புலிகள் தகவல்
மன்னாரில் பாலைக்குழி, உயிலங்குளம், கட்டுக்கரை ஆகிய மூன்று முனைகளில் இருந்தும் விடுதலைப்புலிகளின் பகுதிகளுக்குள் முன்னேற முயன்ற
படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று 12 மணி நேரமாகத் தொடர்ந்து கடும்மோதல்கள் இடம்பெற்றதாக களமுனைச்
செய்திகள் தெரிவித்தன.முன்நகர்வுக்கு எதிராகத் தாம் கடும் தாக்குதல்களை நடத்தி முறியடித்துவிட்டனர் என்று விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து நேற்றிரவு வரை இராணுவத் தரப்பில் இருந்து தகவல் எதுவும்வெளியிடப்படவில்லை. மன்னாரில் மும்முனைகளில் நேற்று அதிகாலை முதல் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப்
புலிகள் தீவிர தாக்குதலை நடத்தினர் எனத் தெரிவிக்கப்பட்டது.கட்டுக்கரை, பாலைக்குழி, உயிலங்குளம் ஆகிய பகுதிகள் ஊடாக நேற்று அதிகாலை 5.30 மணி முதல் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல்
வெடிகணைச் சூட்டாதரவுகளுடனும், டாங்கி மற்றும் வான் தாக்குதல்கள் சகிதம் படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.இம் மும்முனை நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.நேற்று மாலை 6 மணியளவில் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. இத் தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று விடுதலைப்புலிகள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.

+++++++++++++++++++++++++
மாவோயிஸ்ட் தலைவர் உள்ளிட்ட நேபாள தலைவர்களுடன் இந்திய காங்கிரஸ் குழு சந்திப்பு
[19 - February - 2008] நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா உள்ளிட்ட தலைவர்களை இந்திய காங்கிரஸ் தலைவர்கள் குழு சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் தலைமையிலான 4 பேரடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று மூன்று நாள் விஜயமாக நேபாளம்
சென்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நேபாளத்தை வந்தடைந்த இவர்கள் மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா, நேபாள காங்கிரஸ் தலைவர் சுசில் கொய்ராலா,
துணைத் தலைவர் கோபால் மான்செரஸ்டா உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
அரசியல் நிலைவரங்கள் குறித்தும் நடைபெறவுள்ள அரசியலமைப்புச் சட்ட நிர்ணயசபைத் தேர்தல் குறித்தும் பேச்சு நடத்தினர். மேலும் தெராய் பகுதி
மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் அவர்களிடம் வலியுறுத்தினர்.
பின்னர் மாதேசி தலைவர்களையும் இக்குழுவினர் சந்தித்துப் பேசினர். பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவையும் இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர்.
தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஷகீல் அகமது, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி, காங்கிரஸ் எம்.பி.ஜிதேன்
பிரசாதா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மாதேசி ஜனநாயக முன்னணி மற்றும் மூன்று மாதேசி ஆதரவு அமைப்புகள் தெராய் பகுதியில் காலவரையற்ற முழு பகிஷ்கரிப்புக்கு அழைப்பு
விடுத்திருந்தன.
இதன் காரணமாக மாதேசிகள் அதிகமாக வாழும் சன்சராய், மோராங், சப்தரி, தனுஷா உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமை இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டது.
பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன; கடைகள் திறக்கப்படவில்லை. வணிகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஓடவில்லை. இப்பகுதியில் ரயில்
போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.
நேபாளத்தின் தெராய் பகுதியில் வசிக்கும் மாதேசி இன மக்கள் அதிக அளவு அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார உரிமைகள் கோரி போராடி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்களுடன் சிங்களவர் மூவர் கைது வெலிகந்தையில் சம்பவம்
2/18/2008 6:23:20 PM வீரகேசரி இணையம் - பொலன்னறுவை வெலிகந்தை பொலிஸ் பிரிவுகுட்பட்ட பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்த மூன்று
சிங்களவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள் ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இவர்கள் வெலிகந்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக்
கொண்டுள்ளதுடன் கூலித்தொழில் செய்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான என்.கே.இலங்ககோன்
தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது :
கொலகனவாடிய செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமகேலாகே தர்மசேன எனும் தர்மே (27வயது), மஹாவௌ செவனபிட்டியவைச் சேர்ந்த
முதுகமலாகே ரஞ்சித் (31 வயது) மற்றும் தொன் ஜினதாசலாகே சமிந்த கருணாசேன (32 வயது) போன்ற சிங்களவர்களே இவ்வாறு பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தர்மசேன மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரிடமிருந்தும் ரீ56 ரக துப்பாக்கி ஒன்றும் துப்பாக்கி ரவைகள் சிலவும்
கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கருணாசேனவிடமிருந்து கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டதாக அவர்களை
சோதனையிட்ட வெலிகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கில் உள்ள ஆயுதக் குழுவொன்றால் வேட்டைக்குச் செல்வதற்காக இத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகளை வழங்கியுள்ளதாக இவர்களிடம்
மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மேலும் இவ்விடயம் குறித்து வெலிகந்தை பொலிஸார் தீவிர விசாரணைகளை
மேøற்கொண்டு வருகின்றனர்

மன்னாரில் இரு முனை நகர்வை முறியடித்ததாக புலிகள் தெரிவிப்பு
[18 - February - 2008]
மன்னார் பண்டிவிரிச்சானிலும் பாலமோட்டையிலும் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 11 படையினர்
கொல்லப்பட்டுள்ளதாகவும் 23 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற இந்தச் சமர் குறித்து புலிகள் கூறுகையில்;
பண்டிவிரிச்சான் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி நேற்று முன்தினம் காலை 10 மணிக்குப் படையினர் முன்னகர்ந்த போது
விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். படையினரின் இந்த முன்னகர்வு பிற்பகல் 3.20 மணிக்கு விடுதலைப் புலிகளால்
முறியடிக்கப்பட்டது. படையினரின் முன்னகர்வு முயற்சிக்கு எதிராக செறிவான ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு இம்முன்னகர்வு முறியடிக்கப்பட்டது.
இதில் 4 படையினர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். இரு வெவ்வேறு நேரங்களில் படையினர் இம் முன்னகர்வு முயற்சிகளை
மேற்கொண்டிருந்தனர். பாலைக்குழியில் நேற்று முன்தினம் காலை படையினர் மேற்கொண்ட முன்னகர்வும் விடுதலைப் புலிகளால்
முறியடிக்கப்பட்டது.
அதேநேரம் பாலமோட்டைப் பகுதி ஊடாக நேற்று முன்தினம் படையினர் நடத்திய தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் 7
படையினர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். அப்பகுதியிலும், நேற்று முன்தினம் நண்பகல் 12.45 மணிக்கு படையினர் செறிவான
ஷெல்தாக்குதலை நடத்தியவாறு விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி முன்னகர்வினை மேற்கொண்டனர். பிற்பகல் 2.30 மணிவரை நடைபெற்ற
விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதலை அடுத்து படையினர் இழப்புகளுடன் பின்வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

No comments: