Monday, 25 February 2008

வைகோவின் உரையும் அதற்கு செய்தித் தகுதி கொடுத்த வீரகேசரிப் பத்திரிகையும்.

உலக மக்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் - வைகோ
2/25/2008 8:30:36 PM வீரகேசரி இணையம்
உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், கண்ணீரும் கம்பலையுமாக வாழ்வது வேதனை அளிக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தொண்டாமுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த தமிழர்கள், ஆங்காங்கே சிதறுண்டு கண்ணீரும் கம்பலையுமாய் வாழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது.
இந்நிலை மாறி ஈழத் தமிழர்கள் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும். அந்நாள் மிக விரைவில் வந்தே தீரும். ம.தி.மு.க. தொடங்கப்பட்டு இதுவரை எத்தனையோ தடைகள், சோதனைகளை கடந்து வந்துள்ளது. இலட்சிய உணர்வுள்ள தொண்டர்கள் இருப்பதால், இந்த இயக்கம் கட்டுப்பாட்டுடன் திகழ்கிறது. இனி, வரும் காலம் ம.தி.மு.க.வுக்கு வசந்த காலம்.
வெற்றிக்கான இலக்கை அடையும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றார்.


செய்தி விமர்சனம்:ENB
1) உலக மக்களுக்கு ஈழத்தமிழர்கள் எங்கனம் வழிகாட்டியாக வாழ்ந்தார்கள்- என்பதற்கு வைகோவின் பேச்சில் ஒரு ஆதாரமாவது இருக்கிறதா?

2) பேச்சை விடுவோம் , உலக மக்களுக்கு ஈழத்தமிழர்கள் வழிகாட்டிகளாக வாழ்ந்தார்கள் என்று நாம் எண்ணுவதற்கு ஒரு வரலாற்று ஆதாரம் இல்லையேல் தார்மீக உரிமைதான் உண்டா?

3) இன்றைக்கு வைகோ என்கிற வேடதாரி: ''உலக மக்களுக்கு வழிகாட்டி ஈழத்தமிழர்கள்'' என்று பகர்வது போல, நாளைக்கு யாரேனும் நடேசன் என்கிற ஒரு 'அரசியல் வாதி'!- ''சந்திரமண்டலத்தில் முதல் காலடி வைத்த தமிழன் வைகோ தான்'' என்று ஏன் சொல்ல முடியாது.அதுவும் செய்தியாகுமா?

4)1917 ரசியப்புரட்சியின் பிரளயத்துக்கு அஞ்சி,இந்தியச்சந்தை வெந்து தணியப்போகிறது என்கிற வேகத்தில், ஏகாதிபத்தியம் தமிழகத்தில் விதைத்த விச வித்துத்தான் 'பெரியார்'-நீதிக்கட்சி.

5)இந்தக் கட்சியின் மாநிலச் சந்தையையும் அபகரித்துக்கொள்ள மைய முதலாளிகள் திட்டமிட்ட போது, பெரியாரின் அக்கினிக்குஞ்சுகள், போக்கிரிக்குஞ்சுகள் ஆகின.முதிர்ந்த குஞ்சுகளின் இரண்டாம் படி வைகோவும், நெடுமாறனும் என்றால் அவர்களின் இளைய குஞ்சுகள், விடுதலைச்சிறுத்தைகள்!!

5) ஆசியாவில் வசந்தத்தின் இடி, முழங்கியபோது 'யன கன மண' பாடிய கும்பல்களின் பரம்பரை நீங்கள்!

6)இந்த வரலாற்றில் நேருக்களுடனும்.சேனநாயக்காக்களுடனும்-அண்ணாத்துரைகளும், இராமநாதர்களும் சேர்ந்து கொண்டது சரித்திரம்!

7)கண்முன்னால் உள்ள வரலாறு சொல்லுவது என்ன?
அ)உலக மக்களின் அனைத்து முரண்பாடுகளினதும் குவிமையமாக விழங்கும் 'ஈராக் ஆப்கான்' போர் முனையில், போராடும் உலக மக்களுக்கு எதிராக அவர்களின் எதிரிகளின் அங்கீகாரத்துக்காக விடுதலைப்புலித் தலைமைப்பீடம் 'கண்ணீரும் கம்பலையுமாக '

ஆறு ஆண்டுகள், கதறித்துடிக்கவில்லையா ?தமிழீழத் துகிலை உரிந்து அதிகாரப் பரவலாக்கக் கற்பழிப்புக்கு அறைகூவல் விடுக்கவில்லையா?
ஆ)ஏகாதிபத்தியத்தின் அந்திமக்காலத்தின் அவமானகரமான பொருளாதாரக்கொள்கையான 'உலகமயமாக்கலுக்கு' எதிராக உலக மக்கள் மூர்க்க குணம் கொண்டு போராடுகையில், புலித்தலைமைப் பீடம் 'Regaining Sri Lanka' வுக்கு அழைப்பு விடவில்லையா?

8)இந்தப் பிழைகளையெல்லாம் பிரகாசித்துக் காட்டுவதன் மூலம், இமைக்கத்தவறிய ஒரு கணத்தைப் பாவித்து, எம்மைக் குருடர்களாக்க முயலுகிறீர்கள்.

9)பெரியாரின் அக்கினிக் குஞ்சுகள், தம் தலையில் ஒரு புல்லைச் சுமக்கத் திராணியற்று மைய அரசின் கழிவறைக்கூடமாய் மாறிக்கிடக்கையில், ஈழத்தமிழர்கள் பிரபாகரன் தலைமையில் கல்லைச் சுமந்து தமது விடுதலைக்கு அடிக்கல் இட்டார்கள்.இந்தப் பெருமைக்கு நாம் எப்போதும் தகுதியானவர்கள்.இதன் உலகு தழுவிய முக்கியத்துவத்தையும் நாம் நன்கறிவோம். இன்னும் சொல்லப்போனால் அதற்கு நாம் கொடுக்கிற விலை நமக்குத்தெரியும்.ஆனால் இது எந்த வகையிலும் 'உலக மக்களுக்கு வழிகாட்டிகள்' என்ற அந்தஸ்துக்கு எம்மை உயர்த்தாது. இந்தப் போலிப் பொய்ப் புகழுரைகள், ஈழத்தாயைத் துகில் உரிந்து, வாக்குவேட்டை நடத்தும் தமிழக சூதாடிகளுக்கு உதவலாம்...நமது போராட்டத்தின் முன்னேற்றத்துக்கு எந்த வகையிலும் உதவாது.

10)ஆனால் கனவான்களே, அடிக்கல் இட்டோம் என்று காரணத்துடன் தான் சொன்னோம்.இந்தக் கட்டத்துக்கு மேல்; நம்மேல் உள்ள சுமை வெறும் கல்லல்ல ,மலையென்பதை நாம் அறிவோம். 'இனி வருங்காலத்தில்' இனத்தின் இளங்காற்றும்,வசந்தமும் ஒன்றிணைந்து இடி முழங்கும்.அந்த தேசத்தின் குரல் 'ஈழமக்களின் தாகம் மக்கள் ஜனநாயக குடியரசு'! என்பதாகும்.

No comments: