Tuesday, 26 February 2008

கொசொவொ:தமிழரின் தப்புக் கணக்கு








கொசோவோ மார்க்கத்தில் ஈழம்? கொசோவோவின் ஒருதலைப்பட்ச தனிநாட்டுப் பிரகடனமும், அதற்கு சர்வதேசத்தில் சக்தி வாய்ந்த அமெரிக்கா மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற
முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடனடியாக வழங்கிய அங்கீகாரமும் இலங்கையில் பௌத்த சிங்களப் பேரினவாத மமதைப் போக்கில்
வெறிகொண்டலையும் ஆளும் தரப்புகளுக்கு பெரும் அதிர்ச்சியாக வந்து அமைந்திருக்கின்றன. கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்க்கின்ற ஒரு சில நாடுகளை எடுத்துப் பார்த்தால் அவற்றிடையேயும் ஓர் ஒத்த பொது பண்பு
மிளிர்வதை நாம் காணமுடியும்.சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்ததால் சேர்பியா அந்தப் பிரிவினையைக் கடுமையாக எதிர்ப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.அதேவேளை, ரஷ்யா, ஸ்பெயின், சைப்பிரஸ், சீனா, இலங்கை போன்றவையும் இந்தப் பிரகடனத்தை முழு அளவில் எதிர்த்திருக்கின்றன. அதற்கும்
காரணம் இருக்கின்றது.ரஷ்யா ஏற்கனவே செச்னியா, ஜோர்ஜியா பிரிவினைகளை எதிர்கொண்டுள்ளது. ஸ்பெயினில் பாஸ்க் பிரிவினைவாதிகளின் கோரிக்கை வலுத்து
வருகின்றது. சைப்பிரஸ் ஏற்கனவே துருக்கி, கிரேக்க பிரதேசங்களாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது. சீனாவுக்கு தைவானின் தனிநாட்டுப் பிரச்சினை
தலையிடியாக உள்ளது. அதேசமயம் திபெத் பிரிவினைக் கோரிக்கையும் அங்கு நீண்ட காலமாக இழுபட்டு வருகின்றது. இலங்கை நிலைமையோ
நமக்கு வெளிப்படையாகத் தெரிந்ததுதான்.கொசோவோ விவகாரத்தில் இந்தியாவும் சற்று அமுக்கி வாசிக்கிறது. ஏனென்றால் இந்தியாவிலும் நாகலாந்து, காஷ்மீர் பிரிவினைப் பிரச்சினைகள்
உள்ளன.இப்படிப் பிரிவினைப் பிரச்சினையை எதிர்கொள்ளும் நாடுகள் எல்லாவற்றுக்குமே கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனம் வயிற்றில் புளியைக்
கரைத்திருப்பதற்கு முக்கிய பின்னணி உண்டு.கொசோவோ விவகாரத்தை ஒட்டி ஐ.நா.தீர்மானம் ஒன்று உள்ளது. 1999 இல் நிறைவேற்றப்பட்ட 1244 ஆம் இலக்க மேற்படி தீர்மானத்தின்படி,
கொசோவோ பிரதேசம் சேர்பியாவுக்கு உட்பட்டது. சேர்பியாவின் இறைமைக்குள்ளும் ஆளுகைக்குள்ளும் அடங்கும் பிரதேசம் அது என ஐ.நாவின்
தீர்மானம் ஒன்று தெளிவாக வரையறை செய்கிறது.இவ்வாறு முடிவு செய்த தீர்ப்பளித்த ஐ.நாவின் ஒரு தீர்மானம் இருக்கத்தக்கதாகவே , அதையும் மீறி, ஒரு தனிநாட்டுப் பிரகடனமும் அதற்கு
மேற்குலக வல்லாதிக்கத்தின் முழு ஆதரவும், அங்கீகாரமும் வழங்கும் நிகழ்வுகளும் சர்வசாதாரணமாக நடந்தேறியிருக்கின்றன.கொசோவோவில் பிரிவினைக்காகப் போராடிய கொசோவோ விடுதலை இராணுவம் முன்னர் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு
அடையாளப்படுத்தப்பட்டதுதான். அதன் தலைவர் பயங்கரவாதத் தலைவராக அப்போது சித்திரிக்கப்பட்டார்.ஆனால் இப்போது அந்தப் பயங்கரவாத முத்திரை களையப்பட்டு விட்டது. அந்த அமைப்பின் தலைவரை இன்று சுதந்திர கொசோவோ தேசத்தின்
தலைவராக மேற்குலகம் ஏற்றுக்கொண்டு விட்டது.இவற்றிலிருந்து கிடைக்கும் பாடம் பட்டறிவு என்ன?தனது இறைமைக்கு உட்பட்ட ஒரு மக்கள் கூட்டத்துக்கு அந்த மக்கள் கூட்டம் நியாயமான உரிமைகளைக் கேட்டுப் போராடும்போது அவர்களைப்
"பயங்கரவாதிகளாக' சித்திரித்து, அடையாளப்படுத்தி ஒதுக்கினாலும் அம்மக்களுக்கு நியாயமான தீர்வையும் நீதியையும் வழங்க வேண்டியது
ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்புமாகும். அதைச் செய்வதை விடுத்து ஆட்சியாளர்கள் தமது அதிகார, வன்முறைப் பலத்தாலும், இராணுவ
அராஜகத்தாலும் அடக்கப்பட்ட அந்த மக்கள் கூட்டத்தைத் தொடர்ந்து அடக்கி, ஒடுக்கி, அட்டூழியம் புரிய முற்படுவார்களேயானால், பாதிக்கப்பட்ட
மக்களின் சுயநிர்ணய உரிமையையும் தனித்துவமான ஏனைய உரிமைகளையும் எந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் முன்னைய சர்வதேசத்
தீர்மானங்கள் எவையாக இருந்தாலும் அவற்றையும் புறக்கணித்து அங்கீகரிக்க சர்வதேசம் பின்நிற்காது. அத்தகைய விடுதலைப் போராட்ட சக்திகளுக்கு
சூட்டப்பட்ட பயங்கரவாத முத்திரையை அகற்றி, அந்தப் பக்கத்தில் உள்ள நியாயத்தை அங்கீகரிக்க உலகம் பின்னடிக்காது என்பதே அந்தப் பாடமாகும்.இலங்கையில் ஈழத் தமிழர்களின் நீதியான, நியாயமான அபிலாஷைகளையும் கோரிக்கைகளையும் கவனத்தில் எடுக்க மறுத்து, அவற்றைப்
புறக்கணித்து, அந்த மக்கள் கூட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு தனது இராணுவக் கொடூரப்பிடியை ஏவிவிட்டிருக்கும் கொழும்பு, உலகில் இந்த
அனுபவப் பாடத்திலிருந்து கற்றறிந்து தெளியவேண்டிய அம்சங்கள் நிறையவே உள்ளன.ஈழத் தமிழர்களுக்கு நீதி, நியாயமான தீர்வை முன்வைத்து, அமைதிப்பேச்சு மூலம் சமாதானத் தீர்வு காணும்படி மேற்குலகம் விடாது வற்புறுத்தி
வருகையில் அதனை ஒரேயடியாகப் புறக்கணித்து, உதாசீனம் செய்து, தமிழர் தேசத்தின் மீது கொடூரப் போர் ஒன்றை ஒருதலைப்பட்சமாகத் திணித்து, பேரழிவு
நாசத்துக்கு கொழும்பு வழி செய்யுமானால் மேற்குலகம், இலங்கை தொடர்பான தன்னுடைய தற்போதைய நிலைப்பாட்டை கொசோவோ விவகாரத்தில் தான் மாற்றிக்கொண்டு அந்தத் தேசத்தின்
மக்களின் தனித்துவமான உரிமைகளை அங்கீகரித்தமை போல இங்கும் மாற்றிக்கொள்ள முற்படலாம்.அப்படி நேருமானால் தற்போதைய இலங்கையின் நிலைமை தலைகீழாக மாறும். ஈழமும் ஒரு கொசோவோ ஆகும்.அதைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து முன்னெச்சரிக்கையாக வரமுன் காப்போராக புத்திசாதுரியமாக நடந்து கொள்வது கொழும்பைப்
பொறுத்தது.அல்லது இன்று கொசோவோவைக் கோட்டைவிட்டுவிட்டு சேர்பியா அரற்றுவது போல ஈழத்தைக் கோட்டை விட்டுவிட்டு கொழும்பும் அரற்ற வேண்டி
நேரும்.
நாடுகளின் அங்கீகாரத்துக்காக காத்திருக்கிறது கொசோவோ [19 - February - 2008] சுதந்திரப் பிரகடனத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட கொசோவோ தனது தேசத்தை மேற்குலகு அங்கீகரிக்கும் என்ற திடமான எதிர்பார்ப்புடன்
காத்திருக்கும் அதேவேளை, கொசோவோவில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் நேற்று திங்கட்கிழமை ஈடுபட்டிருந்தனர். சேர்பியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக கொசோவோ குடியரசு உருவாகியிருப்பதாக தலைநகர் பிறிஸ்ரினாவிலுள்ள பாராளுமன்றத்தில்
ஞாயிற்றுக்கிழமை பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து கொசோவோவின் 20 இலட்சம் அல்பேனியர்களும் எந்த நாடு தமது தேசத்தை முதன்முதலாக
உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்போகின்றது என்ற ஆர்வத்துடன் நேற்று திங்கட்கிழமை எதிர்பார்த்திருப்பதாக ராய்ட்டர் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொசோவோவின் பிரகடனம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர் நேற்று கூடி ஆராய்ந்தனர். கொசோ வோவின் விடுதலை
தொடர்பாக ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்காகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள வல்லமை வாய்ந்த நாடுகளில்
பெரும்பாலானவை கொசோவோவின் விடுதலையை அங்கீகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு பரந்தளவில் காணப்படுகின்றபோதும், இதர பல நாடுகள்
ஆட்சேபனை தெரிவிக்கும் சாத்தியமுள்ளது.
சைபிரஸ், கிரீஸ், ரூமேனியா, ஸ்பெய்ன் ஆகிய ஐரோப்பிய நாடுகளே கொசோவோவின் சுதந்திரம் தொடர்பாக ஆதரவு தெரிவிக்க தயக்கம்
காட்டுகின்றன. கொசோவோவுக்கு ஆதரவு தெரிவிப்பது பிரிவினை வாத சக்திகளுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக அமையுமென அவை கருதுகின்றன.
ஆயினும், பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகியவை துரிதமாக அங்கீகாரம் வழங்குமென்ற எதிர்பார்ப்பு
அதிகரித்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை வலுவூட்டும் விதத்தில் ஜேர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மார்கல் நேற்று திங்கட்கிழமை கருத்துத்
தெரிவித்திருக்கிறார்.
`கொசோவோவின் அந்தஸ்து தனித்துவமானது என்றும் ஏனையோருடன் அதனை ஒப்பிட்டுப் பார்க்க முடியாதென்றும் அவர் கூறியுள்ளார்.'
குறிப்பிட்ட சில பிரச்சினைகள் தொடர்பாக ரஷ்யா கருத்து வேறுபாடுகளை கொண்டிருப்பதை ஏற்றுக்கொண்ட ஜேர்மனியின் சான்சிலர் ஆனால்,
கொசோவோ விடயத்தில் ஏனையோரை ஒப்பிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கொசோவோவில் சேர்பியர்கள் அதிகளவு வசிக்கும் இடமான கொசோவஸ்கா பிற்ரோவிக்ளவிற்கு வடமேற்கேயுள்ள சூபின்போட்டோக்
எனுமிடத்தில் ஐ.நா.வின். கார் ஒன்று கிரனேட் வீச்சுக்கு இலக்காகி சேதமடைந்திருந்தது.
இது சுதந்திரப் பிரகடனத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் இடம் பெற்ற இரண்டாவது வன்முறைச் சம்பவமாகும். மீற்ரோவிக்காவிலுள்ள
ஐ.நா.அலுவலகம் மீது தாக்குதல் இடம்பெற்றமை முதல் சம்பவமாகும். பால்கன் பகுதியில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் புதிய வன்செயல்கள்
தொடர்பாக கவலையடைந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோவும் அமைதி பேணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுவொரு அங்கீகாரத்திற்கான போட்டி அல்ல என்றும் குறிப்பிட்டிருக்கும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சார்ல் பில்ட் நெருக்கடியான இந்தத்
தருணத்தில் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் விடயங்களை மிகக் கவனமாக கையாளவேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கொசோவோவில் 16 ஆயிரம் படையினரைக் கொண்டுள்ள நேட்டோவின் செயலாளர் நாயகம் காப்டி றபீப் சகல தரப்பினரும் கட்டுப்பாட்டுடன்
பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இது இவ்வாறிருக்க கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் அந்நாட்டு மக்கள் தமது சொந்த ஜனநாயக ஆட்சியின் கீழ் இருப்பதற்கு இடமளிக்கும்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையென அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியாளரான ஹிலாரி
கிளின்டன் தெரிவித்திருக்கிறார்.
சீனா கவலை
இதேவேளை, கொசோவோவின் ஒரு தலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம் குறித்து ஆழ்ந்த கவலையை நேற்று வெளியிட்டிருக்கும் சீனா, பால்கன்
பிராந்தியத்தின் சமாதானம், ஸ்திரத்தன்மைக்கு எதிர்மறையான செல்வாக்கை கொசோவோவின் பிரகடனம் செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா போன்றே கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவும் இடம்பிடித்திருக்கிறது.
ஐ.நா.வில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கும் சீனா, கொசோவோ விவகாரத்தில் சேர்பியாவும் கொசோவோவும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு
இருதரப்பும் ஏற்கக்கூடிய திட்டத்தை வகுப்பதே சிறந்தது என்று கூறியுள்ளது.
சேர்பியா கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை ஏற்கப்போவதில்லை என்று உறுதியாக கூறியுள்ளது. கொசோவோவிலுள்ள சேர்பியர்கள்
தொடர்ந்தும் சேர்பியர்களாகவே இருப்பதற்கான பாதுகாப்பை தாங்கள் வழங்குவோம் என்று சேர்பியா கூறியுள்ளது. ஆனால், கொசோவோவிலுள்ள
பெரும்பான்மையினரான அல்பேனியர்கள் (அநேகமானோர் முஸ்லிம்கள்) தங்களின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருப்பதாக
பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொசோவோவுடன் சேர்பியரின் தொடர்பு கி.பி. 1389 காலப் பகுதியிலிருந்துவருகிறது. சேர்பிய மாகாணமாக இருந்த கொசோவோ ஒட்டோமன்
துருக்கியரிடம் பின்னர் வீழ்ச்சி கண்டது. அவர்களின் யுத்தம் விடுதலைக்கான போராட்டத்தின் அடையாளமாக பின்னர் தோற்றம் பெற்றது.
கொசோவோவின் உதயம்
முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசான சேர்பியா விலிருந்து பிரிந்து ஒரு தனிநாடாக ஒரு தலைப்பட் சமாக சுதந்திரப் பிரகடனம் செய்திருக்கின்றது
கொசோவோ.அந்தப் பிரகடனம் வெளியான அடுத்த கணமே அதை அங்கீகரிக்க மறுக்கும் எதிர்ப்பு அறிக்கையை இலங்கை விழுந்தடித்து வெளி யிட்டு விட்டது.கொசோவோ தனிநாடாவதை பல ஐரோப்பிய நாடுகள் வரவேற்கின்றன. கொசோவோவின் அத் தீர்மானத்துக்குப் பின்னணியில் நின்று, இத்திசை யில்
அதனை வழிநடத்தியவையே ஐரோப்பிய நாடுகள்தாம் என்பது வெள்ளிடைமலை.அத்தகைய பின்புல ஆதரவைத் தந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்கூட கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை அங்கீகரிக்கத் தயாராவ
தற்குள் இலங்கையின் எதிர்ப்பு அறிக்கை அவசர அவசரமாக வெளியாகிவிட்டது.இந்த விவகாரத்தில் "பேதி' குடித்த நிலையில் இலங்கை துடிப்பது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.இலங்கை மட்டும் என்றல்ல. தேசிய இனங்களை அடக்கி, ஒடுக்கி, அவற்றின் சுயநிர்ணய உரிமையை மறுத்து மேலாதிக்கம் செய்கின்ற ஆட்சி
முறைமை களைக் கொண்டுள்ள எல்லா நாடுகளுமே பிரிவினைக்கு எதிராகத் தமது அதிகாரத்தின் அரூ பக் கரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் மேலாதிக் கப் போக்குத் தேசங்கள் அனைத்துமே கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை முழு அளவில் எதிர்க்கின்றன என்பதே உண்மை.கொசோவோவில் அல்பேனிய இன மக்களின் இன விடுதலையை உறுதிசெய்யும் தனிநாட்டுப் பிரகடன நியாயம், தத்தமது நாடுகளிலும் பொருத்திப்
பார்க் கப்பட்டு, அங்கங்கெல்லாம் அம்முறைமை நடைமுறைப் படுத்தப்பட முயற்சி எடுக்கப்படுமானால் தமது நிலை அதோ கதிதான் என்பது அந்த
நாடுகளுக்கும் அவற்றின் ஆட்சியாளர்களுக்கும் நன்கு தெரியும்; புரியும்.அதனால்தான் அவை விழுந்தடித்துக்கொண்டு இந் தத் தனிநாட்டுப் பிரகடனத்தை முழு மூச்சில் எதிர்க் கின்றன. ஆனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் முழு ஆதரவுடன் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக் கும் கொசோவோவை, அதை இவ்வளவு
காலமும் தனது ஆளுகைக்குள் அடக்கி வைத்திருந்த சேர்பியாவினாலோ அல்லது சேர்பியாவின் ஞானத்தந்தையான ரஷ்யாவினாலோ அடக்க
முடியாது என்பதுதான் மெய்மை நிலை. அத்தேசத்தின் விடியல் வரலாற்றின் பிரிக்கமுடியாத தேவைப்பாடு; தவிர்க்க முடியாத நிகழ்வு.கொசோவோவின் ஒருதலைப்பட்சமான தனிநாட் டுப் பிரகடனம் ""சர்வதேச உறவுகளில் நம்பமுடியாத முன்மாதிரியாகிவிடும்'' என்று இலங்கை எச்சரிப்
பதன் நோக்கமும் ஆழமும் கூடப் புரிந்துகொள்ளத் தக்கதே.கொசோவோ ஆக 4 ஆயிரத்து 200 சதுர கிலோமீற் றர் நிலப்பரப்பையும் 21 லட்சம் மக்கள் தொகையை யும் கொண்ட பிரதேசம். அதுவே தனிநாடு
ஆகக் கூடிய தகுதியை உடையது என்றால் சுமார் ஏழாயிரத்து ஐந் நூறு சதுர மைல் விஸ்தீரணத்தையும் சுமார் நாற்பது லட்சம் மக்கள்
தொகையையும் கொண்ட ஈழத் தமிழர் தாயகம் அதே தனிநாட்டு அந்தஸ்தைக் கோருவதில் இருக்கக்கூடிய நியாயப்பாடுகள் கொழும்புக்குப் "பேதி'
அளிப்பனவாக அமைகின்றன.அது மாத்திரமல்ல. தமது தேசத்தின் இனத்தின் விடுதலைக்கான சுதந்திரப் போராட்டத்தை ஆயுத வழிக்குத் திருப்பமுன்னரே 1977 இலேயே தமது
சுயநிர்ணய உரிமையின் விருப்பத்தை தனித் தமிழ் ஈழத்துக்கான இசைவாக, ஜனநாயகத் தேர்தல் வாக்களிப்புமூலம் தமிழர்கள் சர்வதேச சமூகத்துக்குத்
தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர்.கடந்த பொதுத் தேர்தலில் கூட தமிழரின் அந்த விருப்பமும், எதிர்பார்ப்பும், ஆணையும் ஜனநாயக வாக் கெடுப்புமூலம் மீண்டும் வெட்ட
வெளிச்சமாக்கப் பட்டதையும் சர்வதேசம் அறியும்.தவிரவும், தனியான தாயகம், தனியான மொழி, தனி யான பண்பாடு, தனித்துவமான தேசமாகவும், தேசிய மாகவும் நீண்டகாலம் நிலைகொண்டிருந்த
வரலாற் றுச் சரிதம் என தனிநாட்டுக்குரிய அனைத்துப் பண்பியல்புகளையும் உரிமைகளையும் கொண்டு அமைந் துள்ள தமிழர் தேசத்தை அடக்கி,
ஒடுக்கி, நியாயமற்ற முறையில் தனது ஆளுகைக்குள்ளும் மேலாதிக் கத்துக்குள்ளும் நசுக்கி வைத்திருக்கும் இலங்கைக்கு, பிறிதொரு பூமியில் இதே
பண்பியல்புகளுடன் அடக்கப்பட்டிருந்த ஒரு மக்கள் கூட்டம் தனித் தேசமாக எழுச்சியுற்று உருக்கொண்டு எழுவதைச் சகிக்க முடி யாது என்பது புரிந்து
கொள்ளத்தக்கதே. அந்த முன் னுதாரணம் தனக்கும் பொருந்தும் என்பதால் பதற் றப்படுகின்றது இலங்கை.அடக்குமுறை விலங்கு நீடித்து நிலைக்காது. என்றோ ஒருநாள் அது உடைந்து விழுவது நிச்சயம் என் பதையே கொசோவோ என்ற தனிநாட்டின் பிறப்பு
எமக்கு உணர்த்துகின்றது."தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் எனினும் தர்மம் ஒருநாள் வெல்லும்' என்ற தத்துவத்தின் நிகழ்வே கொசோவோவின் உதயம். அது இங்கும் கூடப்
பொருந்தும் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஐரோப்பாவில் புதிய தேசம்:
கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம்
கொசோவோ நாடாளுமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டு கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நேரம்
மாலை 5:00 மணிக்கு கொசோவோ நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ஹசிம் தாச்சி தனிநாட்டுப் பிரகடனத்தை மொழிந்தார்.சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவில் புதிய தேசம் ஒன்று பிறந்துள்ளது.கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கொசோவோவின் அல்பேனிய மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தினை
உணர்வெழுச்சியுடன் வரவேற்று கொண்டாடுகின்றனர்."சுதந்திர கொசோவோ" அமைதிக்காகவும் பிரதேசத்தின் உறுதித்தன்மைக்காகவும் உழைக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுதந்திர கொசோவோ ஒரு ஜனநாயக, பல்லினக் கலாச்சார சமூகமாக விளங்கும் என்பதோடு கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்கு உத்தரவாதமும்
அளிக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பின்லாந்தின் முன்நாள் அரச தலைவர் மாத்தி ஆத்திசாரி தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையினால்
முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைபின் அடிப்படையில், கொசோவோ தேசம் கட்டியெழுப்பப்படும்.ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொசோவோவிற்குரிய தனியான காவல்துறை மற்றும் படைக்
கட்டுமானங்கள் நிறுவப்படும் எனவும் பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிக்கவுள்ளன.ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள, அதன் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்டச் சந்திப்பினைத் தொடர்ந்து
கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது அறிக்கை வெளியிடப்படவுள்ளது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினைத் தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளும் கொசோவோவை அங்கிகரிக்கும் என
எதிர்பார்க்கப்படுகின்றது. 100 வரையான உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கொசோவோ தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொசோவோவில் 92 விழுக்காடு அல்பேனியர்களும் 8 விழுக்காடு சேர்பியர்களும் வசிக்கின்றனர்.சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த சேர்பியா மற்றும் ரஸ்யா ஆகியன தனிநாட்டுப்
பிரகடனத்தினை கண்டித்துள்ளன.கொசோவோவை ஆக்கிரமித்து கொசோவோ மக்கள் மீது இன அழிப்புப் போரினை கட்டவிழ்த்து விட்ட ஸ்லோவடோன் மிலோசவிச்சின் சேர்பியப்
படைகள், 1999 ஆம் ஆண்டு. நேட்டோப் படைகளால் வெளியேற்றப்பட்டன. 1999 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நாவினால் கொசோவோ நிர்வகிக்கப்பட்டு
வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 16,000 நேட்டோப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்தன.கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம், ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள்
என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தினை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்துவிடுதலைப் போராட்டத்தை நடத்தி அதன் பாலான நகர்வுகளின் பின் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும்
கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி
விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.அத்துடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு, தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து, அதன்
தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப்பெரும் நாடுகள் அங்கீகரித்து
தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் இது உலக
சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
Posted by K.BAHIRATHAN at 4:53 AM
Kosovo’s victory has lessons for other liberation struggles - paper
[TamilNet, Thursday, 21 February 2008, 16:16 GMT]
Describing Kosovo’s declaration of independence on Sunday and the ensuing international recognition as “a powerful shot in the arm to peoples resisting and seeking
independence from tyrannical regimes,” the Tamil Guardian newspaper this said that “whilst every situation and every circumstance is unique, there are important
lessons from the Kosovan march to independence for liberation struggles everywhere. The paper pointed out that just a few years ago, the idea of Kosovan
independence had been dismissed by the international community and the Kosovan Liberation Army had been condemned as terrorists by the United States and
other countries.
The full text of the Tamil Guardian editorial titled ‘Living Proof’ follows:
Living Proof
Kosovo’s victorious march to independence has lessons for other liberation struggles
Kosovo’s declaration of independence on Sunday and the ensuing international recognition from many powerful states is a powerful shot in the arm to peoples
resisting and seeking independence from tyrannical regimes everywhere. Whilst every situation and every circumstance is unique, there are important lessons from the
Kosovan march to independence for liberation struggles everywhere. These include the oft denied but evident brittleness of ‘sovereignty’ and the necessity amongst
those struggling for freedom for unity, clarity of purpose and indomitable resilience against their oppressors’ worst excesses. All of these played a part in the
Kosovars’ final victory on Sunday.
Whilst it has often been brandished by repressive states as a way of denying the demands for self-determination that inevitably follow their tyrannical rule and also of
forestalling international efforts to restrain them, the notion of ‘sovereignty’ is in practice so brittle that one respected international relations scholar aptly calls it
‘Organized Hypocrisy’. Others argue that at no time since the modern ‘sovereign state’ emerged (amid the Peace of Westphalia in 1648) has sovereignty been
practiced as an inviolable principle of international affairs. Indeed, as one of our columnists points out this week, the most vehement defenders of sovereignty this
week– Serbia and Russia – have also been threatening to recognize other demands for independence (Abkhazia in Georgia and Republic of Srpska in Bosnia-
Herzegovina) and thereby violate the very ‘principle’ on which their outrage is based.
The swift recognition of Kosovo’s independence by the United States and several European powers stems from the existence of other important, sometimes
contradictory, ‘principles’ besides sovereignty; including those of self-determination, humanitarian intervention (lately in the form of the ‘responsibility to protect’) and
perhaps the most oft cited one: as the US bluntly put it, Kosovo’s “independence is the only viable option to promote stability in the region.” The point here is that in
the international politics arena, which is governed by competing interests (including those that masquerade as ‘values’), no ‘principle’ is truly inviolable. In other
words, international politics is about contesting and defending power-distributions, not principles.
As such, the recent history of the Kosovan struggle ought to be examined by those engaged in struggles for national liberation and statehood elsewhere. Not because
the Kosovan example comprises, as Serbia protests, a ‘tool-kit for separatists’ - it does not - but because it amply demonstrates the dynamics and vagaries of
international politics. For example, that the past few years of deliberation and discussion on the former Serbian province’s political future have taken place whilst it
was under international trusteeship has served to obscure the crucial role of the Kosovan Liberation Army (KLA) in the freedom struggle. The past few years have
also obscured the initial (and vehement) hostility from powerful states, especially the United States, to both the Kosovan demand for independence and, especially,
the KLA’s armed struggle.
Indeed, whilst Kosovo’s Albanians have been protesting against Serbian repression for decades, even when the international community was striving to bring peace
to the rest of the Balkans in the mid-nineties, these demands were dismissed. Kosovars were excluded, for example, from the landmark Dayton Agreement in 1995.
As the scholar Steven Burg notes: “for many Kosovar Albanians, the message from Dayton was clear: force was the only means by which to secure group interests
… and the escalation from the use of force was the only way to internationalise [their] conflict.” Within months the KLA had emerged to wage an armed struggle
against Serbian rule. It was sharp escalation in violence and the vicious repression that Serbia unleashed on the Kosovan people that finally led to NATO intervention.
What is particularly interesting is the West’s response to the Kosovan demands. Whilst taking these more seriously after the KLA’s emergence, the West still insisted
initially that Kosovars negotiate with Slobodan Milosevic’s racist regime for autonomy within Serbia: the US, for example, called for “dialogue between the
government of Yugoslavia and the responsible democratic Kosovar Albanian leadership”. As for the KLA and its armed struggle, the US representative Robert
Gelbard had a clear response: “we condemn the unacceptable violence by terrorist groups in Kosovo, particularly the KLA”. He also said: “it is the strong and firm
policy of the United States to fully oppose terrorist actions and all terrorist organizations.”
The problem was that whilst the international community backed the ‘moderate’, ‘democratic’ leadership of Ibrahim Rugova (and called on it to also condemn the
KLA’s ‘terrorism’), the people of Kosovo rallied instead to the fighters. That the present elected Prime Minister of Kosovo, Hashim Thaci, is a former leader of the
KLA reveals what Kosovars thought of international condemnation of their liberation struggle as terrorism and of accusations by countries such as Germany – one of
the other states to swiftly recognise Kosovan independence this week - that the KLA was trafficking drugs. Indeed, so great was the popular swing behind the
militants that Rugova’s party, the LDK, splintered. Evenutally, it was the US itself which was insisting the KLA must also represent the Kosovars alongside the LDK
in negotiations with Serbia.
Once Kosovo became an international protectorate and the people could freely articulate their views, they chose not Serbian rule, but self-rule. And once it also
became clear that this was the view of the overwhelmingly majority of Kosovars, the liberal members of the international community were compelled to shift their
position. As British Foreign Secretary David Miliband said this week: “if we'd tried to sit on that aspiration, if we'd tried to deny it, I think we'd have far more
instability and danger.”
Despite oft-repeated commitments to human rights, democracy and just peace, the international community has supported the Sri Lankan state, despite its repression
of the Tamils, for decades. Although the Tamils explicitly and overwhelmingly declared their demand for independence from the Sinhalese in 1977, the international
community continues to tell us to negotiate with our oppressors for autonomy and devolution. The international community is well aware that anything short of
independence – including the once much-vaunted, now ignored, federal solution - is vulnerable to arbitrary retraction by the Sinhala leadership at any point in the
future. Thus international condemnation of Tamil ‘terrorism’ and veneration of Tamil ‘moderates’ is, as we know full well, more to do with shattering Tamil unity and
assisting the Sri Lankan state to isolate and destroy the LTTE, than with achieving a just peace.
The international community will not take on the Sri Lankan state on behalf of liberal principles. However, neither will it defend the odious regimes in Colombo
indefinitely. As the case of Kosovo demonstrates, the principle of 'state sovereignty' cannot be sustained once the world
is convinced that not only will the vast majority of Tamils, when given a chance, seek independence from Sinhala rule; but,
especially, that they will not abandon their political goals or their struggle irrespective of the brutality visited upon them. Unity, clarity of purpose and indomitable
resilience; this is how the third birth of a state in the 21st century became impossible to prevent.
Wednesday, December 19, 2007
"கொசேவா தனிநாட்டு பிரகடனமும் இலங்கை அரசாங்கத்தின் அச்சமும்"
முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசின் மாகாணமும், தற்போது ஐ.நா. வினால் நிர்வகிக்கப்பட்டு வரப்படுவதுமான கொசோவோ மாகாணம் தனது
சுதந்திரத்தை பிரகடனப்படுத்த போவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணைகள் இந்த பிரகடனத்திற்கு உண்டு. ஆனால் ரஷ்யா அதனை வலுவாக எதிர்த்து வருகின்றது.
பூகோள அரசியல் நலன் கருதி முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கூட்டாளியான யூகோஸ்லாவியாவை தருணம் பார்த்து துண்டு துண்டாக உடைத்த
பெருமை மேற்குலகத்தினரை சாரும். கொசோவோவின் தனிநாட்டு பிரகடனத்துடன் அந்த நடவடிக்கை முடிவுக்கு வருகின்றது.
நீண்டகால நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பிற்கும், ரஷ்யாவின் வீழ்ச்சிக்கும் இது உதவும் என்பது மேற்குலகத்தின் கருத்து. சேர்பிய
பேரரசின் பிடியில் இருந்து ஒவ்வொரு நாடுகளாக விடுவித்த மேற்குலகின் உத்தி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொன்ரோநீக்குரொ என்னும் புதிய
தேசத்தையும் உருவாக்கியிருந்தது.
இந்த நிலையில் கடந்த 9 வருடங்களாக ஐ.நா.வின் மேற்பார்வையில் இருந்து வந்த கொசோவோ எதிர்வரும் சில மாதங்களில் சுதந்திர பிரகடனத்தை
மேற்கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிநாடாக உருவெடுக்கும் கொசோவோ ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இணைந்து கொள்ளும்.
சேர்பியாவின் ஒரு மாகாணமான கொசோவோ பெரும்பான்மை அல்பேனியர்களை கொண்ட பகுதி. அங்கு வசிக்கும் அல்பேனியர்கள் நேட்டோ
படைகளின் ஆதரவுடன் தனிநாடாக அதனை பிரகடனப்படுத்த முனைந்து வருகின்றனர். இதனை சேர்பியா வன்மையாக எதிர்த்து வருகின்றது.
ரஷ்யாவும் அதனை எதிர்த்து வருகின்றது. கொசோவோவின் பிரிவினை தமது நாட்டிலிலும் பிரிவினைகளை ஏற்படுத்தலாம் என்பது ரஷ்யாவின்
கவலை. அதாவது செச்சென்னியா அதனை பின்பற்றலாம் என்பது அவர்களின் கருத்து.
ஆனால் கொசோவோவின் அல்பேனியத் தலைவர்கள் தனிநாட்டுக்கு குறைவாக எந்த தீர்வையும் பெற தயாராகவில்லை என தெரிவித்து வருகின்றனர்.
எனினும் சேர்பிய அரசு பரந்துபட்ட கூடுதல் அதிகாரங்களை கொண்ட சுயாட்சியை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
குளிர்காலத்தில் வெப்பத்தை பெறுவதற்கான வாயு எரிபொருளுக்கு ரஷ்யாவிலும், மின்சாரத்திற்கு சேர்பியாவிலும் தங்கியுள்ள கொசோவோவின்
தனிநாட்டுபிரகடனம் கடினமானது என்பதும் சேபியர்களின் கருத்து.
இதனிடையே கொசோவாவிற்கு அனைத்துலகத்தின் மேற்பார்வையின் கீழ் சுதந்திரத்தை வழங்கும் திட்டம் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் ஐ.நா.வின்
சிறப்புத் தூதுவர் மாற்றி அரிசாறி முன்வைத்திருந்தார். இதன் மூலம் கொசோவோ மெல்ல மெல்ல முழுமையான தனிநாடாக மாற்றம் பெற்று பின்னர்
ஐ.நா.வில் இணைந்து கொள்ளலாம் என்பது அவரின் திட்டம்.
ஆனால் கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனம் எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதம் நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,
சேர்பியாவின் அரச தலைவருக்கான தேர்தலைத் தொடர்ந்து இந்த பிரகடனத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
22 இலட்சம் மக்களையும், 4,203 சதுர மைல்கள் (10,887 சதுர கி.மீ) பரப்பளவையும் (இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை விட சிறியது)
கொண்ட இந்த சிறிய தேசத்தின் சுதந்திரப் பிரகடனத்திற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் முழுமையான ஆதரவுகளை வழங்கி வருகின்றன.
ரஷ்யா, சேர்பியா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை தவிர பெரும்பாலான நாடுகள் இந்த பிரகடனத்தை ஆதரிக்கும் என்றே தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கொசோவோவின் தற்போதைய இந்த நிலை உலகின் ஊடகங்களில் முக்கிய இடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து
இலங்கை அரசின் முக்கிய உறுப்பினரும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே எதிர்வரும் ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தனிநாட்டை
பிரகடனம் செய்ய போவதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
தென்னிலங்கையில் அரசிற்கு எதிராக மக்களின் கவனம் திசை திரும்புவதை தடுப்பதற்கான உத்தியாக இனப்போரை முதன்மைப்படுத்தி வருவது அரச
தரப்பினரின் வழமையான நடவடிக்கை. எனினும் கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்துடன் தமிழ் மக்களின் தனிநாட்டுப் பிரகடனம் வெளிவந்தால்
கொசோவோ தனியரசை ஆதரிக்கும் மேற்குலகத்திற்கு பெரிய சங்கடங்கள் தோன்றிவிடலாம் என்பதும், கொசோவோவின் தனிநாட்டு பிரகடனத்தை
எதிர்க்கும் நாடுகள் ஈழத்தை ஆதரிக்கலாம் என்பதும் அவரின் ஆரூடமாக இருக்கலாம்.
சேர்பியாவின் ஒரு மாகாணமான கொசோவோவுடன் ஒப்பிடும் போது சனத்தொகை, பரப்பளவு, இன விகிதாசாரம், மதம், கலாசாரம் போன்றவற்றின்
தகுதிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகம்.
மேலும் சேர்பிய அரசுடன் ஒப்பிடும் போது இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள், இனப்பிளவுகள், இன ஒடுக்குமுறைகள்,
கலாசார ஒடுக்குமுறைகள், மொழிப்புறக்கணிப்பு என்பனவும் மிக அதிகம். எனவேதான் வடக்கு கிழக்கு இணைந்த தாயகப்பிரதேசத்தை தமிழ் மக்கள்
தனியரசாகப் பிரகடனப்படுத்துவதற்கான தகுதிகள் கொசோவோவை விட அதிகம் உள்ளன என்ற உண்மையை அமைச்சர் உணர்ந்துள்ளார் போலும்.
அதனால் தானோ என்னவோ அமைச்சர் பெர்ணான்டோபுள்ளே முன்கூட்டியே எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளார்.
ஆனால், இரண்டு வருடத்திற்கு மேலாக தீவிரமடைந்து வரும் போரின் தாக்கத்தையும், அரசியல் தீர்வு ஒன்றை காண்பதற்கு தென்னிலங்கை அரசியல்
கட்சிகளை ஒன்றிணைக்க முடியாது என்பதனையும் தற்போது மெல்ல மெல்ல உணர்ந்துவரும் அனைத்துலக சமூகம் ஒன்றை மட்டும் புரிந்து
கொள்வது அவசியம்.
அதாவது நேட்டோவின் ஆளுமையின் கீழ் இருந்து வந்த கொசோவோ கடந்த 9 வருடங்களில் தீர்வு ஒன்று எட்டப்படவில்லை என்ற பொறுமையை
இழந்து தனிநாட்டைப் பிரகடனம் செய்ய முயன்றுள்ள நிலையில் அதனை ஆதரிக்கும் மேற்குலகம், 50 வருடங்களுக்கு மேலாக எந்தவிதமான
அரசியல் உரிமைகளும் வழங்கப்படாது ஏமாற்றப்பட்டு வரும் வடக்கு-கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தை மேற்கொண்டால்
அதில் தவறுகளை காணமுடியாது என்பது தான் அது.
எனவேதான் கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனம் இலங்கை அரசிற்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளை
முற்று முழுதாக பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதிலும், அவர்களின் பலத்தை சிதைத்துவிடும் முனைப்பிலும் இலங்கை அரசாங்கம் தீவிரம் காட்டி
வருகின்றது.
வடபோர்முனையில் ஒருமுனை முன்னேற்றம் சாதகமற்றது என்றும், பல களமுனைகளை திறப்பதன் மூலம் விடுதலைப் புலிகளை திசைதிருப்பி
விடலாம் அல்லது அவர்களின் ஒருமுனை படைபலத்தின் வீரியத்தை குறைத்துவிடலாம் என்பது படைத்தரப்பின் தற்போதைய உத்திகள். அதற்காகவே
புதிய படையணிகள் அமைக்கப்பட்டு வன்னியில் பல புதிய களமுனைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
53 ஆவது தாக்குதல் படையணியுடன் முகமாலையில் ஒரு வலிந்த தாக்குதல் களம், 57 ஆவது படையணியுடன் வவுனியா, மன்னார் எல்லையில் ஒரு
களம், 58 ஆவது படையணியுடன் மன்னாரில் ஒரு களம் என திறந்த படைத்தரப்பு கடந்த வாரம் 59 ஆவது படையணியின் துணையுடன்
மணலாற்றிலும் ஒரு களமுனையை திறந்துள்ளது.
மூன்று பிரிகேட்டுகளுடன் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட 59 ஆவது படையணி கடந்த வாரம் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்
பொன்சேக்காவின் மணலாற்றுக்கான விஜயத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட தனது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவே படைத்துறை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கடந்த 7 ஆம் திகதி கொக்குத்தொடுவாய் நோக்கியும், வியாழக்கிழமை ஜனகபுர பகுதி நோக்கியும் இராணுவத்தினரின் 59 ஆவது படையணியின் சில
பற்றலியன் படையினர் மட்டுப்படுத்தப்டப்ட நகர்வை மேற்கொண்ட போது கடுமையான எதிர்த்தாக்குதல்களை சந்தித்துள்ளனர். கேணல் சொர்ணத்தின்
தலைமையில் மணலாற்று களமுனையின் முன்னணி நிலைகளின் பாதுகாப்புக்களை விடுதலைப்புலிகள் பலப்படுத்தி வருவதாக இந்த மோதல்களின்
பின்னர் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த செவ்வாய்கிழமை மன்னாரின் அடம்பன் மற்றும் பாலைக்குழி பகுதிகளில் முன்நகர முயன்ற 57 ஆவது படையணியின்
முதலாவது பிரிகேட் படையினர் மீது விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மூன்று மணி
நேரம் கடுமையாக நடைபெற்ற இந்த சமரில் 20 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் 75 இற்கும் மேற்பட்டோர்
காயமடைந்ததாகவும், தமது தரப்பில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், பல ஆயுததளபாடங்களை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள்
தெரிவித்துள்ளனர்.
அதற்கு மறுநாள் புதன்கிழமை முகமாலை கண்டல் பகுதியை நோக்கி முன்நகர முயன்ற படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலும்
கடும் சமர் நடைபற்றுள்ளது. எனவே இந்த மோதல்களை கவனிக்கும் போது படையினரின் திட்டங்களுக்கு அமைவாக எல்லா களமுனைகளிலும்
சமர்களை படைத்தரப்பு ஆரம்பித்துள்ளதாகவே கொள்ள முடியும்.
எனினும் மன்னாரின் வடமுனை நோக்கியும், மணலாறிலுமே பிரதான போர் அரங்கை திறக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு இருப்பதாக படைத்தரப்பில்
இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கடந்த வருடம் உருவாக்கப்பட்ட கவசத்தாக்குதல் படைப்பிரிவு தனது பயிற்சிகளை நிறைவு செய்து முற்று முழுதான தாக்குதல்
படையணியாக மாற்றம் பெற்றுள்ளது. கேணல் ரால்வ்ப் நுகெரா தலைமையிலான இந்த படைப்பிரிவு 3 றெஜிமென்ட் படையினரை கொண்டது. சிறப்புப்
பயிற்சிபெற்ற படையினர், கவசத்தாக்குதல் மற்றும் துருப்புக்காவி கவச வாகனங்கள் என்பவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த படைப்பிரிவு
எதிர்வரும் காலத்தில் வடபோர்முனை சமர்களில் அதிகளவு பங்கு வகிக்கும் என படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த கவசத்தாக்குதல் படையணியின் முதலாவது அணியினரின் பயிற்சி நிறைவு விழாவின் போது
விடுதலைப் புலிகள் நடத்திய 130 மி.மீ பீரங்கி தாக்குதலில் இந்த அணியையும், இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் படையணியான 53 ஆவது
படையணியையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் படுகாயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் போது இந்த அணியின் கட்டளைத்
தளபதி கேணல் ரால்வ்ப் நுகெராவும் காயமடைந்திருந்தார்.
இராணுவத்தினரின் பலப்படுத்தல்களுடன் வான்படையும் தம்மை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அநுராதபுரத்தில் இழக்கப்பட்ட தமது
வான்படை வான்கலங்களை ஈடுசெய்யும் முகமாக புதிய தாக்குதல் விமானங்களையும், உளவு விமானங்களையும், தாக்குதல்
உலங்குவானூர்திகளையும் கொள்வனவு செய்யும் முயற்சியில் வான்படை தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும் செக்கோஸ்லாவியாவிடம் இருந்து
விமான எதிர்ப்பு ஏவுகணை தொகுதிகள் அதற்கான தொழில்நுட்பம், தொழில் நுட்பவியலாளர்கள் ஆகியவற்றை பெறும் முயற்சிகளும் இடம்பெற்று
வருகின்றன.
அதாவது அரசு முற்றுமுழுதான ஒரு பெரும் படை நடவடிக்கைக்கு தன்னை தயார்படுத்தி வருகின்றது. இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வை
கண்டுவிடவே அரசு முயன்று வருவதை இதன் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அரசின் இந்த முயற்சிகளுக்கு முற்று முழுதான
பங்களிப்பை வழங்க தற்போது பாகிஸ்தான் வெளிப்படையாக களமிறங்கியுள்ளது.
பிராந்திய நலன்கள் குறித்து தற்போது பாகிஸ்தான் அதிகம் பேசி வருவதும், அனைத்துலகத்தில் பாகிஸ்தானை காப்பாற்ற இலங்கை அரசு முயன்று
வருவதும் புதிய ஒரு பரிமாணத்தை தென்னாசியா பிராந்தியத்தில் உருவாக்கி வருகின்றது. இந்த புதிய கூட்டணியின் வெளிப்படையான உதயம்
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளை தோற்றுவித்துள்ளது என்றால் அது மிகையாகாது.
-அருஸ் (வேல்ஸ்)- நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (16.12.07)
இந்திய போலிக் கம்யூனிஸ்டுக்களின் பார்வை;
கொசாவோ: ஏகாதிபத்தியத்தின் ஏவலாட்சி
செர்பியாவின் ஒரு பகுதியாக இருந்த கொசாவோ, சுதந்திரம் அடைந்து விட்டதாக வந்துள்ள பிரகடனம், யுகோஸ்லேவியா சிதைவுறுவதில் கடைசிக்
கட்டமாகும். இச்செயலை மேற்கத்திய வல்லரசுகள் இருபதாண்டுகளுக்கும் முன்பே தொடங்கின. 1991இல் ஸ்லோவேனியா மற்றும் குரோசியா
சிதைவுண்டபோது அதனை அங்கீகரித்த மேற்கத்திய வல்லரசுகள் மேலும் ஒருபடி முன்னே சென்று போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா
ஆகியவற்றையும் வெட்டி உருவாக்கின. செர்பியா மீது நேட்டோ படைகள் மிகப் பெரிய அளவில் வான்வெளி வழியாக குண்டுகளைப் பொழிந்து,
ஸ்லோபோடான் மிலோசெவிக்கை ஆட்சியிலிருந்து அகற்றியதன் மூலம் இது மிகவும் எளிதாயிற்று. யுகோஸ்லேவியாவை அழிப்பது என்பது
அமெரிக்க ஏகாதிபத்தியம், காஸ்பியன் எண்ணெய்ப் படுகையில் வள ஆதாரங்கள் நிரம்பிய பால்கன்ஸ் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வருவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். கொசாவன் உருவாகியிருப்பது கடைசியான நடவடிக்கையாகும்.
பதினாறாயிரத்திற்கும் அதிகமான நேட்டோ துருப்புகள் நிலைகொண்டுள்ள நிலையிலேயே கொசாவான் சுதந்திரம் அடைந்திருப்பதாக கொசாவான்
நாடாளுமன்றம் பிரகடனம் செய்திருக்கிறது. கொசாவான் அரசை உருவாக்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் பணியில் நேட்டோ துருப்புகள்
இறங்கியிருக்கின்றன. இச்செயலானது, 1999இல் செர்பியாவிற்கு எதிராக அமெரிக்கா - நேட்டோ யுத்தம் நடத்தியதற்குப்பின் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய
நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களுக்கும் சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானதாகும். அமெரிக்காவும் மற்றும் அதன் மேற்கத்திய
கூட்டாளிகளும் 1990களின் முற்பகுதிகளில் தங்கள் அத்துமீறல் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காகவும், அதுநாள்வரை தங்கள் அதிகார
வரம்பெல்லைக்குள் வராது, தற்சமயம் வந்துள்ள பகுதிகளுக்கும் தங்களுடைய நவீன தாராளமயக் கொள்கைகளைத் திணிப்பதற்காகவும் ஒரு புதிய
கொள்கையை உருவாக்கி வெளியிட்டார்கள். இன மோதல்கள் மீது ‘‘மனிதாபிமான முறையில் தலையிடலாம்’’ என்று கூறி அனைத்து நாடுகளின்
இறையாண்மையை மிதித்துச் சென்றன. அப்போது அமெரிக்க அரசின் செயலாளராக இருந்த மடிலென் ஆல்பிரைட், ‘‘நாடுகளின் இறையாண்மை’’
என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் சித்தாந்தம் என்றும் அதனை இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப குறைத்துச் சுருக்கிட வேண்டும் என்றும்
கூறியிருந்தார். ‘‘மனிதாபிமானமுறையில் தலையிடலாம்’’ என்பதிலிருந்து ‘‘பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்’’ வரை, அமெரிக்க ஏகாதிபத்திய
சிந்தனையாளர்கள், எந்த நாடுகளின் மீதும் ராணுவரீதியாகத் தலையிட்டு, ஏவலாட்சிகளை நிறுவிடலாம் என்று கூறத் தொடங்கிவிட்டார்கள்.
ஈராக் மீது ஆக்கிரமிப்பு, அதற்கு முன் வடக்கில் குர்திஷ் ஏவலாட்சி ஆகிய அனைத்தும் இவ்வாறு ஏகாதிபத்திய சிந்தனையாளர்களின்
கொள்கைகளே.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் புதிய அரசை அங்கீகரித்திட தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றன.
பிரிட்டிஷ் தூதர் அப்பகுதிக்குச் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்த முதல் நபராவார். தனி வடக்கு அயர்லாந்துக்காகப் போராடும் ஐரிஷ் குடியரசுப்
படையினருடன் பல ஆண்டு காலம், போராடிக் களைத்துப் போயிருக்கும் இதே பிரிட்டிஷ் அரசாங்கம்தான், இவ்வாறு தெரிவித்திருக்கிறது. ஆனால்
ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகள் கொசாவோ சுதந்திரம் அடைவதற்கு ஆதரவாக ஒருமனதாக இல்லை.
கிரீஸ், ஸ்பெயின், சைப்ரஸ், ஸ்லோவேகியா, பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகியவை ‘கொசாவா சுதந்திரம் அடைவதை’ எதிர்ப்பதாகத்
தெரிவித்திருக்கின்றன.செர்பியா மற்றும் ரஷ்யா, கொசாவிற்கு சுதந்திரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்திருக்கின்றன.
இப்பிரச்சனையை பாதுகாப்பு கவுன்சிலுக்கும் கொண்டு சென்றிருக்கின்றன. இப்பிரச்சனை மீது சீனா தன் ‘‘ஆழ்ந்த கவலையைத்’’ தெரிவித்துள்ளது.
‘‘சர்வதேச உறவுகளைக் கட்டுப்படுத்தும் அடிப்படை நெறிமுறைகளையும், அதேபோல் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் பாத்திரத்தையும் இது
கடுமையாகப் பாதிக்கும்’’ என்று சீன அயல்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய தனி நாடு கோரிக்கைகளை எதிர்கொண்டுள்ள இந்தோனேசியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற மற்ற ஆசிய நாடுகளும் இதனை
எதிர்த்திருக்கின்றன. தேசிய சிறுபான்மை இனங்களை உள்ளடக்கியுள்ள பல நாடுகள் தனிநாடு கோரிக்கைகளை எதிர்கொண்டுள்ளன. இந்தியாவும்
செர்பியா பிளவுபடுவதற்கு எதிராகத் தெளிவான அறிக்கையை வெளியிட முன்வர வேண்டும். ஆனால், அயல்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர்,
மிகவும் தெளிவற்றதோர் நிலைபாட்டினை எடுத்திருக்கிறார். இப்பிரச்சனை தொடர்பாகக் கூறுகையில், ‘‘கொசாவோவால் ஒருதலைப்பட்சமாக
வெளியிடப்பட்டுள்ள சுதந்திரப் பிரகடனத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரகடனத்தில் பல்வேறு சட்டப் பிரச்சனைகள்
சம்பந்தப்பட்டிருக்கின்றன. பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து உருவாகியுள்ள சூழ்நிலையை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்’’ என்று
கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறும் அதே சமயத்தில், ‘‘அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் எல்லைகள் அனைத்து நாடுகளாலும்
முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா எவ்வித முரண்பாடும் இல்லாத வகையில் உறுதியாக நிலை எடுத்துள்ளது’’ என்றும் அவர்
மேலும் கூறியிருக்கிறார். அப்படியாயின், அது செர்பியாவுக்கும் பொருந்தும் அல்லவா! பின் ஏன் இந்திய அரசு ‘‘ஆழமான சட்டப் பிரச்சனைகளை’’
ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லிப் பின்வாங்குகிறது?
சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எண்ணற்ற பிரிவினைக் கோரிக்கைகளை எதிர்கொண்ட இந்திய அரசு, ஒரு நாட்டின்
இறையாண்மையை முற்றிலுமாக மீறியிருக்கக்கூடிய இச்செயல்பாட்டைத் ஐயத்திற்கிடமற்ற வகையில் ஆணித்தரமாகக் கண்டித்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல், ஐமுகூ அரசாங்கம் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த எந்தப் பிரச்சனையாக
இருந்தாலும், அதில் அமெரிக்காவுடன் மோதக்கூடிய நிலை ஏற்படும் எனில் அதிலிருந்து நழுவும் நிலைபாட்டினையே ஐமுகூ அரசு எடுத்து வருகிறது.
ஒரு நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கக்கூடிய, சிறுபான்மை இனங்களைப் பாதிக்கக்கூடிய, சர்வதேச சட்டவிதிகளுக்குச் சவால் விடக்கூடிய இத்தகு
பிரச்சனைகளிலாவது இந்தியா தன் நிலைபாட்டினை உரத்துப் பேசிட முன்வரவேண்டும்.
ஏகாதிபத்திய ஆணவத்தின் சமீபத்திய நடவடிக்கையாக, நேட்டோ படையினரின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள கொசாவோ, இப்பிராந்தியத்தில்
அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டுவருவதற்கு உதவிடாது.
தமிழில்: ச. வீரமணி

No comments: