Saturday, 16 February 2008

ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே ஆனந்த சங்கரி ஆளுநர் ஆவார் என்று!!

Posted on : Sat Feb 16 8:55:00 2008
வடக்கு மாகாண ஆளுநராக சங்கரியா? தமக்கு எதுவுமே தெரியாது என்கிறார் அவர்!
வடக்கிற்கான ஆளுநர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னர் தன்னைக் கேட்டுக்கொண்டுள்ள போதிலும் அது தொடர்பாகத் தான்
இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி நேற்றுத் தெரிவித்தார்.ஆனந்தசங்கரியை வடக்கு ஆளுநராக நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறப்படுகின்றமை தொடர்பாக அவரிடம் கருத்துக்
கேட்டபோதே அவர் இவ்வாறு நேற்றுச் உதயனுக்குப் பதிலளித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
இச்சந்தர்ப்பத்தில் வடக்கிற்கு ஆளுநர் ஒரு வரை நியமிப்பது பற்றியும் பேசப்படுகின்றது.என்னையே ஆளுநராக நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று ஊடகங்களில் கூறப்படுகின்றது.இதுபற்றிய உண்மை நிலை எதுவும் எனக்குத் தெரியாது. ஊடகங்கள் வாயிலாகத் தான் நானும் அறிகிறேன்.வடக்கின் ஆளுநர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்பது மாதங்களுக்கு முன் என்னிடம் கேட்டிருந்தார். அப்போது நான் எந்தப்
பதிலையும் கூறவில்லை.இப்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு யோசனையாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைத்திருக்கும் யோசனையின்படி வடக்கில்
இடைக்கால நிர்வாகசபை ஒன்றை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இச்சந்தர்ப்பத்தில் ஆளுநர் ஒருவரையும் நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அறிகிறேன்.ஆனால் என்னையே ஆளுநராக நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறப்படுகின்றமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.இது தொடர்பாக நான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவுமில்லை. அத்தோடு இந்த விடயம் தொடர்பாக நான் மேலும் கருத்துக்கூற விரும்பவில்லை.
என்றார் அவர்.

முல்லைத்தீவில் குண்டுவீச்சு
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டில் உள்ள முல்லைத்தீவு, நாயாறுப் பகுதி களில் நேற்றுக்காலை 8.30 மணியளவில் விமானப்படையினரின்
ஜெற்விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தின.விடுதலைப் புலிகளின் மணலாற்று முன் னரங்க நிலைகளின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த கடற்புலிகளின் தளங்களை இலக்குவைத்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது
.
இலங்கையில் இடம்பெயர்ந்தோரை பராமரிக்க 44 மில்லியன் டொலர் நிதி கோருகிறது ஐ.நா.[16 - February - 2008]
இலங்கைப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உணவுகளை வழங்க
44 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக ஐ.நா. முகவர் நிறுவனமான உலக உணவுத் திட்டம் தெரிவித்திருக்கிறது. உலக உணவுத் திட்டம் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை மக்களுக்கு உணவுகளை விநியோகித்து வருவதுடன் அதில் 4 இலட்சம் பேர்
உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் அங்குள்ள மக்களுக்கு உணவுகளை வழங்க 11 மில்லியன்
அமெரிக்க டொலர்கள் உடனடியாக தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டத்தின் வதிவிடப் பணிப்பாளரான மொஹமட் சலேஹீன்
தெரிவித்திருக்கிறார்.
இந்த வருட முடிவிற்குள் 44 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் மொஹமட் சலேஹீன் உள்நாட்டில் கொள்வனவுகளை
மேற்கொள்ள உதவித் தொகைகள் போதியளவு விரைவில் கிடைக்காமையால் தங்களது நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதேநேரம், ஐ.நா. கொடியுடன் கூடிய ட்ரக் வண்டிகளை பராமரிக்கவும் மற்றும் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ஐ.நா. மனிதாபிமான
விமான சேவைப் பிரிவை தொடரவும் உலக உணவுத் திட்டத்துக்கு 2.8 மில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments: